Thursday, January 10, 2013

2518.சிரிக்க !ரசிக்க !வலிக்க .........




மேலே உள்ள வீடியோ பார்த்து சிரித்தீர்களா ... இன்று நான் படித்து படித்து வாய்விட்டு சிரித்த பதிவுகளை முதலில் பாப்போம்



பக்கி-லீக்ஸ். (உண்மையின் உரைகல்)

பெயரை பார்த்ததும் நான் சீரியஸ் பதிவர் போல என்று உள்ளே நுழைந்தேன், ஆனால் வடிவேலு,சந்தானம் ஸ்க்ரீனில் செய்யும் வேலையை இவர் எழுதியே 
செய்து விட்டார் .. படித்து பாருங்கள் சிரித்து மகிழ்வீர்கள் .. அதில் எனக்கு பிடித்தவை 


 RIZI என்னும் பதிவர் அரசியல்,நாட்டு நடப்புகள்,நகைச்சுவை என எல்லாவற்றையும் கலந்து எழுதி வருகிறார் இங்கே .அதுல எனக்கு பிடித்த நகைச்சுவை தொகுப்புகள் சில ...



புன்னகையே வாழ்க்கை

இங்கே தரமான பல பதிவுகள் பார்க்கலாம் .நல்ல நகைச்சுவைகளும் கிடைக்கும் அதில் 


இங்கே நண்பர் சிவக்குமார் பல நகைச்சுவை துணுக்குகள் தந்து சிரிக்க வைக்கிறார் ...அதில் 


நண்பர் பிரபு கிருஷ்ணா அவர்களின் வலைப்பூ இது .இங்கே கதை ,கவிதை,சமுகம்,சினிமா  என்ற பல தலைப்புகளில் பதிவுகள் எழுதி வருகிறார் .நம்ம இன்றைய தலைப்பு நகைச்சுவை தானே அதுனால கட்டிங் கவிதைகள் என்ற பதிவை பாருங்கள்! அட இவரு மக்கள் என் பக்கம் சத்யராஜ் ரசிகர் போலங்க இதையும் பாருங்க கடவுளாதல் 


நல்லா சிரிச்சீங்களா .. சரி இப்ப ஓவியங்கள் பார்க்க ரசிக்க போவோமா ..வாங்க 
இனிய ஓவியா


நண்பர் கலா குமரன் இந்த வலைதளைதில் பல ஓவியங்களை மிக அழகாக நமக்கு அறிமுகம் செய்கிறார் ..  எல்லாமே பார்த்து ரசிக்க வேண்டியவை அதில்

ஓவிய மேதை நார்மன் ராக்வெல் (Part1)



மேலும் நண்பர் கலாகுமரன் இனியவை கூறல் என்னும் துணை தளத்தில் பல தகவல்கள் தந்து அசத்தி வருகிறார் ..



பூனைக்கு மணி கட்டுவது யார் என்று சொல்லுவாங்க ஆனா இவர் பூனை சிறை சென்ற செய்தி துணுக்கு சொல்லுறார் இவரின் நண்பர்கள் உலகத்தில் பல்சுவை துணுக்குகள் நறுக்கென்று இருக்கிறது ரசிக்கலாம் வாங்க ..

நண்பர் இளா என்கிற ராஜா வேடிக்கையாய் ஒரு விளையாட்டு விளையாட அழைக்கிறார். படம் பார்த்து கதை சொல்லனுமாம் நன்றாக தான் இருக்கு இந்த புதிர்போட்டி இன்று நானும் விடை சொல்லி இருக்கேன் சரியான்னு போயி பாக்கணும் ......அப்ப நீங்க ...........


இன்று சிரித்தோம்,ரசித்தோம் இப்ப வலிமிகுந்த என் கவிதை ஒன்றை மீள் பதிவாக இன்று என் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்.இது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தின் பிரதிபலிப்பு இதில் படிந்து இருக்கும் ரத்தம் மட்டுமே கற்பனை மற்றவை நிஜம் .........

கொலை +தற்கொலை =சிறை

சாக துணிந்த ஒரு மிடில் கிளாஸ் மனசாட்சியின் வலியை கவிதையாக
சொல்லி இருக்கேன் ...


அன்பு நண்பர்களே ,அருமை சகோதரர்களே இன்றைய அறிமுகங்கள் பலரை சென்று அடைய வாக்களியுங்கள் ,மேலும் அவர்களின் எழுத்தாற்றல் புத்துணர்வு பெற அவர்களின் தளத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். இன்றைய அறிமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது யாரை என்றும் கருத்தில் இங்கு சொல்லுங்கள் .இதுவே வலைச்சரத்திற்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும் ...............


மீண்டும் நாளை சந்திபோமா ............ 



19 comments:

  1. வீடியோ ரொம்ப நல்லா இருக்கு......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. வணக்கம்
    ரியாஸ்(அண்ணா)


    இன்று வலைப்பூவில் சற்று மாறுபட்ட வலைப்பதிவாக அமைந்துள்ளது வாய்விட்டுச் சிரித்தாள் நோய் விட்டுப்போகும் என்பார்கள் அதைப்போன்று நைகச்சுவை தளங்கள் அனைத்தும் அருமை அருமை வாழ்த்துக்கள்,அண்ணா தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அறிமுகத்துக்கு நன்றி நண்பரே.

    மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. கொலை +தற்கொலை = சிறை

    அன்பு நண்பரே மேலேயுள்ள தங்கள் படைப்புக்குச்செல்ல முடியவில்லை.

    வலைச்சரத்தில் இணைப்புக்கொடுக்கும் போது ஏதோ தவறாகக் கொடுத்துள்ளீர்கள்.

    இருப்பினும் விடுவேனா? வேறு ரூட்டில் போய்ப் பார்ப்போமில்லே!

    மீண்டும் பிறகு நேரம் கிடைக்கும் போது வருகை தருவேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  5. இன்றைய பகிர்வு கொஞ்சம் வித்யாசமா கொடுத்திருக்கீங்க. நல்லா இருக்கு

    ReplyDelete
  6. அனைத்தும் வாசிக்க ,ரசிக்க,சிரிக்க வைக்ககூடியது . நன்றி

    ReplyDelete
  7. இன்று தங்களால் வலைச்சரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்ள் + பாராட்டுக்கள்.

    உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    >>>>>>>


    ReplyDelete
  8. சிரிக்க! ரசிக்க ! வலிக்க .... என்ற தலைப்பும் அழகு தான்.

    முதல் காணொளி “
    குல்லா வியாபாரியும் குரங்குகளும்” என்ற, சிறுவயதினில் படித்த கதையை நினைவூட்டின.

    மகிழ்ச்சியாக இருந்தது.

    >>>>>>>

    ReplyDelete
  9. பொதுவாக கவிதைகளைப் பொறுமையாகப் படிக்கவோ,

    அதன் பொருளைப்புரிந்து கொள்ளவோ, ரஸிக்கவோ நான் பெரும்பாலும் விரும்புவது இல்லை.

    பெரும்பாலானவர்கள் கவிதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதி அவர்கள் நேரத்தை வீணாக்குவதுடன் நம் நேரத்தையும் வீணாக்குகிறார்கள், என்ற எண்ணமும் எனக்கு உண்டு.

    நான் கவிதையே இயற்றத் தெரியாதவனும் அல்ல. எதிலும் ஒரு கவித்துவமும் நகைச்சுவையும் கலந்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன். அதே சமயம் படிப்பவர்களுக்கும் உடனடியாக அது புரிய வேண்டும். என் சிற்றறிவுக்கு எட்டாதவை ஏதும் கவைதையே அல்ல என்பதில் நான் உறுதியாக உள்ளவன்.

    அதற்காக நான் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வெறுப்பவனும் அல்ல.

    தமிழ்நாட்டின் பிரபல கவிஞர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து, அவர்களால் ON THE SPOT தலைப்பு கொடுக்கப்பட்டு, தலைப்புக்கேற்றபடி நானும் கவிதை எழுதிக்கொடுத்து, மிகவும் பாராட்டுக்களும் கரவொலிகளும் பெற்றவன் தான், நான்.

    அந்த நாட்கள் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன.

    சுமார் கால் மணி நேரததிற்கு மேல் ஆயிரக்கணக்கானவர்களால் தொடர்ந்து கரவொலி எழுப்பப்பட்ட என் கவிதை ஒன்றும் இன்னும் என் நினைவினில் பசுமையாக உள்ளது.

    ஒருசில அரசியல் காரணங்களால் நான் அதை இங்கு இப்போது எழுதி சுட்டிக்காட்ட விரும்பவில்லை..

    >>>>>>

    ReplyDelete
  10. ”கொலை + தற்கொலை = சிறை”{
    .
    என்ற தங்களின் படைப்பினை இன்று இப்போது போய் படித்து விட்டு வந்தேன்.

    அதை எழுதிய தங்களின் கரங்களைப்பற்றி என் கண்களில் மானஸீகமாக ஒத்திக்கொண்டேன்.

    எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    தினமும் என்னை உங்கள் பதிவுகள் பக்கம் இழுக்கும் உங்களுக்கு ஏதாவது ஒரு சிறிய எனிமா கொடுக்க வேண்டும் என்று தான் புறப்பட்டு உங்களின் வலைத்தளத்திற்குச் சென்றேன்.

    [எனிமா = பின்னூட்டம்.... ;)

    அதாவது இது ஒரு MEDICAL TERMS:

    பின் + ஊட்டம் = பின்னூட்டம்]

    ஆனால் என்னால் உங்களுக்கு ஏனோ தானோ என்று எனிமா கொடுக்க முடியவில்லை.

    ஐந்து ஆஸ்கார் விருதுகள் மன மகிழ்ச்சியுடன் கொடுத்து விட்டு வந்துள்ளேன்.

    தங்கள் கவிதைகள் நம் பிரபல பதிவர் “யாதோ ரமணி” சாருடைய ஒருசில படைப்புகள் போலவே மிகச்சிறப்பாகவே உள்ளன,

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    மீண்டும் நாளை சந்திப்போம்.

    அன்புடன்

    VGK

    -oOo-

    ReplyDelete
  11. வீடியோ பார்த்து சிரித்தேன். உங்கள் கவிதை படித்தேன். நீங்கள் இன்று குறிப்பிட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வணக்கம்,
    தங்கள் வலைச்சரத்தில் "நண்பர்கள் உலகத்தை" அறிமுகபடுத்தியதற்கு நன்றி! புதிய பதிவர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்!

    - நண்பர்கள் உலகம் குழு

    ReplyDelete
  13. காணொளி ரசிக்கும்படி இருந்தது. உங்களின் நியாயமான கருத்து சரியே!,புது பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும்

    ReplyDelete
  14. அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  15. எங்கள் அன்பு ஐயா இன்று இரண்டு தவறுகள் நடந்து விட்டது ஒன்றை நீங்க சுட்டி காட்டினீர்கள் மற்றொன்றை என் அண்ணன் சுட்டிக்காட்டினார்
    இரண்டையும் சரி செய்துவிட்டேன் நன்றி நன்றி நன்றி


    கவிதை ரசித்து படித்து நீங்கள் கொடுத்து உள்ள ஊக்கம் மறக்க முடியாத ஆஸ்கர் தான் ஐயா ...
    இங்கே அறிமுகம் ஆகியுள்ள புதிய பதிவர்களே நீங்கள் பதிவுலகில் வெற்றி பெற மிக எளிய வழி உள்ளது ..
    எங்கள் ஐயாவின் எழுத்துக்கள் படிங்க படிங்க படிங்க அவ்வளவுதான் போதும்
    நீங்கள் விரும்பும் ஒளிவட்டம் உங்களை தொடர்ந்து வரும் ...

    நல்ல எழுத்துக்களை வசித்து வந்தால் தான் நல்ல எழுத்துக்கள் எழுத முடியும்
    சுவர்சியமனத்தை தானே வாசிக்க முடியும் பதிவுலகில் பல சுவாரசியங்கள் ஒளிந்து உள்ளன.ஐயாவின் எழுத்துகள் மின்னிக்கொண்டு உள்ளன ...

    நான் மிகவும் ரசித்து படிக்கும் நண்பர் ரமணி அவர்களோடு என்னை ஒப்பிட்டு என்னை கௌரவ படுத்திய ஐயாவுக்கு நன்றிகள் கோடி

    ReplyDelete
  16. வலைத்தளங்களில் ஓவியத்திற்கான பங்கீடு மிகக்குறைவே. ஓவியத்திற்கான வரவேற்பும் குறைவாக இருப்பதாக உணர்கிறேன். வலைச்சரத்தின் மூலமாக முதன் முதலில் அந்த குறை நிவர்த்திக்கப்பட்டதாக உணர்கிறேன். ஓவியத்தை நாம் உணரும் வழியில் ஏன் பிறரையும் ரசிக்க அழைக்க கூடாது என்ற எண்ணத்தினாலேயே “இனிய ஓவியா” துவங்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன் நண்பர் ரியாஸ் அகமது மற்றும் வலைச்சரத்திற்கு எனது இதயபூர்வமான நன்றிகள்!

    இத்தோடு இனியவை கூறலையும் பகிர்ந்து... இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளீர்கள்!!
    <>

    ReplyDelete
  17. என் அன்புகுரிய நண்பரே!
    வலைச்சர ஆசிரியரே!!

    இன்று தங்களின் வலைச்சரத்தில் ஓவியங்களைப்பற்றி பேசியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

    முறைப்படி நான் கற்காவிட்டாலும் எனக்கும் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

    என்னுடைய சில சிறுகதைகளை நான் வரைந்த ஓவியங்க்ளுடன் வெளியிட்டதும் உண்டு.

    அவற்றில் ஞாபகத்தில் வந்த ஒருசில இணைப்புகள் மட்டும் இதோ தங்கள் பார்வைக்காக:

    ooooo

    1]

    http://gopu1949.blogspot.in/2011/10/1-of-4.html

    மனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4

    என் ஓவியத்துடன் கூடிய காதல் காவியம்

    ooooo

    2]

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_09.html

    ஏமாற்றாதே ஏமாறாதே

    ooooo

    3]

    http://gopu1949.blogspot.in/2011/07/6.html

    கலைகளிலே அவள் ஓவியம்

    ooooo

    4]

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html

    கொட்டாவி

    ooooo

    5]

    http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_26.html

    சகுனம் பகுதி 1 / 2

    ooooo

    6.

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html

    வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி
    மூ.பொ.போ.மு.க. உதயம்.

    முழுநீள நகைச்சுவை விருந்து.

    ooooo

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  18. அசத்தலான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. நன்றி நண்பரே அறிமுகத்திற்கு..


    தொடர்ச்சியா வலைச்சரத்தில் அறிமுகம்!

    ஹே எல்லாரும் கேட்டுக்குங்க நானும் பிரபல பதிவர்தான்!! (எப்பிடியெல்லாம் விளம்பரம் பண்ணவேண்டியிருக்கு ஸ்ப்ப்ப்பா..)

    ReplyDelete