Sunday, September 9, 2012

பை ஃபார் நவ் - சூர்ய பிரகாஷ் - வெல்கம் அ.அப்துல் காதர்

அன்பின் நணபர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சூர்ய பிரகாஷ் - வழக்கம் போல் கடமை தவறாது, தன் கை வண்ணத்தைக் காட்டியுள்ளார்.

அவரைப்பற்றிய புள்ளி விபரம் :

போடப்பட்ட பதிவுகள் : 7
அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 40
அறிமுகப்படுத்திய பதிவுகள் : 48
பெற்ற மறு மொழிகள் : 93

நண்பர் சூர்ய பிரகாஷினை வாழ்த்தி பிரியா விடை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் அ.அப்துல் காதர்.

இவரது சொந்த ஊர் கடலூர். அறிவியலில் இளையர் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது தமிழக அரசின் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் துணை ஆய்வராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம் காட்டுபவர். புத்தகங்கள் வாசிப்பதும் இசையை ரசிப்பதும் இவரது பொழுதுபோக்கு. கவிதைகள் என இவர் நம்பிக் கொண்டிருக்கும் சிலவற்றை அவ்வப்போது கிறுக்குவதும் உண்டு. புத்தர் மீதும் ஜென்னின் எளிமை மீதும் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

மொத்தத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ முயன்று கொண்டிருக்கிறார்.

நண்பர் அ.அப்துல் காதரினை வருக வருக - அறிமுகங்களை அள்ளீத் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சூர்ய பிரகாஷ்
நல்வாழ்த்துகள் அ.அப்துல் காதர்

நட்புடன் சீனா

4 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  3. அ.அப்துல் காதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வரவேற்கிறோம் நண்பரை..!

    ReplyDelete