Monday, October 29, 2012

எங்கள் சரவெடி 1

           
வலைச்சரத்தில் சரம் தொடுக்க, சாரம் கொடுக்க, எங்களுக்கு அழைப்பு விடுத்த 'அன்பின் சீனா' அவர்களுக்கு முதற்கண் எங்கள் நன்றி. அவரிடம் மின்னஞ்சலிலும், மெயிலிலும், அலைபேசியிலும் எங்கள் ஐயங்களைக் கூறினோம்; எங்கள் நிலை பற்றி எடுத்துக் கூறினோம். ஒன்றே ஒன்று கூற சுத்தமாக மறந்துவிட்டோம். அது, நாங்கள் யாரும் முறைப்படி தமிழ் கற்றவர்கள் இல்லை என்பது. எங்கள் தமிழை, அவரும், வலைச்சர வாசகர் பெருமக்களும் மன்னித்தருள வேண்டிக் கொள்கின்றோம். 

எங்கள் ப்ளாக் வலைப்பதிவை, வலைச்சரத்தில் அறிமுகம் செய்த முந்தைய ஆசிரியர்கள்சிவஹரிஞ்சுபாஷினி, அப்பாதுரைராமலக்ஷ்மிமிடில்கிளாஸ் மாதவிஆர் வி எஸ்,மோகன்ஜி, இராஜராஜேஸ்வரிஜலீலாகமால்அப்பாவி தங்கமணிமாதவன்,வானம்பாடிகள், மற்றும் பலருக்கு - யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் எங்களுக்குச் சொல்லுங்க. இதில் யாராவது எங்களை அறிமுகப்படுத்தாதவர்கள் என்றால், வாய்ப்புக் கிடைக்கும்போது அறிமுகப்படுத்திடுங்க!) அனைவருக்கும் எங்கள் நன்றி. 
       
எங்கள் ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டது, இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு, ஜூன் மாதம் இருபத்தெட்டாம் தேதி.   

'புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது போல' என்று சொல்லுவார்கள். நாங்க இட்லி(வடை)யைப் பார்த்து வெள்ளாவி பிடித்துக் கொண்டோம் என்று சொல்லலாம். 

கூட்டுறவே நாட்டுயர்வு என்று நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருக்கின்றோம். கிராஸ் ஃபங்க்ஸனல் டீம் (தமிழில் குறுக்குவேலைக் குழு?),  டீம் வொர்க் (குழுப் பணி) பற்றியும் பல கார்பொரேட் அலுவலகங்களில் போதனை வகுப்புகள் நடத்துவார்கள். எங்கள் ப்ளாக் அந்த வகையில் டீம் வொர்க் முயற்சி. பதிவு எழுதுபவர் ஒருவர், படம் இணைப்பவர் ஒருவர், மெருகு ஏற்றுபவர் மற்றவர் - பதிவை வெளியிடுபவர் ஒருவர் என்று சில சமயங்களில் எங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொண்டது உண்டு. 

எங்கள் ஆசிரியர்கள் எல்லோருமே பதின்ம வயதில் கையெழுத்துப் பத்திரிகை, துண்டுப் பிரசுரங்கள் எழுதி (அல்லது சில காகித கைவேலைகள் / மெழுகு பொம்மைகள் செய்து) அவைகளை தெருப்பையன்கள் வீட்டில் கொடுத்து, அவர்கள் சந்தோசப்படுவதைக் கண்டு ஆனந்தித்தவர்கள். எல்லாமே இலவச சேவைகள். அதே மனப்பான்மை இப்பொழுதும் தொடர்கின்றது. 

எங்கள் ப்ளாக் மூலமாக, பதிவு படிக்கின்ற வாசகர்களுக்கு, சில பயனுள்ள சில விவரங்களை(யாவது!) அளிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசிரியர்களின் குறிக்கோள். 

படைப்பாற்றல் பற்றிய எங்கள் பதிவுகள் சிறந்த உதாரணங்கள். அவைகளை இனிப்பு தடவிய மருந்தாக கொடுக்க முயற்சி செய்து வருகின்றோம். 

சுவாரஸ்யம்தான் நாங்கள் தடவுகின்ற இனிப்பு. சில (பல?) பாப் கார்ன் பதிவுகளும் அவ்வப்போது வெளியாகும். 

பதிவுலகில் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள்தாம் அதிக பட்ச தட்டல்கள் பெறுகின்றன என்பது, பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. நாங்களும் சினிமா சம்பந்தப்பட்ட விவரங்களை அவ்வப்போது ஊறுகாயாக பதிவிடுவது உண்டு. ஆனால் ஊறுகாயையே உணவாகப் படைப்பதில்லை. 

எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் நாங்கள் அரசியலும் பதிவதில்லை. சில கிண்டல்கள் (ஒரு வரி / இரண்டு வரிகள்) அரசியல் தலைகளைப் பற்றி எப்பொழுதாவது இடம் பெறுவது உண்டு. அதில் ஒருதலைப் பட்சமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியோ எழுத மாட்டோம். 

ஒருவாரத்தில் மூன்று முதல் ஆறு பதிவுகள் வரை இடம் பெறுமாறு பார்த்துக் கொள்வோம். 

எங்கள் ப்ளாக் பதிவுகள் நேற்று வரை : 1101. 

எங்கள் பதிவுகளில் அதிகம் பேர் பார்த்து, படித்து ரசித்த ஐந்து பதிவுகள், இங்கே: 







அதிகம் கருத்துரைகள் பெற்ற பதிவுகளில் சில : 




வலைப்பூக்கள் படிக்கின்ற பல வாசகர்களுக்கு, பலப்பல சிந்தனைகள், யோசனைகள் தோன்றக்கூடும். அவற்றை எல்லாம் கொட்ட வழி தெரியாமல், அல்லது வலைப்பூ தொடங்க தெரியாமல், அல்லது அதிக பட்ச வாசகர்களிடம் அதை கொண்டு செல்லத் தெரியாமல் தவிக்கக் கூடும். எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு, இந்தக் குறை இல்லாமல் இருப்பதற்காக, நாங்கள் தொடங்கியது, 'நம்ம ஏரியா !' வலைப்பூ. 
      
எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் இரண்டு (கௌதமன்) பேர்கள் அவர்கள் பெயரிலேயே ஒரு வலைப்பூ (காசு சோபனா) (இது ஆங்கில வலைப்பூ) வைத்திருக்கின்றார்கள். அவைகளை, அவர்களே மறந்துவிட்டார்கள். நாம் இங்கே நினைவுறுத்த வேண்டுமா !!

வலைச்சரம் பக்கங்களை நெடுநாட்களாக ரசித்து வருகிறோம். எங்களையும் பலர் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் பலரை நாங்களும் தொடர்ந்து வாசிக்கிறோம். 

நாங்கள் அறிமுகப்படுத்த இனியும் யாரும் இல்லை என்று நினைக்கிறோம். அறிமுகப்படுத்துகிறோம் என்று சொல்வதை விட நாங்கள் வாசிப்பவர்களை, ரசிப்பவைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

நிறைய பக்கங்களைச் சொல்லும்போது அவற்றை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு செல்பவர்களே அதிகம். அவர்கள் இதுவரை பார்க்காத, தெரியாத பக்கங்கள் இருந்தால் ஒருவேளை பார்க்கலாம். அதற்கும் 25% வாய்ப்பே என்றும் தோன்றுகிறது. 

நாம் ரசித்தவற்றை மற்றவர்களும் ரசித்திருக்கிறார்களா என்பதும், நம் பக்கம் சொல்லப்பட்டு இருக்கிறதா என்பதுமே இங்கு கவனிக்கப் படுபவை என்பதைப் பார்த்திருக்கிறோம். 

நாங்கள் ரசித்த, ருசித்த படிக்கும் பதிவுகளின் விவரம் இனிவரும் நாட்களில் பகிர்ந்துகொள்கிறோம்!  

மீண்டும் நாளை சந்திப்போம். 
                  

42 comments:

  1. வலைச்சர ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. எங்கள் ப்ளாகின் எல்லா பதிவுகளையும் போலவே சரவெடி ஒன்றும் சிறப்பு! தொடருங்கள்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    நீங்கள் படித்து ரசித்த பதிவர்களை உங்கள் பார்வையில் இருந்து ரசிக்க நாங்களும் காத்திருக்கிறோம். தொடருங்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்...

    தங்களின் தளத்தைப் பற்றிய நல்லதொரு தொகுப்பு... நன்றி...

    tm3

    ReplyDelete
  5. அன்பின் கௌதமன் - அருமையான துவக்கம் - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அறிமுகம் அருமை. பாராட்டுக்கள். பின்தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. எங்கள் ப்ளாக்க்குக்கு
    எங்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. இதுவரை கருத்துரைத்துள்ள ரா ல மேடம், மீனாக்ஷி, திண்டுக்கல் தனபாலன், சீனா, இமா, இராஜராஜேஸ்வரி ஆகியோருக்கு, எ பி ஆ கு சார்பில், என் நன்றிகள்.

    ReplyDelete
  9. அமர்க்களமான ஆரம்பம் தொடருங்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கோம்

    ReplyDelete
  10. இது "எங்கள்" வாரமா... மிக்க மகிழ்ச்சியுடன் தொடர்கிறேன் உங்களை. என் நல்வாழ்த்துக்கள். (பரத்தும் சுசிலாவும் எங்கள் பிளாகை அறிமுகம் செஞ்சதை மறந்துட்டீங்களே ஸ்ரீராம் & கே.ஜி ஸார்ஸ்)

    ReplyDelete
  11. சிறப்பான அறிமுகம் தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
  12. எங்கள் வாரத்துக்கு எங்களின் வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. // பால கணேஷ் said...
    இது "எங்கள்" வாரமா... மிக்க மகிழ்ச்சியுடன் தொடர்கிறேன் உங்களை. என் நல்வாழ்த்துக்கள். (பரத்தும் சுசிலாவும் எங்கள் பிளாகை அறிமுகம் செஞ்சதை மறந்துட்டீங்களே ஸ்ரீராம் & கே.ஜி ஸார்ஸ்)//
    அட ஆமாம் இல்லே! நாங்க எங்களை அறிமுகம் செய்தவர்கள் பரத் சுசீலா என்று நினைத்து, அவர்கள் பெயரில் வலைப்பதிவு தேடிப் பார்த்தோம்! மன்னியுங்கள் பால கணேஷ்!
    நன்றி லக்ஷ்மி, சசிகலா, அமைதிச்சாரல்!

    ReplyDelete

  14. // நாங்கள் யாரும் முறைப்படி தமிழ் கற்றவர்கள் இல்லை//

    தமிழ் பேசுபவர்கள் நாம் எல்லோருமே அவர்கள் அம்மா, அப்பா வழியாகத்தான் முதற்கண்
    தாய்மொழியாம் தமிழினைக் கற்கிறோம்.

    இது முறையில்லையா !!

    அடுத்தபடி, யாப்பிலக்கணம், தொல்காப்பியம் மற்றும் இதர இலக்கண நூல்களையும் ஐயம் திரிபு அறக்கற்றுத்
    தேர்ந்தவர்கள் தான் தமிழ் எழுதவேண்டும் என்றால், ........? அதுவும் தமிழ்க் கவிதை எழுதவேண்டும் என்றால் ?

    யோசித்துப் பார்த்தேன். நோ சொல்யூஷன் இன் சைட்.

    வொய் திஸ் கொல வெறி டி ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  15. //தமிழ் பேசுபவர்கள் நாம் எல்லோருமே அவர்கள் அம்மா, அப்பா வழியாகத்தான் முதற்கண்
    தாய்மொழியாம் தமிழினைக் கற்கிறோம்.//

    சூரி சிவா (சுப்பு தாத்தா) அவர்கள் சொல்வது சரிதான். அம்மா அப்பா வழியாகத்தான் கற்கிறோம். அது பேச்சுத் தமிழ். எழுதக் கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர்கள்தான். எங்கள் தமிழ் எழுது பயிற்சி, உயர்நிலைப் பள்ளியோடு நின்றுவிட்டது.

    ReplyDelete
  16. மிகவும் அருமையான அறிமுகப்படலம்.


    எங்கள் வாழ்த்துகள்.....
    எங்கள் ப்ளாக்க்குக்கு ...

    VGK

    ReplyDelete
  17. ப்ளாகின் தலைப்பிலேயே 'எங்கள்' இருப்பதால் ஒவ்வொருவரும் எங்கள் ப்ளாக், எங்கள் ப்ளாக் என்று உறிமை கொண்டாடும்படி செய்யும் இந்த வார வலைச்சர ஆசிரியர்களின் முதல் சர வெடி பிரமாதமாக அமைந்திருக்கிறது.

