Saturday, June 30, 2012

ஹாரி பாட்டரும் கம்பியூட்டரும்

இது வரை வலைச்சரம் மூலம் பதிவுகளை பார்த்தவர்களுக்கும் , கமன்ட் பண்ணிய ஒவ்வொருவருக்கும் நன்றிகள்..

உலகம் இப்போது கண்டிப்பாக தொழில்நுட்பம் என்ற பெரிய ஜாம்பவானின் பிடியில் மிக மிக வசமாக பிடிபட்டு விட்டதை நாம் மறுக்க இயலாத உண்மை. நன்மைகள் எந்த அளவு உள்ளதோ அந்த அளவுக்கு நம்முடைய சிறிய அறியாமை அதை தீமையினை அணுக வைத்து விடும்.


ஹாரி பாட்டரும் கம்பியூட்டரும்




ஹாரி - ரோன் என் டவல பார்த்தியா?

ரோன் - ஆஹ்.. கூகுள்குடு.. தேடி தந்துருவாங்க.. அட போடா.. அவசரமா போகணும் என்ற வெளிய வாடா..

ஹாரிக்கு புது கம்பியூட்டர் வாங்குவதற்காக இன்று ஹாரி, ரோன், ஹர்மொயினி, ஜெனி (ரோனின் தங்கை) என்று நால்வரும் போவதற்காக ஆயத்தம் ஆகிறார்கள்.

ஹாரி - ஓகே.. தேடி தா.. இல்லாட்டி நான் அப்பிடியே வெளிய வந்துடுவன்..

ரோன் - உன்னை யாரு பார்க்க போரா.. என் கம்பியூட்டருக்கு என்ன நடந்ததோ தெரியல.. அத பார்த்துகிட்டு இருக்கன்..

ஹாரி - உனக்கு வேணும் டா.. எப்ப பார்த்தாலும் அதையே நோண்டி கிட்டு இருந்தா? இன்னைக்கு தானே கம்பியூட்டர் கடைக்கு போக போறம்.
அங்க பார்த்துக்கலாம்.



இப்படி சொல்லி கொண்டே ஹாரி நடந்து வந்தான் தனது டவலை எடுக்க.. கட்டிலில் இருந்த டவலை எடுத்து அப்போது தான் வந்த ஜெனியை கவனிக்காமல் முகத்தை துடைத்து கொண்டே மறுபடி பாத் ரூமிற்குள் சென்றான்.

இதை எதிர் பாராத ஜெனி கண்டும் காணாதது போல கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிந்து ஹாரி, ரோனின் அறைக்குள் வந்தாள்.

ஜெனி - என்ன டா? பெரிய சத்தம் வாசல் வரை கேட்குது.

திடுக்கிட்டு ஹாரியை திரும்பி பார்த்து அவன் உள்ளே போய் விட்டான் என்பதை உறுதி செய்து

ரோன் - ஏன் திடீர் என்று வாற? கதவை கிதவை தட்டிட்டு வார தானே..

ஜெனி - சொரி மன்னிச்சுக்கோ அப்ப நான் போறன்..

ரோன் - இல்ல நில்லு..

ஜெனி - அது.. இந்தா உன் சாப்ட்வேர் லெக்சரர் தந்து விட்டாங்க.. அம்மா உன்னை கால் பண்ணுனா ஆன்சர் பண்ண சொல்லிச்சு..

ரோன் - ஓகே டி..

ஜெனி - ஆமா என்ன பிரைச்சினை உன் கம்பியூட்டர்ல..

ரோன் - தெரியல டி.. இப்ப தான் டொமைன் வாங்கிணன்.. ஆனா ஒண்ணுமே வொர்க் பண்ண மாட்டேங்குது..

ஜெனி - கொஞ்சம் பொறுத்து இருந்து பாரு.. ஏனென்றால் சில வேளை ஏதும் தாமதமாக இருக்கலாம். சில தளங்கள் மூலமா டொமைன் வாங்கினா லேட் ஆகும் அண்ணா..

ரோன் - ம்ம் பார்க்குறேன்..

ஜெனி - ஆமா உன் கேர்ள் பிரெண்ட் எங்கே அவளும் வாராள் தானே..

ரோன் - ஆமா டி ஆமா ஐயோ மறந்தே போய்டன் .. என்னை ஏத்த வர சொன்னா..

ஜெனி - என்னது ?

ரோன் - இல்ல டி.. சும்மா.. அவ பைக் பழுதாம் பார்க்க வர சொன்னா..

ஜெனி - அது சரி..



ஓடி போனவன்.. ஹாரியும் ஜெனியும் தனிய விட்டு போகுறோம் என்று நினைப்பு வந்து .. அவர்கள் இருவரும் லவ் பண்ணுவது தெரிந்தும் அண்ணன் என்கிற கடமை உணர்வு தான்..

ரோன் - ஜெனி நீயும் வா

ஜெனி - உன் பைக்ல ஒரு சீட் தான் இருக்கு.. உன் அண்ணன் பாசம் என்னை வியக்க வைக்குது.. நான் வாசலிலே இருக்கன்.. நீ போய் வா

ரோன் - ஏதும் கேள்வி பட்டன் அம்மாகிட்ட சொல்ல வேண்டி வரும்..

ஜெனி - ஏது மெக்கானிக் வேலையையா? இல்ல டிரைவர் வேலையையா?

ரோன் - ?..?..?


அவன் வெளியே செல்ல தயார் ஆனான்.. அவள் உள்ளே செல்ல தயார் ஆனாள்..


13 comments:

  1. ரொம்ப நன்றி ஹாரி என்ன பத்தியும் சொன்னதற்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் இதில் சொல்லி உள்ளீர்கள்...

    ReplyDelete
  2. என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ஆசிரியரே!

    ReplyDelete
  4. என் தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா http://asathalimelathaniyam.blogspot.com

    ReplyDelete
  5. நன்றி நண்பரே! நான்கு பதிவுகளுடன் நறுக்கென்று முடித்து விட்டீர்கள்!

    ReplyDelete
  6. செம கலக்கலான ஸ்டைல்.
    இதைப் பார், அதைப் பார் எனச் சொல்லாமல், ஒரு கலகலப்பான உரையாடல் அதில் ஆங்காங்கே மற்ற தளங்களுக்கு இணைப்புகள்.... சூப்பர்!
    இந்த ஸ்டைல் புதிது. நிறைய இது போல எழுதுங்கள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. //chinna malai said... //

    நன்றி நண்பா..

    ReplyDelete
  8. //Abdul Basith said...//

    நன்றி நண்பா..

    ReplyDelete
  9. //திண்டுக்கல் தனபாலன் said...//

    //வரலாற்று சுவடுகள் said...//

    நன்றி

    ReplyDelete
  10. //asa asath said...//

    நன்றி நண்பா..

    ReplyDelete
  11. //Karthik Somalinga said...

    நன்றி நண்பரே! நான்கு பதிவுகளுடன் நறுக்கென்று முடித்து விட்டீர்கள்!//

    கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை நண்பா..

    ReplyDelete
  12. //Selva Kumar ISR said...

    செம கலக்கலான ஸ்டைல்.
    இதைப் பார், அதைப் பார் எனச் சொல்லாமல், ஒரு கலகலப்பான உரையாடல் அதில் ஆங்காங்கே மற்ற தளங்களுக்கு இணைப்புகள்.... சூப்பர்!
    இந்த ஸ்டைல் புதிது. நிறைய இது போல எழுதுங்கள்! வாழ்த்துகள்!//

    THANKS

    ReplyDelete