Friday, November 16, 2012

ஒற்றைப் பார்வை

உன்  ஒற்றைப் பார்வை ....(உவகை )

என்னவனே ...
உன் கடைக்கண் 
ஒற்றைப் பார்வை 
என்னை  இம்சிக்கவைக்கிறது .

இப்போதெல்லாம் 
இரவிற்கும்  பகலிற்க்குமான 
வேறுபாடு புரிவதில்லை.

என் செவியில் 
வழிந்தோடும் -உன் 
வார்த்தைகள் 
உணவை மறுக்கிறது.

காட்ச்சிப்படுத்திய  
உன்மேனியால்
கண்கள்  உறங்க 
மறுக்கிறது.

உன் நெடிய 
மூச்சுக்காற்று 
என் உடலை 
சூடேற்றுகிறது .

எல்லை மீறாத 
உன் தொடுகை 
வசந்தத்திற்கான
வாசலை திறந்துவிடுகிறது .

அன்பனே ...
உன் இனிய 
நினைவுகளே 
என்னை  உவகை 
கொள்ளவைக்கிறது  .


     மனிதம்  பேசும் விளங்கு என்றார்  ஒரு மானுடவியல்  அறிஞ்சர்  இன்றைய மனிதன் சிந்திக்கிறானா  உண்மையில் புரியவில்லை  காரணம்  பலவேறு  வாழ்கை குறித்தான  போராட்டங்கள்  எய்ச்சுகள் , ஏமாற்றுகள் , வன்புணர்ச்சிகள்  இப்படி  எத்தனையோ  முரன்பபாடான செயல்கள்  இவற்றிக்கு காரணம் என்ன  புரிதல்  இன்மை  அடுத்து சிந்திகாமை அடுத்து  எதையும்  கேள்வி கேட்க தெரியாமை  அல்லது அளவு கடந்த அச்சம்  இவைகளை  நீக்கி  சிந்திக்க தொடங்கினால்  மனிதம்  மனிதான தொடரும்  தொடருவதற்கான  பணிகளை  தொடங்குவோம் .சரி இன்றைய  நமது  விருந்தினர்களை   பார்ப்போமா ?

       ஆலிங்கனா  அப்படின்னு ஒரு பதிவு  பாருங்களேன் பல செய்திகள் சொல்லுது .http://manavili.blogspot.in/2012/10/03.html
 
       நுகத்தடி மாடுகள் என்று  ஒரு பதிவு நேரம் இருப்பவர்கள்  போய் பார்க்கலேமே http://rishaban57.blogspot.com/2010/03/blog-post_21.html

       ஊடலும்   கூடலும்  என அழகான  இலக்கியம் சார்ந்த பதிவு  இன்றைய  இணையதளங்களில்  சங்ககால  காதலை  இளைய தலைமுறைக்கு  அறிமுகப் படுத்தும் போதுதான் காதலை  முறையாக  புரிந்து கொள்ள இயலும் என  நான் எல்லோரிடத்தும் சொல்லுவதுண்டு   அதுபோல வள்ளுவத்தில் இன்பத்துப் பாலை  முழுமையாக படிக்கும் பொது காதல்  உணரப்படும்  அதுபோலவே இந்த பதிவும்   பாருங்களேன் http://kovaimusaraladevi.blogspot.in/2012/10/blog-post_3.html

     எனக்கு எழுபது உனக்கு இருபது கைபேசி பயங்கரம்ன்னு  ஒரு பதிவு  கைபேசி   பலவேறு சிக்கல்களை  உண்டாக்குவதையும்  பெண்கள்  பாதிக்கப்  படுவதையும்  விளக்குகிறது  http://oosssai.blogspot.com/2012/11/blog-post_14.html

       பாருங்க  தமிழ் நாட்டில்  பிறந்த தமிழர்கள்  தமிழில்  என்ன இருக்கிறது என  கேட்கிற  அவலமும் இருக்கிறது   பாவம் அவர்கள் தமிழையும்   படிப்பதில்லை சொன்னாலும் புரிந்து   கொள்வதில்லை   தீந்தமிழில்  உள்ள சிறப்புகளை  அழகுற விளக்குகியது ஒரு வலைப்பூ  தமிழர்கள்  எல்லோரும் படிக்க வேண்டிய  சிறந்த பதிவுகளில்   இதுவும் ஒன்று http://valavu.blogspot.in/2012/11/1.html

    உயிர்வாதை  என ஒரு பதிவு   வள்ளுவர்  கொல்லாமையை  அழகுற பதிவு செய்து உள்ளார் கொல்லானை   புலாலை மறுத்தானை ..... உலகு எல்லாம் தொழும்  என்கிறார் அதுபோல ஒரு  கட்டெறும்பை  தவறுதாலாக மிதித்துவிட   அதற்க்கு வருந்து கிறார்  http://vimalann.blogspot.in/2012/03/blog-post_25.html

     இவரின் கவிதைகள்  பலரால் விரும்பப் படுகிறவை  தன்னுணர்வுக் கவிதைகளும் சில இடங்களில்  ஈழம்  பற்றிய   கவிதைகளும் இடம்பெறும்  நல்ல எழுத்து ஆளுமை  இது  யாழ்  மண்ணின்  சிறப்பன்றி  வேறல்ல  பாருங்க  http://kuzhanthainila.blogspot.in/2012/10/blog-post.html

     எண்ணத்துளிகள்  அப்படின்னு  ஒரு தலைப்பில்  இடுகை  இன்றைய  விரைவு உலகத்தில்  பலவேறு போராட்ட  நிலையல்  உள்ளம் இருப்பு கொள்ளாமல்  சில நேரம்  சங்கடப் படுவது உண்டு  அந்த நேரத்தை எப்படி சிறப்பாக பயன் படுத்திக்  கொள்ளுவது என விளக்குகிறது  பாருங்க http://amaithicchaaral.blogspot.com/2012/10/blog-post.html

    கிணற்றுத்தவளை  அபாடின்னு  ஒரு  வலைப்பூ  பாருங்க  பழைய அழகிய  பாடலை நமக்கதருகிறார்  உள்ளத்தில் ரீங்கமிடும் பாடல் கேட்க வேண்டுமா  http://asokarajanandaraj.blogspot.in/2012/10/blog-post_31.html

   சுற்றுலா   என்றாலே எல்லோருக்கும் இனிமைதான்  இவரின் சுற்றுலாவை அழகுற பதிவு  செய்து இருக்கிறார்   இது  உள் நாட்டு  சுற்றுலா  http://venkatnagaraj.blogspot.com/2012/11/blog-post_7.html

            தொலைத்தவை எத்தனையோ  என வின கேட்டு ஒரு பதிவு  பழைமையை நாம் மறந்துதனே போனோம்  பாருங்க நினைவு படுத்துகிறார்.http://kovaikkavi.wordpress.com/2012/11/03/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-8/


     கணினி பிரச்சனைகளுக்கு தீர்வு  என ஒரு பதிவு  உண்மையில் கனியை பயன் படுத்துகிறவர்கள் தெரிந்து கொள்ள கூடிய செய்திகள் http://www.anbuthil.com/2012/11/7.html

சூழல் கப்போம்ன்னு  ஒரு இடுகை  உண்மையில்  பாராட்ட வேண்டும்  பெண்கள் ரொம்பவும்  சிறந்த  செய்திகளை தருகிறார்கள்  பாருங்களேன் http://nigalkalam.blogspot.in/2012/10/6_17.html

    உறவு களே  வணக்கம் உங்களின் ஆதரவோடும் ஐயா  சீனா  அவர்களின்  முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய  உதவியுடன் இந்த  பணி  தொடருகிறது....நாளை  சந்திப்போமா ?

பணிவான  நன்றி ....

தமிழன்புடன் 
மலாதி .

26 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நிறைய எழுத்துப்பிழைகள்... திருத்திக்கொள்ளுங்களேன்... நன்றி...

    ReplyDelete
  3. அனைத்தும் நல்ல தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    tm1

    ReplyDelete
  4. உன் ஒற்றைப் பார்வை .... உவகையாய் அறிமுகப்படுத்திய
    உகந்த தளங்களுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. எனது வலைப்பூவினையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி மாலதி.

    ReplyDelete
  7. எல்லாமே நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. என்னுடைய பதிவை சுட்டிப் பாராட்டியமைக்கு நன்றி.உங்கள் ஆசிரியப் பணி சிறக்க என் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. வணக்கம் மாலதி.. எப்படியிருக்கீங்க.. இந்த வார ஆசியராய் சிறப்பாக செயல்பட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  11. ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்! கவிதை அருமை!
    நேரமின்மை, அவசரத்தால் சில எழுத்து பிழைகள் என நினைக்கிறேன்.
    அறிமுக படுத்திய அத்தனை பதிவுகளும் சிறப்பு!

    ReplyDelete
  12. எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி மாலதி. ஏனைய அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. எனது தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    தெரியப்படுத்திய தனபாலனுக்கும் நன்றி.

    ReplyDelete
  14. முதலில் கவிதை மிக நன்றாக உள்ளது சகோதரி. இனிய வாழ்த்து.
    எனது வலையையும் அறிமுகம் செய்துள்ளீர்கள் மிக்க நன்றியும், மகிழ்வும்.
    இதை சகோதரர்தனபாலன் அறிவித்தார் அல்லது மாலையில் தான் பார்ப்பேன்.
    அவருக்கும் நன்றி.
    இதை முகநூலில் போட்டுள்ளேன்.
    மிக்க நன்றி மாலதி. அனைத்து அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்து.
    https://www.facebook.com/vetha.elangathilakam?ref=tn_tnmn#!/photo.php?fbid=4473919843290&set=a.1336357726198.2046607.1148741300&type=1&theater
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. கவிதை சிறப்பு சகோ.

    அறிமுக உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. அழகான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அவசரத்தில் வெளியிட்டுள்ளதால் சிற்சில எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே உள்ளன.

    என் கண்களில் பட்டவை ஒருசில கீழே கொடுத்துள்ளேன்.