    தொடர்ந்து சர வெடிகளை எதிர்பார்த்து
    ரஞ்ஜனி

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. நன்றி வை.கோபாலகிருஷ்ணன் ஐயா, ரஞ்சனி நாராயணன்.

    ReplyDelete
  20. //அவைகளை, அவர்களே மறந்துவிட்டார்கள். நாம் இங்கே நினைவுறுத்த வேண்டுமா !! //

    'அவர்களே' மற்றும் 'நாம்' :}}

    இந்த மறத்து போனது பற்றிய குறிப்பு
    Kasu Sobhana-க்கு அவ்வளவு பொருந்தாது போலும். அவர் கடைசியாக பதிவிட்ட நாள்: 3 ஜூலை 2012.

    ReplyDelete
  21. ஸாரி.. 'மறந்து போனது பற்றிய குறிப்பு' என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  22. அருமையான அறிமுகம் வாழ்த்துகள் . தமிழ் முறையாகக் கற்றவர் இல்லை என்பது உங்கள் அறிமுகத்தில் தெரியவில்லை.அழகாகத் தொடர்க...

    ReplyDelete
  23. தொடங்கியாச்சுப்பா சரவெடி... அடேங்கப்பா நீங்கள் குறிப்பிட்டதில் சிலவற்றை போய் படித்தேன்... அட்டகாசம்பா....

    தொடக்கமே இப்படி அட்டகாசம்னா இனி போகப்போக?

    அசத்துங்கப்பா அசத்துங்க....

    முறையா கற்காத தமிழென்றாலும் பதிவு கற்கண்டாய் இருக்கிறதே.... ரசிக்கவும் ருசிக்கவும் பயனுள்ளதாயும் இருக்கிறதே.. அதை ஒத்துக்கொள்கிறீர்களாப்பா? ஒப்புக்கோங்கோப்பா...

    தொடர்ந்து வெற்றிநடை போட்டு அசத்திட மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் எங்கள் ப்ளாக்....

    ReplyDelete
  24. முறையாகத் தமிழ் கற்காதவங்களில் நானும் ஒருத்தியாக்கும். என்னோட தமிழ்ப் படிப்பு ஒன்பதாம் வகுப்போடு முடிஞ்சு போச்சு!:(( அதுக்கப்புறமும், (அதுக்கு முன்னாடியும் கூடத்தான்)வெறும் மொழிப்பாடமாகத் தான் படிச்சிருக்கேன். இலக்கணமெல்லாம் தெரியாது; வராது.

    உங்கள் அறிமுகம் பிரமாதம். உங்களை எனக்கு அறிமுகம் செய்தது அனன்யா அக்கா. இப்போ அவங்க ஆளையே காணோம். தொடருங்கள், உங்களில் யார் அடுத்து எழுதப்போறீங்கனு ஆவலோடு காத்திருக்கேன். ஒரு போட்டி கூட வைக்கலாம் நீங்க. இந்தப் பதிவை எழுதியது யார் கண்டுபிடிங்கனு. யாராச்சும் கண்டு பிடிக்கிறாங்களானு பார்க்கலாம். போட்டிக்கு நான் நடுவராக இருக்கேன்.

    ReplyDelete
  25. Great Start KG sir.....

    expecting more and more from you....

    Madhavan s

    ReplyDelete
  26. வணக்கம் (எங்கள் பிளாக்.)

    இந்த வாரம் வலைச்சரம் வலைப்பூவுக்கு பொறுப்பாசிரியராக வந்ததை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் எங்கள்பிளாக்.
    முதல் நாளிலே மிகவும் அசத்தலான பதிவுகள் இரண்டாம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் உங்களைப்பற்றி விவரம் மிகவும் அருமையாக உள்ளது.முதல்வாரமே சரவெடி இரண்டாம் நாளும் என்ன வெடியாக அமையப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  27. அருமையான தெளிவான அறிமுகம்
    சரவெடியுடன் துவங்கும் இந்த வாரம்
    சிறந்த வாரமாய் அமைய
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. //இந்த மறத்து போனது பற்றிய குறிப்பு
    Kasu Sobhana-க்கு அவ்வளவு பொருந்தாது போலும். அவர் கடைசியாக பதிவிட்ட நாள்: 3 ஜூலை 2012. //
    அது அவர் இட்ட பதிவு இல்லை ஜீவி சார்! வெறும் காபி பேஸ்ட் விவகாரம்.


    ReplyDelete
  29. நன்றி எழில், மஞ்சுபாஷினி, கீதா சாம்பசிவம், மாதவன், 2008ruban, (அவசரத்தில் இரண்டாயிரத்து எட்டு ரூபாய் என்று படித்தேன்) ரமணி சார்.

    ReplyDelete
  30. //உங்கள் அறிமுகம் பிரமாதம். உங்களை எனக்கு அறிமுகம் செய்தது அனன்யா அக்கா. இப்போ அவங்க ஆளையே காணோம்.//
    ஆமாம் கீதா மேடம். அ ம மேடம் முகநூலில் அவ்வப்போது காணப்படுவார். எங்கே எங்கள் பக்கம் வருவதில்லையே என்று கேட்டால், 'சாரி' எந்த வலைப்பக்கமும் போவதில்லை ... ரொம்ப பிசி என்பார். படைப்பாற்றல் மிக்க அனன்யா மேடம், மீண்டும் வலைப் பக்கங்கள் பக்கம் வரவேண்டும் என்பதே என்பதே எங்கள் வேண்டுகோளும்.

    ReplyDelete
  31. //உங்களில் யார் அடுத்து எழுதப்போறீங்கனு ஆவலோடு காத்திருக்கேன். ஒரு போட்டி கூட வைக்கலாம் நீங்க. இந்தப் பதிவை எழுதியது யார் கண்டுபிடிங்கனு. யாராச்சும் கண்டு பிடிக்கிறாங்களானு பார்க்கலாம். போட்டிக்கு நான் நடுவராக இருக்கேன்.//
    ஒற்றுமையா அஞ்சு பேரும் சண்டை சச்சரவு இல்லாம இருந்துகிட்டு இருக்கோம். நீங்க ஏதோ 'சி'னா 'மு'னா முயற்சி செய்கிறீர்களோ என்ற பயம் வந்துவிட்டது!! :-)

    ReplyDelete
  32. எல்லா பதிவுகளும் எங்கள் ப்ளாக் மின்னஞ்சலிலிருந்து வெளியிடப்படுவதால், ஒரே ஆசிரியரின் பெயரில்தான் வலைச்சரத்தில் வெளியாகும். ஆனால், எழுதியவர்கள்தான் வெவ்வேறு ஆசிரியர்கள். குழப்பிவிட்டேனா?

    ReplyDelete
  33. எல்லாமே.. எல்லாமே என்றால்?.. அல்லாம் தான்!

    வெறும் காப்பி பேஸ்ட் தான்.

    //'அவர்களே' மற்றும் 'நாம்' :}} //

    kg gouthaman

    எல்லா பதிவுகளும் எங்கள் ப்ளாக் மின்னஞ்சலிலிருந்து வெளியிடப்படுவதால், ஒரே ஆசிரியரின் பெயரில்தான் வலைச்சரத்தில் வெளியாகும். ஆனால், எழுதியவர்கள்தான் வெவ்வேறு ஆசிரியர்கள்.

    குழப்பிவிட்டேனா?

    ReplyDelete
  34. ஜீவி சார், மீண்டும் நன்றி.
    முனைவர் இரா குணசீலன் - மிக்க நன்றி.

    ReplyDelete
  35. வலைச்சரத்தில் இது உங்கள் வாரம்!

    தொடர்ந்து அசத்துங்கள்...

    ReplyDelete
  36. சரவெடி நன்று.
    எங்கள் புளோக்கிற்கு இனியநல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  37. நன்றி வெங்கட் நாகராஜ் சார்!
    நன்றி கோவைக்கவி (?) வேதா இலங்காதிலகம்!

    ReplyDelete
  38. //அது, நாங்கள் யாரும் முறைப்படி தமிழ் கற்றவர்கள் இல்லை என்பது.// ஹா ஹா ஹா எங்கள் பிளாக் செய்த காமெடியை ரசித்து சிரித்தேன்...

    என்னுடைய நெடுநாள் ஆசை வலைபூ வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இன்று தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  39. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். அசத்துங்கள்....

    ReplyDelete

  40. வாழ்த்துக்கள்.

    சுவையான வரலாறு.

    ReplyDelete
  41. சரவெடி ரொம்ப கலக்கல்


    ஜலீலாகமால்.

    ReplyDelete