Monday, August 20, 2012

நோக்கம்...(அறிமுகம்)



கோடிகளில் ஒன்றே-
உயிர் பிழைக்கிறது-
கருவறையில்!

கோடானு கோடி மக்களில்-
ஒரே துளிதான் நாம்-
உலகில்!

வந்தவர்கள்-
கணக்கு என்ன?

"இருப்பவர்கள்"-
கணக்குதான் என்ன!?

"போனவர்கள்"-
நிலைதான் என்ன!?

அனைத்திற்கும் -
"முடிவில்லாமல்"-
இருக்குமா என்ன!?

அறிய விழைகிறேன்-
பிறந்ததின் -
நோக்கத்தை!

அதிலொன்றே-
தொடர்கிறேன்-
"எழுத்தை"!

எழுதி உள்ளேன்-
ஐநூறு கவிதைகளை!

சில மக்களிடம்-
சேர்ந்து இருப்பதோ-
இருக்கலாம் -
இருபதுகளே!!

தேர்ந்தெடுத்து போடுகிறேன்-
சிலவற்றை!

'நுழைந்து '-
படிக்கலாம்-
எல்லாவற்றையும்!

1 .அணை..
2 .சகோதரிகளே....
3 .உம்மாளே...
4 .கண்திருஷ்டியா..?
5 .கண்டதுண்டா?
6 .திருமணம் ஆகி போனவளே...
7 .நட்பு...
8 .இப்படிக்கு...9 . பெண் சிசு!
10 .தலைவாச கதவு!

நாளை தொடர்கிறேன்-
அறிமுகங்களை!

இல்லை-
முத்துகளை!

நாளைய தலைப்பு-;
மூத்தவர்கள்...

39 comments:

  1. அன்பின் சீனி

    நல்லதொரு துவக்கம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - ரம்லான தின நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அன்பின் சீனா!


    உடனடி வரவிற்கும் -
    கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி!

    வாழ்த்துக்களுக்கும்!

    ReplyDelete
  3. எதையும் வித்தியாசமாக யோசிப்பதிலும்
    சிறப்பாக வழங்குவதிலும் பதிவுலகில்
    பல்ர் இருக்கிறார்கள்
    அதில் குறிப்பிடத்தக்கவர் நீங்கள்
    சுய அறிமுகம் வித்தியாசமாக்வும்
    அழகாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது
    ஒரு வாரம் நாங்கள் உங்கள் பிடியில்
    ஜமாயுங்க்கள்

    ReplyDelete
  4. அறிமுகக் கவிதை அருமை...

    எல்லாவித சுவைகளும் உங்கள் கவிதைகளில் உண்டு...

    அறிமுகங்களை (நாளை முதல்) தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

    இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்...

    நன்றி... (TM 2)

    ReplyDelete
  5. அறிமுக கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அறிமுகம் . அழகுமுகம் .
    தொடருங்கள் உற்சாகமுடன் சீனி.
    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  7. கவிதையாலே உங்கள் அறிமுகம்.. அருமை நண்பா பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.... உங்கள் அறிமுகத்தோடு பதிவர்களின் பதிவின் அறிமுகத்தையும் காண காத்திருக்கிறோம்.. வாழ்த்துகள் சகோ.....

    ReplyDelete
  9. அறிமுகத்தை கவிதையாகத் தந்தது நன்று சீனி. உங்கள் பெயரில் இருக்கும் இனிப்பு இந்த வாரம் முழுவதும் உங்களின் அறிமுகங்களிலும் இருக்கும் என்பதை அறிவேன். உடன் வருகிறேன் நண்பா. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஓ! கவிதையா!...எனக்கு மிகப் பிடிக்கும்.
    நானும் எழுதியது றிறைய அறிமுகமானது சில.
    நான் நிச்சயம் மாலையில் வாசிப்பேன் அனைத்துக் கவிதைகளும்.
    தொடரட்டும். பயணம் .
    நலவாழ்த்து.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  11. கவிதையுடனான அறிமுகம் அருமை நண்பரே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இந்த வாரம் முழுதுமே இனிமைதான் சீனி.அருமையான கவிதையோடு ஆரம்பம்...தொடருங்கள் !

    ReplyDelete
  13. அறிமுகக்கவிதை நன்று சிறப்பான வாரத்தை எதிர்நோக்குகிறேன்.
    ஈகைத்திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் நண்பா..........

    ReplyDelete
  15. அறிமுகக்கவிதை அசத்தல்! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    ReplyDelete
  16. அறிமுகம் சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்குது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    VGK

    ReplyDelete
  17. சிறப்பான துவக்கம். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்!

    ஸ்ரீ....

    ReplyDelete
  18. ottaliththamaikkum mikka nantrikal-
    ayya!

    ReplyDelete
  19. எழுதி உள்ளேன்-
    ஐநூறு கவிதைகளை!

    நிறைந்த வாழ்த்துகள் !

    ReplyDelete
  20. கவிதையில்
    கவிதையின்
    முகம்

    ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் சீனி.தொடர்ந்து அசத்துங்க,அருமை.

    ReplyDelete
  22. ராஜேஸ்வரி!

    உங்க ஆதரவுக்கு-
    மிக்க நன்றி!

    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  23. செய்தாலி!

    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  24. asiya omar!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete