அனைவருக்கும்
வணக்கம்., ஒளியை உணர்வதற்கு.. இயற்கையால் மனிதனுக்கு பரிசளிக்கப்பட்ட அற்புதமான உறுப்பு
தான் கண்.! மனிதனது கண்கள் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும்
மேற்பட்ட வர்ணங்களை வேறுபடுத்தி காணும் தன்மை கொண்டது..! ஒரு நிழற்பட கருவியின் (camera)
இயக்கத்தை போல் செயல்படும் கண்.... உடலில் உள்ள ஏனைய பிற எல்லா உறுப்புக்களை
காட்டிலும் அற்புதமான மெக்கானிசம் கொண்டது. இதில் ஏற்படும் சில குறைபாடுகளினால்
உண்டாவது தான்... இன்று வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கும் பிரச்சனையான கிட்டப்பார்வை
(Myopia) ., மற்றும் தூரப்பார்வை (Metropia) குறைபாடுகள்.!
அது குறித்து
காண்பதற்கு முன்பு முதலில் கண் எப்படி இயங்குகிறது என்று சுருக்கமாக தெரிந்துகொள்வோம்..! (விரிவாக எனது இணைய தளத்தில் விரைவில் எழுதுகிறேன்) நாம்
ஒரு பொருளை கான முயற்சிக்கும் போது கண்ணின் வெளிப்புறத்திலுள்ள கார்னியா (Cornea) வெளிச்சத்தின்
உதவியுடன் அவற்றை ஒளிக்கற்றைகளாக படம் பிடித்து தனக்கு பின்னால் உள்ள குவிஆடிக்கு (Lens)
அனுப்பிவைக்கிறது. குவிஆடி அவற்றை புகைப்பட உருவங்களாக மாற்றி தனக்கு
பின்னால் உள்ள விழித்திரையின் (Retina) மீது குவிக்கிறது.! விழித்திரை இவற்றை
மின்விசைகளாக மாற்றி நரம்புகளின் வாயிலாக மூளைக்கு அனுப்பி வைக்கிறது. மூளையில் அவை
விருத்தி செய்யப்பட்டு பொருளின் உருவம் உணரப்படுகிறது. இத்தனை நீளமான நிகழ்வுகள் நொடிக்கும் குறைவான வினாடிகளில் நடந்தேறித்தான் நம்மளால் பொருட்களை பார்க்க இயலுகிறது..!
இந்நிகழ்வின் போது ஒளிக்கற்றைகள்..
விழித்திரையின் மீது சரியாக குவிக்கப்படாத போது ஏற்படுவதுதான்., கிட்டப்பார்வை
மற்றும் தூரப்பார்வை பிரச்சனை.! ஒரு பொருளை நாம் பார்க்கும் போது அருகில் உள்ள
பொருள் நன்றாக தெரியும் அதே வேலை தூரத்தில் உள்ள பொருட்கள் அவ்வளவாக தெளிவாக தெரியாது.
இந்த கோளாறு ஏற்படுவதற்கு காரணம் நாம் பார்க்கும் பொருளிலிருந்து பெறப்பட்ட ஒளிக்கதிர்கள் கார்னியா மற்றும் லென்ஸ் மூலம் நமது விழித்திரையின் மீது மிகச்சரியாக குவிக்கப்படாமல் விழித்திரைக்கு முன்பாகவே குவிந்துவிடுவது
தான். இதன் காரணமாக அந்த பொருளின் தெளிவான பின்பம் விழித்திரைக்கு கிடைக்கப்பெருவதில்லை. இதுவே கிட்ட பார்வை கோளாறு என்று அழைக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் மையோப்பியா
(((((((((()))(((Myopia) என்று
அழைக்கிறார்கள்.!
தூரப்பார்வை
பிரச்சனையில் நாம்
பார்க்கும் பொருளிலிருந்து பெறப்பட்ட ஒளிக்கதிர்கள் நம் விழித்திரையின் மீது குவியாமல்
விழித்திரையை தாண்டி விழித்திரைக்கு பின்பக்கம் போய் குவிந்துவிடுகிறது. இதன் காரணமாக விழித்திரையால் அந்த பொருளின் தெளிவான பிபத்தை பெற இயலாமல் ஒரு மங்கலான தோற்றத்தையே மூளைக்கு வழங்க இயலுகிறது. இதுவே
தூரப்பார்வை குறைபாடு என்று அழைக்கப்படுகிறது இதனை மருத்துவர்கள் மெட்ரோப்பியா
என்று அழைக்கிறார்கள். மிகத்துல்லியமாக கணிக்கப்பட்ட குவியதூரம் கொண்ட கண்ணாடிகளை (eye class) அணிவதன்
மூலமாக கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய இரண்டு கோளாறுகளையும் சரி செய்து கொள்ளமுடியும்.
சரி இனி பதிவின் தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்.!
அறிமுகம்-10; வலைத்தளம்: http://www.tamilparents.com/
பதிவர்: சம்பத்குமார்
எதை வேண்டுமானாலும் எழுதலாம்
என்றிருக்கும் இணைய உலகில் எவை உண்மையில் பிறருக்கு பயனுள்ள விசயமாக இருக்குமோ அவற்றை மட்டுமே எழுதுக்கொண்டிருப்பவர்களுள் ஒருவர் தான் தமிழ் பேரன்ட்ஸ் சம்பத்குமார் வலைச்சர ஆசிரியராக இவர் பணியாற்றிய போது தான் இவரது வலைத்தள அறிமுகம் எனக்கு
கிடைத்து. குழந்தை வளர்ப்பின் நுட்பம் பற்றி... இவர் பதிவிடும் இடுகைகள் பெற்றோர்கள்
மட்டுமின்றி அனைவரும் வாசிக்க வேண்டியவை.! இவரது சமீபத்திய தொடர் இடுகையான குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை :பாகம்-1 பாகம்-2
பாகம்-3 பாகம்-4 அனைவரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டியது.!
அறிமுகம்-11; வலைத்தளம்: http://dindiguldhanabalan.blogspot.com/
பதிவர்: திண்டுக்கல் தனபாலன்
இணையத்தில் நல்ல
கருத்துக்களை மட்டுமே எழுதிகொண்டிருக்கும் மிக சொற்பமான பதிவர்களில் திண்டுக்கல் தனபாலனும் ஒருவர். தோராயமாக ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவரது வலைத்தள
அறிமுகம் எனக்கு கிடைத்தது.! இவரது தெய்வம் இருப்பது எங்கே? என்ற
இடுகையைத்தான் நான் முதன் முதலில் வாசிக்க நேர்ந்தது.! மனிதனதுபிரச்சனைகளுக்கு காரணமானது எது? மற்றும் மனித வாழ்வில் போனால் வராதது எது? மற்றும் முயற்சி+பயிற்சி=வெற்றி போன்றவை
நீங்கள் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய இடுகைகள் ஆகும்.!
அறிமுகம்-12; வலைத்தளம்: http://urssimbu.blogspot.com/
பதிவர்: மாணவன்
வலைத்தளத்தில் நான்
எழுத துவங்குவதற்கு முன்பு இருந்தே மாணவனின் வலைத்தளம் எனக்கு
பரீட்சயம் தான்.! இயல்பாகவே வரலாறுகளை வாசிப்பதில் எனக்கு இருந்த ஆர்வம் இவரது
வலைத்தளத்தை பார்த்த பின் நானும் எழுதினால் என்ன என்ற சிந்தனையை தோற்றுவித்தது.!
அந்த வகையில் என்னை பதிவுகள் எழுத தூண்டியது இவரது வலைத்தளம் தான் என்றால்
மிகையில்லை.! பல்வேறு சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை தன்னுள் அடக்கியிருக்கும் இவரது வலைத்தளத்தின் ஒவ்வொரு இடுகையையும் நாம் தவறவிடாமல் வாசிக்க வேண்டியவை.! இருப்பினும்
இவரது கடைசி நான்கு படைப்புகளை இங்கு பகிர்கிறேன் தவறாமல் வாசித்து மகிழுங்கள். ஜேம்ஸ்வாட் - வரலாற்று நாயகர், மற்றும் கன்பூசியஸ் தத்துவ மேதை சர்எட்மன்ட் ஹில்லாரி, ராபர்ட் கார்டு வெல்.!
எனது இன்றைய அறிமுகம்... இவர்கள் மூவர்களோடு இத்துடன் இனிதே நிறைவுறுகிறது.. எல்லாம் வல்ல அந்த விநாயகப் பெருமானின் ஆசியிருந்தால்.. நாளையும்.. என்னை கவர்ந்த சில பதிவர்களோடும்.... ஏதாவது ஒரு புதிய தகவலோடும்.... மீண்டும் வருவேன்.! நன்றி.. மீண்டும் சந்திப்போம்.. வணக்கம்.!
