Thursday, July 5, 2012

மூன்றாம் சுவை-கார்ப்பு


            
         கார்ப்புச்சுவை நம் எலும்புகள் வளர பெரிதும் துணை புரிகின்றதுகார்க்கிறது என்றால் என்ன? உப்பு கார்க்கும்,உப்பிட்டவரை உள்ளளவும் நினை. 
            ஆம், நமக்கு அன்றாடம் உணவில் உப்பிடும் சகோதரிகள், சமையல் குறிப்பு மட்டுமின்றி சகல விஷயங்களிலும் கலக்கி வரும் பதிவுகள் இன்று உங்கள் பார்வைக்கு:
                  இந்தத் தளத்தைப்படித்தால்குறை ஒன்றும் இல்லைஆன்மீகப்பயணம் இருக்கும், அனுபவங்களும் இருக்கும். கற்பனை இருக்கும், காமெடி யும் இருக்கும். கண்டுதான் பாருங்களேன்.
          மணிராஜ் என்ற வலைப்பூவில் மணிமணியான படங்களுடன் மனம் கொள்ளை கொள்ளும் ஞானமய கணபதி இருப்பார், தேன் சிட்டுக்கள் இருக்கும், கருத்தான கறிவேப்பிலையும் இருக்கும். 
         வலைப்பூவெங்கும் அமைதிச்சாரல் தூவிக் கொண்டிருக்கும். காமிரா கிளிக்கியவை காணலாம். அப்புறமா அதிர்ச்சி வைத்தியம் பற்றிய குறிப்பும் இருக்கும். அத்தோடு நில்லாமல்வீட்டுத்தோட்டம் போட வழிகளுமிருக்கும்.
      மனிதம் வளர்க்க மார்க்கமொன்று சொல்லும் அம்பாளடியாள், கவிதை வரிகளில் இலங்கைத்தமிழ் தாக்கமிருக்கும், தமிழோடு உறவாட தனி அழைப்புமிருக்கும்,சிந்தனைத்துளி சிதறியுமிருக்கும். 
                            சிறுகதை ஸ்பெஷலிஸ்ட் இந்தத் தள இயக்குநர். பிரசவமான தாய்க்கான மருந்தும் இருக்கும், மந்திர விளைவுகளும் இருக்கும். தென்னம்பாளையில் தேன்சிட்டு  திகட்டாத கவி விருந்து.
           இந்த வலைப்பூ வாசித்து வந்தால் சமைத்து அசத்தலாம். அனுபவமும் பேசும், ஆரோக்கிய உணவுகளும் இங்கிருக்கும்.
        முத்துச்சரம் முழுவதும் முல்லைச்சரம். பள்ளி வாகனங்களும் குழந்தைகள் பாதுகாப்பும் என பதைபதைத்திருப்பார். படபடக்கும் பட்டாம்பூச்சிகள் இங்கே பார்க்கலாம். உன்னோடு நான் என்று படைக்கும் கவிதைகள் நடுவே, உன்னோடு நீ என்று உன்னதமாய்ச் சொல்லியிருப்பார்.
                            தளத்தின் பெயர் பாலைத்திணை. குவைத்தில் வசிப்பதால், குறிப்பிட்ட இந்த பெயரோ!  மழலைத்தினைதான் மயக்க வைக்கிறது. குழந்தை அமுதினி பற்றி விவரிக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தைகளுக்குள் நம்மை சிக்க வைக்கிறது.
இனி வருவன பெண்களைக்கவரும் பதிவுகள்:
                       பயணங்களும், பார்த்த இடங்களும் , பாதித்த விஷயங்களும் இங்கே பகிரப்படுகின்றன. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள கோவில்களுக்கு சென்ற அனுபவத்தை தல புராணங்களை சேர்த்து சொல்லும் விதம் நமக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும்.
                           ஆன்மீகம் தொடர்பான தேடலுக்கு ஒரு தளம். திருவையாறு வரலாறு, தியாகராஜா சுவாமிகள் வரலாறு, தஞ்சை பெரிய கோவிலை பற்றிய ஆய்வு கட்டுரை என பல தகவல்களை விரிவாக எழுதி உள்ளார். அம்மா இங்கே ஆராதிக்கப்படுகிறார். தேவாரத் திருப்பதிகங்கள் தலவிபரம், பாடியவர் விபரம், ராகம், தாளம் எனத் திகட்ட வைக்கும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
              மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை, பல்வேறு சடங்குகள் நடத்தப்படுகின்றன. சடங்குகள் பற்றிய தாத்பரியங்களும், சடங்கு நடத்த தேவைப்படும் பொருள்களின் பட்டியலும் விரிவாக இங்கே காணலாம்.
             உப்பு குறித்த சிறு தகவல் ஒன்று. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பில், சோடியம் இருக்கும். அந்த சோடியம், இரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணமாகும். இரத்த அழுத்த அறிகுறிகள் உள்ளோர் உண்ணும் உணவில் பயன்படுத்த, சோடியம் குறைவான/இல்லாத சமையல் உப்பும் உள்ளது.

                                    இந்த சுவை எப்படியிருந்தது? நாளை பிரிதொரு சுவையினை,  சுவைபடக் கொணர்கிறேன்.

17 comments:

  1. செம அறிமுகங்கள்....
    அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்,....

    ReplyDelete
  2. நிறைய பேர் புதியவர்கள். நல்ல அறிமுகங்கள்....

    ReplyDelete
  3. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் ஆபிசர் - செல்ல நாய்க்குட்டி மனசு

    ReplyDelete
  5. மணிராஜ் என்ற வலைப்பூவில் மணிமணியான படங்களுடன் மனம் கொள்ளை கொள்ளும் ஞானமய கணபதி இருப்பார், தேன் சிட்டுக்கள் இருக்கும், கருத்தான கறிவேப்பிலையும் இருக்கும்.

    எமது பதிவையும் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  6. வலைச்சர பூக்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நிறைய பேர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்களே....எல்லாருக்கும் வாழ்த்துகள்....!

    ReplyDelete
  8. அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்,.. officer...

    ReplyDelete
  9. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    http://samaiyalattakaasam.blogspot.com

    ReplyDelete
  11. முத்துச்சரம் பதிவுகளைப் பகிர்ந்திருப்பதற்கு மிக்க நன்றி. அறிமுகமாயிருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    வலைச்சர வாரத்துக்கு தங்களுக்கும் எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. ஆசிரிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்..

    அமைதிச்சாரலையும் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி.

    அறிமுகமான மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அருமையான அறிமுகங்கள் ஆபீசர்... உங்கள் தேடல் உழைப்பு தெரிகிறது...!

    ReplyDelete
  15. உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் படிக்கும்பொழுது கடுமையான உழைப்பு வரிக்கு வரி உணரப்படுகிறது.. ஒருவாரம் ஆபீசிர்க்கு லீவு போட்டுட்டீங்களா என்ன????

    ReplyDelete
  16. மிக்க நன்றி இப்போதுதான் கண்டுகொண்டேன் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள் என்னையும் அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கும்
    என்றும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete