Sunday, September 23, 2012

இல்லக்கலவை

வீட்டு மருத்துவம் அனைவருக்குமே பயன்படும். மாத்திரை மருந்து களை விட கை மருந்து , பாட்டி வைத்தியம் மூலம் ஓரளவுக்கு நாமே நம்மை பார்த்து கொள்ளலாம்.  ஹச்சுன்னா டாக்டர் , புச்சுன்னா டாக்டர் கிட்ட ஓடி போக வேண்டியது அவரும் ஒரு பை புல்லா மாத்திரை மருந்த அள்ளி கொடுப்பது.
இதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகள். இதிலிருந்து ஓரளவுக்கு விடுபட கண்டிப்பாக சில கை வைத்தியங்கள் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 








1.
முத்து சிதறலில் கண்டெடுத்த மருத்துவ முத்து க்கள். இங்கு மருத்துவ முத்துமட்டுமல்ல சமையல் முத்து, ஓவிய முத்து, சிந்தனை முத்து என பல முத்துக்கள் இருக்கிறது.




ஆனால் இவங்க ஓவியம் அப்ப்படியே தத்ரூபமாக இருக்கும். 





அப்சாரா  அவங்க அனுபவ கை வைத்தியத்தையும் வந்து பாருங்கள்.

சின்ன கை வைத்தியம் குழந்தை குழந்தைகளின்சளிகுறைய
 வீட்டு வைத்தியம்




3. குழந்தையின் வாந்தி நிற்க

ஓமத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து கொடுக்ககுழந்தையின் வாந்தி நிற்கும்.



நான் வளர்ந்ததெல்லாம் கோவையிலுங்க, இப்ப இருக்கறது… அட நம்ம இந்தியத் தலைநகரிலுங்கோ

குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மாதுளம் பழசாற்றுடன் தேன்கலந்து கொடுக்கவும்.

நெஞ்சில் கபம் இருந்தால் வால் மிளகை தூள் செய்து ஒருசிட்டிகை தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில்சாப்பிட வேண்டும்


 *************************
4. சர்க்கரை நோய்க்கான காரணியை விரிவான மோகனா சுந்தரம் அவர்கள் சொல்லுகிறார் 

மிகக் கவனமாக இருந்தால், சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம். கவனமாக இருந்தால், சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
  • என்ன செய்யவேண்டும், 
  • என்ன செய்யக்கூடாது 
என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வது,
 உயிர் வாழ்வதற்கு உதவி செய்யும். 




 வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள்.  ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.     




6. வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது.இதை கொண்டே சாதாரண பிரச்சனைகளை சிக்கனமாக சமாளிக்கலாம்.


7. தமிழ் பெருங்கடலில் நான் ஒரு துளி 
டெங்கு காய்ச்சல் பற்றி இங்கு அறியலாம் வாங்க 
  • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
  • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
  • கொசு மருந்தடித்தல்



8.டாக்டர் என்ன மருந்து எழுதி இருக்காருன்னே படிப்பது கிடையாது. அப்படியே மெடிக்கல் ஷாப்ப்பில் போய் சீட்ட நீட்ட வேண்டியது வீட்டுக்கு வந்து லபக்கு லபக்குன்னு விழுங்க வேண்டியது..
இப்படி எத்தனை பேர் இருக்கீங்க.


 தலைவலி,காய்ச்சலென்று வந்துவிட்டால் பாமரனும் மெடிக்கல் கடைக்குச் சென்று கால்பால்,பரசிடமல்,சரிடான் போன்ற மாத்திரைகளை தாமே வாங்கி சாப்பிட்டுவிட்டு குணமடைவதுண்டு.குணமடையாமல் போவதும் உண்டு

மருந்து எப்போழுது தயாரிக்கப்பட்டுள்ளது,எடுத்துக் கொள்ளும் அளவு,எக்ஸ்பெயரி  காலம் இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

 *****************************************

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

இல்லத்தரசிகளுக்கு குழந்தைகளை பள்ளி அனுப்பு வீட்டு பாடம் சொல்லி கொடுத்து தேர்வு சமையத்தில் அவர்களை கண்காணித்து பார்த்து  கொள்வது ஒரு பக்கம் என்றால் தேர்வு விடுமுறை கோடை விடுமுறைகளை கழிப்பதும் பெரும் பாடு. சில குழந்தைகள் பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்,மற்றும் டிராயிங்க் என சென்றாலும் சிலருக்கு விட்டிலிருந்தே அவர்களுக்கு இதை எல்லாம் கற்று கொடுக்கும் படி செய்யலாம். 

அதுக்கு நம் தோழிகள் ஈசியாக எப்படி சொல்லி கொடுக்கிறார்கள் என பார்க்கலாம்.




1.    1.   ஹர்ஷினிஅம்மா  


முத்துமாலை மணி மாலை என்னை தொட்டு தொட்டு தாலாட்ட..

ம்ம் முத்து மாலை போட்டு கொண்டால் இருக்கும்குதுகலம் எப்படி இருக்கும் என தெரியுமா? எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு வாங்க ஈசியா செய்ய கத்துக்கலாம். 

மினிகார்டூன்பெயிண்டிங்

பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது கார்டூன் அதை பெயிண்டிங் செய்ய சொல்லி கொடுத்தால்  ரொம்ப சந்தோஷம் படுவார்கள்.
குழந்தைகளுக்கு முகவும் பிடித்த கார்டூனை நாமே எளிதில் பன்னி அவர்கள் அறையே அழங்கரிக்க இதோ ஒரு மினி கார்டூன்.... ஹர்ஷினிக்கு முகவும் பிடித்த மினி இதோ.

விதவிதமானபெயிண்டிங்
, இன்னும் விதவிதமான சமையலும் உண்டு.

2.   ஏஞ்சலினும் அவங்க குட்டி தேவைதையும் சேர்ந்து கலக்கும் குவில்லிங்  பேப்பர் கிராஃப்ட் அனைவரும் ஈசியா கத்துக்கலாம்
அது மட்டும் இல்லை விதவிதமான வாழ்த்து அட்டை செய்யவும் சொல்லி தராங்க பாருஙக்ள். இப்ப நீங்களே மிக்க்குறைந்த விலையில் வாழ்த்து அட்டை தயாரிக்கலம்.





//மூன்று வருடமுன் என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது// 
எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு செய்முறை .
        வண்ணக்காகிதங்களை மெல்லியதாக  வெட்டி அழகிய 
        வடிவங்கள்  செய்வது   paper filigree /quilling .



  இதற்கென  ஒரு special tool ,quilling slotted tool .இதனை கொண்டு தான் 
நான் இவற்றை செய்தேன்.


( நெஜமாவே இதெல்லாம் செய்ய ரொம்ப  பொருமை வேண்டும். ஏஞ்சலின்)



3.     . அழகான கோலங்கள் போட கற்று கொடுக்கீறார் நம்சாரு.
 இங்கு வந்து வித விதமான கோலங்களை கற்று கொள்ளலாம் வாங்க... 


( சாரு ரொம்ப நாட்களாக ஆளையே காணும்) 




4.தாய் தரும் கல்வி  - தமிழ் புத்தகம். பேசுவதோ உருது மொழி, ஆனால் தமிழ் மேல் உள்ள பற்றால் தானும் நன்கு கற்று தன் மகனுக்கும் சொல்லி கொடுக்கிறாங்க. வெளிநாடுகளில் தாய் மொழியை யாரும் கற்றுகொள்வதில்லை ஹிந்தி மற்றும் ப்ரென்ச் தான்.  இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு உதவும்.  அ ஆ இ ஈ








5.சல்வார்க்கு தைக்கும் சுடிதார், பாட்டியாலா, கம்மிஸ் இதில் தோத்தி பேண்டை சொல்லி தராங்க இந்த தோழி.தோதி பேண்ட்
பெண்களுக்கு பாதுகாப்பான உடையும் அழகை சேர்க்கக்கூடிய உடையுமென்றால் அது ஷல்வார்தான்....
இப்போஇவை எத்தனையோடிசைன்களில்....ஒவ்வொரு நாட்டுமக்களின் தனித்தன்மைக்கேற்பவடிவமைக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரிப்படும்உண்மை.....சுடிதார்...பஞ்சாபி.(panjabi) ......பட்டேலா(patiala )...தோத்தி(.dhoti)
 இப்படிப்பல.....பெயர்களிர்உண்டு....ஒவ்வொருவகையும்...ஒவ்வொருவடிவத்தில்காட்சிதந்து அழகுபடுத்துகிறது.....




6. பெண்கள் ஜாக்கெட் மற்றும் சல்வார் தைக்கும் போது கழுத்து பாகத்தில்




கழுத்து சில பேர் மூடிய கழுத்து போடுவார்கள் சிலர் பெரிய கழுத்து வைத்து தைத்து போடுவார்கள், அப்படி போடும் போது உள்ளாடை வெளியே தெரிவதை யாரும் கவனிப்பதில்லை.  ஆனால் சில டெயிடர்கள் கழுத்தை லூசாகவும் தைத்து விடுவார்கள்.
அதற்கு மேலெ படத்தில் உள்ளது போல் கழுத்திலிருந்து தோள் பட்டை வரை சிறிய லூப் வைத்து தைத்து பட்டன் வைத்து கொண்டால் உள்ளாடை அங்க இங்க நகறாது. நீங்களும்அப்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்க தேவையில்லை  டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.


( அறுசுவையில் முதல் முதல் பயந்து பயந்து குறிப்பு கொடுக்கும் போது என்னை தட்டி கொடுத்து கை தூக்கி விட்டு ஏணிப்படியில் ஏறவைத்த வலை உலக முதல் தோழி ) கேரள சமையலில் அசத்தும் தளிகா





7. குஷன்கவர் மற்றும் எம்ராய்டரிதையலும்சொல்லிகொடுக்கிறாங்கவானதி.
பார்க்கவேஅழகாகஇருக்கு.இது மட்டும் அல்ல பல சிறுகதைகளும் எழுதி இருக்காங்க..




பிரியா கருகமணி எப்படி செய்வது வாங்க இங்க பார்க்கலாம்

வித விதமான மணிமாலைகள் எப்படி செய்யலாம். 



"
ஆவுகெச்சேனு, அப்படின்னாஎன்ன?ன்னுகேட்டேன்.

"
ம்ம்ம்ம்... அதுவாபொம்பளைங்கபாஷை" ன்னாங்க!

ஒருவேளை 'வாவ்' என்பதைதான்இப்படிசொன்னாங்களோ, தெரியலை! ஆனாமுன்பொருமுறைவிமல்பெட்சீட்விளம்பரம்ஒன்றில், "பெண்கள்தங்கள்மனோபாவங்களைபலவழிகளில்வெளிப்படுத்துகிறார்கள்அவற்றில்இதுவும்ஒன்று" என்றுஒருவரிஎழுதிஇருக்கும்.அதுபோல்தான்இதுவும்என்றுநினைத்துக்கொண்டேன்.


பெருநாள் நெருங்கி கொண்டிருந்த நேரம். வீட்டில், "புது பேண்ட் இன்னும் தைக்கக் கொடுக்கலியா" என்று தினம் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. இன்னும் பேண்ட் பிட்டே எடுத்தப் பாடில்லை. எப்ப நேரம் கிடைத்து எப்ப தைக்க கொடுக்கிறது. 
'மணி' போல் இன்னும் பலபேர் நமது நாட்டில் நிறைய வேலைகள் கற்றுக் கொண்டு உருவாக வேண்டும்.

இவர்களுடன் மீண்டும் 





தமிழ்குடும்ப தோழிகள் 

இங்கும் தையல் கலைகளை நிறைய உண்டு 
10 அரபிக் மெகந்தி டிசைன் எப்படி வைப்பது.... வாங்க தோழி பாயிஜாவிடம் கற்று
கொள்ளலாம்

மருதாணி போட்டு கொள்வதை விரும்பாத பெண்களே கிடையாது . பெண்களுக்கு அழகே
மருதானி தான் அதை மேலும் மெருகூட்டி அரபிக் மாடலில் எப்படி மெகந்தி
போடலாம் என்பதை சொல்லி கொடுக்கிறார் பாயிஜா//

11. விஜியின் ஆர்ட் கிராப்ட் பெயிண்டிங்



பேப்பர் கலர் பொம்மை 






12. எல்லா பெண்களுக்கும் பயன் படும் ஜாக்கெட் தைப்பது எப்படி? இதோ இப்படி தான்.அப்படியே மெகந்தியும் வைத்து கொள்ளுங்கள்.அடி மருதாணி 

*************************************************************
*************************************
****************


அப்படியே ஜலீலாவின் வைத்தியங்களும் உங்களுக்கு பயன் படலாம் என் கை வைத்திய பதிவுகளில் அனைவருக்கும் மிகவும் பயன் பட்டது 
குழந்தைகளுக்கு ஆறுமாதம் ஒரு முறை பூச்சி மருந்து கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
வேப்பிலை  இஞ்சி சாறு இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயிற்று பூச்சிக்கு குடிக்கலாம் வயசுக்கு ஏற்றவாறு அளவை கூட்டி குறைத்து குடிக்கவேண்டியது 



Thread Stand இது என் பையன் செய்தது. பெண்கள் வீட்டில் துணிகளை கட்டிங் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். 



பதிவு நீளமாகி விட்டது என நினைக்கிறேன்.இரண்டு பிரிவாக எடுத்து வைத்து இருந்தேன். இன்றோடு என் பணி முடிவதால் அனைத்தையும் கலந்து விட்டேன்.

என் அறிமுகங்களை பொறுமையாக படித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி, வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்த சீனா ஐய்யாவுக்கும் மிக்க நன்றி.



ஜலீலாகமால்


20 comments:

  1. மிகவும் பயனுள்ள அறிமுகங்கள் ஜலி.தொடர்ந்து கலக்குங்கள்.

    ReplyDelete
  2. இல்லக்கலவை சூப்பர். பயனுள்ள பகிர்வுகள். மிகவும் உபயோகமான வாரம்.பாராட்டுக்கள் ஜலீலா.

    ReplyDelete
  3. பயனுள்ள பகிர்வு. உங்கள் பணி சிறப்பாக இருந்தது. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. அன்புள்ள ஜலீலா!

    என்னை, என் வ‌லைத்த‌ள‌த்தை இங்கே அறிமுக‌ப்ப‌டுத்தியிருப்ப‌த‌ற்கு ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி!

    ReplyDelete
  5. ஜலீலா எடுத்துக் கொண்ட பணியை மிக சிறப்பாக செய்து விட்டீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள். வலைச்சரத்தில் இந்த பதிவில் இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஆஹா... மருத்துவத்தில தொடங்கி.... மருதாணிவரை கலக்கல் ஜலீலாக்கா....

    அதுசரி ஹர்ஷினி அம்மா காணாமல் போயிட்டா எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்.. இப்பவும் புளொக் எழுதுறாவோ?

    தளிகாவும் சத்தமில்லை....

    ReplyDelete
  7. மிக்க நன்றி ஜலீலா ...என்னையும் என் குட்டி பெண்ணையும் அறிமுகம் செய்ததற்கு ..இங்குள்ள பிறருக்கும் வாழ்த்துக்கள் .


    சல்வார் பாட்டியாலா தையல் தளம் மிக அருமை ...
    இஞ்சி சாறு ...எப்பவும் பயன்தரும் குறிப்பு எல்லா அறிமுகங்களும் அருமை

    ReplyDelete
  8. ஸாதிகா அக்கா
    ஆசியா

    அதிரா

    மனோ அக்கா
    கோமதி அக்கா
    கோவை2தில்லி

    ஏஞ்சலின்
    கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி


    அதிரா

    //அதுசரி ஹர்ஷினி அம்மா காணாமல் போயிட்டா எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்.. இப்பவும் புளொக் எழுதுறாவோ?

    தளிகாவும் சத்தமில்லை//

    ஹர்ஷினிஅம்மா அவங்க பொண்ணோடு பிஸி ஆகையால் எழுதல்லன்னு சொன்னாங்க.

    தளிகாவும் அப்படி தான்

    நல்ல குறிப்புகள் காணமல் போய் விட கூடாதுன்னு தான் அவர்களையும் இங்கு குறிப்பிட்டேன்.

    பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் அவர்கள் தளத்தில் உள்ள கிராப்ட் வொர் எல்லாருக்கும் உதவும் இல்லையா?


    ReplyDelete
  9. வலைசரத்தில் இல்லக்கலவையில் என் வலைபூவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜலீலா..வலைசரத்தில் அறிமுகமாகியிருக்கும் மற்ற பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அனைத்துமே மிகவும் அருமையான அழகான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தங்களுக்கு என் சிறப்பான பாராட்டுக்கள்.

    தங்களின் ஒரு வார கடினமான உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    VGK

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களுக்கு என் சிறப்பான பாராட்டுக்கள்

    ReplyDelete
  12. அனைத்தும் அருமை ஜலீலாக்கா.

    ReplyDelete
  13. இல்லக் கலவையுடன் நல்ல பல அறிமுகங்கள்.

    வாரப்பணி சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. பல அறியாத தளங்கள்... (முந்தைய பதிவும்)

    மிக்க நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பலப்பல...

    ReplyDelete
  15. அருமை அருமை....
    பகிர்வுகளும் விளக்கங்களும் அருமையா இருக்கு
    மிக்க நன்றிங்க...

    ReplyDelete
  16. வலைசரத்தில் இல்லக்கலவையில் என் வலைபூவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜலீலா akka...

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா..

    ReplyDelete
  18. எனது பதிவை அறிமுகத்துக்கு நன்றி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete