Wednesday, September 12, 2012

மேலும் கவிதைகள்!


வணக்கம் தோழர்களே!

இன்றும் சில கவிதைகளோடு உங்களைச் சந்திக்கிறேன். மீண்டும் கவிதையா என முகம் சுளிக்க வேண்டாம். கவிதைகளோடு பழகிப் பாருங்கள்; நீங்களும் கவிதையின் காதலராகிப் போவீர்கள்!

போர்க்களமாகிப் போன மண்ணிலிருந்து எழும் கவிதைகள் எப்போதும் வலி நிறைந்தவை; குறைந்த பட்சம் உங்கள் கண்ணீரையாவது யாசித்து நிற்பவை.

இவரது கேவலமான பிரார்த்தனையும் துயரவியாபாரமும் அத்தனை கேவலமா இல்லை வியாபாரமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா கூட அத்தகைய துயரம் நிறைந்த ஒரு கவிதைதான்.

அகதியாதலின் வலியைச் சொல்லும் இந்தப் படகில் நுழையாக் கடல் நம் கண்களில் நுழைந்து பெருக்கெடுக்கிறது

மன்னிப்பு எப்போதும் மகத்தானது; முடிந்தால் நீங்களும் மன்னியுங்கள்!

இளையராஜா என்னும் இசைப் பேரரசனின் ஒற்றை வயலின் உங்கள் நாடி நரம்புகளில் எல்லாம் சுரம் மீட்டுவதைக் கேளுங்கள்!

நூலகத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? உங்கள் வாசிப்பு எத்தகையது? இந்த அனுபவம் உங்களுக்குமிருக்கிறதா எனப் பாருங்கள்!

உங்களைத் தொடரும் நிழலை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நிழல் நம்மில் உருவாக்கும் சலனங்கள் விசித்திரமானவை!

இந்த மழைப்பாடல் கேட்பதற்கினியது; கொஞ்சம் கேளுங்கள்! கொஞ்சம் நனையுங்கள்!

இறந்து போகாமல் கவிதை எழுதுவது எப்படி என்று இவர் கற்றுத் தருகிறார்; கற்றுக் கொள்ளுங்கள்!

கவிதைகள் போதும் என்று நினைக்கிறேன் தோழர்களே! நாளை வேறு களங்களோடு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்,
அப்துல் காதர்.


10 comments:

  1. நல்ல அறிமுகங்கள். இது வரை சந்திக்காத மனிதர்கள்.

    ReplyDelete
  2. ஒரு புத்தகம்
    ஒவ்வொருவருக்கும்
    ஒவ்வொரு புத்தகமாவது
    எவ்வளவு இயல்பானது - சுகுமாரன்

    வாசிப்பு குறித்த சுகுமாரனின் கவிதை அருமை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  4. அறிமுகங்கள் புது முகங்களாக இருந்தார்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அனைத்தும் புதிய அறிமுகங்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அறியாத கவிஞர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html



    ReplyDelete
  7. அனைவருக்கும் நன்றி!

    நாளை வலைச்சரத்தில் எனது பதிவு இருக்காது. பணி நிமித்தம் வெளியூர் செல்வதால் வெள்ளிக்கிழமை சேர்த்துப் பதிவிடுகிறேன்.
    அனைவரும் பொறுத்தருள வேண்டும்!

    ReplyDelete
  8. அறியாத சில தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  9. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ஆசரியர் தொடர்ந்து தனது தேடல் பயணத்தை இனிதே தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அறிமுகப்படுத்துபவர்களுக்கு நன்றிகள், அறிமுகமாகிறவர்களுக்கு வாழ்த்துகள்.

    கவிதைகளும் அருமை, குறிப்பாக அகதியாதலில் வலி.

    என் தளத்தில் தினசரி குறுக்கெழுத்து-2 வெளியிட்டிருக்கிறேன்,


    ReplyDelete