எல்லாருக்கும் வணக்கம். என்னைப் பற்றி சீனா ஐயா நேற்றே சொல்லி விட்டார். அதனால் நேரடியாக என் வலைப்பூ பற்றிய தகவல்களுக்கு வந்து விடுகிறேன். இல்லை நான் கண்டிப்பாக என்னைப் பற்றி சொல்லியே ஆகணும் கேக்கறவங்க இவன்தான் பலே பிரபு ன்னு ஏற்கனவே நான் வலைச்சரத்தில் எழுதி இருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இப்போது இது எனக்கு வெர்ஷன்-2.
அடுத்து என் வலைப்பூ, பலே பிரபு என்ற தளத்தில் என் எண்ணங்களை அவ்வப்போது தெளித்து வருகிறேன்.
அதில் என் மனதை கவர்ந்த படங்களைப் பற்றிய என் பார்வையையும் பதிவு செய்து வருகிறேன், வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா, தோனி - நான் படித்த படம், மற்றும் வழக்கு எண் 18/9 விமர்சனம் போன்றவை நான் எழுதிய விமர்சனங்கள்.
சினிமா குறித்து நான் எழுதிய மற்ற சில பதிவுகள் நண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள், மற்றும் நான் ஏன் விஜய் ரசிகன்?
என் வலைப்பூக்களில் கொஞ்சமாக கவிதைகளையும் காண இயலும். ஈகரை கவிதைப் போட்டி -5 இல் நான் எழுதிய பழுது படாத பாசம் என்ற கவிதை இரண்டாம் பரிசை பெற்றுள்ளது. ஆனால் பரிசு கிடைக்காத ஈழம் பாடாத இதயம் என்ற கவிதை என்னைப் பொறுத்தமட்டில் சிறந்ததாய் நினைக்கிறேன்.
என்னுடைய [எங்களுடைய] அடுத்த வலைப்பூ கற்போம். இதை கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கினோம். இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கற்போம் என்ற இணையத்தின் முதல் தொழில்நுட்ப மாத இதழை இலவசமாக வெளியிடுகிறோம். இதுவரை வந்த கற்போம் இதழ்களை தரவிறக்க இங்கே செல்லவும்.
இதில் நண்பர் சூர்ய பிரகாஷ் என்னுடன் பங்காற்றும் இன்னொரு நிர்வாகி.
நிறைய பதிவுகளை பரிந்துரைக்க முடியாது என்பதால்
- மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? - புதியவர்களுக்கு ,
- புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?,
- கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?
என்ற மூன்றையும் பரிந்துரைக்கிறேன்.
பதிவர்களுக்கு நான் எழுதிய மிக முக்கியமான பதிவு பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள்.
ஆன்ட்ராய்ட் அலைபேசி பயனர்கள் ஆன்ட்ராய்ட் கற்போம் என்ற தளத்தில் நான் பயன்படுத்தும் பயன்பாடுகள் பற்றி எழுதி வருகிறேன். இதில் முக்கியமான பயன்பாடுகளாக நான் கருதுபவை.
- கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்
- Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய
- Non-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்படி?
- நகரப்பேருந்து வசதிகளைப் பற்றி செய்தி தரும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்
இனி அடுத்து வரும் ஐந்து நாட்களிலும் என்னால் முடிந்த அளவு புதிய பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறேன் நண்பர்களே.
கற்போம் தளத்தில் இன்று
சட்டரீதியாக இலவச ஆங்கில மின்புத்தகங்கள் டவுன்லோட் செய்ய
கற்போம் தளத்தில் இன்று
சட்டரீதியாக இலவச ஆங்கில மின்புத்தகங்கள் டவுன்லோட் செய்ய
அனைத்து பதிவுகளும் முத்துக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 1)
அறிமுகம் அருமை.., தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் நண்பா :)
ReplyDeleteவாழ்த்துகள் பிரபு.,
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை இரண்டாம் முறை ஏற்றதற்கு...:))
வாழ்த்துக்கள் நண்பரே! இப்போதெல்லாம் 2.0 என்றாலே உதறலெடுக்கிறது! :D
ReplyDeleteசகோதரா நல்வாழ்த்து ஆசிரியப் பதவிக்கு. பதிவர்கள் செய்யும் 10 தவறுகளை நான் எனது முகநூலிலும் மறு பிரசுரம் செய்தேன். எனக்கு இப்போது ரிஷபன்,கோவி, கோமதி அரசு போன்றோரின் வலைகளிற்குச் செல்ல முடியாது அவர்கள் பக்கம் துள்ளுகிறது. (அது வேறு விடயம்.)தங்கள் அறிமுகம் நன்று. நன்றி
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கள் சகோ.! வெர்சன் இரண்டில் அதிகம் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteவருக பிரபு..நல்லதொரு அறிமுகம் தருக பிரபு..
ReplyDeleteஅன்பின் பிரபு - அறிமுகங்கள் அனைத்துமே படிக்க வேண்டிய பதிவுகள் தான். அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி - சென்று - பார்த்து - படித்து - ரசித்து - மகிழ்ந்து - மறுமொழிகள் இட்டு - தேவையானவற்றை தரவிறக்கம் செய்து - அன்பளிப்பு பெற்று - இரண்டு மணீ நேரம் கழித்து அப்பாடா எனத் திரும்பி வந்தேன். நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா
ReplyDeleteஇரண்டாவது முறையாக வந்ததால் நீங்கள் பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படுவீர்..!! :)
ReplyDeleteபிரபு பிரமாதமாக கலக்குங்க வாழ்த்துக்கள்.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteநன்றி சார்.
@ வரலாற்று சுவடுகள்
ReplyDeleteநன்றி நண்பா
@ நிகழ்காலத்தில் சிவா
ReplyDeleteநன்றி அண்ணா.
@ Karthik Somalinga
ReplyDeleteநன்றி சகோ.
//இப்போதெல்லாம் 2.0 என்றாலே உதறலெடுக்கிறது! :D//
ஹி ஹி ஹி கவலைப்பாடதீங்க பில்லா 2 மாதிரி இருக்காது.
@ kovaikkavi
ReplyDeleteமிகவும் நன்றிங்க.
@ Abdul Basith
ReplyDeleteநன்றி சகோ. முடிந்த அளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன்.
@ மதுமதி
ReplyDeleteநன்றி அண்ணா.
@ cheena (சீனா)
ReplyDeleteஇரண்டாம் முறை வாய்ப்பு கொடுத்த உங்களுக்கும் நன்றி ஐயா.
@ சேலம் தேவா
ReplyDeleteஹி ஹி ஹி முதல் முறை சரியா செய்யலேன்னு இரண்டாம் முறை எழுத சொல்லி இருக்கார் போல. இதை அரியர் என்று கூட சொல்லலாம் ;-)
@ Sasi Kala
ReplyDeleteநன்றி சகோ
வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள் பிரபு !!!
ReplyDeleteவாழ்த்துக்கள்...பிரபு...
ReplyDeleteமீண்டும் கலக்குங்க....
பிரபு வாழ்த்துகள்
ReplyDeletevaazhthukkal!
ReplyDelete@ Kousalya
ReplyDeleteநன்றி அக்கா.
@ NAAI-NAKKS
ReplyDeleteநன்றி சார்.
@ Lakshmi
ReplyDeleteநன்றி அம்மா.
@ Seeni
ReplyDeleteநன்றி சகோ.