Wednesday, October 31, 2012

எங்கள் சரவெடி 3

                     
15) தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்களின் கவிதைத் தளம். வித்தியாசமான சிந்தனைகளால் நம் சிந்தனைகளைத் தூண்டுபவர். அன்றாட வாழ்வின் செயல்களை,செயல்களின் மூலகாரணத்தை அலசும் கவிதைகள் இவருடையது. பதிவர்கள் பற்றிய இவரது அறிமுகம் இது!
           
16) நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் எக்ஸ்ப்ரஸ் என்ற பெயரில் வலைப்பக்கம் எழுதும் இவர் லேசான நகைச்சுவைக் கலந்து சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர் சமீப காலமாக மிகக் குறைந்த அளவிலேயே எழுதி வருபவர். 
           
17) திடங்கொண்டு போராடு சீனு சமீபத்தில் வலைப் பக்கம் தொடங்கி ஐம்பது பதிவுகள் முடித்து விட்டவர். சமீபத்தில் நடந்து முடிந்த சென்னைப் பதிவர் மாநாட்டில் சுவாரஸ்யமாகக் கலந்துகொண்டு பணியாற்றியவர் இளையவர். இனியவர். சினிமா விமர்சனம், பயணக் கட்டுரை என்று சுவாரஸ்யமாக எழுதி வருகிறார் 
                 
18) ராமலக்ஷ்மி பெயர் சொன்னால் போதும். தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரது எழுத்துகள் பேசுமளவு இவரது புகைப்படங்களும் பேசும். கல்கி விகடன், தினமணிக் கதிர் போன்ற பத்திரிகைகளில் இவரது கதைகள் கவிதைகள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. PiT போன்ற புகைப்படத் தளங்களிலும்வலை இதழ்களிலும் பங்கேற்று, பல்வேறு தளங்களிலும் மிகச் சிறப்பாக இயங்குபவர். பல்சுவையில் பதிவுகள் எழுதி வருகிறார்.
                   
19) வேர்களைத் தேடி முனைவர் குணசீலன் பதிவோடு சேர்த்து அகநானூறு, புறநானூறு,ங்குறுநூறு என்று என்று பாடல்கள் எடுத்து, கொடுத்து அமிழ்தினும் இனிய தமிழைப் பகிர்கிறார் 
                  
20) திண்டுக்கல் தனபாலன் சந்திரனில் காலடி எடுத்து வைத்ததும், அங்கே நம்ம ஊரு ஆளு டீக்கடையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு விடுவார் ஆர்ம்ஸ்ட்ராங் என்றொரு ஜோக் உண்டு. அதுபோல நாம் கஷ்டப்பட்டுத் தேடி ஒரு புது ப்ளாக் செல்வோம். நமக்குத்தான் அது புது ப்ளாக்! அங்கு இவரின் பின்னூட்டம் ஏற்கெனவே இருக்கும்! பாடல்வரிகளைத் தொகுத்து இவர் வழங்கும் பதிவுகள் சுவாரஸ்யமானவை. ஐ எஸ் ஓ பற்றி மற்றும் நம்பிக்கையூட்டும் பதிவுகள் இவர் ஸ்பெஷல்.  
           
21) தக்குடு எழுத்தில் சரளமான நகைச்சுவை கலந்து எழுதுபவர். படித்து சிரிக்காமல் இருக்க முடியாது. ஒன்று, இரண்டு சாம்பிள்கள்! 
      
22) பாமரன் பக்கங்கள் வானம்பாடிகள் பாலா சார்... கொஞ்சநாள் முன்பு வரை நிறைய எழுதி மகிழ்வித்துக் கொண்டிருந்தார் சமீபகாலமாக யோசித்து யோசித்துப் பதிவுகள் போடுகிறார். இவரது கேரக்டர் பதிவுகள் மனதைத் தொடுபவை. நிச்சயம் நீங்கள்கூட இந்த மாதிரி ஆட்களை உங்கள் வாழ்வில் சந்தித்திருக்கக் கூடும் என்பதை நினைவுகூர வைக்கும் எழுத்துகள்.
           
