வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என்னை பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவுக்கும் , அவர் பரிந்துரைத்ததை நம்பிக்கையுடன் எடுத்து எனக்கு வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணா, சீனா ஐயா இருவருமே என்னிடம் பேசும்போது தன் குழந்தையிடம் ஒரு தந்தை எத்தனை பரிவாக ஆறுதலாக அன்பாக பேசுவார்களோ அதுபோல எனக்கு தைரியம் கொடுத்து பேசினார்கள் இருவர் குரலிலும் தெரிந்த அன்பு என்னை எழுதவைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.
ஜாம்பவான்கள் ஆசிரியர் பொறுப்பேற்றிய வலைச்சரத்தில் இதோ நானும்… ஒரு தவழும் குழந்தையாக….
என்னைப்பற்றிய முன்னுரை….
என் பெயர் மஞ்சுபாஷிணி (என் தாத்தா ஆசையாக வைத்த பெயர்) நான் குவைத்தில் என் கணவர் (சம்பத்குமார்) இரண்டு பிள்ளைகளுடன் (விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ்) அம்மாவுடன் (கிரிஜாநந்தகோபால்) வசிக்கிறேன்.
வலைப்பூவை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு 2007 இல் என் தோழி கிருஷ்ணபக்தை பத்மஜா எனக்கு ஒரு வலைப்பூ தொடங்கி அதற்கு தலைப்பு கதம்ப உணர்வுகள் என்று வைத்து என் படைப்புகளை இதில் போடச்சொல்லி தந்தார்…. இப்படியாக வலைப்பூவில் என் படைப்புகள் இட்டுக்கொண்டே வந்தேன்…
சென்ற வருடம் கூகுளில் என்னவோ தேடப்போக அது நேராக ரமணி சார் வலைப்பூவில் கொண்டு வந்து விட்டது… அட ஒரு அழகிய கவிதை… எளிமையான வரிகள்… உடனே அதற்கு விமர்சனம் எழுத முனைந்தேன்.. எழுதினேன். அப்போது தொடங்கியது இந்த பயணம் இனிமையாக…. ரமணிசார் ஃபாலோயர் லிஸ்ட்ல இருந்தவர்களின் (வை.கோபாலகிருஷ்ணன் அண்ணா, ரிஷபன், இராஜராஜேஸ்வரிம்மா….வலைப்பூவுக் கெல்லாம் சென்று அருமையான அற்புதமான படைப்புகளை பார்த்தேன்… அங்கங்கே படைப்புகளை படித்து விமரிசனம் எழுதுவதை தொடர்ந்தேன்…
இன்று நான் வலைப்பூவில் பலரின் படைப்புகளை காணவும் விமர்சனம் எழுதவும் காரணமாக இருந்த ரமணிசாருக்கு என் மனம் நிறைந்த அன்புநன்றிகள்…
அதில் இருந்து ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சென்று விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தேன்.. அதன்பின் ரமணிசார், மதுமதி, ஸாதிகா, RAMVI இன்னும் சிலர் என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துவதை கண்டேன்… அவர்கள் எல்லோருக்குமே என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.
அன்பை எல்லோரிடமும் அன்பாய் பகிரும்போது அங்கே அன்பு சூழ்ந்த நட்பு மலரும் என்பது என் நம்பிக்கை… காண்போர் எல்லோருமே நல்லவர் என்ற என் நம்பிக்கை பொய்க்கவில்லை.. வலைப்பூவில் இருக்கும் எத்தனையோ பேரிடம் நான் பேசி இருக்கிறேன்.. என்னிடம் பேசுவோர் அன்புடன், பண்புடன் கண்ணியம் மீறாத குணத்துடன் பேசுவதை கண்டபோது இன்னும் எனக்கு எல்லோர் மீதும் மதிப்பும் அன்பும் நம்பிக்கையும் பெருகியது… சமீபத்தில் நடந்த பதிவர் மாநாடு பற்றிய விவரம் நண்பர் மின்னல் வரிகள் பாலகணேஷ் என்னிடம் சொன்னபோது அடடா இதுபோன்ற அரியவாய்ப்பு இனி எப்போது கிடைக்குமோ என்று நினைக்கவைத்த அந்த அருமையான பதிவர் மாநாடு குடும்பத்தில் இருக்கும் உறவுகள் எங்கெங்கோ உலகின் பல மூலையில் இருந்து ஒன்று சேர்ந்தது போல தான் எனக்கு பட்டது….அதற்கு காரணம் அன்பு மட்டுமே பிரதானம்…. அந்த அன்பு இனியும் எப்போது எல்லோரிடமும் தொடர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்…
என்னுடைய வலைப்பூவின் என் மனம் கவர்ந்த கவிதைகள் சில…
1. வலியின்றி
2. நட்பூ
6. வார்த்தைகள்
என்னுடைய வலைப்பூவின் என் மனம் கவர்ந்த கதைகள் சில...
2. சிகரம் தொட
இன்றைய நாள் எல்லோருக்கும் நல்ல பொழுதாய் மலர அன்பு பிரார்த்தனைகள்....நாளை முதல் என் மனம் கவர் பதிவர்களின் ரசனைகளுடன் பகிர்வுகளுடன் சந்திப்போம்...
வலைச்சரத்தின் ஆசிரியராய் என் அக்காவினை நியமித்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.
ReplyDeleteஅற்புதமான நினைவலைகளுடன் இந்த வாரத்தினை சிறப்புற நடாத்திச் சென்றிடுவார்கள் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை.
மிக அற்புதமான / அன்பான வடிவிலே சுய அறிமுகம் அமைந்திருக்கின்றது அக்கா. வலைப்பூ என்னும் எல்லைக்குள் தங்களின் பிரவேசம் எப்படி அமைந்திருந்தது என்பது குறித்தும் அறிந்து கொண்டேன்.
நான் உங்களின் பல படைப்புகளை இன்னும் படித்திடவில்லை. காலம் கனியும் போது நிச்சயம் படிப்பேன்.
தொடர்ந்து சிறப்புற நடத்திச் செல்ல என் வாழ்த்துகள்.!
நன்றிகள் பற்பல
அறிமுகபடலமே அற்புதம். உங்களை வை. கோபாலகிருஷ்ணன் சார் அறிமுக படுத்தியது அறிந்து மகிழ்ச்சி. சீனா சாரும் அன்பாய் எல்லோரையும் நம்பிக்கையுடன் எழுத வைப்பார். இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் வலைப்பூக்களை படிக்க ஆவாலாய் இருக்கிறேன்.படித்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteஎன் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து படித்து ஊக்குவித்து என்னை வழிநடத்தும் தகப்பன்ஸ்வாமி என் அன்புத்தம்பி சிவஹரியின் முதல் ஊக்கம் தரும் மறுமொழிக்கு அன்புநன்றிகள் தம்பி.
ReplyDelete//கோமதி அரசு said...
ReplyDeleteஅறிமுகபடலமே அற்புதம். உங்களை வை. கோபாலகிருஷ்ணன் சார் அறிமுக படுத்தியது அறிந்து மகிழ்ச்சி. சீனா சாரும் அன்பாய் எல்லோரையும் நம்பிக்கையுடன் எழுத வைப்பார். இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் வலைப்பூக்களை படிக்க ஆவாலாய் இருக்கிறேன்.படித்து விட்டு வருகிறேன்.//
அன்பு வணக்கங்கள் தோழி.... உங்கள் மறுமொழி பல வலைப்பூக்களில் கண்டுள்ளேன். தங்கள் வலைப்பூவுக்கு நானும் வந்து பார்க்கிறேன். அன்பு நன்றிகள் தங்களின் அன்புவாழ்த்துகளுக்கு.
அன்பின் மஞ்சுபாஷினி - அருமையான சுய அறிமுகம். கவிதைகளூம் கதைகளும் சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா
ReplyDelete// cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் மஞ்சுபாஷினி - அருமையான சுய அறிமுகம். கவிதைகளூம் கதைகளும் சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா//
அன்பு நன்றிகள் அண்ணா அறிமுகப்படுத்தியமைக்கும் வரவேற்றமைக்கும்...
ReplyDelete// வன்மையில்லா நாக்கே சுட்டெரிக்கும் //
வன்மை = violence இருக்கும்பொழுது தானே சுட்டெரிக்கும்.
உண்மையில்லா நாக்கே என்று இருக்க வேண்டுமோ ?
அது இருக்கட்டும்.
வலி தரும் பயமதில்
கிலி கொண்டு
பலியானவருக்கோர்
வழி சொல்லியிருப்பது
சிறப்புடைத்து.
ஆசிகள்.
சுப்பு ரத்தினம்.
( ஏனோ இதை படித்த உடனேயே பாடவேண்டுமெனத் தோன்றியது. நான் பாடகன் அல்ல.
வலைப்பதிவுகளில் வரும் சொற்செறிவும் பொருட்செறிவும் உள்ள கவிதைகளைப் பாடி மகிழ்வது
இந்த கிழவனின் பொழுது போக்கு. இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை. பாட்டின் தொடர்பு
சற்று நேரத்தில் தருகிறேன். உங்கள் அனுமதி இல்லையேல் அழித்தும் விடுவேன்.)
ReplyDeleteஇன்று, வலைச்சரத்தின் ஆசிரியராய் பணியேற்றுள்ள தங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
//// வன்மையில்லா நாக்கே சுட்டெரிக்கும் //
ReplyDeleteவன்மை = violence இருக்கும்பொழுது தானே சுட்டெரிக்கும்.
உண்மையில்லா நாக்கே என்று இருக்க வேண்டுமோ ?
அது இருக்கட்டும்.
வலி தரும் பயமதில்
கிலி கொண்டு
பலியானவருக்கோர்
வழி சொல்லியிருப்பது
சிறப்புடைத்து.
ஆசிகள்.
சுப்பு ரத்தினம்.
( ஏனோ இதை படித்த உடனேயே பாடவேண்டுமெனத் தோன்றியது. நான் பாடகன் அல்ல.
வலைப்பதிவுகளில் வரும் சொற்செறிவும் பொருட்செறிவும் உள்ள கவிதைகளைப் பாடி மகிழ்வது
இந்த கிழவனின் பொழுது போக்கு. இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை. பாட்டின் தொடர்பு
சற்று நேரத்தில் தருகிறேன். உங்கள் அனுமதி இல்லையேல் அழித்தும் விடுவேன்.)
October 1, 2012 11:03:00 AM GMT+05:30 //
அன்பு வரவேற்புகள் சுப்பு ஐயா.... அதென்ன மூக்கு நுனி கோபம் பாரதியாரைப்போல? :)
வன்மை என்று நான் எழுதியது சொல்வன்மை என்ற அர்த்தத்தில் ஐயா... அதனால் தான் வன்மையில்லா என்று எழுதினேன்.
பாடத்தோன்றிவிட்டால் பாடிவிட வேண்டும். அதற்காக சங்கீத ஞானம் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பாடவேண்டும் என்ற ஈடுபாடு தான் இருக்கவேண்டும். பாடகனாக இருப்பவர் மட்டும் தான் பாடவேண்டும் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா..
இனி ஒருமுறை கிழவன் என்று தங்களை சொல்லாதீர்கள்....
எதையும் படைப்பது தான் சிரமம்... அழிப்பது எளிது.. ஆகையினால் அழிக்கவேண்டாம் ஐயா ப்ளீஸ்...
பாடத்தோன்றினால் பாடுவோம். பாட்டின் தொடர்பு தாருங்கள் ஐயா... அன்பு நன்றிகள் தங்களின் மனம் நிறைந்த கருத்துப்பகிர்வுக்கு.
//புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஇன்று, வலைச்சரத்தின் ஆசிரியராய் பணியேற்றுள்ள தங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!//
அன்பு நன்றிகள் இராமாநுசம் ஐயா.. தாங்கள் சௌக்கியமா ஐயா?
அன்புச்சகோதரி மஞ்சு !
ReplyDeleteகாலை வணக்கங்கள்.
என் அன்புத்தங்கையை இங்கு இன்று வலைச்சர ஆசிரியராகக் காண்பதில் நான் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன்.
திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தானே தேடிவரும். அதுபோலத்தான் தங்களுக்கும் இன்று இந்த அரிய வாய்ப்பு தங்களைத்தேடி அதுவாகவே வந்துள்ளது. இதில் என் பங்கு மிகவும் சொற்பமே 0.001% மட்டுமே.
என் தங்கை மஞ்சு மிகச்சிறப்பாகவே எதையும் செய்வாள் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.
அன்பான வாழ்த்துகள் ... மஞ்சு.
இந்த வாரம் தங்களுக்கு இனிமையான வாரமாக அமைந்து வெற்றிகளைத் தேடித்தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு, மனமார பாராட்டுகிறான், வாழ்த்துகிறான் ஆசீர்வதிக்கிறான் உங்களின் அன்பு அண்ணா கோபு.
ஆனந்தமாகச் செயல்படுங்கோ மஞ்சு!
பிரியமுள்ள
கோபு அண்ணா
வலைச்சரத்திற்கு வருக! வணக்கம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமஞ்சுவின் சுய அறிமுகம் ....
ReplyDeleteஅதுவே சூப்பர் அறிமுகமாக அமைந்து விட்டது.
’மஞ்சு’வின் இந்த சுய அறிமுகம்
’பஞ்சு’ மிட்டாய் போல இனிப்போ இனிப்பு! ;)))))
மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பிரியமுள்ள
VGK
வருக! வருக மஞ்சு!
ReplyDeleteஉங்கள் பெயரைப் போலவே நீங்கள் இந்த வாரம் தொடுக்க இருக்கும் வலைச்சரம் இனிக்கட்டும்!
இன்று காலையிலேயே உங்களைப் பாராட்டி வரவேற்று ஒரு கருத்துரை போட்டேன். காணாமல் போய்விட்டதே!
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புச்சகோதரி மஞ்சு !
திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தானே தேடிவரும். இதில் என் பங்கு மிகவும் சொற்பமே 0.001% மட்டுமே.
பிரியமுள்ள
கோபு அண்ணா //
தங்கள் அன்பும் ஆசியும் என்றும் என்னை நல்வழி நடத்திச்செல்லும் அண்ணா.... அன்புநன்றிகள் தங்களின் வாழ்த்துகளுக்கு அண்ணா.
வாங்க! வாங்க!.. வலைச்சரம் சார்பாகவும் என்னோட சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறேன். என்னங்க முன்னறிவிப்பின்றி வந்துட்டீங்க.. நான் எதேச்சையா வந்து பார்த்தா நீங்க இந்த வார ஆசிரியர்.. பிரமாதம்.. கலக்குங்க..
ReplyDeleteமறக்காம என்னோட பேரையும் குறிப்பிட்டு சொல்லிட்டீங்களே.. சிறப்பு.. இந்த வாரம் முழுவதும் உங்களோட அறிமுகங்களை பார்த்து வாசிச்சு ரசிக்கலாம் அப்படித்தானே..
நாளைக்கு என்ன பதிவு.. பக்தியா? சமையலா? எதுவா இருந்தாலும் சிறப்பா இருக்குன்னு தெரியும்.. நாளைக்கு வரேன்..இவ்வாரம் முழுவதும் சிறப்பானதொரு பணியாற்ற சகோதரனின் அன்பு வாழ்த்துகள்..
// Ranjani Narayanan said...
ReplyDeleteவருக! வருக மஞ்சு!
உங்கள் பெயரைப் போலவே நீங்கள் இந்த வாரம் தொடுக்க இருக்கும் வலைச்சரம் இனிக்கட்டும்!
இன்று காலையிலேயே உங்களைப் பாராட்டி வரவேற்று ஒரு கருத்துரை போட்டேன். காணாமல் போய்விட்டதே!//
காக்கா ஊச் ஆகிவிட்டதோ ரஞ்சும்மா உங்க கருத்து??? இல்லையே பாருங்க எடுத்து வந்து வெச்சிருக்கேன் பாருங்க இதுவான்னு??
// Ranjani Narayanan said...
அன்புள்ள மஞ்சு!
உங்களது இந்த வார வலைச்சரம் வாசமுள்ள மலர்களாக மனம் வீசி எல்லோருடைய உள்ளத்திலும் நீங்கா இடம் பெற வாழ்த்துக்கள்!
October 1, 2012 6:59:00 AM GMT+05:30//
இதுக்கு நான் போட்ட பதிலும் இருக்கே ரஞ்சும்மா பாருங்கோ...
மஞ்சுபாஷிணி said...
//அன்புள்ள மஞ்சு!
உங்களது இந்த வார வலைச்சரம் வாசமுள்ள மலர்களாக மனம் வீசி எல்லோருடைய உள்ளத்திலும் நீங்கா இடம் பெற வாழ்த்துக்கள்!//
அன்பு நன்றிகள் ரஞ்சும்மா...
October 1, 2012 10:30:00 AM GMT+05:30
http://www.blogger.com/comment.g?blogID=2645174951024510477&postID=3923781124061159350&isPopup=true
இங்கயே தான் இருக்கு ரஞ்சும்மா :) அன்புநன்றிகள் அம்மா...
அறிமுகம் அரிதாரம் பூசாமல் அழகாக உள்ளது அக்கா தங்கள் இனிமையான குரலைப்போல அசத்துங்க ஆவலுடன் நானும்.
ReplyDelete//தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteவலைச்சரத்திற்கு வருக! வணக்கம்! வாழ்த்துக்கள்! //
அன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் இளங்கோ ஐயா...
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமஞ்சுவின் சுய அறிமுகம் ....
அதுவே சூப்பர் அறிமுகமாக அமைந்து விட்டது.
’மஞ்சு’வின் இந்த சுய அறிமுகம்
’பஞ்சு’ மிட்டாய் போல இனிப்போ இனிப்பு! ;)))))
மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பிரியமுள்ள
VGK
October 1, 2012 11:42:00 AM GMT+05:30 //
அன்பு நன்றிகள் அண்ணா.
//மதுமதி said...
ReplyDeleteவாங்க! வாங்க!.. வலைச்சரம் சார்பாகவும் என்னோட சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறேன். என்னங்க முன்னறிவிப்பின்றி வந்துட்டீங்க.. நான் எதேச்சையா வந்து பார்த்தா நீங்க இந்த வார ஆசிரியர்.. பிரமாதம்.. கலக்குங்க..
மறக்காம என்னோட பேரையும் குறிப்பிட்டு சொல்லிட்டீங்களே.. சிறப்பு.. இந்த வாரம் முழுவதும் உங்களோட அறிமுகங்களை பார்த்து வாசிச்சு ரசிக்கலாம் அப்படித்தானே..
நாளைக்கு என்ன பதிவு.. பக்தியா? சமையலா? எதுவா இருந்தாலும் சிறப்பா இருக்குன்னு தெரியும்.. நாளைக்கு வரேன்..இவ்வாரம் முழுவதும் சிறப்பானதொரு பணியாற்ற சகோதரனின் அன்பு வாழ்த்துகள்..//
முன்னறிவிப்பின்றின்னா சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்??
அன்புநன்றிகள் மதுமதி அன்புவரவேற்புகளுக்கு...
என்னை அறிமுகப்படுத்தி இருந்தீங்க தானேப்பா? அதனால் தான் மறக்காம குறிப்பிட்டேன்.
நாளையும் சர்ப்ரைஸ்... இனி ஏழு நாட்களும் என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்த இருக்கேன்பா...
அன்புநன்றிகள் சகோ....
//Sasi Kala said...
ReplyDeleteஅறிமுகம் அரிதாரம் பூசாமல் அழகாக உள்ளது அக்கா தங்கள் இனிமையான குரலைப்போல அசத்துங்க ஆவலுடன் நானும்.//
ஆவலுடன் நானும்பா :) அன்பு நன்றிகள் தங்கையே.... இன்று மாலை கட்டாயம் ஆன்லைன்ல வர முயற்சிக்கிறேன். வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணவன். சேராதிருப்பானோ சித்திரபூம்பாவைத்தனை.
வாழ்த்துக்கள் சகோ. படைப்புகளும் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ. படைப்புகளும் அருமை.
ReplyDelete// துரைடேனியல் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ. படைப்புகளும் அருமை.//
இரண்டுமுறை வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் சகோ..
//கோமதி அரசு said...
ReplyDeleteஅறிமுகபடலமே அற்புதம். உங்களை வை. கோபாலகிருஷ்ணன் சார் அறிமுக படுத்தியது அறிந்து மகிழ்ச்சி.
சீனா சாரும் அன்பாய் எல்லோரையும் நம்பிக்கையுடன் எழுத வைப்பார்.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் வலைப்பூக்களை படிக்க ஆவாலாய் இருக்கிறேன்.
படித்து விட்டு வருகிறேன்.//
அன்புள்ள கோமதி அரசு Madam,
வாருங்கள். வணக்கம்.
செளக்யமா இருக்கீங்களா?
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
எனக்காக .....
என் அன்புத்தங்கை
மஞ்சுவுக்காக ..
என் அருமை நண்பர்
அன்பின் திரு.சீனா ஐயா
அவர்களுக்காக ......
அன்புடன்
VGK
ReplyDeleteஅருமையான துவக்கம்
தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டவிதமும்
பதிவுலகம் மற்றும்பதிவர்கள் குறித்துக் கொண்ட உயர்ந்த
எண்ணமும் அதைப் பகிர்ந்த விதமும் உள்ளம் தொட்டது
இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
ஓ!...மஞ்சு 28வதாகவே கருத்திட வரமுடிந்துள்ளது.வாங்கோ!...வாங்கோ!.
ReplyDeleteகாலையிலிருந்து ஓரே நேர நெருக்கடி.
இன்னும் தலை சீவவில்லை வெளியே போக.
உங்கள் கவிதைகள் மாலையில் வாசிப்பேன்.
ஆசிரியப் பணி சிறக்க நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வருக மஞ்சுபாஷினி.அருமையான சுய அறிமுகம்.தொடருங்கள்.
ReplyDelete//Ramani said...
ReplyDeleteஅருமையான துவக்கம்
தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டவிதமும்
பதிவுலகம் மற்றும்பதிவர்கள் குறித்துக் கொண்ட உயர்ந்த
எண்ணமும் அதைப் பகிர்ந்த விதமும் உள்ளம் தொட்டது
இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்//
தங்கள் ஆசி ரமணிசார்...அன்புநன்றிகள் ரமணி சார்....
// Ramani said...
ReplyDeletetha.ma 6//
அன்புநன்றிகள் ரமணிசார்.
/kovaikkavi said...
ReplyDeleteஓ!...மஞ்சு 28வதாகவே கருத்திட வரமுடிந்துள்ளது.வாங்கோ!...வாங்கோ!.
காலையிலிருந்து ஓரே நேர நெருக்கடி.
இன்னும் தலை சீவவில்லை வெளியே போக.
உங்கள் கவிதைகள் மாலையில் வாசிப்பேன்.
