Thursday, October 18, 2012

நான்காம் நாளிதழ் !

நான்           :வாய்யா நம்மாளு !
நம்மாளு :வந்தேன் !!
நான்         : ஏன் மரம் மாதிரி நிற்கிறே ? உட்கார் !
நம்மாளு : மரம்னு சொன்னவுடன் தான் ..
                      இதைப் பாரேன் ...மரத்தைப் பற்றி
                      நிறைய எழுதியிருக்கிறார் மனுஷன் !
                      http://padmasury.blogspot.in/2012/09/blog-post.html
நான்          : மரம்னா  எனக்கு ரொம்ப பிடிக்கும் ....நிறைய மரங்களடர்ந்த                       சோலையில் நாம் வாழ்ந்தோமென்றால்,      நம்  ஆயுசும் கூடும்..
நம் வாழ்வும் ஆரோக்யமாய் அமையும் ..  ம் .....
நம்மாளு : நம்ம வெங்கட் இப்பல்லாம் பழைய ஆனந்த விகடன் தீபாவளி மலர்லேர்ந்து
பொக்கிஷம் மாதிரி எடுத்துப் போடறாரு ..படிக்கவே  சூப்பராயிருக்கு ..
நான்         : இதைச் சொல்றியா ?  http://venkatnagaraj.blogspot.com/2012/10/blog-post_17.html
                      வானர வைபவம்னு போட்டிருக்கிறார் ...உன்னைப் பார்த்திருக்கிராறோ அவர் ?
நம்மாளு  : முயலைப் பற்றி கயல் எழுதற பிளாக் சூப்பர் !
நான்          : ஓ ..இதைச் சொல்றியா ?
                       http://kayalsm.blogspot.in/2012/10/blog-post_13.html
நம்மாளு :  இதுவும் கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருக்கு ..இப்ப யாரு
                       விவசாயியை நினைக்கிறாங்க..
                       http://vivasaayi.blogspot.in/?expref=next-blog
நான்        : நிறைய கிரவுண்ட் ஒர்க் பண்ணியிருக்க போல இருக்கு .
நம்மாளு : நீ ஜாலியா ஆபிஸ் போய்ட்டே ..அகப்பட்டவன் நான் அல்லவோ ?
நான்         : சீனா சார்ட்ட சொல்லி உனக்கு குச்சி  மிட்டாய் வாங்கி தரச் சொல்றேன் !   கவலைப் படேல் !
நம்மாளு : இங்க ஒருத்தர் கிறுக்கி தள்ளியிருக்கிறார் பாரு ..அதுவும் தான்
                      நல்லா இருக்கு !http://kirukkugiren.blogspot.in/
நான்         : பிடிவாதம், கப வாதம் போன்ற எல்லா வாதமும் போயிடும் ..இந்த
                     தீவிரவாதம் எப்ப போகுமா ? என்று கவலையோடு இந்த பிலாக்ல
                      எழுதறது ரொம்ப பிடிக்குது ..http://tharaasu.blogspot.in/2012/10/blog-post_4.html
நம்மாளு : INFERTILITY ங்கிறது பெரிய  பிரச்னையா ஆகப் போறது நாட்டில !
                     காரணம் STRESS தான் ..அதுக்கு  HUMOUR தான் சரியான மருந்து !
                     சித்த வைத்திய தீர்வு சொல்லியிருக்கிற பிலாக்கிது !
                     http://avargal.blogspot.in/2011/02/infertility.html 
நான்        :  பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுத்து சூரியனைக் காட்டப் போறேன் ! அதாவது சாதாரண  ZERO WATTS BULB நான் ..
இப்ப காண்பிக்கப் போறது ஆயிரம் வாட்ஸ் பிரபல நகைச்சுவை மன்னன்
அகஸ்தியன் என்கிற கடுகு ! படிச்சாலே நெருப்பு மாதிரி பத்திகிறது சிரிப்பு !
http://kadugu-agasthian.blogspot.in/2012/10/4.html
நம்மாளு : போறும்பா ...உடம்பு வலிக்குது ..நாளைக்குப் பார்ப்போம் ..
நான்          : இந்த கஷாயம் படி ..சரியாயிடும் ...
நம்மாளு :  கஷாயம் படிச்சா எப்படி சரியாகும்?  கஷாயம் குடிச்சா தானே
                       சரியாகும்?
நான்         :  உனக்கு விநாயகம்னு பேர் வைச்சது சரி தான் ! வினாவை அகத்தில கொண்டிருக்க ..நான் சொன்னதை அப்படியா எடுத்துக்கறது?
கஷாயம் எப்படி செய்யறதுன்னு நம்ம கோவை 2 தில்லி எழுதியிருக்காங்க ..
இதைப்  படிச்சுட்டு செஞ்சு பாரு ....தீர்ந்து போயிடும் ..
நம்மாளு : எது ?
நான்         : கஷாயம் தான் !
                    http://kovai2delhi.blogspot.in/2012/10/blog-post_10.html

 
                   
                 

                                                       

24 comments:

  1. விநாயகம்னு பேர் வைச்சது சரி தான் ! வினாவை அகத்தில கொண்டிருக்க ..

    அருமையான பதிவுகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறாரே !!

    பாராட்டுக்கள்....

    ReplyDelete
  2. என் அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கும் அறிமுகங்கள்..

    சொல்லும் விதமே மிக நேர்த்தி..

    குச்சி மிட்டாய் வாங்கித் தரேன் உங்களுக்கும்

    ReplyDelete
  4. அசத்தல் தான் சார்.... கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்...

    விநாயகமூர்த்தி படுத்தும்பாட்டும் மிக அருமை....

    அறிமுகங்களைப்பற்றி அறிமுகப்படுத்தும்விதமோ ம்ம்ம்ம்ம்ம் அற்புதம் சார்....

    வெங்கட்நாகராஜ் வலைப்பூ நான் படிச்சிருக்கேன்... மிக அருமையா எழுதுவார்..

    ஆதி வெங்கட் வலையும்பார்த்திருக்கேன். நம்ம வீட்டுப்பொண்ணு போல மிக அருமையா எழுதுவாங்க... மீதிபேர் எனக்கு புதியதே....

    தொடர்ந்து அசத்துங்க...

    திட்டாதீங்க.. இதோ நேரா உங்க ஹாஸ்யஜோதி வலைக்கு தான் போய்க்கிட்டே இருக்கேன். ஆன் த வே டு ஹாஸ்ய ஜோதி....

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் உங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்ட அன்பு நண்பர்களுக்கும்....

    ReplyDelete
  5. என் வலைப்பூவையும், என்னவளின் வலைப்பூவையும் ஒரே நாளில் அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி!

    மற்ற அறிமுகங்களில் தெரியாதவர்களையும் படிக்கிறேன்....

    ReplyDelete
  6. வணக்கம் ஆரணிய நவாஸ்(ஆர் ராமமூர்தி)அண்ணா.

    வணக்கம் வணக்கம் வணக்கம். இன்றைய நாளில் வலைப்பூ வலைச்சரம் மிகவும் சுவாரகசியமாக உள்ளது. மொத்தம் 07 வலைப்பதிவாளர்களின் படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளிர்கள் அவர்களைப்பற்றிய விளக்கமும் அவர்கள் படைத்த படைப்பும் அருமை அருமை.அருமை.(அண்ணா) நான் பார்க்காத வலைப்பூக்கள் அனைத்தும் .சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி (அண்ணா) 05தாம் நாளும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. இன்றைய அறிமுகப்பதிவுகள்
    யாவும் அருமை.

    அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.

    அறிமுகம் செய்த விதமும், நம்மாளுக்கும் தங்களுக்கும்
    ஏற்பட்ட உரையாடல்களும்
    சிறப்பாக இருக்குது.

    விநாயகம்னு பேர்
    வைச்சது சரி தான் !
    வினாவை அகத்தில கொண்டிருக்கிறார்.

    குச்சிமிட்டாய் வாங்கி
    எல்லோருக்கும்
    கொடுங்கோ. அப்போதான்
    நிறைய பின்னூட்டங்கள்
    வந்து குவியும். ஆனாக்க
    அது நேக்கு வேண்டாம்.

    அரைக்கிலோ மீட்டர் நீளத்துக்குப் எல்லோருக்கும் பின்னூட்டம் கொடுக்கும் மஞ்சு, தினமும்
    எனக்குப் பஞ்சு மிட்டாய் தந்து
    கொண்டு இருக்காங்க. அதுவே
    எனக்குப்போதும்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  8. ராஜராஜேஸ்வரி மேம் வாருங்கள்..

    ReplyDelete
  9. ரிஷபன் ...குச்சி மிட்டாய் மட்டும் அல்ல
    கம்மர்கட்,இலந்த வடையும் வேணும்!

    ReplyDelete
  10. மஞ்சுபாஷிணி மேடம் வாருங்கள்...

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் முதல் அறிமுகம் நீங்கள்..கடைசி அறிமுகம் அவர்கள் என்று நினைத்தேன்...மறந்து விட்டேன்..சாரி!

    ReplyDelete
  12. ரூபன் அது ஆரண்ய நிவாஸ் .. நவாஸ் அல்ல!

    ReplyDelete
  13. வாருங்கள் வை.கோ. சார்..
    தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  14. குச்சி மிட்டாய் கமர் கட்டெல்லாம் ஞாபகபடுத்தி விட்டீங்களே

    அறிமுகங்கள் அனைத்தும் அருமை, அறிமுகப்படுத்திய விதமும் அருமை,

    ReplyDelete
  15. வலைச்சரத்தில் எனது ஒரு தளத்தினை அறிமுகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி.
    அடுத்த தளத்தினயும் {தாமரை மதுரை} பாருங்க!

    ReplyDelete
  16. அறிமுகப் படுத்தப்படும் விதம் சிறப்பு.
    அறிமுகவாளர்களிற்கும், தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  18. ஜலீலா கமால்,
    கல்கோனான்னு ஒண்ணு இருக்கு தெரியுமா? அது சூப்பர்...

    ReplyDelete
  19. வேதா.இலங்கா திலகம் தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  20. வாருங்கள் RAMVI அவர்களே...
    வருக..வருக...

    ReplyDelete
  21. நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் கணினி பக்கம் வரமுடியவில்லை. கஷாயத்தை போட்டு குடித்து விட்டு இங்கு வந்து பார்த்தால் கஷாயம் அறிமுகமாகியுள்ளது....

    ஒரேநாளில் என்னையும், என்னவரையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி சார்.
    தங்கள் வலைச்சர பணி சிறப்பாக இருந்தது சார்.பாராட்டுகள்.

    ReplyDelete