23) கசியும் மௌனம் ஈரோடு கதிர். ஈரோடு பதிவர்கள் சந்திப்பு (சங்கமம்) நடத்தும் முக்கிய நாயகர். அழகிய கவிதைகளும் எழுதுவார். மனதைத் தொடும் பதிவுகளும் எழுதுவார். பல்சுவைப் பதிவர். 
          
24) என்பக்கம், நான் நானாக ஹேமா(HVL) சென்ற வருடம் வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்று இவரின் சிறுகதை அவர்கள் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் வெளிவந்தது. இந்த வருடம் கல்கி சிறுகதைப் போட்டியில் இவரின் கதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியானது. கவிதைகளும் எழுதி பரிசு வெல்வார்!    
            
25) வானவில் மனிதன் மோகன்ஜி. பண்பட்ட எழுத்துகளுக்கும் ஏராளமான ரசிகர்களுக்கும் சொந்தக்காரர். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு, இல்லையில்லை இரு சோறு பதம்!    
             
26) அப்பாவி தங்கமணி மனதைத் தொடும், மனதை வருடும் சிறுகதைகள் எழுதுவார்.
தொடர்கதைகள் எழுதுவார். நகைச்சுவை கலந்தும் எழுதுவார். நாங்கள் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்  
            
27) பாகீரதி எல் கே என்று அன்புடன் அழைக்கப்படும் கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன். தொடர்கதை தொடங்கி பாதியில் நிறுத்தியிருக்கிறார் தொடர்வார் என்று நம்புகிறோம்! கவிதை எழுதுவார். ஆன்மிகம் தொழில்நுட்பம் என்று சகலமும் எழுத்தில் தொடும் பதிவர். 
           
28) பூவனம்   ஜீவி - மூத்த பதிவர்களில் ஒருவர். பழம்பெரும் எழுத்தாளர்களைப் பற்றி எழுதுகிறார் சுஜாதா பற்றி இவர் எழுதியது. எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் என்ற வகையில் சுஜாதா பற்றிய பதிவுக்கு இங்கு லிங்க் தந்திருந்தாலும் நிறைய எழுத்தாளர்கள் பற்றி இவர் எழுதியிருப்பது அவசியம் படிக்க வேண்டியது. சிந்தையைத் தூண்டும் சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர்.  சமீபத்திய இவர் தொடர்கதை 'பார்வைகள்'. இலக்கிய இன்பம்சுய தேடல், ஆத்மாவைத் தேடி போன்ற பதிவுகள் சுவாரஸ்யம் சுவை மிக்கவை. படிக்க, ருசிக்க, ரசிக்க நிறைய வாய்ப்பு இருக்கின்ற வலைப்பக்கம்.  
      =================   ==============   ===============  

வலை செய்திகள்: 

தமிழ் வலைப்பூக்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்துதான் தலை எடுத்தன. 

இதுவரை அதிகம் பதிவிடப்பட்ட தளம், கடலூர் மாவட்டச் செய்திகள் தளம். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள். ஆனால் இந்தத் தளத்தில் பின்னூட்டங்கள் மிக மிகக் குறைவு. பின்னூட்டமிடும் வசதி தற்போது இருக்கிறதா என்றும் தெரியவில்லை! 

நூற்றுக் கணக்கில் பதிவுகள் இருந்த போதும், பூஜ்யம் கருத்துரைகள் கொண்ட இரு தளங்கள்: ராம்   ,  விவசாயத் தகவல்கள்  

அதிகக் கருத்துரைகள் பெற்ற தளங்கள்: இட்லிவடை, வலைச்சரம் (எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க!) துளசிதளம், வாத்தியாரின் வகுப்பறை. 
   =================   ==============   =============== 
           
நாளை சந்திக்கலாமா? 
                       

