அன்பின் நண்பர்களே !
இன்றுடம் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற அருமை அண்ணா மதுரை சொக்கன் அவர்கள் - தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் பொறுப்பினை அனந்த் நாராயணிடம் ஒப்படைத்து விட்டு நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் சுய அறிமுகம் உள்ளிட்ட ஏழு இடுகைகள் இட்டு, முப்பது பதிவர்களைஅறிமுக படுத்தி - அவர்களது நாற்பத்திரண்டு இடுகைகளை அறிமுகம் செய்திருக்கிறார். பழம் பெரும் பதிவர்களிடம் துவங்கி தற்கால் புதிய பதிவர்கள் வரை அலசி ஆராய்ந்து அறிமுக படுத்தி இருக்கிறார். உழைப்பு பாராட்டுக்குரியது.
ஒவ்வொரு இடுகையிலும் ஒரு திருமந்திரப் பாடலும் - ஒரு விளக்கமும் கொடுத்து விட்டு - அறிமுகங்களைத் தொடர்வது பாராட்டுக்குரியது.
அண்ணா மதுரை சொக்கனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்த நண்பர் அனந்த் நாராயண் சினிமா இயக்குனராக வேண்டுமென்ற லட்சியத்துடன் சென்னைக்கு வந்த லட்சோப லட்சம் பேர்களுள் ஒருவர் ... ஒரு நாள் அந்த பேரின்பம் கிட்டுமென்ற நம்பிக்கையில் சினிமா பற்றிய விமர்சனங்கள் , விவாதங்கள் , கலந்துரையாடல்கள் , குறும்படங்கள் போன்ற சிற்றின்பங்களுடன் வாழ்ந்து வரும் ஒருவர் ... மேலாண்மைத் துறையில் பட்டம் பெற்று தற்போது வங்கியில் பணிபுரியும் இவர் " வாங்க ப்ளாகலாம் " ( Vanga Blogalam )என்ற இவருடைய வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
நண்பர் அன்ந்த் நாராயணை வருக வருக என் வரவேற்று நல்வாழ்த்துகள் கூறி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் மகிழ்ச்சி கலந்த பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் மதுரை சொக்கன் அண்ணா
நல்வாழ்த்துகள் அனந்த் நாராயண்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் அனந்த் நாராயண் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசென்ற வார ஆசிரியர் மதுரை சொக்கன் அவர்களுக்கு பாராட்டுகள்....
தொடரட்டும் வலைச்சரத்தில் அறிமுகங்கள்....
வெல்கம் அனந்து .
ReplyDeleteவாழ்த்துக்கள் .
அனந்த் நாராயண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகங்களை அறிய ஆவலாய் உள்ளோம்... (TM 2)
அனந்த் நாராயண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா .... என் முழுப் பெயரையும் குறிப்பிட்டுள்ளீர்கள் ... பதிவுலகிலும் , நண்பர்கள் மத்தியிலும் நான் அனந்து என்றே அழைக்கப்படுகிறேன் ...
ReplyDeleteவாழ்த்துகள் அனந்து!
ReplyDeleteவாழ்த்துகள் அனந்து
ReplyDeleteவாழ்த்துகள் அனந்த்
ReplyDelete