Friday, January 18, 2013

பவளங்கள்!!!

இன்று ஒரு தகவல்!

பூமித்தாய் தோட்டம்.

இன்றைக்கு வயல்களெல்லாம் தூர்க்கப்பட்டு, விளை நிலங்கள் மாற்றப்பட்டு அங்கங்கே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன! ஆயிரம் காரணங்கள் விற்பவர்களால் சொல்லப்பட்டாலும் நம் தமிழ்நாட்டின் பசுமை விற்கப்படுகின்றது என்பது தான் உண்மை! மனதுக்குள் புழுங்கும் மக்களும் வலிமை படைத்த அரசாங்கமும் ஏதும் செய்யாத நிலையில் இயற்கையை நேசிக்கும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களில் திரு. சந்தானமும்  ஒருவர். இவர் தான் இந்த பூமித்தாய் தோட்டத்தின் உரிமையாளர்.



திருச்சி நகரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் குழுமணி சாலையில் உள்ளது மருதண்டாக்குறிச்சி. இங்குதான் "பூமித்தாய் தோட்டம்' அமைந்திருக்கிறது. "சாதி, மத, இன, மொழி, பால் வேறுபாடுகளைக் களைந்து மனிதநேயத்துடன், இயற்கை நேயத்துடன் வாருங்கள்' என நுழைவாயில் அழைக்கிறது
தோட்டத்தின் நடுவே கேரள பாணி கோயில் போன்று ஒரு சிறிய கட்டடம். உள்ளே சுவரில் இத்தோட்டத்தின் தத்துவம், கீழே இயற்கை குறித்த புத்தகங்கள் சில. வருகைதரும் எல்லோருக்கும் பிரசாதம் உண்டு- அது சில மரங்கள், செடிகளின் விதைகளாக!

"பூமித்தாய் தோட்டம்' குறித்து விளக்குகிறார் சந்தானம்:
"2009 இறுதியில் இந்த இடத்தை வாங்கி, இப்படியொரு தோட்டத்தை அமைக்கத் தொடங்கிய நாளில், "பூமி பூஜை போட்டு தேங்காய் உடைக்க வேண்டும்' என்றார்கள். நான் சுற்றிலும் 108 தென்னை மரக்கன்றுகளை நட்டுவைத்தேன்."

உலக நாடுகளுக்கெல்லாம் செல்லும்போது, சாதி-மத-இன-மொழி வேறுபாடுகள் அகன்றுவிடுகின்றன. மனிதகுலம் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. எனவே, இந்த மனித குலத்தை தொடர்ந்து உயிர்ப்போடு இருக்கச் செய்ய இயற்கைச் சூழல் அவசியம்.
இயற்கையை நேசிக்கும், அதற்காகப் பாடுபடும் இவரை  நாமும் கை குலுக்கலாம்!!

பவளம் [ CORAL]

முத்துக்களைப் போலவே பவளத்திற்கும் ஆழ்கடல் தான் வீடு. வெது வெதுப்பான நீர்ப்பகுதியில் இது விளையும். பவளப்பூச்சி என்ற கடல் வாழ் உயிரினம், கறையான் கூடு போன்று கட்டும் புற்றே பவளப் பாறைகள் ஆகும். பவளப்பூச்சிகளின் எச்சமும் பவழப்பாறைக்ளாக மாறுகின்ரன என்றும் சொல்லப்படுகின்றன. 


இரத்தம் போல் ஜொலிக்கும் பவளம் தான் சிறந்தது. சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் பவளப் பாறைகள் அழியத்  தொடங்கிய பிறகு, பவளத்தின் விலை மிகவும் உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போது இத்தாலி மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது. பவழத்தில் எந்த அமிலம் பட்டாலும் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது

இனி பவளங்களாய் ஜொலிக்கும் பதிவர்கள்....

சகோதரர் பாலகணேஷ், தலைப்பில் என்னவோ கல்யாண சமையல் சாதம் என்று போட்டு சாப்பாட்டு வகைகள், சாப்பிடும்போது கடை பிடிக்க வேண்டிய நாகரீகங்கள் என்று அருமையாக எழுதியிருந்தாலும் கடைசியில் வெறும் தோசையும் வற்றல் குழம்பும் சுட்ட அப்பளமுமே போதுமென்கிறார் தனக்கு!!

மகாத்மா காந்தியை கொன்றதற்கான காரணங்களையும் விளக்கங்களையும் வாக்குமூலமாக வெளி வந்ததை இங்கே பாஸ்கர் மூக்கன் தன் வலைப்பூவில் பதிவாக்கிக் கொடுத்திருக்கிறார்! நீங்களும் படித்துப்பாருங்கள்!

யந்திர வழ்க்கை வாழ்ந்து கொண்டு பனம் சம்பாதிக்கும் நாமெல்லாம்கூட வெறும் ரோபோக்களே என்று இங்கே யுவராணி பொட்டில் அடித்த மாதிரி தனது தெரிந்ததும் தெரியாததும் என்ற பதிவில் சொல்லுகிறார்!

வென்று விடச் சொல்லி விட்டு நீயே கொன்று போட்டால் எப்படி என்று தன் மனதிடம் கேள்விக்கணைகள் தொடுத்து, மயங்காதிரு மனமே என்று மனதிடம் ஆணையிடுகிறார் அதிசயா!

கும்பகோணம் கடப்பா எப்படி செய்வது என்று சாந்தி முத்துவேல் இங்கே அருமையாக சொல்லியிருக்கிறார்! விளக்கங்களும் தெளிவான புகைப்படங்களும் கூடுதல் போனஸ்!!

சாலை விபத்துக்களைப்பற்றியும் பாதுகாப்பு பற்றியும் சீனிவாசன் இங்கே அழுத்தந்திருத்தமாக பதிவு செய்திருக்கிரார்!

ஆனந்தராஜா விஜயராகவன் என்ற தனது பெயரை சுருக்கமாக ஆவி என்று மாற்றிக்கொண்டிருக்கும் இவர் அமெரிக்க வாழ்க்கை எந்தெந்த விதத்தில் எல்லாம் இனிக்கிரது என்று வரிசையாய் சொல்லி கடைசியில் இதயத்தை இந்தியாவிலேயே கழற்றி வைத்து விட்டால் அமெரிக்க வாழ்க்கை இனிக்கும்தான் என்று கூறுகிறார்!!

மாமியார் மருமகள் உறவு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தன் கருத்துக்களை இங்கு ஆணித்தரமாய்ச் சொல்லுகிறார் கோவை.மு.சரளாதேவி!

போஸ்டர் கலாச்சாரம் வேரூன்றி விட்டது நம் தமிழ்நாட்டில்! ஊருக்குப்போகும்போதெல்லாம் இப்படியுமா போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள் என்று பல சமயங்கள் ஆச்சரியபப்ட்டிருக்கிறேன். சகோதரர் தமிழ் இளங்கோவும் எது எதற்கெல்லாம் நன்றி கூறி போஸ்டர் அடிப்பது என்ற விதி முறை இல்லையா என்று இங்கே விளக்கமாகக் கேள்வி கேட்டிருக்கிறார்!!

புதிய பொருளாதாரக்கொள்கைகளால் இந்திய கலாசார சீரழிவு எத்தனை வேகமாக கரையான் போல இந்திய நாட்டை செல்லரிக்கின்றது என்பதை, அதன் உண்மைகளை தன் வலிவான எழுத்தால் நெஞ்சில் அறைவது போல இடித்துரைக்கிறார் ஜெயந்தி! படித்துப்பாருங்கள்!!

சைக்கிள் ஓட்டிய அனுபவங்களை இத்தனை நேசிப்புடனும் சுவாரஸ்யத்துடனும் சொல்ல முடியுமா? சொல்ல முடியும் என்பது தீபாவின் பிரவாகமாய்ப்ப்பொங்கி வரும் எழுத்து நடையிலிருந்து உணர முடிகிறது!

புதுவிதமான கறிமசாலாத்தூள் தயாரிக்கும் முறையை பாக்யலக்ஷ்மி இங்கு விளக்குகிறார்!

தனக்குத் தெரிந்தது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நல்ல மனதுடன் கார்த்திக் இங்கே ஹிந்தி பழகலாம் என்று அனைவரையும் அழைக்கிறார்!

10 ரூபாய்க்குள் சிறுநீரகக்கல்லுக்கு வைத்தியம் செய்து விட முடியும் என்று சொல்லி இங்கே அதற்கான மருத்துவ விளக்கத்தை விரிவாகச் சொல்லியிருக்கிறார் ஜே!