32 comments:

  1. அட இந்த வாரம் எங்கள் ப்ளாக் தானா சூப்பர் வீட்டுக்கு வந்து கணினி முன் உட்கார நேரம் கிடைப்பதில்லை.

    என் தளத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி . இதை எனக்கு சொன்ன தனபாலன் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  2. பதிவுகளில் பின்னூட்டப் போட்டியில் திண்டுக்கல் தனபாலன், தீதும் நன்றும் ரமணி இருவரும் tie.

    ReplyDelete
  3. எங்கள் பிளாக் முதலாளிகளுக்கு என் இனிய நன்றிகள். எங்கள் பிளாக் என்றும் என் வீடு தான். என்னை இனியவன் இளையவன் என்று பாராட்டியமைக்கும்சுவாரசியமானது என்று என் எழுத்தை உற்சாகப் படுத்தியதற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. தங்கள் கவனத்தில் என் பதிவுகளும்
    இருப்பது மகிழ்சியளிக்கிறது
    அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி
    பதிவின் முடிவில் தாங்கள் சொல்லிப் போகும்
    தகவல்கள் தங்கள் உழைப்பையும் புதிவுலகின்பால் கொண்ட
    ஈடுபாட்டையும் உணர்த்திப் போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சிறப்பான தளங்கள்....

    ஒவ்வொரு நாளும் வலைப்பூக்கள் பற்றி தரும் புள்ளி விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன.

    ReplyDelete
  6. இட்லிவடை,துளசிதளம்,வாத்தியாரின் வகுப்பறை. சூப்பர் கணிப்பு எங்கள் ப்ளாக். வாழ்த்துகள். அறிமுகங்கள் அழகாகச் செய்யப் பட்டிருக்கின்றன.
    விவரங்களும் அருமை.

    ReplyDelete
  7. எனது வலைப்பூவையும் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். இருவர் தளங்கள் புதிதாக அறிந்திட முடிந்தது.

    தொடருங்கள்.

    ReplyDelete
  8. எல்லாருமே தெரிந்த முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. சிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கு வாழ்த்துகள்.
    வலை செய்திகள் சுவாரசியம்.

    ReplyDelete
  10. மிகச் சிறப்பான வலைத்தளத் தேர்வு!... பகிர்ந்துகொண்ட உங்களுக்கும்
    இங்கு பகிரப்பட்ட வலைத்தளங்கள் அனைத்திற்கும் இந்த அம்பாளடியாளின்
    மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் . மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. ரா.ல. தி.த. தக்குடு, ஈ.க. எல்கே, ஏடிஎம், ஜீவி சார், வகுப்பறை இவங்களைத் தவிர மற்றப் பதிவுகள் புதியன. போனதே இல்லை. :)))))

    ReplyDelete
  12. சென்னையில் நீலம் வருகை தருமோ என்னும் அச்சத்தில், பெங்களூரில் என் வீட்டு யு பி எஸ் தகராறு செய்கிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இல்லாத நேரத்தில் மட்டும் வலைப்பக்கம் வந்து செல்வேன். இங்கு இதுவரை கருத்துரைத்துள்ள நண்பர்கள், பதிவர்கள் எல் கே, அப்பாதுரை, சீனு, ரமணி, வெங்கட் நாகராஜ், வல்லிசிம்ஹன், ராமலக்ஷ்மி, ஈரோடு கதிர், லக்ஷ்மி, ராம்வி, அம்பாளடியாள், கீதா சாம்பசிவம் எல்லோருக்கும், எங்கள் ப்ளாக் மூன்றாவது வட்டம் சார்பில் என் நன்றி. மீண்டும் மீண்டும் வருக!

    ReplyDelete
  13. நல்லதொரு அறிமுகங்கள். புள்ளி விவரங்கள் ஆச்சரியப்படுத்துகிறது.

    ReplyDelete
  14. இங்கே சுட்டியுள்ள சில வலைப்பதிவுகள் எனக்கும் புதியது. நானும் பின்தொடர்ந்து விட்டேன். நன்றி அறிமுகத்திற்கு. தொடருங்கள் சகோ.

    ReplyDelete
  15. அறிமுகத்திற்கு நன்றி! கலக்குங்கள்!

    ReplyDelete
  16. புதிய தகவல்கள் நன்றாய் இருக்கின்றன.

    ReplyDelete
  17. அறிமுகங்கள் அருமை..

    எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  18. என்னையும் அறிமுகப்படுத்தியதில் மிக்க நன்றி சார்...

    உங்களின் புதிய முயற்சிக்கு என்னால் முடிந்த உதவி செய்தமைக்கு மகிழ்ச்சி, நன்றி, பாராட்டுக்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    tm4

    ReplyDelete
  19. சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அறிமுகங்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அத்தனையும் மிக அருமையான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  22. இந்தப் பதிவு பற்றி கருத்து தெரிவித்த, பாராட்டிய
    கோவை2தில்லி,
    ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
    ஹேமா (HVL)
    முனைவர்.இரா.குணசீலன்
    திண்டுக்கல் தனபாலன்
    அமைதிச்சாரல்
    மாதேவி
    எல்லோருக்கும் எங்கள் நன்றி!

    ReplyDelete
  23. நன்றி வை கோபாலகிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  24. 'பூவனம்' வலைப்பூ ரசனைக்கு மிக்க நன்றி கெளதமன், சார்! மின்சாரம் இல்லாததினால் இந்த தாமதம். இந்த மனுஷன் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லையோ என்று எண்ண வேண்டாம். திண்டுக்கல் தனபாலன் வேறு சொல்லியிருந்தார். அவருக்கும் நன்றி.

    ReplyDelete
  25. ரெம்ப நன்றிங்க என்னையும் இதில் சேர்த்து கொண்டதற்கு . நன்றி எங்கள் ப்ளாக். Nice collection of blogs

    ReplyDelete
  26. நன்றி ஜீவி சார்.
    நன்றி அப்பாவி தங்கமணி.

    எங்கள் ப்ளாக் மூன்றாவது வட்டம் சார்பாக, நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்!

    ReplyDelete
  27. ஆஹா வலைச்சர ஆசிரியர் பணியில் வலைப்பூ பற்றிய ஆச்சர்ய தகவல்களும் இணைக்கப்பட்டிருக்கு. அதிலும் அதிக வாக்குகள் பெற்றது ஹை ஹை வலைச்சரமும்.... துளசிதளமுமா குட் குட்..... சந்தோஷமா இருக்குப்பா....

    அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் நிறையப்பேர் ஹை எனக்கு தெரிந்தவர்களே....

    ரமணிசார், அப்பாவி தங்கமணி,தக்குடு, ராமலக்‌ஷ்மிம்மா, குணசீலன், மோகன் ஜீ ஆஹா நான் அறிந்த அருமையான வலைத்தளங்கள் இவர்களுடையது.....

    எங்கள் ப்ளாக் குழுவினருக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா....

    சரவெடி அட்டகாசம்பா...

    ReplyDelete
  28. //அப்பாதுரை said...
    பதிவுகளில் பின்னூட்டப் போட்டியில் திண்டுக்கல் தனபாலன், தீதும் நன்றும் ரமணி இருவரும் tie.//

    அப்பாதுரை அப்பாதுரை.... கரெக்டா சொன்னீங்கப்ப்பா...

    ReplyDelete
  29. நன்றி மஞ்சுபாஷிணி.

    ReplyDelete
  30. ஹேமாவின் வம்சிப் போட்டிக்கதை பொக்கிஷக் கதை. என் டாப்50 சிறுகதைகளில் ஒன்று.

    ReplyDelete
  31. வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி! மற்ற அறிமுகங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete