Sunday, November 25, 2012

நமக்கும் காலமுண்டு! -- (கிறுக்கல்கள்-6)

முதுமை!
இதயத்தில் அச்சத்தை
விதைத்துவிட்டு,
நாடி நரம்புகளை
தளர்த்திவிட்டு,
உறக்கத்தை களவாடுமே!

உறக்கத்தை தேடும்
உயிர் சுவாசத்தின்
பயணத்தில் நாம்
என்ன செய்கிறோம் 
அவர்களுக்காக?
நாம் எதை தொலைக்கிறோம்
அவர்களின்றி?

பெரியவர்களின் அனுபவம் கற்று
கதை கேட்டு
பக்குவப்படுத்தி பதபடுத்தப்பட்ட
மழலைகள் இன்று
உறவுகளும் அன்பும் 
அறியாது!

குழந்தை பராமறிப்பு பற்றி
அம்மா சொல்லிக்கொடுப்பது போய்
கூகிளிடம் மன்றாடுகிறோம்!
எதை சொல்வது
எதை விடுவது
என்று அறியாது
வார்த்தைகளின்றி நான்! 

நாம் என்ன செய்துவிட்டோம்!
தட்டுத் தடுமாறி ஏறுமுன்னே
நகரத் துணியும் பேருந்தில் ஏறி
நின்று நிதானிக்க 
தள்ளாடுபவர்களுக்கு
இடம் கொடுக்க கூட 
ம் வருவதில்லை நமக்கு!

கடல் கடந்த பயணத்தில்
காலம் கடந்து நாம்
வரும் வரை
நம் இடத்தில் பணியாட்கள்!
அன்பும் அக்கரையும்????

அனைத்தும் இருந்தும்
ஒன்றோடு ஒன்றாய்
பாரமாய் இருப்பதால்
அகதிகளாய்
முதியோர் இல்லத்தில்!

சில வசதிக்காரருக்கும்
வசதிப்படாததால்
வீட்டின் மூலையில்
கிழிசலாய்!

அனுபவிக்கையில் 
கசந்து போகிற பயணத்தில்
சிலருக்கு துணையாய்
"துணை" மட்டும்
சிலருக்கு நினைவுகள்
மட்டுமே மீதமாய்!

காலச்சக்கரம்
சுழன்று கொண்டிருக்க
அனைவரும் இருக்கையில்
ஒருவருக்கொருவர்
பேசி காயப்படுத்திக்கொண்ட
வார்த்தைகளும் 
செய்தவை யாவும் 
நெஞ்சுக்கூட்டுக்குள் 
இருகிக்கிடக்க!
இன்று யாரும் 
இல்லாத போது
உனக்கென நான்,
எனக்கென நீ ஆக
"துணை"-ஐ மட்டும்
துணை கொண்டு
வாழத்துணிகிறார்கள்!

எதை தேடுகிறது 
என்று அறியாது
எதையோ தேடி 
சிக்கித் திண்டாடும்
உயிர்சுவாசத்தின்
பயணத்தை அனுபவிக்க
நமக்கும் காலமுண்டு!

~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--5

கேட்கத் துணிந்து சொல்ல மறப்பது "நன்றி"! சொல்வதை கேட்டு கேட்க மறப்பது "மன்னிப்பு"! இந்த இரண்டினையும் சொல்ல வேண்டிய நேரத்தில் உகந்தவர்களிடம் சொல்லுதல் உறவினை மேலும் பல படுத்தும்!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!


21.                "பேசக்கூடாது" என்று சொல்லி விட்டு நாம் எப்படி பேசுகிறோம் என்று நகைச்சுவை கலந்த ரசிக்கும்படியான பதிவினை பதிந்திருக்கிறார் மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்கள்

22.                மிக சிரமப்படுத்தும் விழாக்கால இரயில் பயணம் எதற்காக? யாருக்காக? என்று எளிய நடையில் எதார்த்தத்தை கவிதையாக பதிந்திருக்கும் குருச்சந்திரன் அவர்கள்

23.                அஜாக்கிரதையாக செய்யப்படும் ஹெல்த் செக் அப் மற்றும் அதனால் வரும் பின் விளைவுகள் பற்றி "உயிருடன் விளையாடாதீர்கள் ப்ளீஸ்" என்று பதிந்திருக்கிறார் நிகழ்காலம் ezhil அவர்கள்

24.                   விந்தையான பிறப்பும் இறப்பும் அதில் இடைப்பட்ட காலத்தினையும் மிக அழகான சொல் பிரயோகிப்போடு "புலப்படாத மாயை" என்று கவிதையாக பதிந்திருக்கிறார் செய்தாலி அவர்கள்

25.                  இயற்கைக்கும் செயற்கைக்கும் மத்தியில் இந்த நவீனத்தோடு நாம் தொலைந்து போவதை "நாமும் நவீன யுகமும்" என்று அழகிய கவிதையில் செதுக்கி இருக்கிறார் ப.தியாகு அவர்கள்


~~~~****~~~~

தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் தோழமைகளே! மீண்டும் நாளை சந்திப்போம்!

49 comments:

  1. நமக்கும் காலமுண்டு கவிதை ரொம்ப நல்லா இருக்கு. இன்றைய அறி முகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்... (ஏதோ இன்று மின்சாரம் உள்ளதால்)

    தளங்களைப் பார்வையிடுகிறேன்... நன்றி...
    tm1

    ReplyDelete
  3. நல்ல கவிதை வரிகள்... வாழ்த்துக்கள்...

    25வது தளம் எனக்கு புது அறிமுகம்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  4. காலச்சக்கரம்
    சுழன்று கொண்டிருக்க
    அருமையான தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

  6. // உனக்கென நான்,
    எனக்கென நீ ஆக
    "துணை"-ஐ மட்டும்
    துணை கொண்டு
    வாழத்துணிகிறார்கள் //


    கிளியே என்று என்றோ கூப்பிட்ட
    இல்லத்தரசியை
    இன்று
    கிழவியே !! என அழைத்தேன்.
    ஓடி வா !!
    உனக்கும் எனக்குமென்றே
    ஒரு கவிதை
    காத்திருக்கிறது.


    காலன் கயிறை வீசுமுன்
    கண்டு கொள் .
    பாசத்தின் வாசனைகள் மறந்தோம் இல்லை
    சுவாசத்தின் வாசமென்ன ?
    விலையுமென்ன ?
    புரிந்துகொள். என்றேன்.

    "யுவராணி எழுதவில்லை இதை "என்றாள்.
    என்ன சொல்கிறாய் ? என முறைத்தேன்.
    " யுகத்தினையே ஆளும்
    அறம் வளர்த்த நாயகி
    தர்ம சம்வர்த்தினி யே
    நமக்காக எழுதியிருக்கிறாள்"
    என்றாள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  7. இன்று வலைச்சரத்தில் சிறப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்க்ளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  8. அன்பின் யுவராணி,

    தங்களின் SMS வேண்டுகோளின்படி, இன்று ஒருநாள் மட்டும் அனைத்து பதிவர்களுக்கும், இந்த தங்களின் வலைச்சர பதிவு பற்றி, அவர்களின் சமீபத்திய வலைத்தளத்தின் பின்னூட்டப்பெட்டி மூலம் தகவல் கொடுத்து விட்டேன்.

    எனக்கு முன்பாகவே நம் நண்பர் திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களும் தகவல் அளித்துள்ளார்கள் என்பதை பிறகு தான் பார்த்தேன்.

    அதனால் என்ன! ஒருமுறைக்கு இருமுறையாகத்தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  9. கவிதை இன்றைய வாழ்வை எடுத்துக்காட்டியபடி....
    ஆனால் நம் போன்ற பலர் அதை எண்ணுவதாலேயே ,எழுதுவதாலேயே கண்டிப்பாக மாற்றங்கள் நிகழும் என நம்புவோம் தோழி. என்னையும் அறிமுகப்படுத்தியதில் நன்றி.மேலும் என் அறிமுகம் குறித்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்,திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள். அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நன்று, நன்று. வியந்து ரசிக்க வைத்தது யுவராணியின் கவிதை. வலைச்சரத்தில் ஒவ்வொரு முறை என் தளம் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் மனதில் மகிழ்ச்சி நிறைவதை அனுபவிததுக் கொண்டிருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை மீண்டும் வழங்கிய அன்பத் தங்கைக்கும். என் பொருட்டு அறிவித்த வைகோ ஸாருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  11. //பெரியவர்களின் அனுபவம் கற்று
    கதை கேட்டு பக்குவப்படுத்தி பதபடுத்தப்பட்ட மழலைகள் இன்று
    உறவுகளும் அன்பும் அறியாது!//

    வேதனை. ;(
    காலம் செய்த கோலம்.

    //குழந்தை பராமறிப்பு பற்றி
    அம்மா சொல்லிக்கொடுப்பது போய்
    கூகிளிடம் மன்றாடுகிறோம்!//

    கெட்ட நேரம் தான். ;(

    //அனைத்தும் இருந்தும் ஒன்றோடு ஒன்றாய் பாரமாய் இருப்பதால்
    அகதிகளாய் முதியோர் இல்லத்தில்!//

    கொடுமையோ கொடுமை இது. ;(

    //சில வசதிக்காரருக்கும்
    வசதிப்படாததால் வீட்டின் மூலையில் கிழிசலாய்!//

    கிழித்துக்கோர்த்த அருமையான வரிகள் இவை !


    //எதை தேடுகிறது என்று அறியாது
    எதையோ தேடி சிக்கித் திண்டாடும்
    உயிர்சுவாசத்தின் பயணத்தை அனுபவிக்க நமக்கும் காலமுண்டு!//

    இன்றைய ப்ச்சை இலையும்
    நாளை பழுக்கக்கூடும் தான்.

    மிகச்சிறப்பாக அனைத்தையும்
    அள்ளிக்கொடுத்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>>>>

    ReplyDelete
  12. வாழ்க்கையை
    சுவாரஸ்யமாக்க!!!--5
    =====================

    கேட்கத் துணிந்து சொல்ல மறப்பது "நன்றி"!

    சொல்வதை கேட்டு கேட்க மறப்பது "மன்னிப்பு"!

    இந்த இரண்டினையும் சொல்ல வேண்டிய நேரத்தில் உகந்தவர்களிடம் சொல்லுதல் உறவினை மேலும் பல படுத்தும்!

    ’தயவுசெய்து’ இதை அனைவரும் படியுங்கள்.

    மீண்டும் மீண்டும் படித்தவர்களுக்கு என் அன்பான ‘நன்றிகள்’

    படிக்கச்சொல்லி சிரமம் கொடுத்ததற்கு தயவுசெய்து என்னை ’மன்னியுங்கள்’.

    'PLEASE' 'THANKS' 'SORRY' இவை மூன்றும் தாரக மந்திரங்கள்.

    நம் வாழ்க்கையை நாம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ளவும்,

    எளிதில் பிறரின் அன்பைப்பெறவும்,

    வாழ்க்கையில் சுலபமாக வெற்றியடையவும்

    இந்த மூன்று சொற்களும் முக்கியமுங்க! மறந்துடாதீங்க !!

    இதையே தான் நம் பதிவர்கள்

    திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களும்,

    திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களும்,

    திருமதி உஷா அன்பரசு அவர்களும்

    அவங்க பதிவுகளிலே ஏற்கனவே சொல்லியிருக்காங்க.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  13. புது இணைப்புகள் அருமை...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  14. கவிதை மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  15. சிறந்த அறிமுகப் பகிர்வு .வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறப்பாக தொடர .

    ReplyDelete
  16. கவிதை சிறப்பு சகோ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வணக்கம்,
    யுவராணி தமிழரசன்

    இன்று அறிமுகமான பதிவுகள் அனைத்தும் அருமை அருமை பதிவுகளை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் இன்று அறிமுகமான பதிவாளார்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. ''...குழந்தை பராமறிப்பு பற்றி
    அம்மா சொல்லிக்கொடுப்பது போய்
    கூகிளிடம் மன்றாடுகிறோம்!
    எதை சொல்வது
    எதை விடுவது
    என்று அறியாது
    வார்த்தைகளின்றி நான்!...''
    இன்னும் பல ...அத்தனையும் சரியான கருத்துகளே!
    எவ்வளவு கூறினும் யாருக்கும் விளங்காது
    அவரவருக்கு முதுமை வரும் வரை!
    கவிதை நன்று. அத்தனை அறிமுகங்களிற்பும்,
    தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. கவிதை + அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  20. கவிதை + அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  21. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்களும் அறிமுகப்படுத்தியவருக்கு எனது நன்றியும்! நல்ல தொகுப்பு!

    ReplyDelete
  22. //எதை தேடுகிறது
    என்று அறியாது
    எதையோ தேடி
    சிக்கித் திண்டாடும்
    உயிர்சுவாசத்தின்
    பயணத்தை அனுபவிக்க
    நமக்கும் காலமுண்டு!//

    அர்த்தமுள்ள கிறுக்கல்கள் யுவராணி!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  23. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. உண்மைதான், ஓவ்வொரு வரிகளும் உன்னதமான உண்மைகளை சொன்னது.

    அசத்தல் மேலும்மேலும் இதுபோல் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. @Lakshmi