நல்ல விஷயம் எழுதும் மூவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteமாணவன் எனக்குப் புதிதாய் இருக்கிறார். மதியம் அவர்ன் பதிவுகளுக்கு விசிட் அடிக்கிறேன். நல்லறிமுகங்களுக் நனறி நண்பா. அறிமுக்ம் பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுத்த◌ான மூவர் அறிமுகங்கள் சிறப்பு எனக்கும் மாணவன் புதியவர் பார்த்து வருகிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமகா கனம் என்கிற சொல்லுக்கு பொருத்தமான
ReplyDeleteபதிவர்களையும் அவர்களது பதிவுகளையும்
அறிமுகப் படுத்தியது மிக மிக அருமை
இந்த வரிசையில் சேர வேண்டிய பதிவுதான்
தங்கள் பதிவுகளும் என்பதை இங்கே
பதிவு செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்
பதிவும் அறிமுகமும் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைத்தளம் தவிர மற்ற இருவரின் வலைத்தளங்களும் எனக்கு புதியவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteதெரிந்த தெரியாத அறிமுகங்கள், கண் தகவல்களிற்கு நல்வாழ்த்து.பணி மேலும் தொடரட்டும் இனிதாக.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
சம்பத் புதியவர்.
ReplyDeleteமற்றவர்கள் அறிந்த முகங்களே...
தனபாலனும் மாணவனும் அருமையான எழுத்தாளர்கள்.
என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மிக்க நன்றி. நன்றி.. நன்றி...
ReplyDeleteஇதைத் தவிர சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை..
மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி. (த.ம. 5)
தங்களின் அறிமுகத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே..
ReplyDeleteஉங்களின் ஆதரவோடு பயணம் தொடரும்..
அறிமுகமான நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி
சம்பத்குமார்
கண்களைப்போல் சிறப்பான பதிவுகளைப் படம் பிரித்துக் காட்டியதற்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteகண்பற்றிய அருமையான விளக்கத்துடன்! கண்ணான மூன்று பதிவர்களை அறிமுகம் செய்த விதம் அருமை!
ReplyDeleteநல்லதொரு பதிவு..தெரிந்து கொண்டேன்..நன்றி..
ReplyDeleteவலைச்சரத்தில் எமது வலைத்தளத்தை அறிமுகப்படுத்திப் பகிர்ந்துகொண்டமைக்கு இதயங்கனிந்த நன்றி நண்பரே! அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்... மென்மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க உங்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteகண் பற்றி உங்கள் வலையில் தொடருங்கள்....
அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete@ மோகன் குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மோகன் சார்.!
@ பால கணேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்.!
@ Sasi Kala
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!
@ Ramani
ReplyDeleteவாங்க ரமணி ஜி.. தங்கள் தொடர் வருகையும் வாக்களிப்பும் என்னை உற்சாகப்படுத்துகிறது.!
@ வே.நடனசபாபதி
வாருங்கள் ஐயா... தங்களது தொடர் வருகையும் கருத்துப்பதிவும் என்னை உற்சாகமடைய செய்கிறது.!
@kovaikkavi
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.!
@ சே. குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.!
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைதந்து கருத்தளித்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து தரமான இடுகைகளை பதிவிட முயர்ச்சியுங்கள்.!
@ சம்பத்குமார்
வருகைதந்து கருத்தளித்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சம்பத் ஜி., தரமான இடுகைகளை பதிவிடும் உங்களுக்கு என் ஆதரவு மட்டுமல்ல எல்லோருடைய ஆதரவும் கிட்டட்டும்.!
@ இராஜராஜேஸ்வரி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!
@ s suresh
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!
மதுமதி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.!
@ மாணவன்
ReplyDeleteவாங்க குருஜி.. வருகை தந்து கருத்தளித்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.!
@ ரெவெரி
நேரமின்மை காரணமாக விரிவாக பதிவிட இயலவில்ல நண்பரே., விரைவில் உங்களின் விருப்பம் என் வலையில் ஈடேறும்.!
@ Lakshmi
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி லக்ஷ்மி அம்மா.!
மிக மிக பயனுள்ள வலைத்தள அறிமுகங்களுக்கு மிகவும் நன்றி வரலாற்று சுவடுகள். ரமணி சார் சொன்னது போல் இந்த வரிசையில் வரக்கூடியதே தங்கள் தளமும். தங்களுக்கு நன்றியும் பாராட்டும்.
ReplyDeletemaanavan enakku pauthusu!
ReplyDeletematra iruvar pinthodaravevseykiren!
ungalukku nantri!
@ கீதமஞ்சரி
ReplyDelete///ரமணி சார் சொன்னது போல் இந்த வரிசையில் வரக்கூடியதே தங்கள் தளமும்///
நான் அந்த அளவிற்கு இன்னும் உயர்ந்துவிடவில்லை என்று நினைக்கிறேன் சகோ!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ Seeni
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!