விதையிட்ட விரல்களால்
விலக்கி வைக்கப்பட்டு
விதியினில் வாழ்க்கையை தேடியும்,
விதியினில் வாழ்க்கையை
தொலைத்துவிட்டு
மூளைக்குச் செல்வதற்குள்
பறிக்கப்பட்ட
விரல்களுக்கெட்டிய கல்வியோடும்,
இளந்தளிர்கள் இங்கு
விதியோடும் வாழ்க்கையோடும்
முண்டியடித்து
போராடிக்கொண்டிருக்கிறார்கள்
வாழ்க்கை அறியாது!
வாய்ப்புகள் அறியாது!
"வாழ்க்கை" என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடிக் கொடுக்காவிடினும்,
அகராதியை அடையவாவது
வழிகாட்டுவோமே
அவர்களது தேடல்களுக்கு!
மனக்கூட்டுக்குள் புதைந்துகிடக்கின்ற
திறமைகளைஅறிந்து
உயர உதவாவிடினும்,
திரட்டி தூண்டிட
பக்கம் இருப்போமே!
வாழ்க்கை புதரிலிருந்து
அவர்களை மீட்காவிடினும்
அச்சம் தவிர்த்து மீளத்தவிக்கையில்
துணை நிற்போமே!
வாய்ப்புகளை கொடுத்து
வாழ்க்கையை காட்டாவிடினும்
வாய்ப்புகளை அறிய
விரல் கொண்டு
திசையையாவது காட்டுவோமே!
தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
சிறு கூட்டுக்குள்
மடிந்து போகும் முன்
தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே!
விலக்கி வைக்கப்பட்டு
விதியினில் வாழ்க்கையை தேடியும்,
விதியினில் வாழ்க்கையை
தொலைத்துவிட்டு
மூளைக்குச் செல்வதற்குள்
பறிக்கப்பட்ட
விரல்களுக்கெட்டிய கல்வியோடும்,
இளந்தளிர்கள் இங்கு
விதியோடும் வாழ்க்கையோடும்
முண்டியடித்து
போராடிக்கொண்டிருக்கிறார்கள்
வாழ்க்கை அறியாது!
வாய்ப்புகள் அறியாது!
"வாழ்க்கை" என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடிக் கொடுக்காவிடினும்,
அகராதியை அடையவாவது
வழிகாட்டுவோமே
அவர்களது தேடல்களுக்கு!
மனக்கூட்டுக்குள் புதைந்துகிடக்கின்ற
திறமைகளைஅறிந்து
உயர உதவாவிடினும்,
திரட்டி தூண்டிட
பக்கம் இருப்போமே!
வாழ்க்கை புதரிலிருந்து
அவர்களை மீட்காவிடினும்
அச்சம் தவிர்த்து மீளத்தவிக்கையில்
துணை நிற்போமே!
வாய்ப்புகளை கொடுத்து
வாழ்க்கையை காட்டாவிடினும்
வாய்ப்புகளை அறிய
விரல் கொண்டு
திசையையாவது காட்டுவோமே!
தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
சிறு கூட்டுக்குள்
மடிந்து போகும் முன்
தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே!
~~~~****~~~~
வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--1
நம்மோடு பழகுபவர்கள் தெரிந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும், உறவுகளாகட்டும் அனைவரும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை பகிர்கையில் யாரிடம் பகிர்கிறோம், எதை பகிர்கிறோம், எப்போழுது பகிர்கிறோம் என்று எப்பொழுதும் கவனிப்போமே!
நம்மோடு பழகுபவர்கள் தெரிந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும், உறவுகளாகட்டும் அனைவரும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை பகிர்கையில் யாரிடம் பகிர்கிறோம், எதை பகிர்கிறோம், எப்போழுது பகிர்கிறோம் என்று எப்பொழுதும் கவனிப்போமே!
~~~~****~~~~
இன்றைய அறிமுகங்கள்!
1. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் "சரியாச் சொன்னீங்க" என்று "அவை அறிதல்" என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களையும் உரையாடல்களாக சொல்லி இருப்பது அருமை, சிறப்பான செயலுக்கு என்ன தேவை? என்பது பற்றி அவரது வாழ்க்கை அனுபவங்களில் கற்றவையை கொண்டு அலசி சொல்லி இருப்பது அவசியம் படிக்க வேண்டியவை என்றே தோன்ற வைத்தது!
2. seshadri e.s அவர்களுடைய கவித் துளிகள் அழகு "தனிமை"-யின் இனிமை பற்றியும் ,"நம்பிக்கை கீற்று"-ல் உழவின் பெருமையை சொல்வதும் நீங்களே படித்துப் பாருங்களேன்!
3. அருணா செல்வம் அவர்களுடைய கவிதை ஒன்றில் குழந்தையின் சிரிப்பை அழகாய் சதங்கை சத்தத்தோடு ஒப்பிட்டு சொல்லி இருப்பதும், "விளைத்தது விளையும்" என்ற நிமிட கதையின் கருவும், எதிர்ப்பார்க்காத திருப்பத்தோடான முடிவும் அருமை.
4. சசிகலா அவர்கள் "எங்கெங்கு காணினும்" என்று வியாபாரமயமாக்கப்பட்ட கல்வியையும் அதன் தரத்தை பற்றியும், தமிழ் மொழியின் இன்றைய நிலையை பற்றியும் அழகிய நடையில் கவிதையாக சொல்லி இருக்கிறார்கள். "இருவரியில் ஒரு தேடல்" என்று வாழ்வின் அர்த்தங்களை இரு வரியில் அடக்கி சொல்லி இருப்பது அழகு!
5. சந்திரகெளரி அவர்களது ஒரு குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு யார் காரணமாக இருக்கிறார்கள், அதை தீர்ப்பதிலும் வராமல் தடுப்பதிலும் ஒவ்வொருவரின் பங்கும் என்ன? யார் குற்றவாளி? என்று ஒரு சூழ்நிலையை சொல்லி அலசி இருகிறார், ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியரின் பங்கு என்ன என்பதையும் மிக எளிய நடையில் சொல்லி இருக்கிறார்.
~~~~****~~~~
தவறுகள், பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே. மீண்டும் நாளை சந்திப்போம்!
இன்றைய அறிமுகங்கள் யாவும் மிக அருமை.
ReplyDeleteஅனைவருக்கும் நானே அவர்களின் சமீபத்திய பதிவுகளுக்குப்போய் தகவல் அளித்து விட்டேன்.
அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
பகிர்ந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....
>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>
ReplyDeleteகவிதையின் அனைத்து வரிகளும் வெகு அருமை.
//தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
சிறு கூட்டுக்குள்
மடிந்து போகும் முன்
தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே!//
சூப்பர்! ;)))))
>>>>>>>>>
//நம்மோடு பழகுபவர்கள் தெரிந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும்,
ReplyDeleteஉறவுகளாகட்டும்
அனைவரும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.
ஒரு விஷயத்தை பகிர்கையில்
யாரிடம் பகிர்கிறோம்,
எதை பகிர்கிறோம்,
எப்போழுது பகிர்கிறோம்
என்று எப்பொழுதும் கவனிப்போமே!//
ஆம் உண்மை தான். இனி இதில் மிகவும் கவனமாகவே இருப்போம்.
நன்றி.
அன்பின் யுவராணி,
முதல் நாள் அறிமுகமே சிம்பிளாகவும் சிறப்பாகவும் உள்ளது.
கலக்கிட்டீங்க ! தொடருங்கள் !!
அன்பான வாழ்த்துகள்.
அன்புடன்
VGK
இன்று நீங்கள் அளித்துள்ள கவிதை வெகு அழகு. யுவராணியின் சொல்லாடல் வியக்க வைக்கிறது. அறிமுகங்களும் அருமை. சந்திரகௌரி தவிர மற்ற அனைவரும் எனக்குப் பழக்கம்தான். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமின் வெட்டு காரணமாக உடனே வர முடியவில்லை...
எனது தள அறிமுகத்திற்கு நன்றிகள் பல...
வாழ்க்கை சுவாரஸ்ய தகவல் அருமை...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
T.M. 1
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். இன்றைய அறிமுகங்கள் அருமை.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுகள்.
அனைவரும் பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள்.
ReplyDeleteகவிதையும் கருத்துடைத்து.
அனைவருக்கும் யுவராணிக்கும்
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
ReplyDeleteசிறு கூட்டுக்குள்
மடிந்து போகும் முன்
தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே!
//நம்மோடு பழகுபவர்கள் தெரிந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும்,
உறவுகளாகட்டும்
அனைவரும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.
ஒரு விஷயத்தை பகிர்கையில்
யாரிடம் பகிர்கிறோம்,
எதை பகிர்கிறோம்,
எப்போழுது பகிர்கிறோம்
என்று எப்பொழுதும் கவனிப்போமே!//
வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் தங்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வணக்கம் யுவராணி அவர்களே.
ReplyDeleteகவிதை மிக் மிக அருமையாக உள்ளது.
வாய்ப்புகளை கொடுத்து
வாழ்க்கையை காட்டாவிடினும்
வாய்ப்புகளை அறிய
விரல் கொண்டு
திசையையாவது காட்டுவோமே!...
சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.
தவிர என்னையும் உங்கள் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.
மற்ற அனைத்து அறிமுகங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.
நன்றி.
கவிதை அருமை. நல்ல அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அருமை.
ReplyDelete@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteமின்வெட்டு பிரச்சனைக்கு மத்தியில் தாங்கள் சிரமப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு தாங்களே தகவல் கொடுத்தமைக்கும்,தங்களது ஊக்குவிக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சார்!
@பால கணேஷ்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சார்!
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@கோவை2தில்லி
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@ kovaikkavi
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@Sasi Kala
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@ அருணா செல்வம்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@உஷா அன்பரசு
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@99likes
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
வணக்கம்
ReplyDeleteயுவராணி தமிழரசன்
இன்று 1ம் நாளில் வலைச்சரம் மிகவும் அட்டகாசமாக உள்ளது நான் அறியாத புதிய தளங்கள்,உலகின் பலபக்கமும் வாழும் வலைப்பதிவாளர்களை இனங்கண்டு அதிலும் தமிழில் உள்ள வலைப்பதிவுகளை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 1ம் நாளைப் போல இரண்டாம் நாளும் சிறப்பாக அமையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை வரிகள் அருமை.அறிமுகத்திற்கு நன்றி..
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! என்னுடைய வலைப்பூ தங்களின் அறிமுகத்தில் இடம் பெற்றது மகிழ்வளிக்கிறது! கவிதை வரிகள் அருமை! இன்றைய அறிமுகத்தில் இடம்பெற்ற அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் பாராட்டுகள்! நன்றி!
ReplyDeleteஅருமையான பகிர்வு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteதீண்டப்படாத தீக்குச்சிகளாய்
ReplyDeleteசிறு கூட்டுக்குள்
மடிந்து போகும் முன்
தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே
எல்லா அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
ஆழமான கருத்துகொண்ட
ReplyDeleteகவிதையுடன்
அழகான அறிமுகங்கள்....
வாழ்த்துக்கள்..
@Seshadri e.s.
ReplyDeleteதங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@ 2008rupan
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@தொழிற்களம் குழு
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@kaviyazhi.blogspot.com
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@இரவின் புன்னகை
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@Lakshmi
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@ மகேந்திரன்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
சிறப்பான அறிமுகங்கள்.. வாழ்த்துகள்.
ReplyDeleteமௌனமாக வந்து வலைத்தளத்தை ரசித்து ரசித்தமை பற்றி பலரும் அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி. இன்றுதான் மெயில் பார்க்க முடிந்தது. உங்கள் பனி தொடரவாழ்த்துகள் அறிமுகமும் அழகாக இருக்கின்றது
ReplyDelete@வெங்கட் நாகராஜ்
ReplyDelete@சந்திரகௌரி
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!