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளம்மா

    ReplyDelete
  27. @திண்டுக்கல் தனபாலன்
    மிக்க நன்றி அண்ணா தமிழ்மணத்தில் இணைத்துக்கொடுத்தமைக்கும், கருத்துரைக்கும் அண்ணா!

    ReplyDelete
  28. @இராஜராஜேஸ்வரி
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா!

    ReplyDelete
  29. @வெங்கட் நாகராஜ்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  30. @sury Siva
    ஐயா! என்னிடம் சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை ஐயா! என்ன சொல்வதென்று தெரியாது தான் விழிக்கிறேன்! நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  31. @திண்டுக்கல் தனபாலன்
    அண்ணா இன்று அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு தாங்களும் தகவல் கொடுத்திருப்பதாக வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் கருத்துரையில் குறிப்பிட்டிருந்தார்! தங்களது உதவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா!

    ReplyDelete
  32. @திண்டுக்கல் தனபாலன்
    அண்ணா இன்று அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு தாங்களும் தகவல் கொடுத்திருப்பதாக வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் கருத்துரையில் குறிப்பிட்டிருந்தார்! தங்களது உதவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா!

    ReplyDelete
  33. @வை.கோபாலகிருஷ்ணன்
    ஐயா எனது மனமார்ந்த நன்றிகள்! பிராஜக்ட் வேலையாக திடீர் பயணம் அமைய இனையத்தோடு இணைய முடியாது போனதால் தங்கள் உதவியை தேடினேன் ஐயா! மறுக்காமல் எனக்கு உதவியமைக்கும், எனது வரிகளை குறிப்பிட்டு கருத்துரையிட்டமைக்கும் எனது நன்றிகள் என்றென்றும் ஐயா!

    ReplyDelete
  34. @ezhil
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  35. @பால கணேஷ்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  36. @இரவின் புன்னகை
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  37. @Easy (EZ) Editorial Calendar
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  38. @அம்பாளடியாள்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  39. @Sasi Kala
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  40. @2008rupan
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  41. @ kovaikkavi
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  42. @NIZAMUDEEN
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  43. @s suresh
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  44. @Ranjani Narayanan
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  45. @கோவை2தில்லி
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  46. @சே. குமார்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  47. @Semmalai Akash!
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  48. வணக்கம்
    யுவராணி தமிழரசன்

    ஒரு வாரகாலம் சிறப்பாக வலைச்சர பொறுப்பாசிரியராக பலவேலைக்கு மத்தியில் செம்மையாக நேர்த்தியாக கடமையாற்றியமைக்கு மிக்க நன்றி (சகோதரி) பொதுவாக பார்க்கப்போனால் ஒவ்வெரு நாளும் பதிவிடும் போது வாசிக்கும் உள்ளங்களை சிந்திக்கவைக்கும் அழகான கவிதையுடனும் ,நல்ல கருத்து மடலுடனும் பதிவுகளை தொகுத்து வழங்கியுள்ளிர்கள் ,

    நல்ல படைப்புகளை உருவாக்கி இன்றைய எழுத்துலகில் வெயற்றிநடை போட எனது வாழ்த்துக்கள் சாகோதரி(யுவராணி)
    குறிப்பு- நேரம் கிடைக்கும் போதும் மின்சாரம் கிடைக்கும் போது வாருங்கள் என் தளத்துக்கு
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  49. முதுமையின் அருமை பற்றிய அழகான கவிதை யுவராணி ! நீங்கள் எனது வலைப் பூவை இந்த வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியது ஸ்வீட் சர்ப்ரைஸ் ! மிக்க மிக்க மிக்க நன்றி !

    ReplyDelete