சிறுகதை எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் வலைப்பதிவு. சில சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவ்வப்போது இவர் பதிவிடும் சிறுகதைகளுக்காக இந்தத் தளத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம்.
விளம்பரத்துறையில் பணியாற்றும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் வலைப்பூ. பெரும்பாலும் சிறு கவிதைகள்தான். ஆனால் தனக்குள் முடிச்சினை வைத்திருக்கும் கவிதைகள். மேஜிக்கல் தன்மையுடைய கவிதைகளை இப்பொழுது அதிகம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
நவீன கவிஞர்கள் வரிசையில் முக்கியமான கவிஞரான ராணிதிலக்கின் வலைத்தளம் இது. விக்கிரமாதித்யன் ராணி திலக் பற்றி எழுதிய கட்டுரை, ராணிதிலக்கின் நேர்காணல் போன்றவை முக்கியமான பதிவுகள். கவிதைகள் பற்றிய தனது விமர்சனங்களை சப்தரேகை என்ற தொகுப்பாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.
கவிஞர் மண்குதிரையின் வலைப்பூ. தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். அனுபவம், கவிதை, விமர்சனங்கள் என நிரம்பியிருக்கும் தளம். இவரது கவிதைத் தொகுப்பான புதிய அறையின் சரித்திரம் தொகுப்புக்கு இந்த ஆண்டிற்கான நெய்தல் விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் மண்குதிரை.
நீங்கள் அறிகுக படுத்திய நால்வருமே எனக்கு புதியவர்கள் . நால்வருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமூன்றாவது தளம் புதிது...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...