Friday, October 5, 2012

நம்பிக்கை - கதம்ப உணர்வுகள் ( ஐந்தாம் நாள் )


ஒருவர் மீது நமக்கு நம்பிக்கை ஏற்பட அவரை சந்தேகமாக தொடர அவசியமில்லை… அவரை கண்காணிக்க அவசியமில்லை.. மனதில் அவர்மேல் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே போதுமானது. நம் மனசுக்கு தெரியும் எது சரி எது தவறு… மனதில் நல்ல எண்ணங்கள் கொண்டு பார்க்கும்போது நமக்கு நல்லவையாகவே தெரியும். நம்பிக்கையும் பெருகும்… மற்றவர் நம்மை நம்ப வேண்டும் என்பதற்காக போராட அவசியமில்லை. நம் நல்ல எண்ணங்கள் அவர் மனதுக்கு தெரியவில்லை என்ற கவலையும் வேண்டாம். நம்மை புரிந்தோருக்கு நம்மை புரியவைக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்மை புரியாதோருக்கு நம்மை புரியவைக்க வேண்டிய அவசியம் சுத்தமா இல்லவே இல்லை…. நல்லதை தொடர்ந்து நீங்கப்பாட்டுக்கு செய்துக்கிட்டே போங்க. காலம் அவர்களுக்கு உங்கள் நற்செயல்களை உணர்த்தி கண்டிப்பா நம்பிக்கை அவர்கள் மனதில் ஏற்பட்டு தன் நம்பிக்கையின்மைக்கு வருந்தும் நிலை ஏற்படும்… அதனால் எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்….

சரி இன்று என் மனம் கவர் பதிவர்கள் சிலரை அறிமுகப்படுத்துகிறேன்பா..


மனைவியின் இதமான மூச்சுக்காற்றில் தன் சுவாசத்தை நிறுத்தி வாழ்நாட்களை தன் இணையின் நினைவுகளோடு நகர்த்திக்கொண்டிருக்கும் இந்த அற்புதமான புலவரின் மனம் மிக மிக மென்மையானது. எத்தனை சிறிய வயதினரையும் அன்புடன் மரியாதையுடனே அழைப்பது இவரின் பண்பு. இவரின் சில பதிவுகளை பார்ப்போமா?


ஏன் சிரித்தார் பிள்ளையார்? 




யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவரின் அருமையான மனசு...எங்கும் நற்பதிவுகள் கண்டால் உடனே அதை அந்த நல்லவிஷயங்களை, பயன்களை உடனே எல்லோருக்கும் பகிரத்துடிக்கும் மிக அன்பான நல்ல மனம் கொண்ட இனியவர். இவரின் சில பதிவுகளை பார்ப்போமா?






இவரைப்பற்றி நான் அறிந்தது ஒரே ஒரு விஷயம்… பின்னூட்டப்புயல், புன்னகையுடன் எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர். உதவுவதில் முன்னே நிற்பவர்… எப்படி இத்தனையும் தெரியும்னு பார்க்கிறீங்களா? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் தானே… இந்த நல்ல உள்ளம் சொல்லும் வாழ்க்கைக்கு பயனுள்ள நல்லவிஷயங்கள் என்னன்னு பார்ப்போமா?




இவர் ஒரு வக்கீல்.. அப்டின்னா இவர் அனுபவத்தில் நிறைய பேர்களின் வாழ்க்கையை சீராக்கி அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்திருப்பார்னு நினைக்கிறீங்க தானே..கரெக்ட்… இவர் எழுதி இருக்கும் அனுபவங்களை படித்தாலே நிறைய பயனுள்ள கருத்துகள் கிடைக்கப்பெறலாம். பார்ப்போமா?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 





இவரைப்பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு தகவல்.... உதவி செய்வதில் முதன்மை. தன் பதிவுகளில் எப்போதும் எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார். சில பதிவுகள் பார்ப்போமா?

குளு குளு குலுமணாலி




இவங்க ரொம்ப ருசியா சமைப்பாங்க. மனிதர்களின் மனதை படிப்பாங்க. அன்பை சந்தோஷமாய் பகிர்வாங்க. கொஞ்சம் இவர் பதிவுகளை ருசிப்போமா? சாரி ரசிப்போமா?







ரசிக்க ரசிக்க தன் அனுபவங்களை பகிர்வதில் இவருக்கு நிகர் இவரே... இவரின் பதிவுகளை படிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே தோணாது.... அத்தனை தகவல்களையும் தொடர்புடைய படங்களையும் சுவாரஸ்யமாக பகிர்வது மிக அருமை.... பார்ப்போமா இவருடைய சில பதிவுகள்?






நம் சின்னப்பிள்ளை காலத்துக்கே கொண்டு சென்றுவிடும் இவர் பதிவுகள்... படிக்கும் வாசகர்கள் இவர் பதிவுகளை படிக்கும்போதே அட நம் சிறுவயதில் நாம எப்படி இருந்தோம். எப்படி விளையாடினோம்? படித்தோம்? அப்டின்னு நம் மலரும் நினைவுகளை சுவாரஸ்யமாக அழைத்துச்செல்லக்கூடிய இந்த பிள்ளையின் பதிவுகள் சில பார்ப்போமா?

ஆடிப்பார்க்கலாம் ஆடு 






இந்த குட்டிப்பிள்ளையின் வலைப்பூவுக்கு சென்றால் சுறுசுறுப்பான வண்டின் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருக்கிறது... கதைகளாக, கவிதைகளாக, படங்களாக,  ருசிகரமான சமையலாக.... அம்மா அப்பாவுக்கு 59 ஆம் வருட திருமண நாளுக்கு இந்தக்குழந்தை அன்பு வாழ்த்துகளை கவிதையாக வடித்திருப்பதை படிக்கும்போது அத்தனை சந்தோஷமாக இருந்தது.  பார்ப்போமா இந்த குட்டிப்பிள்ளையின் சில பதிவுகளை?







காகிதப்பூக்கள்னு சொல்லிக்கும் இந்த சின்னக்குட்டி மீன் தன்னை ஹோம்மேக்கர்னு சொல்லுவாங்க. ஆனா இந்தப்பிள்ளையின் க்ரியேட்டிவிட்டி யப்பா அத்தனையும் அற்புதமா இருக்கும்... விதம் விதமா வீணாக போட்டுவிடும் பொருட்களில் இருந்து அழகிய படங்களும் விஸ்வரூபமெடுக்கும்... நான் வலைப்பூவில் எழுதாது இருந்த காலத்தில் நான் யாரென்று தெரியாதபோதே இந்தப்பிள்ளை அன்புடன் ஓடி வந்து அக்கா நீங்கள் மீண்டும் எழுதவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்த இந்தக்குழந்தையை எனக்கு அப்பவே ரொம்ப பிடித்துவிட்டது. பார்ப்போமா இந்தப்பிள்ளையின் அசத்தல் பதிவுகளை?

Teddy Bear /Easel Card /Tutorial 

Advent /Christmas Count Down 




மனதில் அன்பை மட்டுமே நிறைத்து வைத்திருக்கும் கீதம் எனக்கு தமிழ் மன்றத்தில் அறிமுகம் ஆனவர். ஆனால் இவருக்கு ப்ளாக்ஸ்பாட் இருக்கிறது என்பதே தெரியாமல் இவரின் ஒரு கவிதையை படித்து ரொம்ப மனம் நெகிழ்ந்து போய் பின்னூட்டம் இட்டேன். பின் தான் தெரியவந்தது இவருக்கு என்னை மிக நாட்களுக்கு முன்பே தெரியும் என்பது. அற்புதமான பெண் இவர். வார்த்தைகளில், பதிவுகளில், நலன் விசாரிப்பில் அன்பு அன்பு அன்பு மட்டுமே... இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை பார்ப்போமா?






இந்த காட்டான் எனும் அற்புதமான பிள்ளையைப்பற்றி சொல்லவேண்டும் என்றால்..... எளிமையும், நல்ல மனமும் பண்பும் நிறைந்த ஒரு நல்ல சகோதரன். வலிய வந்து சகோதரி சுகமாக இருக்கிறீர்களா என்று எத்தனை அவசர வேலையிலும் வந்து விசாரிக்கும் இந்த நல்ல மனிதரின் பதிவுகளிலும் அந்த வாத்ஸல்யம் தெரியும், இவரின் பதிவுகளைப்பார்ப்போமா?





மனத்திண்மை இவர் பதிவுகளில் நான் காண்பதுண்டு. மனிதநேயம் இந்த நல்ல மனிதரின் நலன் விசாரிப்பதில் கண்டதுண்டு. நகைச்சுவை யார் மனமும் புண்படாமல் பதிவுகளில் எழுதுவதில் நான் காண்பதுண்டு. அருமையான இந்தப்பிள்ளையின் பதிவுகள் சில பார்ப்போமா?

இலையை எந்தப்பக்கம் மடிக்கலாம்? 


இன்றைய நாள் எல்லோருக்கும் வெற்றிகளை குவிக்கும் சக்தியை கொடுக்க என் அன்புவாழ்த்துகள்.









58 comments:

  1. நம்மைப் பற்றி தெரியாதவர்களிடம் நம்மைப் பற்றிய சுய புராணம் சொல்லிட அவசியமில்லை என்று எப்போதே படித்த நினைவிருக்கின்றது அக்கா.

    நம்மை நன்கு புரிந்திருப்பவருக்கு நம்மை பற்றி நாமே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று கூட சுருங்கக் கூறலாம்.

    நம் பார்வையிலே தான் எல்லாமே பொதிந்திருக்கின்றது என்ற கருத்தினை முதலாய் வைத்து அறிமுகப்படுத்தப்பட (தங்கள் பார்வையில்) வலைப்பூக்கள் அனைத்துமே எனக்கு புதிய படிப்பினைகளைத் தரவல்லது.

    சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களது வலைப்பூவிலே சில முறை வண்டாய் தேனுறிஞ்சியிருக்கின்றேன்.

    மற்றவற்றைத் தேடியும் பறப்பேன்.

    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. மதனப் பெண், ஆசியா உமர். வண்டின் ரீங்காரம் எனக்கு புதியவர்கள். மற்ற என் நண்பர்கள் அனைவரையும் இங்கு காண்பதில் மிகமிக மகிழ்ச்சி மஞ்சு. அனைவரைப பற்றியும் நீங்கள் தந்துள்ள அறிமுக வரிகள் அபாரம். புதியவர்களை அவசியம் பார்க்கிறேன். உங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மகிழ்ச்சி நன்றி

    ஒரே பதிவில் நண்பர் வெங்கட் மற்றும் அவர் மனைவி கோவைடு தில்லி இருவரும் அறிமுகம் ஆனது ஆச்சரியமா இருக்கு !

    ReplyDelete
  4. ஆஹா, இன்று ஐந்தாம் நாள். மிகச் சிறப்பான 13 பேர்களை அடையாளம் காட்டி அசத்தி விட்டீர்கள்,

    வெரி குட், ம ஞ் சு ! ;)))))

    13 பேர்களில் 11 பேர்களுடன் நல்ல பழக்கமும் அறிமுகமும் உண்டு.

    அனைவருக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  5. //மற்றவர் நம்மை நம்ப வேண்டும் என்பதற்காக போராட அவசியமில்லை.

    நம் நல்ல எண்ணங்கள் அவர் மனதுக்கு தெரியவில்லை என்ற கவலையும் வேண்டாம்.

    நம்மை புரிந்தோருக்கு நம்மை புரியவைக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்மை புரியாதோருக்கு நம்மை புரியவைக்க வேண்டிய அவசியம் சுத்தமா இல்லவே இல்லை….

    நல்லதை தொடர்ந்து நீங்கப்பாட்டுக்கு செய்துக்கிட்டே போங்க. காலம் அவர்களுக்கு உங்கள் நற்செயல்களை உணர்த்தி கண்டிப்பா நம்பிக்கை அவர்கள் மனதில் ஏற்பட்டு தன் நம்பிக்கையின்மைக்கு வருந்தும் நிலை ஏற்படும்…

    அதனால் எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்….//


    OK மஞ்சு .... ததாஸ்து!

    அதே அதே சபாபதே !!!! ;)))))

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  6. //எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்….//

    யத் பாவம் தத் பவதி என்பது உபனிஷத் கருத்து. நாம் எதை நினைத்துக்கொண்டே இருக்கிறோமோ அதுவே ஆகி விடுகிறோம்.

    ஆகவே,

    எள்ளளவே ஆயினும் நல்லவை எண்ணுக ..
    புள்ளியிலே துவங்கிடுனும் ஒரு நாள்
    புவியை நீ ஆளப்போவாய்.

    சுப்பு ரத்தினம்
    http://movieraghas.blogspot.com
    http://vazhvuneri.blogspot.com
    www.menakasury.tumblr.com

    ReplyDelete
  7. தெரிந்த பதிவர்களும், தெரியாத பதிவர்களும் கலந்து....! நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  8. ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு வேண்டிய
    நற்குணங்களை முன்னுரையாக சொல்லிச் செல்வதிலும்
    அருமையான பதிவர்களை அழகாக அறிமுகம் செய்வதிலாகட்டும்
    தங்கள் உழைப்பும்,திறனும் எத்தனை அசாத்தியமானது என்பதை
    விளங்கிக் கொள்ள முடிகிறது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
    தங்கள் சேவைக்கு சகோதரி .

    ReplyDelete
  10. நம்பிக்கை குறித்த கருத்துக்கள் மிக அருமை அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வரிசையாக படித்துக்கொண்டே வந்தேன் :))
    அதில் தங்க மீனும் ..நன்றிம்மா மஞ்சு ..
    நான்தான் உங்களுக்கு அக்கா நீங்க தங்கை :)

    ReplyDelete
  11. மிக அருமையாக எல்லோரையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மதனப் பெண், ஆசியா உமர். வண்டின் ரீங்காரம் எனக்கு புதியவர்கள். மற்ற என் நண்பர்கள் அனைவரையும் இங்கு காண்பதில் மிகமிக மகிழ்ச்சி. அனைவரைப பற்றியும் நீங்கள் தந்துள்ள அறிமுக வரிகள் சிறப்பு. புதியவர்களை அவசியம் பார்க்கிறேன். உங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து சிறப்பாய் பணியாற்ற எனது வாழ்த்துகள்..மகிழ்ச்சி..நன்றி..வணக்கம்..மீண்டும் நாளை காலை வருகிறேன்..

    ReplyDelete
  13. அனிபின் இனிய சகோதரி! என்னையும் அறிமுகம் செய்ததோடு, சில பதிவுகளையும் எடுத்துக் காட்டியுள்ளீர் மிக்க நன்றி!

    ReplyDelete
  14. மஞ்சுபாஷிணி, உங்கள் அன்பில் நான் நெகிழ்ந்துபோனேன். உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவராய் இருப்பதில் பெருமை கொள்கிறேன். இன்றைய அறிமுகப் பதிவர்களில் பலரை அறிந்திருந்தாலும் அவர்களுடைய வலைப்பக்கம் அவ்வளவாகப் போனதில்லை. இனி செல்வேன். தங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதோடு, அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  15. பதிவின் முன்னுரை மிகவும் அருமையா இருக்கு. அதற்கு சிறப்பு பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.

    ReplyDelete
  16. அறிமுகத்துக்கு முன் நீங்கள் எழுதும் 'சிந்தனைகள்' நன்றாக உள்ளன.

    தனபாலனுடைய இன்னொரு முக்கியமான featureஐச் சொல்லாம விட்டீங்களே? என்னமா மீசை வளர்த்திருக்கிறார்! இதைவிட நேர்த்தியான மீசையை நான் பார்த்ததே இல்லை. அவரை நேரில் சந்திக்கும் பொழுது அசல் தானா என்று மென்மையாக இழுத்துப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றவில்லை? பதிவுலகில் இப்படி யாராவது மீசை வைத்திருக்கிறார்களா?

    'தெரியாதவர்கள் யாராவது இருந்தால்' என்று மோகன்குமாரை அறிமுகம் செய்கிறீர்களே? நியாயமா?

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. அறிமுகப்படுத்தும் விதம் வெகு சுவாரசியம் மஞ்சு ரொம்ப நல்லா இருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. அன்புக்கினிய சகோதரி மஞ்சுபாஷினி!
    நம்பிக்கை பற்றி மிக அருமையாகக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி!
    இன்று தாங்கள் அறிமுகப்படுத்தியதில் ஓரிருவர் வலைப்பக்கம் போய்வந்திருக்கிறேன். எங்கள் தங்கமீன் அஞ்சுவும் இங்கு உங்கள் மனங்கவர் பதிவரில் ஒருவராக உங்களால் அறிமுகப்படுத்தைபட்டமையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. அஞ்சுவுக்கும் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  19. அறிமுகப்படுத்தியதற்கு முதலில் மிக்க நன்றி சகோதரி...

    பின்னூட்டப்புயல் - ஏதோ இதுவும் ஒரு வாய்ப்பு.. - இதுவும் கடந்து போகும்... பார்க்கலாம்...

    ஒரு வண்டின் ரீங்காரம் தளம் மட்டும் புதிது...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
  20. அன்பின் மஞ்சுபாஷிணி,

    ஒரே நாளில் இரண்டு பேரையும் அறிமுகம் செய்து மகிழ்ச்சியூட்டிவிட்டீர்கள்.... மிக்க நன்றி. சற்றே இடைவெளிக்குப்பிறகு இன்றே வலைப்பக்கம் வர முடிந்தது. மற்ற அறிமுகங்களையும் படித்துவிடுகிறேன்... தாமதத்திற்கு வருந்துகிறேன்.....

    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. இன்றே எங்கள் இருவரையும் அறிமுகம் செய்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. நன்றிகள்.

    அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகள். அறிமுகப்படுத்தும் விதம் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  22. எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்//

    நல்ல எண்ணங்கள் நல்ல அலையை பரவ செய்யும்.
    எங்கும் எப்போதும் நல்லதே நடக்கும்.
    நல்ல கருத்துக்களை நாளும் சொல்லி பதிவர்களை அறிமுகபடுத்துகிறீர்கள்.
    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்//

    நல்ல எண்ணங்கள் நல்ல அலையை பரவ செய்யும்.
    எங்கும் எப்போதும் நல்லதே நடக்கும்.
    நல்ல கருத்துக்களை நாளும் சொல்லி பதிவர்களை அறிமுகபடுத்துகிறீர்கள்.
    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  25. மதனப் பெண், ஆசியா உமர். வண்டின் ரீங்காரம் எனக்கு புதியவர்கள். மற்ற அனைவரும் எனக்கு தெரிந்தவர்கள் அல்லது என்னையும் அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
    அக்கா முக்கியமா உங்க மெசேஜ் மனசுல ஆணித்தரமா பதிந்தது.

    ReplyDelete
  26. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோதரி..!

    ReplyDelete
  27. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறீர்கள். பாராட்டுக்கள்!

    திண்டுக்கல் தனபாலனுக்கு அருமையான விருது!

    பாராட்டுக்கள் தனபாலன்!

    ReplyDelete
  28. //சிவஹரி said...
    நம்மைப் பற்றி தெரியாதவர்களிடம் நம்மைப் பற்றிய சுய புராணம் சொல்லிட அவசியமில்லை என்று எப்போதே படித்த நினைவிருக்கின்றது அக்கா.

    நம்மை நன்கு புரிந்திருப்பவருக்கு நம்மை பற்றி நாமே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று கூட சுருங்கக் கூறலாம்.

    நம் பார்வையிலே தான் எல்லாமே பொதிந்திருக்கின்றது என்ற கருத்தினை முதலாய் வைத்து அறிமுகப்படுத்தப்பட (தங்கள் பார்வையில்) வலைப்பூக்கள் அனைத்துமே எனக்கு புதிய படிப்பினைகளைத் தரவல்லது.

    சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களது வலைப்பூவிலே சில முறை வண்டாய் தேனுறிஞ்சியிருக்கின்றேன்.

    மற்றவற்றைத் தேடியும் பறப்பேன்.

    பகிர்ந்தமைக்கு நன்றி//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி.

    ReplyDelete
  29. //பால கணேஷ் said...
    மதனப் பெண், ஆசியா உமர். வண்டின் ரீங்காரம் எனக்கு புதியவர்கள். மற்ற என் நண்பர்கள் அனைவரையும் இங்கு காண்பதில் மிகமிக மகிழ்ச்சி மஞ்சு. அனைவரைப பற்றியும் நீங்கள் தந்துள்ள அறிமுக வரிகள் அபாரம். புதியவர்களை அவசியம் பார்க்கிறேன். உங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா....

    ReplyDelete
  30. நேற்று மாதிரி காலையில் பார்த்தேன் புதுப் பதிவு இல்லை. மாலை 8மணிக்குத்தான் வந்தேன்(இரவு).30வது கருத்தாக இடுகிறேன் உங்கள் அறிமுக முன்னுரை மிக மிக நன்று. பலர் தெரிந்த பதிவர்கள் தான். அனைவருக்கும் உங்களிற்கும் வாழ்த்து மஞ்சும்மா. இப்போது 22.57 களைப்பாக உள்ளது. அதிகம் எழுதவில்லை. நாளை சந்திப்பேன்.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  31. நேற்று மாதிரி காலையில் பார்த்தேன் புதுப் பதிவு இல்லை. மாலை 8மணிக்குத்தான் வந்தேன்(இரவு).30வது கருத்தாக இடுகிறேன் உங்கள் அறிமுக முன்னுரை மிக மிக நன்று. பலர் தெரிந்த பதிவர்கள் தான். அனைவருக்கும் உங்களிற்கும் வாழ்த்து மஞ்சும்மா. இப்போது 22.57 களைப்பாக உள்ளது. அதிகம் எழுதவில்லை. நாளை சந்திப்பேன்.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  32. அற்புதமானஅருமையான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  33. ஒரு சிலரைத் தவிர அனைவருமே நான் அறிந்தவர்கள்தான். அருமையான அறிமுகங்கள். வலைச்சரத்தில் அருமையாக தொடுத்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  34. நம்பிக்கை தானே வாழ்வின் நிரந்தர அடையாளம். அதை அடிப்படையாக வைத்து ஒவ்வொருவராக அறிமுகம் செய்து இருக்கும் விதம் அழகு.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. உங்களை போல உள்ள நல்லோர் மனதில் இடம் பிடித்தது மட்டமல்லாமல் உங்களின் கரங்களால் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த படுகிறோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களின் பொன்னான மனசுக்கு எனது இதயம் கலந்த நன்றிகள். வேலையின் காரணமாக உனடியாக பதில் தரமுடியவில்லை, அதறகாக மன்னிக்கவும். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  36. அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.முன்னுரை நம்பிக்கையை தந்தது.
    அட,என்னையும் உங்க லிஸ்டில் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  37. //மோகன் குமார் said...
    மகிழ்ச்சி நன்றி

    ஒரே பதிவில் நண்பர் வெங்கட் மற்றும் அவர் மனைவி கோவைடு தில்லி இருவரும் அறிமுகம் ஆனது ஆச்சரியமா இருக்கு !//

    அட இதில் ஆச்சர்யம் என்னப்பா..கணவன் மனைவி இருவரையும் ஒன்னா அறிமுகப்படுத்தனும்னு ஆசைப்பட்டேன் அதையே செய்தேன்பா..

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..

    ReplyDelete
  38. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஹா, இன்று ஐந்தாம் நாள். மிகச் சிறப்பான 13 பேர்களை அடையாளம் காட்டி அசத்தி விட்டீர்கள்,

    வெரி குட், ம ஞ் சு ! ;)))))

    13 பேர்களில் 11 பேர்களுடன் நல்ல பழக்கமும் அறிமுகமும் உண்டு.

    அனைவருக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    அன்புடன்
    VGK//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா..

    ReplyDelete
  39. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    //மற்றவர் நம்மை நம்ப வேண்டும் என்பதற்காக போராட அவசியமில்லை.

    நம் நல்ல எண்ணங்கள் அவர் மனதுக்கு தெரியவில்லை என்ற கவலையும் வேண்டாம்.

    நம்மை புரிந்தோருக்கு நம்மை புரியவைக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்மை புரியாதோருக்கு நம்மை புரியவைக்க வேண்டிய அவசியம் சுத்தமா இல்லவே இல்லை….

    நல்லதை தொடர்ந்து நீங்கப்பாட்டுக்கு செய்துக்கிட்டே போங்க. காலம் அவர்களுக்கு உங்கள் நற்செயல்களை உணர்த்தி கண்டிப்பா நம்பிக்கை அவர்கள் மனதில் ஏற்பட்டு தன் நம்பிக்கையின்மைக்கு வருந்தும் நிலை ஏற்படும்…

    அதனால் எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்….//


    OK மஞ்சு .... ததாஸ்து!

    அதே அதே சபாபதே !!!! ;)))))

    பிரியமுள்ள
    கோபு அண்ணா//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..

    ReplyDelete
  40. sury Siva said...
    //எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்….//

    யத் பாவம் தத் பவதி என்பது உபனிஷத் கருத்து. நாம் எதை நினைத்துக்கொண்டே இருக்கிறோமோ அதுவே ஆகி விடுகிறோம்.

    ஆகவே,

    எள்ளளவே ஆயினும் நல்லவை எண்ணுக ..
    புள்ளியிலே துவங்கிடுனும் ஒரு நாள்
    புவியை நீ ஆளப்போவாய்.

    சுப்பு ரத்தினம்
    http://movieraghas.blogspot.com
    http://vazhvuneri.blogspot.com
    www.menakasury.tumblr.com//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா...

    ReplyDelete
  41. //ஸ்ரீராம். said...
    தெரிந்த பதிவர்களும், தெரியாத பதிவர்களும் கலந்து....! நல்ல அறிமுகங்கள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸ்ரீராம்.

    ReplyDelete
  42. //Ramani said...
    ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு வேண்டிய
    நற்குணங்களை முன்னுரையாக சொல்லிச் செல்வதிலும்
    அருமையான பதிவர்களை அழகாக அறிமுகம் செய்வதிலாகட்டும்
    தங்கள் உழைப்பும்,திறனும் எத்தனை அசாத்தியமானது என்பதை
    விளங்கிக் கொள்ள முடிகிறது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்//

    என் மனதில் நினைத்து நான் எப்படி செயல்படுகிறேன் என்பதை கரெக்டா சொல்லிட்டீங்க ரமணிசார்...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்.

    ReplyDelete
  43. //அம்பாளடியாள் said...
    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
    தங்கள் சேவைக்கு சகோதரி .//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தங்கையே..

    ReplyDelete
  44. //angelin said...
    நம்பிக்கை குறித்த கருத்துக்கள் மிக அருமை அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வரிசையாக படித்துக்கொண்டே வந்தேன் :))
    அதில் தங்க மீனும் ..நன்றிம்மா மஞ்சு ..
    நான்தான் உங்களுக்கு அக்கா நீங்க தங்கை :)//

    சாரி நிர்மலா அக்கா...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் நிர்மலா அக்கா :) :)

    ReplyDelete
  45. //Jaleela Kamal said...
    மிக அருமையாக எல்லோரையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜலீலா கமால்

    ReplyDelete
  46. //மதுமதி said...
    மதனப் பெண், ஆசியா உமர். வண்டின் ரீங்காரம் எனக்கு புதியவர்கள். மற்ற என் நண்பர்கள் அனைவரையும் இங்கு காண்பதில் மிகமிக மகிழ்ச்சி. அனைவரைப பற்றியும் நீங்கள் தந்துள்ள அறிமுக வரிகள் சிறப்பு. புதியவர்களை அவசியம் பார்க்கிறேன். உங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து சிறப்பாய் பணியாற்ற எனது வாழ்த்துகள்..மகிழ்ச்சி..நன்றி..வணக்கம்..மீண்டும் நாளை காலை வருகிறேன்..//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மதுமதி.

    ReplyDelete
  47. //புலவர் சா இராமாநுசம் said...
    அனிபின் இனிய சகோதரி! என்னையும் அறிமுகம் செய்ததோடு, சில பதிவுகளையும் எடுத்துக் காட்டியுள்ளீர் மிக்க நன்றி!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா...

    ReplyDelete
  48. //arul said...
    nice introductions//

    thanks a lot arul.

    ReplyDelete
  49. //கீதமஞ்சரி said...
    மஞ்சுபாஷிணி, உங்கள் அன்பில் நான் நெகிழ்ந்துபோனேன். உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவராய் இருப்பதில் பெருமை கொள்கிறேன். இன்றைய அறிமுகப் பதிவர்களில் பலரை அறிந்திருந்தாலும் அவர்களுடைய வலைப்பக்கம் அவ்வளவாகப் போனதில்லை. இனி செல்வேன். தங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதோடு, அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கீதம்

    ReplyDelete
  50. //கீதமஞ்சரி said...
    பதிவின் முன்னுரை மிகவும் அருமையா இருக்கு. அதற்கு சிறப்பு பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கீதம்.

    ReplyDelete
  51. //அப்பாதுரை said...
    அறிமுகத்துக்கு முன் நீங்கள் எழுதும் 'சிந்தனைகள்' நன்றாக உள்ளன.

    தனபாலனுடைய இன்னொரு முக்கியமான featureஐச் சொல்லாம விட்டீங்களே? என்னமா மீசை வளர்த்திருக்கிறார்! இதைவிட நேர்த்தியான மீசையை நான் பார்த்ததே இல்லை. அவரை நேரில் சந்திக்கும் பொழுது அசல் தானா என்று மென்மையாக இழுத்துப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றவில்லை? பதிவுலகில் இப்படி யாராவது மீசை வைத்திருக்கிறார்களா?

    'தெரியாதவர்கள் யாராவது இருந்தால்' என்று மோகன்குமாரை அறிமுகம் செய்கிறீர்களே? நியாயமா?

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    அப்பாதுரை இப்பவே இவ்ளோ கலாட்டா செய்றீங்களே.. குழந்தைல ஸ்கூல்ல , வீட்ல எப்படிப்பா அமைதியா இருந்தீங்க? :)

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அப்பாதுரை.

    ReplyDelete
  52. //Lakshmi said...
    அறிமுகப்படுத்தும் விதம் வெகு சுவாரசியம் மஞ்சு ரொம்ப நல்லா இருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் லஷ்மிம்மா.

    ReplyDelete
  53. //இளமதி said...
    அன்புக்கினிய சகோதரி மஞ்சுபாஷினி!
    நம்பிக்கை பற்றி மிக அருமையாகக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி!
    இன்று தாங்கள் அறிமுகப்படுத்தியதில் ஓரிருவர் வலைப்பக்கம் போய்வந்திருக்கிறேன். எங்கள் தங்கமீன் அஞ்சுவும் இங்கு உங்கள் மனங்கவர் பதிவரில் ஒருவராக உங்களால் அறிமுகப்படுத்தைபட்டமையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. அஞ்சுவுக்கும் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ...

    ReplyDelete
  54. //திண்டுக்கல் தனபாலன் said...
    அறிமுகப்படுத்தியதற்கு முதலில் மிக்க நன்றி சகோதரி...

    பின்னூட்டப்புயல் - ஏதோ இதுவும் ஒரு வாய்ப்பு.. - இதுவும் கடந்து போகும்... பார்க்கலாம்...

    ஒரு வண்டின் ரீங்காரம் தளம் மட்டும் புதிது...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...//

    உண்மையை தாம்பா சொன்னேன்...

    அப்பாதுரைக்கிட்ட இருந்து ஆப் கா மூச் கோ பச்சாக்கே ரக்கியே.... :)

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..

    ReplyDelete
  55. //வெங்கட் நாகராஜ் said...
    அன்பின் மஞ்சுபாஷிணி,

    ஒரே நாளில் இரண்டு பேரையும் அறிமுகம் செய்து மகிழ்ச்சியூட்டிவிட்டீர்கள்.... மிக்க நன்றி. சற்றே இடைவெளிக்குப்பிறகு இன்றே வலைப்பக்கம் வர முடிந்தது. மற்ற அறிமுகங்களையும் படித்துவிடுகிறேன்... தாமதத்திற்கு வருந்துகிறேன்.....

    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் வெங்கட்.

    ReplyDelete
  56. //கோவை2தில்லி said...
    இன்றே எங்கள் இருவரையும் அறிமுகம் செய்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. நன்றிகள்.

    அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகள். அறிமுகப்படுத்தும் விதம் நன்றாக உள்ளது.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆதிவெங்கட்.

    ReplyDelete
  57. //கோமதி அரசு said...
    எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்//

    நல்ல எண்ணங்கள் நல்ல அலையை பரவ செய்யும்.
    எங்கும் எப்போதும் நல்லதே நடக்கும்.
    நல்ல கருத்துக்களை நாளும் சொல்லி பதிவர்களை அறிமுகபடுத்துகிறீர்கள்.
    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.


    கோமதி அரசு said...
    பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்,//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மோமதிம்மா.

    ReplyDelete