ஊழல் செய்து
கொண்டே ஊழலை
ஒழிப்போம் என
நீட்டி முழக்குவதும் .
வேளாண் தொழிலை
நாசம் செய்துவிட்டு
பசுமை புரட்சி பற்றி
பேசி அழிப்பதும் .
உள்நாட்டு
தொழில்களை
புதைத்துவிட்டு
அந்நிய நிறுவனங்களை
ஆதிக்கம் செய்ய வைப்பதும் .
நச்சுக் கழிவுகளை
கொண்டுவந்து
சேர்த்துவிட்டு
தூய்மைபற்றி
வாய் கிழியப்
பேசுவதைப்பார்த்து
சிரிப்பாய் ... சிரிக்கத்
தோன்றுகிறது.
அன்பு உறவுகளே பணிவான வணக்கம் இல்லத்தில் உள்ளத்தில் நலந்தானே நலனே விழையட்டும் (ஆமா இப்ப எழுதுவீங்க அனால் தவறு நெறைய வருது இல்ல நீங்கள் முணுமுணுப்பது எனது காதுகளில் விழுகிறது விரைவு கருதி பிழை திருத்தம் செய்ய இயலவில்லை மன்னிப்பீராக )நான் பலவேறு வேலைகளுக்கு இடையே நினைத்தது என்னவோ மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அனால் முடிய வில்லை என்பது வேறு செய்தி வந்த பிழைகளை பொறுத்து மன்னித்து அருள வேண்டுகிறேன் இனி அறிமுகத்தை தொடரலாம் ...
நாம் எல்லோரும் அரசியலில் வை . கோ என்று சொன்னாலே மிகசிறந்த மேடைப் பேச்சாளர் ஈழ விடுதலையில் நாடகம் ஆடாதவர் என கூறுவார்கள் அதேபோல வலைப்பதிவில் ஒரு வை .கோ பாருங்க உண்மையில் மனிதர் எப்போதும் கணினியின் பக்கத்தில் இருப்பாரோன்னு தோணுது உண்மையான ஈடுபாட்டுடன் கருத்தியலோ அல்லது பொருளியலோ நீண்ட இடுகை இருக்கும் எல்லா இடுகைக்கும் சென்று வாசித்ததை அழகாக பதிவு செய்து இருப்பார் அவரை பிரபல எடுகள்தான் அறிமுகப் படுத்த வேண்டுமா என்ன நாமும் அறிமுகப் படுத்துவோம் உண்மையில் இவருக்கு தனியாக அறிமுகம் தேவையா என்ன? இங்கே போய் பாருங்க http://gopu1949.blogspot.in/
கவிதை என்றாலே அதற்கென்று சிலர் இருப்பார்கள் அதுபோலத்தான் இவரின் கவிதைகள் எல்லாமே உயிரூட்டம் உள்ளவை நேரில் தனது இனிய காதலியிடம் பேசுவது போல இருக்கும் பாருங்களேன்http://www.panithulishankar.
இந்த காதல் படுத்தும் பாடு இருக்கிறதே அந்த இம்சை சொல்ல மாளாதவை அப்படின்னு அனுபவித்த்தவர்கள் சொல்லுகிறார்கள்http://
பருக பாருங்க இதும் கூட ஒரு காதல் கொட்டிக் கிடக்கிறது அதுமட்டும் இல்லை நான் தேடிக் கொண்டு இருந்த வலைப்பூ அதாவது நமது மரபு வழி கலையான ஆசனப் பயிற்சி செய்வது எப்படின்னு ஒரு பதிவு சிறப்பாக இருக்கிறது பாருங்க http://thamilkanini.blogspot.
இது கூட ஒரு கவிதை பற்றியது தான் இருந்தாலும் பல செய்திகளை உள்ளடக்கி இருக்கிறது http://appavithangamani.
இது சுற்றுலா பற்றிய ஒரு பதிவு சிறந்த படங்கள் பாருங்களேன்http://maduragavi.blogspot.in/
இது பாருங்க அரசியல் கொள்ளையர்கள் பற்றி பேசுது ராபர்(ட்) வத்ரா ஒரு புது யு(மு)கம் அப்படின்னு ஒரு பதிவு நெறைய செய்திகள் தேடி தருகிறார் http://erithazhal-vasan.
இவர் மிகசிறந்த ஒரு கட்டுரை பதிவு செய்து இருக்கிறார் உண்மையில் இதற்காக பாராட்டியே ஆகவேண்டும் பணிவான பாராட்டுகள் ஐ நா ஈழத் தமிழர் பிரச்சனையில் துரோகம் இழைத்ததா என கேட்டு இங்கேhttp://www.adrasaka.com/2012/
அந்தமானில் இருந்து ஒரு வலைப்பூ உண்மையில் பாராட்ட வேண்டும் தமிழர்களின் உயரிய பண்பாட்டை மறவாமல் இருக்கும் சிறந்த பதிவுகள்http://andamantamizhosai.
இது பாருங்க எல்லா செய்திகளையும் கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் தருது தன்னம்பிக்கை பற்றி பேசும் பகுதிக்கு போய் பாருங்கhttp://otakoothan.blogspot.in/
அன்பான உறவுகளே வணக்கம் உங்களுக்காக இன்னுமொரு இடுகை தர இருக்கிறேன் அதுவரை பொறுத்தருளவும்நாளை சிந்திப்போம்
அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் உதவியவர்களுக்கும் நன்றி பாராட்டுகள்
தமிழன்புடன்
மாலதி
சோதனை மறுமொழி
ReplyDeleteஅறியாத சில தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பலவேறு வேலைகள் இருந்தாலும் பல தளங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
tm 1
திண்டுக்கல் தனபாலன்November 17, 2012 5:37 PM
ReplyDelete//வணக்கம் ஐயா...//
வாங்கோ! வணக்கம் திண்டுக்கல் திரு. தனபாலன் சார்!
தாங்கள் என் பதிவுக்கு வருகை தந்தாலே, அந்தக்காலத்தில் என் வீட்டுவாசலுக்கு வரும் குடுகுடுப்பாண்டி ஞாபகமே எனக்கு வருகிறது.
கோபித்துக்கொள்ளாதீர்கள், அதுபோன்று வரும் குடுகுடுப்பைக்காரரை
எனக்கு மிகவும் பிடிக்கும்.
“நல்ல காலம் பொறக்குது [பிறக்குது]
நல்ல சேதி [செய்தி] வருகுது [வருகிறது]”ன்னு
தான் அவரு சொல்லுவார்.
நான் பொய் சொல்லவில்லை.
உங்களுக்கு சந்தேகமானால் என் இந்தப்பதிவுக்குச் சென்று பாருங்கோ / படியுங்கோ / கருத்துச்சொல்லுங்கோ:
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_3486.html
//உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...//
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...//
அட்டா! பார்த்தீங்களா!! ஒரு நல்ல சேதியைக்கொண்டாந்து கொடுத்து அசத்திட்டீங்க!!!
திண்டுக்கல் என்றாலே பிரபலமான “பூட்டு” ஞாபகம் தான் எனக்கு வருகிறது.
ஆனால் திண்டுக்கல்காரராகிய உங்களால் எதையுமே பூட்டி ரகசியமாக வைக்கவே முடிவது இல்லை.
திறந்த பூட்டுபோலவே பரந்த மனத்துடன் உள்ளீர்கள்.
இதுபோலவே எனக்கு ஒரு கோவைக்காரர் பேருதவி செய்து வந்தது தான் என் நினைவுக்கு வருகிறது.
நான் என் பதிவுகளில் கொடுத்த விருதுகளையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் தளங்களுக்குச் சிட்டுக்குருவி போல .. அல்ல .. அல்ல .. பைங்கிளிபோல அழகாகப் பறந்து சென்று முதல் தகவல் அளித்து வந்தார்கள்.
பசுமையான அந்த பைங்கிளியின் நினைவுகள் என் நெஞ்சத்தில் இன்றும் நிறைந்துள்ளது. ;)))))
”மறக்க மனம் கூடுதில்லையே .....!”
இதோ அதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
மறக்க மனம் கூடுதில்லையே
பகுதி 1 / 4
பைங்கிளி +
திறந்த பூட்டு
ஆகிய இருவரின்
சேவைகளுக்கும்
தலை வணங்குகிறேன்.
நன்றி கூறிக்கொள்கிறேன்.
என்றும் நன்றி மறவாத.....
தங்களிடம் பிரியமுள்ள ....
VGK
// நாம் எல்லோரும் அரசியலில் வை.கோ என்று சொன்னாலே மிகசிறந்த மேடைப் பேச்சாளர் ஈழ விடுதலையில் நாடகம் ஆடாதவர் என கூறுவார்கள்
ReplyDeleteஅதேபோல வலைப்பதிவில் ஒரு
வை.கோ பாருங்க!
உண்மையில் மனிதர் எப்போதும் கணினியின் பக்கத்தில் இருப்பாரோன்னு தோணுது
உண்மையான ஈடுபாட்டுடன் கருத்தியலோ அல்லது பொருளியலோ நீண்ட இடுகை இருக்கும் எல்லா இடுகைக்கும் சென்று வாசித்ததை அழகாக பதிவு செய்து இருப்பார்.
அவரை பிரபல ஏடுகள்தான் அறிமுகப் படுத்த வேண்டுமா என்ன!
நாமும் அறிமுகப் படுத்துவோம் உண்மையில் இவருக்கு தனியாக அறிமுகம் தேவையா என்ன?
இங்கே போய் பாருங்க http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html//
ஆஹா! பிரபல ஏடுகளின் அறிமுகத்தை விட, வலைச்சர ஆசிரியர்கள் பலரும் அடிக்கடி என்னையும் என் தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்வதை என் பாக்கியமாக எண்ணி மகிழ்கிறேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியோ நன்றிகள் Ms. மாலதி அவர்களே!
சந்தோஷம், ஆனந்தம்!
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!
>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>
//சிரிப்பாய் ... சிரிக்கத்
ReplyDeleteதோன்றுகிறது.//
எனச்சொல்லி ரோஸ் கலரில் ஆரம்பத்தில் எழுதியுள்ள வரிகள் அத்தனையும் சிந்திக்க வைக்கின்றன.
சமுதாய விழிப்புணர்வுக்கான பகுதியாக அனைவருக்கும் அளித்துள்ள அவைகளுக்கு என் பாராட்டுக்கள்.
>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>
இன்றைய தங்களின் அறிமுகங்கள் அத்தனையும் அருமையோ அருமை.
ReplyDeleteஅனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.
பொறுமையாகப் பகிர்ந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் அன்புடன்
VGK
தாங்கள் அறிமுகப்படுத்தும் அனைத்து அறிமுகங்களும் அருமை! பணி சிறக்க வாழ்த்துக்களும், பகிர்வுக்கு நன்றிகளும்!
ReplyDeleteஅறிமுகப்படுத்தியுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுகங்கள் அட்டகாசம் !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
பாராட்டியே ஆகவேண்tஇய பல பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteபயனுள்ள பலதளங்கள். சில புதியவை.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மாலதி தொடக்கம் முதல் கவனித்து வருகின்றேன். உங்கள் தேர்வு மிகுந்த ஆச்சரியம் தந்தது. தொடக்க வரிகள் எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியது.
ReplyDeleteநல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பகிர்வுகள் அருமை.
ReplyDeleteமாலதி அவர்களுக்கு,
ReplyDeleteவலைச்சரத்தில் "எரிதழலை' ஏற்றியமைக்கு மிக்க நன்றி.
சீனு சாரின் இந்த மேடை, வலையர்களுக்கான 'சங்கப் பலகை'.
அருமையான முதல் கவிதை படைப்பு வாழ்த்துக்கள் உங்களின் ஆசிரியர் பணிக்கு ! அத்துடன் எத்தனை புதுமையான உறவுகளின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை . என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் உங்களுக்கு . தொடருங்கள் மீண்டும் வருவேன் .
ReplyDeleteதாமதமான வருகைக்கு மன்னிக்கவும். நன்றி எனது வலைசரத்தை அறிமுகம் செய்தமைக்கு. மற்ற அறிமுகங்களும் அட்டகாசம்
ReplyDelete