ஆசிரியப் பணி சிறக்க நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//
அச்சோ வேதாம்மா அன்புக்கு இணை அன்பு மட்டுமே... நீங்க 28 ஆவதா இருந்தாலும் சரி 100 ஆவதா இருந்தாலும் சரி எனக்கு எப்பவும் அதே அன்பு வேதாம்மா தான்.. உங்க அன்புவாழ்த்துகள் எனக்கு ஆசிகள்... அன்புநன்றிகள் வேதாம்மா..
/ஸாதிகா said...
ReplyDeleteவருக மஞ்சுபாஷினி.அருமையான சுய அறிமுகம்.தொடருங்கள்.//
அன்பு நன்றிகள் ஸாதிகா அன்புவரவேற்புகளுக்கு.
//அன்பு மட்டுமே பிரதானம்…. அந்த அன்பு இனியும் எப்போது எல்லோரிடமும் தொடர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்…//
ReplyDeleteஅன்பால் எங்களை கட்டி வைத்திருக்கும் அன்பின் மஞ்சு !!
ஆரம்பமே அசத்தல் ....தொடருங்கள் வாரம் முழுதும் பயணிக்கிறோம்
ReplyDeleteஅழகிய சுய அறிமுகம்
தோழி மஞ்சுசுபஷினி அவர்களுக்கு
என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
//angelin said...
ReplyDelete//அன்பு மட்டுமே பிரதானம்…. அந்த அன்பு இனியும் எப்போது எல்லோரிடமும் தொடர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்…//
அன்பால் எங்களை கட்டி வைத்திருக்கும் அன்பின் மஞ்சு !!
ஆரம்பமே அசத்தல் ....தொடருங்கள் வாரம் முழுதும் பயணிக்கிறோம் //
அன்பு நன்றிகள் அஞ்சு....
//செய்தாலி said...
ReplyDeleteஅழகிய சுய அறிமுகம்
தோழி மஞ்சுபாஷிணி அவர்களுக்கு
என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்//
அன்புநன்றிகள் செய்தாலி
வலைச்சர அறிமுகம் அருமை மஞ்சுபாஷிணி. உங்களுடைய பல படைப்புகளை தமிழ்மன்றத்தில் படித்து சுவைத்திருக்கிறேன். உங்கள் எழுத்துவன்மையை வியந்திருக்கிறேன். இனிவரும் நாட்களில் அறிமுகப்படுத்தவிருக்கும் படைப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete// கீதமஞ்சரி said...
ReplyDeleteவலைச்சர அறிமுகம் அருமை மஞ்சுபாஷிணி. உங்களுடைய பல படைப்புகளை தமிழ்மன்றத்தில் படித்து சுவைத்திருக்கிறேன். உங்கள் எழுத்துவன்மையை வியந்திருக்கிறேன். இனிவரும் நாட்களில் அறிமுகப்படுத்தவிருக்கும் படைப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.//
அட தமிழ்மன்றத்தில் இருக்கும் கீதம் நீங்க தானாப்பா?
அன்பு நன்றிகள் கீதம். ரொம்ப சந்தோஷம்பா நீங்க தான் கீதம் என்று தெரிந்ததே என் மனதுக்கு நிறைவை தருகிறது.
நல்ல சுய அறிமுகம் சகோ... நாளை முதல் உங்கள் அசத்தல் அறிமுகங்களை காண ஆவலாய் உள்ளேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி... நன்றி... (TM 7)
அட்டகாசமான ஆரம்பம்! கலக்குங்க!
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் பணி.
ReplyDeleteஎன் அன்புத் தோழிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு. உங்கள் பங்களிப்பில் இந்த வலைச்சர வாரம் எங்களில் கதம்ப உணர்வுகளை விதைக்கட்டும். என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்மா.
ReplyDeleteவணக்கம் சகோதரி!
ReplyDeleteவலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிகரம் தொட என்னைக் கவர்ந்தக் கதை. சாதனையாகப் போகும் ஈருடல் பத்தி குறிப்பிட வேண்டாமோ?
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் மஞ்சுபாஷிணி.
ReplyDeleteபதிவு எழுதாமா தூங்கி இருந்த புலி வேட்டைக்கு புறப்பட்டமாதிரி இருக்கு... வாழ்த்துக்கள்
சுவையான அறிமுகம்...!
ReplyDeleteயப்பா எம்புட்டு பேறு கருத்து சொல்லியிருக்காங்க.... நீங்க ஒரு பிரபல பதிவரோ! :) :) :)
"வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என்னை பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவுக்கும் , "///////நானும்கூட அவர் தந்த தகவல்பேரில் இங்கு வந்தேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலள்வே யாகும்மாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteநல்ல சுய அறிமுகம் சகோ... நாளை முதல் உங்கள் அசத்தல் அறிமுகங்களை காண ஆவலாய் உள்ளேன்...
வாழ்த்துக்கள் சகோதரி... நன்றி... (TM 7)//
அன்பு நன்றிகள் தனபாலன்.
//குட்டன் said...
ReplyDeleteஅட்டகாசமான ஆரம்பம்! கலக்குங்க!//
அன்பு நன்றிகள் குட்டன்.
//கோவை2தில்லி said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் பணி//
அன்பு நன்றிகள் தோழி....
//பால கணேஷ் said...
ReplyDeleteஎன் அன்புத் தோழிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு. உங்கள் பங்களிப்பில் இந்த வலைச்சர வாரம் எங்களில் கதம்ப உணர்வுகளை விதைக்கட்டும். என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்மா.//
சிவப்பு கம்பள வரவேற்பும் இதயம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த அன்புநன்றிகள் கணேஷா..
//அ.அப்துல் காதர் said...
ReplyDeleteவணக்கம் சகோதரி!
வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!//
அன்பு நன்றிகள் சகோ தங்களின் அன்பு வரவேற்புகளுக்கும் வாழ்த்துகளுக்கும்.
சுய அறிமுகம் மிகச் சுவை.
ReplyDelete// அப்பாதுரை said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
சிகரம் தொட என்னைக் கவர்ந்தக் கதை. சாதனையாகப் போகும் ஈருடல் பத்தி குறிப்பிட வேண்டாமோ?//
அன்பு நன்றிகள்பா அப்பாதுரை... ஈருடல் கதை ஏன் பாதிலே விட்டேன் தெரியுமாப்பா? அதென்னவோ சாருலதா படம் வந்திருக்கே அதே போல. நான் எப்படி கதை தொடர்வதுன்னு முழிக்கிறேன்பா...
// Avargal Unmaigal said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் மஞ்சுபாஷிணி.
பதிவு எழுதாமா தூங்கி இருந்த புலி வேட்டைக்கு புறப்பட்டமாதிரி இருக்கு... வாழ்த்துக்கள்//
அச்சோ இல்லப்பா... அப்டியெல்லாம் ஒன்னுமே இல்லை... அன்புநன்றிகள் சகோ.
//வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteசுவையான அறிமுகம்...!
யப்பா எம்புட்டு பேறு கருத்து சொல்லியிருக்காங்க.... நீங்க ஒரு பிரபல பதிவரோ! :) :) :)//
அன்புநன்றிகள்பா உங்கள் வரவேற்புகளுக்கு.
கண்டிப்பா இல்லவே இல்லப்பா நான் பிரபல பதிவர் இல்லை.. பதிவர் மட்டுமேப்பா.. அதுவும் ரொம்ப ரொம்ப சாதாரணமான பதிவர்....
//சந்திர வம்சம் said...
ReplyDelete"வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என்னை பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவுக்கும் , "///////நானும்கூட அவர் தந்த தகவல்பேரில் இங்கு வந்தேன்.
வாழ்த்துக்கள்.
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலள்வே யாகும்மாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம். //
அன்புநன்றிகள் சகோ தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு.
// Asiya Omar said...
ReplyDeleteசுய அறிமுகம் மிகச் சுவை.//
அன்பு நன்றிகள் ஆசியா உமர். உங்க சமையலை விட சுவை கண்டிப்பா இல்லைப்பா என்னுடைய அறிமுகம்....