Sunday, June 10, 2012

முரளிதரன் மரு.சி.மயிலனிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் டி.என். முரளீதரன் , தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடு பாட்டுடனும் ஆர்வத்துடனும் மிகச் சிறப்பாகச் செய்து முடித்து, மனமகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் , சுய அறிமுகம், சிறுகதைகள், கவிதைகள், எதிர்மறைத் தலைப்புகள், நகைச்சுவை, 3 ஆண்டுகட்கு மேலாக சிறப்புடன் எழுதி வரும் பதிவர்கள், இரண்டே ஆண்டுகளீல் தனக்கென தனி இடம் பிடித்து வெற்றி பெற்ற பதிவர்கள், நன்றி என்ற தலைப்புகளில் 8 பதிவுகள் எழுதி இதுவரை 155 மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

அறிமுகப்பட்ட பதிவர்கள் 76
அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் - சுய அறிமுகம் உட்பட 112

டி.என் முரளிதரனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் மரு.சி.மயிலன் .

இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் என்ற ஊரில பிறந்தவர். தந்தை பிழைப்பின் காரணமாக புலம் பெயர்ந்த ஊர் மயிலாடுதுறை. பள்ளி கல்வி அங்கும், இளநிலை மருத்துவம் சென்னையிலும் முடித்து முதுகலை மருத்துவம் இறுதியாண்டு தஞ்சையிலும் பயில்கிறார்.

தந்தை மொழி ஆசிரியராக இருந்த காரணத்தால் - வீட்டில் குவிந்து கிடந்த ஆங்கிலப் புத்தகங்களை ஆரம்ப காலத்தில் இவர் வாசிக்க ஆரம்பித்தார். தமிழ் வாசிப்பு ஆரமபித்தது விகடன் - சுஜாதா என விரிந்தது. வாசிப்பனுபவம் எழுதத் தூண்டி - மயிலிறகு என்ற வலைப்பூ ஆரம்பித்து அழகாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

மரு.சி.மயிலனை வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் டி.என்.முரளிதரன்
நல்வாழ்த்துகள் மரு.சி.மயிலன்

நட்புடன் சீனா

12 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. அட... நம்ம மயிலனா வரும் வாரம்...
    வாழ்த்துக்கள் மயிலன்...

    முரளிதரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மயிலன் வலைசரத்தில் கலக்க

    ReplyDelete
  4. வாங்க மயிலன் வாங்க அசத்துங்க

    ReplyDelete
  5. வாங்க டாகுடர்............ வாங்க.......!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள். வாருங்கள் மயிலன்.

    ReplyDelete
  7. பேருவகையுடன் பொறுப்பேற்கிறேன்... நன்றி சீனா ஐயா..

    ReplyDelete
  8. கையில் உருட்டு கட்டையுடன் அழைக்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
  9. மயிலன்: நன்றி இருவரையும் தொடர்கிறேன்

    சீனா சார் மயிலன் டாக்டர். இவ்வளவு நேரம் ஒதுக்கி எழுதுவதே பெரிது !

    ReplyDelete