Friday, November 2, 2012

எங்கள் சரவெடி 5


                 
43) மஞ்சுபாஷிணியின் கதம்ப உணர்வுகள் இவரின் பதிவுகள் போலவே இவரது பின்னூட்டங்களும் சுவையானவை! இவர் நம் பதிவுக்கு வந்து ரசிக்க மாட்டாரா என்று நினைக்க வைக்கும் இவரது பின்னூட்டங்கள். இவரது பக்தமீரா சமீபத்தில் ரசித்த ஒன்று. சமையல்விருது விளக்கத் தொடர் பதிவு, கதைகள் என்று எழுதும் பல்சுவைப் பதிவர்களில்  இவரும் ஒருவர்.  
  
44) விஜய். கவிஞர். ரசிக்கத்தக்கக் கவிதைகள் படைப்பவர் எங்கள் இன்னொரு தளமான இது நம்ம ஏரியாவில் பாடல் ஒன்றைப் பாடி அனுப்பியவர். சமீப காலமாக எழுதுவதில்லை. பின்னூட்டங்களில் கூடக் காணோம்! மாதிரிக்கு இரண்டு. 1   2   
   
45) E BOOKS DOWNLOAD தமிழின் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் தரவிறக்கத்துக்கு வேண்டுமா.. இங்கு செல்லலாம். 2011 க்குப் பிறகு சமீபத்தில் ஒன்றும் வலைஎற்றவில்லை என்றாலும் அவர் சேமிப்பில் வைத்துள்ள புத்தகங்களை நீங்கள் விரும்பினால் இறக்கிப் படித்துக் கொள்ளலாம். 
    
46) எஸ்ராமகிருஷ்ணன்   பிரபல எழுத்தாளர். இவருக்கு அறிமுகம் தேவையில்லை. நிறைய பேருக்கு இவர் பக்கம் தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்கு இந்தத் தகவல் உபயோகமாகலாம்! அவர் எழுத்துகளையும்,  தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளையும், அவர் லிஸ்ட்டில் நூறு புத்தகங்களையும், புத்தக விமர்சனங்களையும்  இன்னும் இன்னும் நீங்கள் விரும்புபவற்றையும் தேர்வு செய்து இந்தப் பக்கத்தில் ரசிக்கலாம். 
   
47) வரலாற்றுச் சுவடுகள் இந்த வருடம் ஜனவரியில் தொடங்கப் பட்ட வலைப்பக்கம். ஆங்காங்கு இவரின் பின்னூட்டங்கள் பார்த்து அவ்வப்போது இவர் தளம் சென்று படிப்பதுண்டு. இதுவரை 36 பதிவுகள் எழுதியிருப்பதாக இவர் தளம் கணக்குக் காட்டுகிறது பூமியைப் பற்றியும்,உறுப்புமாற்றுச் சிகிச்சை பற்றியும், விண்வெளி, சுற்றுப்புறச் சூழல் மாசு என்று இவர் தரும் பதிவுகள் அனைத்தும் பாடங்கள். பொழுது போக்கு அம்சங்கள் இல்லாமல் அறிவுக்கோர் தளம். 
    
48) கடுகு தாளிப்பு அகஸ்தியன் சார் பக்கம். கல்கியில் இவர் எழுதிய கமலா தொச்சு கதைகளைப் படித்து ரசிக்காதார் யார்? மாதிரிக்கு சமீபத்திய ஒன் லைனர்கள். ரா கி ரவுக்கு இவரின்அஞ்சலிக் கட்டுரை. 
    
49) மதுரகவி. ராம்வி (ரமாரவி). ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்கி உள்ளார்.சுற்றுலா சென்று வந்து இவர் எழுதும் பதிவுகள் ரசிக்கத் தக்கவை.  இந்தத் தொடரில் இவர் எழுதிய ஹாஸ்டல் நினைவுகள் தொடரில் வரும் அலமேலு அம்மா மற்றொரு பிரபல பதிவருக்குத் (வல்லிசிம்ஹன்) தெரிந்தவர் என்பது விசேஷம். 
    
50) அமைதிச்சாரல்  பேரன்ட்ஸ் க்ளப்குயில்களின் கீதங்கள்கவிதை நேரமிது,  என்று மற்றும் மூன்று வலைப்பூக்கள் நடத்தும் இவர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. கவிதைப் பக்கத்தில் மனம் கவர்ந்த சமீபத்துக் கவிதை. சமையல் முதல் பண்டிகை வரை எண்ணங்கள் முதல் கதைகள் வரை, என்று பல்வேறு சுவைகளிலும் எழுதும் பதிவர்.
    

51) சமுத்ரா - வார்த்தைகளிலிருந்து மௌனத்துக்கு  இவரது கலைடாஸ்கோப் பதிவுகள் மிக மிக சுவாரஸ்யமானவை. அணு. அண்டம், அறிவியல் பதிவுகள் மிக உபயோகமானவை. அறிவுபூர்வமானவை.  கவிதை, ஜோக்குகளும் உண்டு!
    
52) உண்மைத்தமிழன்  அறிமுகம் தேவை இல்லாத அனைவரும் அறிந்த மேலும் ஒரு பதிவர். நாங்களும் ரசிக்கிறோம். நீள நீளமாய் இவர் எழுதும் பதிவுகள் ஆச்சர்யப் படவைக்கும். சமீப காலமாக ஒரே சினிமா விமர்சனமாக எழுதும் இவரின் பதிவுகளில் இட்லி,தோசை, வடை, பொங்கல், சாம்பார் பதிவு நாங்கள் மிக ரசிக்கும் ஒன்று! காரசாரமான அரசியல் பதிவுகளும் உண்டு.
   
53) சிவகுமாரன் கவிதைகள் அழகு கவிதைகள் எழுதுபவர். எங்கள் மதுரைக்காரர்! கல்லூரிக் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதி வருவதாகத் தெரிவித்திருப்பதோடு, அந்தக் காலத்தில் எழுதியுள்ள கவிதைகளையும் அவ்வப்போது பதிவிடுவார். வார்த்தைகளால் மனம் மயக்குபவர்.  ரசிக்க உதாரணம் காட்ட வேண்டாமா? இதோ கவிலைகளும், மனக்குரலும்.

    
54) ஸாதிகா (எல்லாப் புகழும் இறைவனுக்கே) தற்போது ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருக்கும் பதிவர்.  சென்றுவந்த இடங்கள் பற்றியும், விழிப்புணர்வுப் பதிவுகளும், நகைச்சுவைக் கதை என்று எல்லா தளங்களிலும் எழுதுபவர். என் விகடன் ஒவ்வொரு ஊர் பதிப்பிலும் எந்தெந்த வலைப் பதிவர் பற்றி அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டுள்ளார் 
    
55) எண்ணங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் நடிகர்த் திலகத்தை ஆராதிக்கும் பதிவர். சிவாஜி கணேசனின் பல பழைய படங்களையும்,  பாடல்களையும் பற்றிய பதிவுகள் நிறைந்த தளம். பொதுவான விஷயங்களோடு வேறு பல பழைய படங்களைப் பற்றியும் பேசும் சுவாரஸ்யமான தளம்.
    
56) இதயம் பேத்துகிறது ஜவர்லாலின் திறமைகளை ஓரிரு வரிகளில் சொல்லி விட முடியாது. பாடல்கள் எழுதுவார். இசையமைப்பார். அவரே அருமையாகப் பாடுவார். ஜென் கதைகள், உருப்படு, சிலப்பதிகாரம் (கதை வடிவில்) போன்ற புத்தகங்கள் எழுதியுள்ளார். ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் என்ற மொழிபெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளார். 6 சிக்மா பற்றி எழுதுவார். வகுப்பும் எடுப்பார். ஜோக்ஸ் எழுதுவார். ரா கி ர பற்றிய இவரின் அஞ்சலிக் கட்டுரை இங்கே.

    
57) என் ஜன்னலுக்கு வெளியே எழுத்தாளர் மாலனின் வலைப்பூ. குறிப்பிட்டு எதையும் சொல்லாமல் பக்கத்தைத் திறந்து பிடித்ததைப் படித்து ரசிக்கலாம்!  
   ========================    =========================    ===================
  
வலையால் விளையும் நன்மைகள்! 


ஒருவர் வலைப்பதிவர் ஆவதால், என்ன நன்மை? 
   
# நிறைய படிக்க வாய்ப்பு - எழுதுகின்ற ஆர்வம் எழும்போதே, அந்தப் பதிவிற்காக, பல தளங்களுக்குச் சென்று, படிக்கவும் ஆர்வம் ஏற்படும். உங்கள் எழுத்துக்களில் நாளுக்கு நாள் மெருகு ஏறும். நல்ல எழுத்தாளராக உருவாவீர்கள்! 
    
# உங்கள் தளத்தில் / பதிவில் படங்கள், காணொளிக் காட்சிகள் இணைக்க உங்கள் காமிராவை பயன்படுத்தியும், பெயிண்ட் போன்ற படம் வரைகின்ற மென்பொருள் உபயோகித்தும், விண்டோஸ் மூவி மேக்கர் கொண்டு குறும்படங்கள் தயாரித்தும், உங்கள் படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.  
   
# வலைப் பதிவர் என்றால், கட்புலன் / காண்பு நிலை (visibility), பதிவிடாத மனிதர்களை விட கொஞ்சம் அதிகம் உண்டு. இந்த காண்பு நிலையை நல்ல விதத்தில் பயன்படுத்தி, சமுதாய / சுய முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம். 
     
# வலைப் பதிவர் ஆனால், உங்களைப் பார்த்து, பேச, பழக, பலர் ஆர்வம காட்டுவார்கள். (கொலுவுக்குக் கூப்பிட்டு, சுண்டல் கூட கொடுப்பார்கள்!) பெரும்பாலும் அவர்கள் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகின்றவர்களாக இருப்பார்கள். அந்த அறிமுகங்களை சமூக நெட் வொர்க்கிங் வகையில் சமயோசிதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். (அப்பாதுரை சாருக்கு நெட் வொர்க்கிங் பற்றி நிறையத் தெரியும். சந்தர்ப்பம் கிடைத்தால், அவரை இது பற்றி மூன்றாம்சுழியில் எழுதச் சொல்லுங்கள்) 
     
# வலைப் பதிவருக்கு வலை மூலமாக நண்பர்கள் அதிகம் பேர் அமைவார்கள். உலகில், அதிக நண்பர்களைப் பெற்றவர்களே பாக்கியசாலிகள். அவர்களுக்கு என்றும் தனிமை இல்லை. 
          
# எல்லாவற்றுக்கும் மேலாக, 'வேலையில்லா மனிதனின் மனம், பிசாசுகள் உலாவும் வனம்' (An idle brain is devil's workshop) என்று கூறுவார்கள். வலைப்பதிவராகி, மூளைக்கும், மனதுக்கும், கைகளுக்கும், கணினிக்கும் பயிற்சி கொடுத்து, படைப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளலாமே! 
            

  ========================    =========================    ===================  
         
நாளை சந்திப்போம்! 
            

48 comments:

  1. வலைப் பதிவர் ஆனால், உங்களைப் பார்த்து, பேச, பழக, பலர் ஆர்வம காட்டுவார்கள். (கொலுவுக்குக் கூப்பிட்டு, சுண்டல் கூட கொடுப்பார்கள்!) //

    இந்த வருஷம் நல்ல சுண்டல் கலெக்ஷனா? :P:P:P

    ReplyDelete
  2. இந்தத் தொடரில் இவர் எழுதிய ஹாஸ்டல் நினைவுகள் தொடரில் வரும் அலமேலு அம்மா மற்றொரு பிரபல பதிவருக்குத் (வல்லிசிம்ஹன்) தெரிந்தவர் என்பது விசேஷம். //

    இது செய்தி! :))))

    வரலாற்றுச் சுவடுகள், மஞ்சுபாஷிணி விஜய் தவிர மற்றவர்கள் அறிமுகம் ஆனவர்களே. ஆனால் தொடர்ந்து போக முடியலை.

    ReplyDelete
  3. ஹைய்ய்ய்ய்யா, இன்னிக்கு வடை எனக்கே எனக்கு. :)))))

    ReplyDelete
  4. இன்றைய அறிமுகங்களில் சிலர் புதியவர்கள் [எனக்கு!].

    மாலை வந்து அவர்களின் தளங்களையும் பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. மஞ்சுபாஷிணி பின்னூட்டம் தீபாவளி போனஸ் போல.

    எஸ்.ராமகிருஷ்ணன் பதிவில் காவல் கோட்டம் விமரிசனம் படித்ததும் அவர் மேலிருந்த மதிப்பு வெகுவாகக் குறைந்தது.

    இதுவரை நீங்கள் குறிப்பிட்டவற்றுள் நிறைய பதிவுகள் எனக்கு அறிமுகப் பதிவுகள். நன்றி.

    (கூப்பிட்டு சுண்டல் கொடுக்கறாங்களா? எனக்கு அல்வா தான் கொடுக்கறாங்க :)

    ReplyDelete
  6. அனைத்தும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்... முடிவில் வலையால் விளையும் நன்மைகள் அருமை...

    நன்றி...
    tm1

    ReplyDelete
  7. தொகுத்தளித்த விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது,, எங்கள் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. மிக்க நன்றி - கீதா சாம்பசிவம், வெங்கட் நாகராஜ், அப்பாதுரை (ஒரு கோரிக்கையும் வைத்துள்ளோம் - கவனிக்கவும்) திண்டுக்கல் தனபாலன், இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  9. // வெங்கட் நாகராஜ் said...
    இன்றைய அறிமுகங்களில் சிலர் புதியவர்கள் [எனக்கு!].

    மாலை வந்து அவர்களின் தளங்களையும் பார்க்கிறேன்.//
    அவசியம் படியுங்கள். அப்பொழுதும் கருத்துரையுங்கள்!

    ReplyDelete
  10. அன்பின் கௌதமன் - அருமையாகச் சென்று கொண்டிருக்கிறது பயணம் - ஆசிரியப் பொறுப்பினை அழகாக நிறைவேற்றி வருகிறீர்கள் - ஈடுபாடு பொறுப்புணர்ச்சி உழைப்பு அனைத்தும் பாராட்டுக்குரியவை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. சிறப்பான அறிமுகங்களோடு அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு மிக அருமை.

    ReplyDelete
  12. வலைப்பதிவர் ஆனதால் நானும் நிறைய நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறேன். அருமையாகச் சொல்லியிருக்கீங்க. நிறையத் தளங்கள் எனக்குத் தெரிந்தவை என்றாலும் பிடிஎப் வடிவில் நூல்கள் பதிவிறக்கம் செய்ய ஒரு தளத்தைக் காட்டியிருப்பது மிகச் சிறப்பு. எனக்கும் பலருக்கும் மிகப் பயனுள்ள ஒன்று. விஜய் அவர்களின் தளம் சென்றதில்லை. பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  13. //43) மஞ்சுபாஷிணியின் கதம்ப உணர்வுகள் இவரின் பதிவுகள் போலவே இவரது பின்னூட்டங்களும் சுவையானவை! இவர் நம் பதிவுக்கு வந்து ரசிக்க மாட்டாரா என்று நினைக்க வைக்கும் இவரது பின்னூட்டங்கள். //

    அதே! அதே!! சபாபதே !!!

    த தா ஸ் து !!!

    மஞ்சூஊஊஊஊஊஊஊ வுக்கு ஜே!

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  14. அறிமுகமான அனைத்து வலைத்தளங்களுக்கும் இன்றைய
    வலைத்தள ஆசிரியப் பணியை ஏற்று மிகச் சிறப்பாக இப் பொறுப்பினை வெளிக்காட்டிய உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் !..............மிக்க நன்றி வாழ்த்துக்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .

    ReplyDelete
  15. இன்றைய அறிமுகங்கள் எல்லாமே மிக அருமை. அறிமுகம் செய்துள்ள விதமோ அதைவிட அருமையோ அருமை.

    அனைவருக்கும் பாராட்டுக்கள்,
    அன்பான வாழ்த்துகள்.

    தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  16. //வலையால் விளையும் நன்மைகள்!

    ஒருவர் வலைப்பதிவர் ஆவதால், என்ன நன்மை? //

    வெகு அழகாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்.

    //வலைப் பதிவருக்கு வலை மூலமாக நண்பர்கள் அதிகம் பேர் அமைவார்கள். உலகில், அதிக நண்பர்களைப் பெற்றவர்களே பாக்கியசாலிகள். அவர்களுக்கு என்றும் தனிமை இல்லை. //

    நானும் அதில் ஓர் பாக்கியசாலி என்பதை நினைக்க மனதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவே உள்ளது.

    நான் சொல்ல நினைத்ததை அப்படியே நீங்கள் எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்.

    //இந்த காண்பு நிலையை நல்ல விதத்தில் பயன்படுத்தி, சமுதாய / சுய முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம். //

    சமுதாய முன்னேற்றமும், பிறர் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்தலும் மிக மிக முக்கியம் என்பேன். இந்த பொறுப்புணர்ச்சி எல்லா எழுத்தாளர்களுக்கும் தேவை.

    அத்தகைய எழுத்தாளர்களை மட்டுமே அடையாளம் கண்டு, அனைவரும் கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தினால் நல்லது.


    அன்புடன்
    VGK

    ReplyDelete
  17. நன்றி கௌதமன் சார்.
    என்னால் வலைப்பக்கம் அடிக்கடி வரமுடியாவிட்டாலும், தங்களைப் போன்றோரால் நினைவு கூறப்படுவது மனதை நெகிழ வைக்கிறது.

    \\\வலைப் பதிவர் ஆனால், உங்களைப் பார்த்து, பேச, பழக, பலர் ஆர்வம காட்டுவார்கள். வலைப் பதிவருக்கு வலை மூலமாக நண்பர்கள் அதிகம் பேர் அமைவார்கள். உலகில், அதிக நண்பர்களைப் பெற்றவர்களே பாக்கியசாலிகள். அவர்களுக்கு என்றும் தனிமை இல்லை.//
    மிகச் சரியாக சொன்னீர்கள்.பெரும்பாலும் நட்பு என்பது சம வயதினரிடையே ஏற்படுவது. ஆனால் இந்த வலைநட்பு அந்த சுவற்றையும் தகர்த்து எறிந்திருக்கிறது.அப்பாத்துரை போல நான் பெருமையாய் நினைக்கும் சில நட்புகள் கிடைத்திருக்கிறது இந்த வலைப்பதிவால்.

    ReplyDelete
  18. வலைப்பதிவுகளினால் வரும் நன்மைகள்
    அதிகம்.
    அதை அழகாக பட்டியல் இட்டு சொல்லி இருக்கிறீர்கள்.
    வயது வித்தியாசம் பாராமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எழுத்துக்களை மட்டுமே வைத்து உருவாகும் நட்பு கிடைக்கிறதே!

    அருமையாக வலைச்சரம் தொடுத்து வருகிறீர்கள்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  19. அறிமுகங்கள் அனைவருக்கும் வழ்த்துகள்.

    ReplyDelete
  20. இடம்பெற்றிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    வலையால் விளையும் நன்மைகளை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  21. //Lakshmi said...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வழ்த்துகள்.//
    ஹையா! லக்ஷ்மி கீதா சாம்பசிவம் கிட்ட மாட்டிகிட்டாங்க! வாழ்த்துகள், வாழ்த்துகள் னு இம்போசிஷன் எழுதப் போறாங்க!

    ReplyDelete
  22. நன்றி சீனா சார்! எல்லாம் நீங்க கொடுத்த ஊக்கம்தான்!

    ReplyDelete
  23. நன்றி நன்றி நன்றி - இவர்களுக்கு:
    ஆசியா ஓமர்
    பால கணேஷ்,
    வை. கோபாலகிருஷ்ணன்,
    அம்பாளடியாள்,
    சிவகுமாரன்,
    ரஞ்சனி நாராயணன்,
    ராமலக்ஷ்மி.
    வை.கோபாலகிருஷ்ணன் சார், வலைச்சரப் பின்னூட்டங்களில் பல ஆத்மார்த்தமான கருத்துகள் பதிந்து, உற்சாகப்படுத்துகின்றீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  24. ஹா, ஹா, கரன்ட் போனதாலே இப்போத் தான் லக்ஷ்மியோட கமென்டைப் பார்த்தேன். லக்ஷ்மி நீங்க இம்பொசிஷன் எழுத வேண்டாம். கெளதமன் சாரே உங்களுக்காக எழுதிடுவார்.

    கெளதமன் சார், லக்ஷம் தரம் எழுதுங்க. அப்போத் தான் தமிழ் நல்லா வரும். :))))))

    ReplyDelete
  25. மதுரகவி பதிவு அறிமுகத்திற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    வலைப்பட்திவர் ஆவதினால ஏற்படும் நன்மைகளை சிறப்பாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  26. சிறப்பான தளங்களை அறிமுகம் செய்து வலைபதிவர் ஆனால் என்ன நன்மை என்றும் விளக்கி கலக்கிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. // Geetha Sambasivam said...
    ஹா, ஹா, கரன்ட் போனதாலே இப்போத் தான் லக்ஷ்மியோட கமென்டைப் பார்த்தேன். லக்ஷ்மி நீங்க இம்பொசிஷன் எழுத வேண்டாம். கெளதமன் சாரே உங்களுக்காக எழுதிடுவார்.

    கெளதமன் சார், லக்ஷம் தரம் எழுதுங்க. அப்போத் தான் தமிழ் நல்லா வரும். :))))))//
    ஆசை, தோசை, அப்பளம், வடை!

    ReplyDelete
  28. நன்றி, ராம்வி, எஸ் சுரேஷ்!

    ReplyDelete

  29. ஒருவர் வலைப்பதிவர் ஆவதால், என்ன நன்மை? //

    வெகு அழகாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்.

    //வலைப் பதிவருக்கு வலை மூலமாக நண்பர்கள் அதிகம் பேர் அமைவார்கள். உலகில், அதிக நண்பர்களைப் பெற்றவர்களே பாக்கியசாலிகள். அவர்களுக்கு என்றும் தனிமை இல்லை. //

    நானும் அதில் ஓர் பாக்கியசாலி என்பதை நினைக்க மனதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவே உள்ளது.//அதே.நானும் வழி மொழிகிறேன். வலைப்பதிவுகள் மூலமாகக் கிடைத்த நட்புகளுக்குகுறை சொல்லத் தெரியாது. தப்பு இருந்தாலும் திருத்திவிடுவார்கள். நேரத்தில் உதவிக்கும் வருவார்கள். இன்றைய பதிவுகளில் எண்ணங்களும்...திருமதி சாரதா அவர்களின் பதிவு மிகப் புதிது எனக்கு. மிகவும் பிடித்தும் இருக்கிறது நன்றி கௌதமன்.

    ReplyDelete
  30. நல்ல அறிமுகங்கள். இதுவரை படிக்காத தளங்களுக்கு சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  31. வலையால் விளையும் நன்மைகள் நிறையவேப்பா... அதை அருமையா சொல்லி இருக்கீங்க.....

    அட.....

    நான் எழுதுற கருத்தைப்பார்த்து இதுவரை யாரும் என்னை அடிக்க விரட்டாமல் விட்டதே பெரிய விஷயம்னு நினைத்தேன்... ஆனா என் பின்னூட்டம் ரசிக்கவைக்கிறதுன்னு சொல்றதை கேட்கறச்சே.. ஹப்பா தப்பிச்சேன்னு தோணித்துப்பா... ஏன் தெரியுமா? பஸ்ல ரவி சில்லறைக்காக படும் பாட்டுக்கு நான் எழுதின கமெண்ட் படிச்சுட்டு உங்க ஆசிரியர் குழு என்னை எங்க அடிக்கப்போறீங்களோன்னு பயந்துட்டு இருந்தேன்....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ஹை ராம்வி, சிவகுமார், வரலாற்று சுவடுகள் தம்பி தெரியுமே இவங்க வலைதளங்கள்.....

    அவசியமான பயனுள்ள விவரங்களையும் சேர்த்து தரது தான் இந்த வார வலைச்சரத்தின் ஸ்பெஷாலிட்டின்னு சொல்லலாம்... உவமை அழகுப்பா...

    இன்றைய சரவெடி ஒரே கோலாகலம் தான்.... எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...

    வரேன் வரேன் கமெண்ட் எல்லாம் படிச்சிட்டேனாக்கும் வரேன் இருங்க இருங்க....


    ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதான் டெலிட் பண்ணி திரும்ப போடுறேன். கீதா பார்த்தால் இம்போசிஷன் எழுத சொல்லிடுவாங்களோன்னு பய்ம் தான்பா..

    ReplyDelete
  32. //அப்பாதுரை said...
    மஞ்சுபாஷிணி பின்னூட்டம் தீபாவளி போனஸ் போல.

    எஸ்.ராமகிருஷ்ணன் பதிவில் காவல் கோட்டம் விமரிசனம் படித்ததும் அவர் மேலிருந்த மதிப்பு வெகுவாகக் குறைந்தது.

    இதுவரை நீங்கள் குறிப்பிட்டவற்றுள் நிறைய பதிவுகள் எனக்கு அறிமுகப் பதிவுகள். நன்றி.

    (கூப்பிட்டு சுண்டல் கொடுக்கறாங்களா? எனக்கு அல்வா தான் கொடுக்கறாங்க :)//

    ஹை அப்டின்னா வருஷத்துக்கு ஒரு முறை தானாப்பா அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா துரைஈஈஈஈஈஈஈஈஈ :-)

    ReplyDelete
  33. //Geetha Sambasivam said...
    ஹைய்ய்ய்ய்யா, இன்னிக்கு வடை எனக்கே எனக்கு. :)))))//

    கீதா கீதா.... வடை எல்லாம் போட்டு தயிர்வடை செய்யலாம்பா... நல்லாருக்கும்பா....

    ReplyDelete
  34. வாங்க மஞ்சு பாஷிணி, தயிர் வடை என்ன, மதுரை ஸ்பெஷல் ரச வடையும் தரேன். அதுவும் ஜீரகம், மிளகு அரைச்ச ரசத்திலே ஊறிய வடைகளைச் சாப்பிட்டால், ஆஹோ, ஓஹோ, பேஷ், பேஷ் தான்! :)))))))

    ReplyDelete
  35. தற்போது வலையுலகில் இருந்து விலகி இருப்பதால்...உடனடியாக வந்து நன்றி தெரிவிக்க இயலவில்ல...மன்னிக்கவும்!

    எனது வலைத்தளம் பற்றிய தங்களின் உயர்ந்த மதிப்பீட்டிற்கு நன்றி சார்.. அறிமுகத்திற்கு மிக்க நன்றி சார்.!

    ReplyDelete
  36. நிறைய புதிய தளங்கள். விரும்பி தொடர்ந்து படித்து வருவது சிவகுமாரன் கவிதைகள். மஞ்சுபாஷிணி என்னை வியக்க வைத்திருக்கிறார். ஒரு நாள் முழுதும் வேலை செய்யாமல் என்னை எழுத சொன்னால் கூட இவர் எழுதுமளவு என்னால எழுத முடியாது. :)) மிகவும் ரசிக்கும் வண்ணம் எழுதுகிறார். வாழ்த்துக்கள்.

    வலை உலக அறிமுகத்தால் நிறைய படிக்க முடிகிறது. முன்பு போல் படிக்கும் ஆர்வம் மீண்டும் வளர்ந்து வருகிறது. எவ்வளவு பேர் எவ்வளவு அருமையாக எழுதுகிறார்கள். அவர்களின் அருமையான எழுத்துக்களை இருந்த இடத்தில் இருந்தே படித்து ரசிக்க முடிகிறது. தனிமையில் இருந்தாலும் பல அன்பான நல்ல
    உள்ளங்கள் அருகில் இருப்பது போல நிறைவு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. மன சோர்வை போக்குகிறது.
    பதிவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அதிலும் குறிப்பாக எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. சாம்பார் வடை தயிர் வடை சரி.. ஒரேயடியா ரச வடைனா எப்படிங்க?

    ReplyDelete
  38. என் உணர்வும் அதே சிவகுமாரன். நன்றி.

    ReplyDelete
  39. அப்பாதுரை, ரச வடையும் உண்டு. மோர்க்குழம்பு வடையும் உண்டு. இங்கே சொன்னால் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்கள் அடிக்க வருவாங்க. தனியா எழுதறேன். சாம்பார் வடை அதிகம் வட மாநிலங்களிலே தான். மதுரையிலே ஜாஸ்தி ரசவடை தான். :)))))

    ReplyDelete
  40. //வாங்க மஞ்சு பாஷிணி, தயிர் வடை என்ன, மதுரை ஸ்பெஷல் ரச வடையும் தரேன். அதுவும் ஜீரகம், மிளகு அரைச்ச ரசத்திலே ஊறிய வடைகளைச் சாப்பிட்டால், ஆஹோ, ஓஹோ, பேஷ், பேஷ் தான்! :)))))))//

    ஹை அப்டியாப்பா... நான் இதோ வந்துட்டேன்.... ஆனா சத்தமா சொல்லிராதீங்க. ஏன்னா அம்மா சாம்பார்வடை, ரசவடை, தயிர்வடை எல்லாமே செம்ம கட்டு கட்டுவாங்கப்பா...

    ReplyDelete
  41. கீதா சாம்பசிவம், அப்பாதுரை, வை.கோ அண்ணா, மீனாக்‌ஷி எல்லோருக்கும் மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா....

    ReplyDelete
  42. //மீனாக்ஷி said...
    நிறைய புதிய தளங்கள். விரும்பி தொடர்ந்து படித்து வருவது சிவகுமாரன் கவிதைகள். மஞ்சுபாஷிணி என்னை வியக்க வைத்திருக்கிறார். ஒரு நாள் முழுதும் வேலை செய்யாமல் என்னை எழுத சொன்னால் கூட இவர் எழுதுமளவு என்னால எழுத முடியாது. :)) மிகவும் ரசிக்கும் வண்ணம் எழுதுகிறார். வாழ்த்துக்கள்.//

    எனக்கு தெரிஞ்சதே அது ஒன்னு தாம்பா மீனாக்‌ஷி :-)

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  43. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    //43) மஞ்சுபாஷிணியின் கதம்ப உணர்வுகள் இவரின் பதிவுகள் போலவே இவரது பின்னூட்டங்களும் சுவையானவை! இவர் நம் பதிவுக்கு வந்து ரசிக்க மாட்டாரா என்று நினைக்க வைக்கும் இவரது பின்னூட்டங்கள். //

    அதே! அதே!! சபாபதே !!!

    த தா ஸ் து !!!

    மஞ்சூஊஊஊஊஊஊஊ வுக்கு ஜே!

    அன்புடன்
    VGK//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா...

    ReplyDelete
  44. //அப்பாதுரை said...
    சாம்பார் வடை தயிர் வடை சரி.. ஒரேயடியா ரச வடைனா எப்படிங்க?//

    சாப்பிட்டா ஜோர் ஜோர் தாம்பா ருசி...

    ReplyDelete
  45. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி - வல்லிசிம்ஹன், கோவை 2 தில்லி, மஞ்சுபாஷிணி, வரலாற்று சுவடுகள்,மீனாக்ஷி, அப்பாதுரை.

    ReplyDelete
  46. எனது தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு எங்களுக்கு எனது நன்றிகள் :-)

    ReplyDelete