Sunday, June 24, 2012

கவிதைக்கதம்பம்...

வலைச்சர நண்பர்களுக்கு
வணக்கம் சொல்லி
இன்றொரு கவிதைக் கதம்பம்
கொணர்ந்திருக்கிறேன்...

அம்மா என்றொரு தேவதைக்கு
பிரிய(யா)த் தோழி
அளித்த அன்புப் பரிசு...

நேற்றைய நள்ளிரவில்
அக்கடிகாரம் விதைத்த
சுந்தரமான வற்றாயிறுப்பு...

இருட்டைப் பேசவைக்கும்
உரந்தையின்
புகாரி...

திருடுவதற்கல்லாப்
பூக்கள் வளர்த்த
பிரபாகரன்...

ஞாபகத் தூறல்கள்
தெளிக்கும் சுஜாவின்
அழகுக் கவிதைகள்...

இவ்வாறாய் ஐந்துப் பூக்கள்
கொண்டு தொடுத்த
அழகுச் சரம்
உங்கள் பார்வைக்காய்...

- நுண்மதி.

8 comments:

  1. சில நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.!

    ReplyDelete
  2. கவிதைக் கதம்பம் அருமை.

    ஐந்தே ஐந்து பூக்களுடன் தொடுத்துள்ள சரம் வியப்பளிக்கிறது.

    எல்லாமே மலர்ந்து விரிந்த அழகிய செந்தாமரைப் பூக்களாக இருக்குமோ.

    மலர்கள் மொத்தம் ஐந்தே ஐந்தானாலும் தாமரை போல இதழ்கள் நிறைய இருந்து சரத்திற்கு அடர்த்தியையும் நிறைவையும் அழகையும் தந்திடும் என நினைக்கிறேன்.

    அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    அன்புள்ள நுண்மதி,

    நாளை ஒரே ஒரு நாள் தான் பாக்கியிருப்பதாலும், நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக [தங்களுக்கும் வாசகர்களுக்கும் விடுமுறை தினமாக] இருப்பதாலும், நாளை மட்டும் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று முறைகள் வலைச்சரத்திற்கு வருகை தந்து, பலரையும் அறிமுகம் செய்து அசத்துங்களேன்.

    செவ்வாய் மற்றும் வெள்ளி தாங்கள் வலைச்சரப்பக்கம் வராமல் லீவ் எடுத்துக்கொண்டதை COMPENSATE செய்து விடுங்கள்.

    இது என் ஆலோசனை மட்டுமே.
    தங்கள் செளகர்யப்படி செய்யுங்கள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  3. மீண்டும் மீண்டும் என்னை அறிமுகப் படுத்தும் அனைத்து நல்ல நண்பர்களுக்கும் என் வலைத்தளத்திற்கு வருகை தந்து என் எழுத்தை உங்கள் அன்பினால் முத்தமிடும் அனைவருக்கும் நன்றி.... நுண்மதிக்கு நெஞ்சார்ந்த நன்றி !

    ReplyDelete
  4. கவிதைக் கதம்ப அறிமுகம் நன்று. இதில் சகோதரர் புகாரி எனக்கு மிகப் பிடிக்க கவிஞர். அவருக்கு இந்த அறிமுகம் எல்லாம் மிகச் சிறிது. ஆயினும் மிக்க நன்றி சகோதரி . தங்களிற்கும் வாழ்த்து. நேரமிருக்கும் போது மற்றவைகளையும் பார்ப்பேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. எனது வலைபதிவை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி ........சுஜா

    ReplyDelete