    பிழைகளை சரிசெய்துவிட்டு, இந்த என் பின்னூட்டத்தையும் நீக்கிக்கொண்டால் மேலும் சிறப்பாக இருக்குமே!

    ======================
    //காட்ச்சிப்படுத்திய
    உன்மேனியால்
    கண்கள் உறங்க
    மறுக்கிறது.//

    ”காட்சிப்படுத்திய”
    என்பதே சரி

    “ச்” நீக்கப்பட வேண்டும்.
    =======================

    //மனிதம் பேசும் விளங்கு என்றார் ஒரு மானுடவியல் அறிஞ்சர் //

    விளங்கு = தவறு
    விலங்கு = சரியான சொல்

    அறிஞ்சர் = தவறு
    அறிஞர் = சரியான சொல்

    =====================

    //எய்ச்சுகள் , ஏமாற்றுகள் , வன்புணர்ச்சிகள் இப்படி எத்தனையோ முரன்பபாடான //

    எய்ச்சுகள் = தவறு
    ஏய்ச்சுகள் என்று இருக்கலாம்.

    முரன்பாடான = தவறு
    முரண்பாடான = சரி

    ==================

    ”சிந்திகாமை” என்பது
    சிந்திக்காமை என இருக்க வேண்டும்.

    ==================
    >>>>>>>>>
    VGK
    >>>>>>>>>

    ReplyDelete
  18. மேலும் சில திருத்தங்கள்.

    //எண்ணத்துளிகள் அப்படின்னு ஒரு தலைப்பில் இடுகை இன்றைய விரைவு உலகத்தில் பலவேறு போராட்ட நிலையல் உள்ளம் இருப்பு கொள்ளாமல் சில நேரம் சங்கடப் படுவது உண்டு //

    போராட்ட நிலையல் = தவறு
    போராட்ட நிலையில் = சரி
    ==========================

    // கிணற்றுத்தவளை அபாடின்னு ஒரு வலைப்பூ பாருங்க பழைய அழகிய பாடலை நமக்கதருகிறார் உள்ளத்தில் ரீங்கமிடும் பாடல் கேட்க வேண்டுமா //

    அபாடின்னு???? [அப்படின்னு]
    “கிணற்றுத்தவளை” என்று .......
    அதை மாற்றலாம்.

    =======================

    //தொலைத்தவை எத்தனையோ என வின கேட்டு ஒரு பதிவு பழைமையை நாம் மறந்துதனே போனோம் பாருங்க நினைவு படுத்துகிறார்//

    ”வின” = தவறு
    ”வினா” என்று இருக்க வேண்டும்.

    பழைமை?? = பழமை

    மறந்துதனே?? = மறந்து தானே

    ===================

    //கணினி பிரச்சனைகளுக்கு தீர்வு என ஒரு பதிவு உண்மையில் கனியை பயன் படுத்துகிறவர்கள் தெரிந்து கொள்ள கூடிய செய்திகள்//

    முதல் கணினி சரியாகும்.

    கனி என்பது பழமாகும். சாப்பிடத்தான் பயன்படும். ;)))))

    இரண்டாவது வரியில் ”கனியை” என தவறாக அல்லவா உள்ளது. ”கனியை” ”கணினி”யாக மாற்றி விடுங்கள்.

    =========

    //சூழல் கப்போம்ன்னு ஒரு இடுகை உண்மையில் பாராட்ட வேண்டும் பெண்கள் ரொம்பவும் சிறந்த செய்திகளை தருகிறார்கள் பாருங்களேன்//

    சூழல் ”கப்போம்ன்னு” என்பதற்கு பதில் “கற்போம்ன்னு” என்று மாற்றவும்.

    ========================

    VGK

    ReplyDelete
  19. //பணிவான நன்றி ....
    தமிழன்புடன்
    மலாதி .//

    உங்கள் பெயர்

    மா ல தி

    தானே??????

    ஏன்

    ம லா தி

    என அதிலும் ஓர் எழுத்துப்பிழை?????

    எழுத்துப்பிழைகள் ஓரளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதிகமாக இருந்ததால் சுட்டிக்காட்டி விட்டேன்.

    உடனே என்னை சுட்டுத்தள்ளி விடாதீர்கள், கோபத்தில்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  20. நன்றி எனது தளத்தின் அறிமுகத்திற்கு/

    ReplyDelete
  21. கவிதையுடன் வந்து கலக்கலான பல தள அறிமுகங்கள்! அனைத்தும் பயனுள்ளவை மிக்க நன்றி!

    ReplyDelete
  22. நன்றி சகோதரி. சிறு எழுத்து பிழைகளுடன் தொழில்நுட்ப செய்திகளை பகிரும் என்னுடைய அன்பைத்தேடி தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  23. என்னை அறிமுகம் செய்த தங்கள் பேரன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  24. கவிதை நன்றாக உள்ளது சகோதரி...

    அறிமுகங்கள் எல்லாமே நல்ல அறிமுகங்கள்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  25. நன்றி மாலதி.....பலபேருடன் நானும்.மிக்க மிக்க மகிழ்ச்சி !

    ReplyDelete
  26. கவிதை அருமை. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete