Monday, November 26, 2012

யுவராணி தமிழரசன் ரிஷபனிடம் பொறுப்பினை ஒப்ப்டைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற யுவராணி தமிழரசன் தான் ஏற்ற பொறுப்பினை சரியாக நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள் : 7

அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 65

அறிமுகப் படுத்திய பதிவுகள் : 65

பெற்ற மறுமொழிகள் : 242

யுவராணி தமிழரசனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். 

சென்று வருக யுவராணி தமிழரசன் 

நல்வாழ்த்துகள் யுவராணி தமிழரசன் 

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைவு தெரிவித்த நண்பர் ரிஷபன அவர்களை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

இவர் இயற்பெயர் ஸ்ரீநிவாசன். புனைப் பெயர் ரிஷபன். சிறுவயது முதலே வாசிப்பில் ஈடுபாடு. எழுதத் துவங்கி தமிழின் எல்லா வார, மாத இதழ்களிலும் படைப்புகளை  பிரசுரித்திருக்கிறார். பல போட்டிகளீல் பரிசுகளும் பெற்றிருக்கிறார். சிறுகதையில் அதிகம் நாட்டமுடையவர். வசிப்பது ஸ்ரீரங்கம். திருச்சியிலேயே வேலை. பாரத மிகுமின் நிலயத்தில் நிதி மற்றும் கணக்குப்பிரிவில் பணி புரிகிறார்.

நண்பர் ரிஷபனை ஆசிரியப் பொறுப்பினில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் ரிஷபன் 

நட்புடன் சீனா 


11 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. என் அன்புக்குரிய திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க
    வருக! வருக!! வருக!!!
    என இரு கரம் கூப்பி மகிழ்வுடன்
    மனதார வரவேற்று மகிழ்கிறேன்.

    அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  3. சென்றவார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் பணிகளைச் செவ்வனே செய்து முடித்து, வெளியேறும் செல்வி யுவராணி தமிழரசன் அவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  4. கடந்த ஒரு வார காலம் வலைச்சரத்தின் ஆசிரியையாக இருந்து நல்ல பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    இன்று முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகின்ற எங்கள் திருச்சிக்காரர் (ஸ்ரீரங்கம்) எழுத்தாளர் திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களை வரவேற்கிறேன்!

    ReplyDelete
  5. அன்பு நன்றி.. திரு. சீனா ஸார்.. திரு வை.கோ. ஸார்..

    சென்ற வாரம் சிறப்பாய் பதிவிட்ட யுவராணி தமிழரசன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த யுவராணி தமிழரசன் அவர்களுக்கும், அசத்த வரும் திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...
    tm2

    ReplyDelete
  7. சென்ற வார ஆசிரியர் யுவராணி அவர்களுக்குப் பாராட்டுகள்.

    இவ்வார ஆசிரியர் ரிஷபன் ஜிக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  8. ஒரு வாரகாலம் சிறப்புடன் எத்தனையோ வேலைப்பளுவுக்கிடையிலும் சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியாற்றிய யுவராணிக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா !!!

    ReplyDelete
  9. இந்தவாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்ற ரிஷபனுக்கு என் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா !!!

    ReplyDelete
  10. @வை.கோபாலகிருஷ்ணன்
    @தி.தமிழ் இளங்கோ
    @ரிஷபன்
    @திண்டுக்கல் தனபாலன்
    @வெங்கட் நாகராஜ்
    @மஞ்சுபாஷிணி
    தங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    இந்த வாரம் பொறுப்பேற்கும் ரிஷபன் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. சென்ற வாரம் பொறுப்பேற்று நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட, வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்திய யுவராணி அவர்களுக்கு பாராட்டுக்கள். ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete