அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே...
இன்று வலைச்சரத்தில் பணிநிறைவு நாள்...so சாயுங்காலம் ஒரு செண்டிமென்ட் பதிவு இருக்குங்குற முன்னறிவிப்போடு என் கடைசி இரு அறிமுகங்களை இங்கே நிறுத்துகிறேன்...கவனிக்கப்படவே ண்டிய மேலும் இருவர்...
வலையுலகில் அரசியல் சினிமா என்ற கவர்சிகளுக்கு மத்தியில் கவனிக்கபடாமலோ மறக்கப்பட்டோ விடுவது நம் மண்ணின் பெருமை,வீரம்,அழகு,சோகம்... வெகு சிலரே அவற்றை அவ்வபோது நேர்த்தியாய் பதிவு செய்கிறார்கள்.. குறிப்பாக நண்பன் "கோகுல் மனதில்" கோகுல் பொங்கல் சமயங்களில் எழுதியிருந்த அந்த கிராமத்து பதிவுகள் என் ஆல்டைம் ஃபேவரைட்..காரணம் என் பால்யவயது பொங்கல் நினைவுகளை அது அப்படியே மீட்டெடுத்தது...
அவரவர் ஊர், வாழ்ந்த நிலை, சோகம் போன்ற பதிவுகளை பிரதான படுத்தும் இருவர்தான் இன்றைய அறிமுகங்கள்...அதோடுமட்டும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வில்லை...இன்னமும் நிறைய இருக்கிறது...
கடைசி நாளும் அதுவுமாக நிறைய பேசாமல் வேலையை கவனிக்கிறேன்...
அறிமுகம் # 12
பதிவர்: எஸ்தர் சபி (என் இதயம் பேசுகிறது)
இணைப்பு: http://petoli. blogspot.in/
"டீனேஜ்ஜின் கடைசியில் இருக்கும் ஒருவளின் தளமா?" இது என்று நான் வியப்பதுண்டு.. ஃபிரான்சில் வரலாறு மற்றும் பாப் இசை பற்றி படித்துக்கொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்தவள் எஸ்தர்.. இலங்கை, போர், வன்னி மக்கள், ஆமைக்கறி..என தன் மண்ணைப் பற்றி அதிகம் எழுதும் இடம் குறிப்பிடத்தக்கது...
இலங்கை தமிழர் பற்றிய வரலாறு எதுவுமே தெரியாமல் ஈழம் பற்றி ஏதேதோ பிதற்றும் இந்திய தமிழர்கள் பலர் அதனைப் பற்றி அறிய ஏதுவாய்,நண்பரொருவர் கொடுத்த ஒரு சி.டி யின் காட்சிகளைக் கொண்டு ஒரு பதிவு எழுதி வருகிறேன்.. விரைவில் பிரசுரிக்க முயற்சிக்கிறேன்..மரித்து பிழை த்தவள்...எஸ்தரின் தொடர் இடுகை இது..தன்னுடைய போர்கால அனுபவங்களின் தொகுப்பை எழுதிக்கொண்டிருக்கிறாள்...முக் கியமாய் இந்த குறிப்பிட்ட இடுகையில் அவளுடைய மூன்று வயதில் நடந்த ஒரு பகுதியை அம்மாவின் உதவியுடன் எழுதியிருப்பாள்...இரணமான பதிவு...
தமிழ் பெயர் இருந்தாலா தமிழ் வளர்க்க முடியும்?..ஒரு அசத்தல் கட்டுரை..."ஜி"ல்லுனு ஒரு காதலை "சி"ல்லுனு ஒரு காதலாக மாற்றிய தமிழீயவாதிகள் கவனத்திற்கு கொடுக்கவேண்டிய பதிவு..
கவிதைகளும் எழுதுவார்...ரொம்பவும் நேர்த்தியான கவிநடையெல்லாம் இருக்காது...ஆனாலும் கருப்பொருள் எல்லாம் செறிவாய் இருக்கும்..மிக முக்கியமா பூவாய் இருந்தோம் புலியானோம்..எனும் பதிவு..புலிகளைப் பொறுத்தவரை பலருக்கு பல மாதிரியான கருத்துக்கள் இருக்கும்.. எவராயினும் இந்த பதிவில் உள்ள வலியை மறுக்கமுடியாது..
இயற்கை மருத்துவம்..பிரியாணியில் ஏலக்காயை பார்த்தாலே கடுப்பாகும் நம்மில் பலருக்கு ஏலக்காய் பற்றிய மருத்துவ குறிப்பு பதிவு இது.. என்னாதான் மருந்தா இருந்தாலும் நிச்சயம் என்னால முடியாது.. நீங்க வேணும்னா முயற்சி பண்ணி பாருங்க...
சினிமா இடுகைகளும் எழுதுகிறார்..பெண்ணியம், திருநங்கைகள்,நாக இரத்தின ஆராய்ச்சி என்று பெரிய ரவுண்டு வரும் எஸ்தர் சபியின் வலைத்தளம் இதோ உங்கள் வருகைக்கு..
அறிமுகம் # 13
பதிவர்: அரசன் (கரைசேரா அலை)
இணைப்பு: http:// karaiseraaalai.blogspot.in/
இவரின் தளத்திற்கு சென்று முதலில் இவரது சுயஅறிமுகத்தை வாசித்து பார்த்தாலே புரியும்..இவருக்கும் இவரின் ஊருக்குமான பற்றுக்கோடு..சென்னையில் பணியிலிருக்கிறார்..எப்போதெல்லா ம் சொந்த ஊருக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் தவறாமல் வந்துவிடும் ஒரு மண்வாசனை பதிவு..
கிராமத்து அழகு...இந்த தொடர்தான் இவரது தளத்தின் ஸ்பெஷாலிடி..ஊரில் இருக்கும் கள்ளி செடியில் இருந்து தெருநாய் வரை ஒன்றுவிடாமல் பதிவேற்றிவிடுவார்..ஏதோ அவரது ஊருக்குள்ளே சென்று வந்ததை போல தோன்றும் நமக்கு...அவ்வபோது ஊரில் படித்து நல்ல மார்க் வாங்கும் வாண்டுகளையும் கெளரவிப்பார்...
அதேபோல நகரத்தின் இயந்திர வாழ்வில் நாம் தொலைத்துவிட்ட கிராமத்து அற்புதங்களை வரலாறாகும் வாழ்வு..எனும் பதிவில் ஒரு கிராமிய கவிதையாய் சொல்லியிருக்கிறார்.. ஏற்கனவே மயிலிறகிலும் இதை நான் பகிர்ந்திருந்தேன்..
நுட்ப வளர்ச்சி..எதற்கெடுத்தாலும் வினைல் பேனர் வைக்கும் கலாசாரத்தை விவாதிக்கும் ஒரு குறுங்கட்டுரை..மனிதர் ரொம்ப நொந்து போயிருப்பார் போல...என் பங்கிற்கு நான் இதுவரை வைத்த பேனர்களை காண இங்கே சொடுக்கவும்...
சரி சார் ரொம்ப சீரியசான ஆசாமி போல...அப்டின்னு யாரும் இவர நல்லவர்ர்ன்னு நெனச்சுடாதிங்க...காதல் கவிதைகள் எல்லாம் சும்மா அள்ளிவிடுவார்...நான் மிகவும் சொக்கி போன கவிதை அப்படியே உன்னையும்...வாசிச்சு பாருங்க...
ஹ்ம்ம்.. சென்று பாருங்கள்...
இப்படியாக நிறைவடைகிறது என் இன்றைய/ இந்த வாரத்திற்கான அறிமுகங்கள்....இன்னதென்று இனம் பிரித்து சொல்ல முடியாத எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ள பதிவர்களை, அவர்களை பற்றி இதுவரை அறியாதிருந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட்ட திருப்தியுடன் இங்கே நிறுத்துகிறேன்...
மிக்க நன்றி நண்பர்களே..
மாலை சந்திப்போம்...
என்றும் நன்றியுடன்...சி.மயிலன்
அரசன் தளத்தை முன்பே பார்த்து இருக்கிறேன் .. எஸ்தர் தளம்தான் புதிது .. பகிர்வுக்கு நன்றி ..
ReplyDeleteiruvarum enakku puthithu!
ReplyDeleteungalukku nantri!
இருவரும் நான் ஏற்கனவே பின் தொடரும் பதிவர்கள் ஆயினும் அவர்கள் எழுதிய எல்லா பதிவுகளையும் படித்திருப்போமா என்றால் இல்லை என்று தான் நம்மில் எல்லாருமான பதில் வரும் அதன் படி நீங்கள் சுட்டிக்காட்டிய பதிவுகளை படித்துவிட்டு வந்தேன், அதோடு இதயம் பேசுகிறது சகோவோட மரித்து பிழைத்தவள் மனதை என்னவோ செய்கிறது...
ReplyDeleteகரைசேரா அலை அரசன் சகோ திருவிழா பொருட்களோட தன்னவளையும் வாங்கிட ஆசைப்பட்ட அந்த ரசனைக்குறிய வரிகள் ரசிக்க வைத்தது...
அது சரி கடைசியில என்ன டா இடைச்சொருகல்ன்னு பார்த்தா பேனர் விளம்பரம் ஹ ஹா எனக்கு பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது, நண்பர்கள் படித்தால் கடுப்பாவோர் சங்கம்... வாழ்க உமது சங்கம்.. மயிலனுக்கு அரசியல சேர ஆசை இருக்கோன்னு முதல் படம் தான் எண்ண வைத்தது...
எப்படியோ இந்த வாரம் அறிமுகப்பதிவர்கள் குறைவாயினும் குறையில்லாமல் உண்மையைச்சொல்லப்போனால் அவர்களோட பல்வேறு பதிவுகளை படிக்க காரணமா இருந்தது மயிலனோட இந்த எண்ணம் தான்.. உங்கள் எண்ணம் ஈடேறியது என்றே நினைக்கிறேன்.. வாழ்த்துகள் மயிலன் சகோ :)
இருவரும் புதியவர்கள் ! அவர்களின் தளத்திற்கு சென்று Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். புதிய அறிமுகங்களை அறிமுகப் படுத்தியதற்கு பாராட்டுக்கள் ! நன்றிகள் பலப்பல ...
ReplyDeleteஎல்லோரிலிருந்தும் வித்தியாசமாய் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நல்ல அங்கீகாரத்தை ஏற்படுத்தி தங்களுக்கு அளிக்கப்பட பணியை நிறைவாய் பூர்த்தி செய்தீர்கள், வாழ்த்துக்கள்.!
ReplyDeleteஇறுதி இருவர் அறிமுகம்.நன்றி. எஸ்தர் ஒரு தடவை கருத்திட்டதாக நினைவு. (ஞாபகம் இலு;லை)அவர் என்னிடம் வரவில்லை.
ReplyDeleteஅரசன் கருருத்திட்டுள்ளேன் ஒரு வேளை என் பதிவுகள் அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அவ்வளவு தான்.
இப்படித் தங்களுக்குப் பழக்கமான வலகளை மட்டும் அறிமுகப் படுத்துவதானால் பிரிவு பிரிவாக, குழு குழுவாகத்தான் வலையுலகம் இருக்கும். இது என் கருத்து.
தங்கள் வாரத்திற்கும், அறிமுகவர்களிற்கும். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//அரசன் தளத்தை முன்பே பார்த்து இருக்கிறேன் .. எஸ்தர் தளம்தான் புதிது .. பகிர்வுக்கு நன்றி ..//
பாருங்க சார்.. நல்லா எழுதுவா...
Seeni said...
ReplyDelete//iruvarum enakku puthithu!
ungalukku nantri!//
தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பரே...
ரேவா said...
ReplyDelete//அது சரி கடைசியில என்ன டா இடைச்சொருகல்ன்னு பார்த்தா பேனர் விளம்பரம் ஹ ஹா எனக்கு பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது, நண்பர்கள் படித்தால் கடுப்பாவோர் சங்கம்... வாழ்க உமது சங்கம்.. மயிலனுக்கு அரசியல சேர ஆசை இருக்கோன்னு முதல் படம் தான் எண்ண வைத்தது...//
ஹஹா.. இப்போ திருந்திட்டேன் ரேவா...:) அந்த ஆசையெல்லாம் இல்ல...:)
//எப்படியோ இந்த வாரம் அறிமுகப்பதிவர்கள் குறைவாயினும் குறையில்லாமல் உண்மையைச்சொல்லப்போனால் அவர்களோட பல்வேறு பதிவுகளை படிக்க காரணமா இருந்தது மயிலனோட இந்த எண்ணம் தான்.. உங்கள் எண்ணம் ஈடேறியது என்றே நினைக்கிறேன்.. வாழ்த்துகள் மயிலன் சகோ :)//
எனக்கு நிச்சயம் மிக பெரிய மன நிறைவு...நன்றி ரேவா...:)
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete//இருவரும் புதியவர்கள் ! அவர்களின் தளத்திற்கு சென்று Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். புதிய அறிமுகங்களை அறிமுகப் படுத்தியதற்கு பாராட்டுக்கள் ! நன்றிகள் பலப்பல ...//
வாரம் முழுதிற்குமான தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பரே...
வரலாற்று சுவடுகள் said...
ReplyDelete//எல்லோரிலிருந்தும் வித்தியாசமாய் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நல்ல அங்கீகாரத்தை ஏற்படுத்தி தங்களுக்கு அளிக்கப்பட பணியை நிறைவாய் பூர்த்தி செய்தீர்கள், வாழ்த்துக்கள்.!//
உங்களுக்கு மட்டும் நன்றி சொல்லியே தனி பதிவு எழுதலாம் போல.. ஏன் அணைத்து அறிமுகங்களையும் அங்கீகரித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
kovaikkavi said...
ReplyDelete//இறுதி இருவர் அறிமுகம்.நன்றி. எஸ்தர் ஒரு தடவை கருத்திட்டதாக நினைவு. (ஞாபகம் இலு;லை)அவர் என்னிடம் வரவில்லை.
அரசன் கருருத்திட்டுள்ளேன் ஒரு வேளை என் பதிவுகள் அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அவ்வளவு தான்.
இப்படித் தங்களுக்குப் பழக்கமான வலகளை மட்டும் அறிமுகப் படுத்துவதானால் பிரிவு பிரிவாக, குழு குழுவாகத்தான் வலையுலகம் இருக்கும். இது என் கருத்து.//
ஒருமுறை கொஞ்சம் விளக்கமாகவே பேசிவிடலாம் என்று நினைக்கிறேன்...
அடுத்தவர்கள் தளத்திற்கு நான் எப்போதும் ஒரு வாசகனாய்தான் செல்வேனே அன்றி பதிவனாய் அல்ல.. ஆமோதித்தோ எதிர்த்தோ கருத்திட தோன்றினால் நிச்சயம் இட்டுவிடுவேன்..அதற்காக அவர் என் வலைக்கு வரவேண்டும் என்று காத்திருக்க மாட்டேன்..யாரையேனும் அழைக்க வேண்டும் என்று தோன்றினால் அதற்கான லிங்க் அவர்கள் தளத்தில் கொடுத்துவிட்டு வருவேன்..
அதே போல அவரது பதிவுகள் பிடித்திருந்தால் மீண்டும் மீண்டும் செல்வேன்..அன்று அவர் எனக்கு பதில் மொய் வைக்கவில்லையே என்று நிறுத்திக்கொள்ள மாட்டேன்..சிலர் நாற்பது பேரை கூட follow செய்ய மாட்டார்கள்..ஆனால் நானூறுக்கு மேல் அவர்களுக்கு followers இருப்பார்கள்.. மொய்க்கு மொய் என்றால் இது எப்படி சாத்தியப்படும்.. நீங்கள் ஒருவருக்கு கருத்திட்டீர்கள் அவர்கள் உங்கள் தளத்திற்கு மீண்டும் வரவில்லை என்பதற்காக அவரது தளம் உங்களுக்கு பிடித்திருந்தும் அதனை தவிர்ப்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை..
அதேபோல எனக்கு பழக்கமான வலைகளை மட்டும்தான் அறிமுகபடுத்தி இருக்கிறேன் என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.. பதிவுலக பிரிவினைக்கு இது வித்து என்றும் கூறியுள்ளீர்கள்.. இது என்ன வேடிக்கை..? எனக்கு தெரிந்தவர்களைதான் நான் அறிமுகபடுத்த முடியும்...தெரியாதவர்களை எப்படி செய்ய? வலைச்சரத்தில் ஆசிரியராய் இருக்கும் காரணத்திற்கு அங்கங்கே நுனிப்புல் மேய்ந்து வந்தெல்லாம் என்னால் அறிமுகம் செய்ய முடியாது.. கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் படித்ததை,இரசித்ததை,வியந்ததைதான் இங்கே அறிமுகம் செய்ய முடியும்..
தவிர வலைச்சரத்தை தொடரும் ஒரு பத்து பேருக்காவது அவர்கள் புதிதாகத்தான் இருந்திருக்கிறார்கள்..எல்லோருடைய followers list இலும் குறைந்தது பத்து புதிய நண்பர்கள் இணைந்துள்ளார்கள்..இது குழுவிற்குள் முடியும் கூத்து என்று எப்படி சொல்ல முடியும்.. நானே இங்கே அறிமுகம்தான்..எனக்கு தெரிந்தவர்களை தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்..நிறைவான மகிழ்ச்சியுடன் பணியை நிறைவு செய்ய போகிறேன்..
இவை என் கருத்து...
தொடர்ந்து கருத்திட்டமைக்கு நன்றி...
நன்றி மயிலன் அண்ணா என் இறிமுகத்திற்கு மிக்க நன்றி...
ReplyDeleteமனம் நிறைந்த நன்றிகள் அண்ணாச்சி ,,, தங்களின் அன்பான அங்கீகாரத்துக்கும் , அழகிய விளக்கத்திற்கும் ...
ReplyDeleteமற்றும் எஸ்தர் அவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் ...