அக்டோபர் 1 "தி ஹிந்து" நாளிதழின் ஓப்-எட் பக்கத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அதை பற்றி இங்கே பகிர விரும்புகிறேன். அந்த செய்தி ஒரு அமைச்சரின் கோரிக்கையும் அதை பற்றிய ஒரு அலசலும். அவரது கோரிக்கை என்னவென்றால் திருமணமான ஒவ்வொரு ஆணும் தனது மனைவியின் பெயரில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து மாதாமாதம் குறிப்பிட்ட சதவிகித தொகையை கணக்கில் செலுத்திவிடவேண்டும்.
எதை மனதில் வைத்து இப்படி ஒரு எண்ணம் அவருக்கு தோன்றியதோ தெரியவில்லை. ஆனால் இது சரியானது தானா??? இந்த அவசர உலகத்தில் பணம் விளையாடாத இடமே இல்லை. சில சமயம் சில நேரத்தில் சில இடங்களில் உறவுகளே பணத்தால் பந்தப்படுகிறதோ என்கிற நிலை வருகையில் திருமண பந்தம் ஒன்று தான் இன்னும் அன்பினில் ஒட்டிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றும். அதையும் இப்படி பணத்தால் அளந்துவிட முடியும் என்றால் இனி வாழ்வின் எத்தனை அர்த்தங்களை நாம் தொலைக்கப்போகிறோமோ??
அந்த செய்தியை படிக்கும் சில தினங்களுக்கு முன் அதே "தி ஹிந்து" நாளிதலில் மற்றொரு ஆர்டிகலையும் படித்தேன் "A must for wives-Financial Literacy". அதில் ஒரு முழுமையான குடும்பம் திடீரென குடும்பத்தலைவரை இழக்கையில் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை முன்வைத்து அலசுவதாக இருந்தது அந்த பதிவு. வலைச்சரம் இந்த பிரச்சனையின் வீரியத்தை பலரிடம் கொண்டு சேர்க்கும் என்கிற நம்பிக்கையில் இங்கு பகிர்கிறேன்.
பெண்கள் பலரும் கல்வி கற்று, பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதித்திருந்தும் இன்னும் பல திருமணமான பெண்கள் படித்திருந்தும் வேலைக்குச் செல்லாதவர்கள், படிக்காதவர்கள், வேலைக்குச்செல்ல அனுமதிக்கப்படாதவர்கள், என பலர் இருக்கிறார்கள். இன்னும் சமையலறைக்குள்ளும், கணவர் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குள்ளும் பதுங்கிக்கிடக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி ஒரு வட்டத்திற்குள் புதைந்து போகும் அவர்களது வாழ்க்கை சுதந்திரம் வீட்டையும் கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வது மட்டுமே, வெகு சிலர் மட்டுமே வீட்டின் நிதித் துறையிலும் பங்கு கொள்கிறார்கள். மற்றவர்கள்?
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கணவரை இழக்கும் நிலை ஏற்படுகையில் ஒரு கூட்டுக்குள் தொலைத்த காலத்திலிருந்து தன்னை மீட்டு நிதானித்து நிலைக்க போராடுகிறார்கள் பெண்கள். இதை நான் கடந்த பாதையில் சிதறிக்கிடந்த கூட்டுக்கிளிகள் பலரை கண்ட அனுபவத்திலேயே கூறுகிறேன். கணவர் இருந்தவரை வரவு, செலவு, கடன், சேமிப்பு என எதிலும் பங்கு கொள்வதில்லை. பின் விநாடிகளில் அனைத்தையும் இழந்துவிட்டு வருடங்களாய் மீளப்போராடி மீண்டவர்களும் உண்டு! மாண்டவர்களும் உண்டு! தனித்து தவித்திருக்கையில் கொடுத்தவனென்றும், வாங்கியவனென்றும், தெரிந்தவனென்றும், தெரியாதவனென்றும் வாயிற் கதவை தட்டுகையில் திணறிப்போகிறார்கள். இதற்கு காரணம் உரிமை கொடுக்கப்படாததா? எடுக்கப்படாததா? என எதுவாகினும் வீழும் விநாடியை தவிர்த்திட கொஞ்சம் உரிமை கொண்டு கரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்!
~~~~****~~~~
~~~~****~~~~
வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--3
வாழ்க்கையில் பல விஷயம் நாம் நினைப்பது போல் நடந்துவிடுவதில்லை, பிடிக்காதது கிடைத்துவிட்டது என்று வெறுத்து ஒதுக்குவதை விட கிடைத்ததை ரசித்துப்பார்த்தால் பிடித்துவிடும். கொடுக்கப்பட்டதை பிடிக்காது என்ற பார்வைக்கு அப்பால் வைத்து சுவாசித்துப்பார்க்கையிலேயே நுழைந்துவிடும் நமக்குள்ளும் பிடித்தவையாய்!
வாழ்க்கையில் பல விஷயம் நாம் நினைப்பது போல் நடந்துவிடுவதில்லை, பிடிக்காதது கிடைத்துவிட்டது என்று வெறுத்து ஒதுக்குவதை விட கிடைத்ததை ரசித்துப்பார்த்தால் பிடித்துவிடும். கொடுக்கப்பட்டதை பிடிக்காது என்ற பார்வைக்கு அப்பால் வைத்து சுவாசித்துப்பார்க்கையிலேயே நுழைந்துவிடும் நமக்குள்ளும் பிடித்தவையாய்!
~~~~****~~~~
இன்றைய அறிமுகங்கள்!
13 ரமணி அவர்கள்
15. Asiya Omar அவர்கள்
அருமையான சுவையான எளிமையான சமையல் ரெசிபிகளுக்காக கீழுள்ள Asiya Omar அவரது லிங்குகளை சொடுக்குங்கள்
http://asiyaomar.blogspot.in/2012/10/blog-post_31.html
http://asiyaomar.blogspot.in/2012/10/almond-rice-kheer.html
http://asiyaomar.blogspot.in/2012/04/blog-post_18.html
11. angelin அவர்கள்
"கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்" என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருகிறது! இங்க யாருக்கும் கல்யாணம் இல்லீங்க! அருமையான சமையல் குறிப்புகளோடு கிராப்ட் வர்க் குறிப்புகளும் கொடுத்து அசத்தும் angelin அவர்கள்!
12. ரிஷ்வன் அவர்கள்
தொடர்கதைகளோடும், சிறுகதைகளோடும், கவிதைகளோடும் நின்றுவிடாமல் ஈரடி குறளையும் கவிதையாக்கி எழிய நடையில் செதுக்கி தரும் ரிஷ்வன் அவர்களின் பதிவுகள் இதோ!
13 ரமணி அவர்கள்
வார்த்தைகளில் புதிர் பொதித்து வாழ்க்கையின் பல அர்த்தங்களை விளக்கி விளையாட இவருக்கு மிகப்பிடிக்கும்!
14. தி.தமிழ் இளங்கோ அவர்கள்
அவசியமான பல தகவல்களையும், அவசர உலகத்தில் அனாவசியமாய் போன அவசியங்களையும்[கவனிக்கப்படவேண்டியதையும்] மிக எதார்த்தமான வார்த்தைகளால் பதிந்து வருகிறார்!
15. Asiya Omar அவர்கள்
அருமையான சுவையான எளிமையான சமையல் ரெசிபிகளுக்காக கீழுள்ள Asiya Omar அவரது லிங்குகளை சொடுக்குங்கள்
http://asiyaomar.blogspot.in/2012/10/blog-post_31.html
http://asiyaomar.blogspot.in/2012/10/almond-rice-kheer.html
http://asiyaomar.blogspot.in/2012/04/blog-post_18.html
~~~~****~~~~
தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே! மீண்டும் நாளை சந்திப்போம்!
என்னையும் சிறந்த பதிவர்களுடன்
ReplyDeleteஒன்றாக இணைத்து அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி. தங்கள் ஆசிரியர் பணி சிறக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கிடைத்ததை ரசித்துப்பார்த்தால் பிடித்துவிடும்.
ReplyDeleteசிறப்பான தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். அறிமுக பதிவர்கள் சிறப்பு.
அருமையான கருத்துகளுடன் நல்ல தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி... tm1
ஆஹா! இன்று அடையாளம் காணப்பட்டுள்ள ஐவருமே எனக்கு மிகவும் பிடித்த பதிவர்கள் ஆயிற்றே!!
ReplyDeleteசந்தோஷம் சந்தோஷம் ..;))))))
ம்கிழ்ச்சியோ மகிழ்ச்சி ....;))))))
என் அன்புத்தங்கை நிர்மலா [ஏஞ்சலின்]
தோழர் திரு. ரிஷ்வன் அவர்கள்
மிகச் சிறந்த நண்பர் [யாதோ புகழ்] திரு. ரமணி சார்
அருமை நண்பர் எங்கள் ஊர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்க்ள்
தன் சமையல் குறிப்புகளால் ஆசியா கண்டத்திற்கே பெருமை சேர்க்கும் அன்புச்சகோதரி ஆசியா ஓமர் அவர்கள்
அத்தனை பேருக்கும் என் அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
அன்புடன்
VGK
>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
//இதை நான் கடந்த பாதையில் சிதறிக்கிடந்த கூட்டுக்கிளிகள் பலரை கண்ட அனுபவத்திலேயே கூறுகிறேன். கணவர் இருந்தவரை வரவு, செலவு, கடன், சேமிப்பு என எதிலும் பங்கு கொள்வதில்லை.//
ReplyDelete//கொஞ்சம் உரிமை கொண்டு கரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்!//
நன்றாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதே கருத்தினை [கூண்டுக்கிளி] வலியுறுத்தி நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன்.
விருப்பமும் நேர அவகாசமும் உள்ளவர்கள் தயவுசெய்து படித்துப் பார்த்துக் கருத்துக்கூறுங்கள்
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_19.html
மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3
அன்புடன்
VGK
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்க்கையை சுவாரஸ்யமாக்க ! -3
ReplyDelete==================================
//வாழ்க்கையில் பல விஷயம் நாம் நினைப்பது போல் நடந்து விடுவதில்லை.//
ஆம் 100 க்கு 100 உண்மையே! ;)
//பிடிக்காதது கிடைத்துவிட்டது என்று வெறுத்து ஒதுக்குவதை விட கிடைத்ததை ரசித்துப்பார்த்தால் பிடித்துவிடும். //
ரசித்துப்பார்த்து அனுபவித்தால் ருசிக்காததும் உண்டோ? என அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! ;)
பிடித்தது பிடிக்காதது என்பதெல்லாம் நம் மனதின் அளவுகோள் மட்டுமே.
கிடைக்காததை நினைத்து ஏங்குவதும், கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படாமல் இருப்பதும், மிகச் சாதாரண மனிதர்களின் இயல்பு தான்.
கிடைத்தது கிடைக்காதது எல்லாமே ருசிக்க ஒன்றே தான் என்ற மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டால் தெளிவு பிறக்கும்.
[சொல்வது மிகச்சுலபம். ஆனாலும் அந்தப் பக்குவம் ஏற்படுவது சற்று கடினமே]
மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டால் கிடைக்காததை நினைத்து வருந்த மாட்டோம், கிடைத்ததை நினைத்து சந்தோஷமாக அனுபவிக்காமல் இருக்க மாட்டோம்.
//கொடுக்கப்பட்டதை பிடிக்காது என்ற பார்வைக்கு அப்பால் வைத்து சுவாசித்துப்பார்க்கையிலேயே நுழைந்துவிடும் நமக்குள்ளும் பிடித்தவையாய்!//
அச்சா! பஹூத் அச்சா!!
எல்லோருமே தனக்குக் கிடைத்ததை
பிடித்ததாக மாற்றிக்கொள்வோமாக!
இன்பமாக வாழ்வோமாக!!
அன்புடன்
VGK
தத்துவம், பெண்களை நிலைமைகள் அலசப்பட்டுள்ளது.
ReplyDeleteநன்று. பாதி தெரிந்த சில தெரியாத பதிவுகளிற்கும் இனிய நல்வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
♣♣♣♣♣ வணக்கம ♣♣♣♣♣
ReplyDeleteயுவராணி தமிழரசன்.
இன்றைய அறிமுகங்கள் அருமை..
அறிமுகத்திற்கு நன்றி..
அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
♣♣♣♣♣நன்றி♣♣♣♣♣
♣♣♣♣♣அன்புடன்♣♣♣♣♣
www.99likes.blogspot.com
நம்முடைய மானிட்டரில் உயிருள்ள Ladybug பூச்சி உலாவினால் எப்படி இருக்கும்.
go to link: http://www.99likes.blogspot.in/2012/11/ladybug.html
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteயுவராணி தமிழரசன்
இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகிய அனைத்து பதிவாளர்களுக்கும் அதை செம்மையாக தொகுத்து வழங்கிய (சகோதரி)யுவாரணிக்கும் எனது நன்றிகள்
அருமையான தளங்கள் தொடருகிறேன்,,,,,,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி யுவராணி ..
ReplyDeleteஎன்னுடன் ஆறுமுகமான அனைவர்க்கும் வாழ்த்துக்கள்
அருமையான கருத்துக்களை பகிர்ந்திருக்கீங்க .குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் தனி பாங்க அக்கவுன்ட் இருப்பது நல்லதுதான் ..ஆனா அதை
அவர்களின் சரிபாதிகள் அதாவது குடும்பதளைவர்களே முன்வந்து செய்ய வேண்டும் ..அரசு சட்டம் என்றெல்லாம் டிமான்ட் செய்தா அதில் மன வருத்தமே மிஞ்சும் .//"A must for wives-Financial Literacy".//
இதை பற்றி தங்கள் point of view அருமை .
நல்ல நல்ல பதிவர்களை அறிமுகம் செய்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDelete
ReplyDelete// கொஞ்சம் உரிமை கொண்டு கரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்!//
எங்கள் வீட்டைப்பொறுத்தவரை
நிதித்துறை மட்டுமல்ல, நீதித்துறையிலும் வூட்டு அம்மா தான் முழுப்பொறுப்பு.
அவங்க போட ற சட்டப்படி யார் யாரு எங்க நெருங்கிய சொந்தக்காரங்க ? வீட்டுக்கு விருந்தாளி யார் யார் வரணும், அவங்க வீட்டு சொந்தமா எங்க வீட்டு சொந்தமா ? யார் யார் வந்தா என்ன செய்யணும் ?
, எங்க வூட்டு சொந்தக்காரங்க வூட்டுக்கு போனா என்னென்ன வாங்கிக்கிட்டு போகணும் ? அவங்க வீட்டுக்கு போகணும்னா
என்னென்ன வாங்கிக்கிட்டு போகணும் ?
தீபாவளி, பொங்கல், புதுவருசம் இதுக்கெல்லாம் யார் யாருக்கு என்ன விலைலே எத்தனை எப்படி என்னென்ன கடைலே
எடுக்கணும் ?
ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், க்ரைன்டர், ஓவன் இதெல்லாம் என்னென்ன மாடல் எது வாங்கணும் ?
இதுக்கெல்லாம் எனக்கு டயமும் கிடையாது. வூட்டு அம்மா 1968 லேந்து என்னோட பொறுப்பு அப்படின்னு சொல்லிட்டாக.
நானும் அப்பாடி அப்படின்னு ஒதுங்கிக்கிட்டேன்.
வலைச்சர ஆசிரியர்: ..." அப்ப நீங்க என்னதான் செய்யறீங்க வூட்டிலே ? பொறுப்பே கிடையாதா ? "
நான்: என்ன அப்படி சொல்லிட்டீக.. அன்னிலேந்து இன்னி வரைக்கும் நான் ஃபாரின் அஃபேர்ஸ் .
வலைச்சர ஆசிரியர்: புரியல்லையே... கரெக்டா சொல்லுங்க.. எதுலே உங்க முடிவு ?
நான்: அப்படி கரெக்டா பாயின்டை புடிங்க...
கூடங்குளத்துலே அணு ஆலை வேணுமா கூடாதா ?
பா.மா.க வோட கூட்டு சேரலாமா வேண்டாமா ?
லேடஸ்டா, அன்னிய நாட்டு முதலீடு கொள்கையிலே மன்மோஹன் சிங்கை ஆதரிக்கலாமா இல்லையா ?
இதெல்லாம் நான் தான் முடிவு செய்வேன். எங்க வூட்டு அம்மா நான் என்ன சொன்னாலும் முடிவு செஞ்சாலும்
அப்படியே ஒத்துக்கும். கணவனே கண்கண்ட தெய்வமுன்னு சும்மாவா சொல்லியிருக்காக ???...
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
இன்றைய வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய சகோதரிக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம யுவராணி தமிழரசன்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அருமை..
என்னைஅறிமுகத்திற்கு நன்றி.. http://www.rishvan.com
சுவாசித்துப்பார்க்கையிலேயே நுழைந்துவிடும் நமக்குள்ளும் பிடித்தவையாய்!பின்னூட்டங்களும் அருமை .....
ReplyDelete@Ramani
ReplyDeleteதங்களது வரிகளுக்கு நான் என்றுமே ரசிகை! தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா!
@Sasi kala
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா!
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஇன்று எனது பதிவினை சிரமம் பார்க்காமல் தமிழ்மணத்தில் இணைத்துக்கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா!
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்களது வருகைக்கும் ஊகுவிக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா! தாங்கள் குறிப்பிட்ட அந்த சிறுகதையை படித்துப்பார்க்கிறேன் ஐயா!
@kovaikkavi
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா!
@99likes
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@2008rupan
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா!!
@ angelin
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா!
@s.suresh
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா!!
@ Lakshmi
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க!
@sury siva
ReplyDeleteவணக்கம் ஐயா! தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா!
தங்களது சூழலையும் பகிர்ந்து இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்குவிப்பாக காட்டியமைக்கும் எனது நன்றிகள் ஐயா!
@Jaleela Kamal
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க!
@தி.தமிழ் இளங்கோ
ReplyDeleteங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா!
@Suresh Subramanian
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
Anaithu arimukap pathivarkaLukkum vaazhthukkal.mikka nanri.makizhchi.tamil typing problem.:)!
ReplyDelete@Asiya Omar
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!