Saturday, September 29, 2012

துளிகள்



சமீபத்தில் அதிக கவனத்தைக் கோரும் கவிதைகளை எழுதி வரும் ஆறுமுகம் முருகேசனின் கவிதைகளால் நிரம்பிய தளம் இது. ஈராக்கில் வசிக்கிறார். அன்பினாலும், பிரியங்களினாலும், துக்கங்களினாலும் சொல்ல முடியாத உணர்ச்சிகளாலும் நிரம்பிய கவிதைகள் இவை. கவிதைக்கான புதிய தளங்களை மிக இயல்பாக கண்டடைவது ஆறுமுகத்தின் பலமாக இருக்கிறது.

இன்னமும் இணையதளங்களிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களின் பக்கம் தனது பார்வையை திருப்ப வேண்டும் என விரும்புகிறேன்.


குட்டி குட்டியான கவிதைகளால் கட்டிப்போடும் நந்தாவின் வலைப்பூ. ஹைக்கூக்கள் நந்தாவுக்கு இயல்பாக கைவரப்பெற்றிருக்கிறது.


கவிஞர், பதிப்பாளர், சிறுபத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என்னும் பன்முக ஆளுமையான பொன்.வாசுதேவனின் வலைத்தளம். அதிகமாக எழுதுங்கள் வாசு. இதற்கு அவர் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.


மும்பையில் வாழும் அனுஜன்யாவும் நினைத்தால் எழுதுபவர் இல்லாவிட்டால் துறவறம் பூண்டுவிடுவார். இவரது உரைநடை வித்தைகள் சுவாரசியமானது. ஒரு எட்டு இந்த தளத்திற்கு போய்வாருங்கள்.

7 comments:

  1. அனைத்து தளங்களும் (அறிந்த) சிறந்த தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நீங்கள் குறிப்பிட்ட தளங்களுக்கு போய வரவேண்டும்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. nantri!

    anaivarum enakku puthusu...

    ReplyDelete

  5. சிற்றிதழ்களில் எழுத முயற்சி செய்கிறேன் நண்பா,

    சந்தோசமும்,நன்றியும் கவிஞரே :-)

    ReplyDelete
  6. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் மணியா? இதுக்கே ஒரு 'ஓ' போடலாம்.

    வலையில் எழுத வந்த புதிதில் (இருந்து) தொடர்ந்து ஊக்கம் தரும் மணிக்கு நன்றி. இரு முறை சந்தித்து இருக்கிறோம். அவர் இவ்வளவு ச்ச்சின்னப் பையன் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவரும் நான் இவ்வ்வவ்வ்வ்ளாவ் யூத் என்று எதிர் பார்த்திருக்கவில்லை என்று அறிந்தேன் :).

    தொடர்ந்து எழுத ஆசைதான்; முயல்கிறேன் மணி. நன்றி - யாவற்றுக்கும்.

    இந்தச் செய்தி சொன்ன நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கும் நன்றி.

    ReplyDelete