தந்துகி:
மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர், களப்போராளி ஆதவன் தீட்சண்யாவின் வலைத்தளம் இது. தற்பொழுது ஓசூரில் வசிக்கிறார். இவரது கூர்மையான சமூக விமர்சனங்களுக்கும், அங்கத எழுத்திற்கும் நான் ரசிகன். இவர் ஓசூரைப் பற்றி என் விகடனில் எழுதிவரும் கட்டுரைகள் மிக அதிக அளவிலான வாசக ஈர்ப்பை பெற்றிருக்கின்றன.
இவரது எழுத்துக்கள் இந்தத் தளத்தில் வகைப்படுத்தப்படாமல் இருக்கின்றன என்பது குறை.
ஓசூர் எனப்படுவது யாதெனின்,இடி இறங்குவதற்கு முன்பிருந்த எங்கள் பூர்வீக வீடு போன்றவை சில பருக்கைகள். பதம் பார்த்துக்கொள்ளுங்கள்.
கவின்மலர்:
கவிஞர் கவின்மலரின் வலைத்தளம். இவரது கவிதைகளையும், சிறுகதைகளையும், சமூக உணர்வு சார்ந்த கட்டுரைகளையும் இந்தத் தளத்தில் வாசிக்க முடிகிறது. ஆனந்த விகடனில் பணியாற்றும் கவின்மலரின் எழுத்துக்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய வீச்சினைக் கொண்டவை.
சமீப காலமாக விகடனுக்காக எழுதிய கட்டுரைகளை தனது தளத்தில் பிரசுரிக்கிறார். வலைப்பதிவுக்கென பிரத்யேகமாக எழுதுகிறாரா எனத் தெரியவில்லை.
கூடங்குளம் பெண்கள் குழந்தைகளின் சென்னை வருகை, விட்டு விடுதலையாகி..,தேவதைகள் போன்றவை நான் மிக ரசித்த கவின்மலரின் பதிவுகள்.
கண்ணாடிக் கிணறு:
கவிஞர் கடற்கரய்யின் வலைப்பூ. இவர் குமுதம் குழுமத்தில் பணியில் இருக்கிறார். இவரது கவிதைகள், இவர் செய்த நேர்காணல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், அனுபவங்கள் என பரவலான வாசிப்பு அனுபவத்தை தரும் தளம் இது.
[இன்னும் சில தளங்களுடன் சில மணி நேரங்களில் வருகிறேன்]
ஆமாம் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துகள் வசீகரமிக்கது. அவரின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகி நான்.(தந்துகி)
ReplyDeleteஅறியாத தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDelete(பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்)
அன்புள்ள மணிகண்டன்,
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் ஆனதற்கு முதலில் வாழ்த்துக்கள்!
அறிமுகங்கள் எல்லாம் மிகவும் அருமை!
பாராட்டுக்கள்!
ReplyDeleteஎனக்கு புதிய அறிமுகங்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.