சளைக்காமல் சமையல்குறிப்புகளை விதம் விதமாகப் போட்டு அசத்தி வருகிறார் மேனகா! 700க்கும் மேல் பின் தொடர்வோர்களைக்கொண்டிருக்கும் இவர் இங்கே பொன்னாங்கண்ணிக்கீரை கடையல் செய்து காண்பிக்கிறார்!

54 comments:

  1. சிலர் தெரிஞ்ச பதிவர்களா இருந்தாலும் அவங்களுடைய பழைய பதிவுகளை படிக்க வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்களுக்கு
    உங்களுக்கு நன்றிகளும்...
    அறிமுகம் ஆனவர்களுக்கு
    வாழ்த்துக்களும்...
    சிலர் எனக்கு புதியவர்கள்...
    இப்போதே சென்று பார்க்கிறேன் அம்மா...

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்..... சிலர் தெரிந்தவர்கள். சிலர் தெரியாதவர்கள். தெரியாதவர்களுடைய தளங்களையும் பார்க்கிறேன்....

    த.ம. 2

    ReplyDelete
  4. பவள அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள் !
    பவள படம் மாதுளை முத்து
    போல ஜொலிக்கிறது.

    ReplyDelete
  5. அருமையாகத் தான் போய்க் கொண்டு இருக்கின்றன ஒவ்வொரு நாளும் !

    அடுத்த நாள் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டும் படியான

    பதிவு .....





    வாழ்த்துக்களுடன்,



    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  6. பவள அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. செந்நிறத்தில் ஜொலிக்கும பவளங்களின் அழகை ரசித்துப் படித்து வந்த எனக்கு நானும் ஒரு பவளமாக அறிமுகம் ஆனதில் கொள்ளை மகிழ்ச்சி. கோவை ஆவி, கோவை சரளா. யுவராணி என்று தெரிந்த பல நட்புகள் என்னுடன் அறிமுகம் பெறறுள்ளனர். மற்றவர்களை பார்க்கிறேன். அறிமுகம் பெற்ற அனைவருக்கும் என் இதயம் நிறை நல்வாழ்த்துகளும்... உங்களுக்கு என் மனம் நிறைய நன்றியும்.

    ReplyDelete
  8. என்னையும் உறவுகள் பலரையும் அருமையாக அறிமுகம் செய்த தோழிக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் பணி இனிதாக தொடரட்டும்

    ReplyDelete
  9. கிடைத்தற்கரிய பவளங்கள் இந்த முறை. அருமை

    ReplyDelete
  10. "பூமி பூஜை போட்டு தேங்காய் உடைக்க வேண்டும்' என்றார்கள். நான் சுற்றிலும் 108 தென்னை மரக்கன்றுகளை நட்டுவைத்தேன்."
    அடடா! என்ன ஒரு சீரிய சிந்தனை!
    முதலில் உருவாக்குங்கள்; பிறகு அழிவை யோசிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லுகிறாரோ திரு சந்தானம்?

    மிகச்சிறந்த அறிமுகம் பூமித்தாய் தோட்டமும் அதன் அமைப்பாளரும்.

    மின்னல் போல சிரித்து, எல்லாரையும்
    தன் எழுத்துக்களாலே சிரிக்கவைக்கும் திரு பாலகணேஷ் முதல் பவளமாக ஜொலிப்பது மிகவும் சிறப்பு.

    திரு இளங்கோ, கோவை மு. சரளா, யுவராணி இவர்களைத் தவிர மற்றவர்கள் தெரியாத பதிவர்கள்.

    உங்கள் மோதிரக் கையால் குட்டு பட்ட, பவள பதிவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. பவளம் தான் என் ராசிக் கல்லு. இன்றைய அத்தனை பவளக் கற்களுக்கும், அதை வலைச்சர மேடைக்கு கொண்டு வந்ததற்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து. மாலையில் தான் தெரியாத அறிமுகங்களைச் சென்று பார்க்க வேண்டும். இனிய நாள் அமையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. இன்றைய பவளங்கள் நிச்சயம் அரிதானவை தான்!!!
    பூமித்தாய் தோட்டம்: எல்லோருமே இப்படி எல்லோருமே இயற்கையை ஆராதிக்க தொடங்கிவிட்டால் பூமியே சொர்க்கமாகிவிடும்!!!

    இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  13. இன்று ஒரு தகவலாக “பூமித்தாய் தோட்டம்” பற்றிய தங்களின் கருத்து பசுமையாக எல்லோருடைய மனதில் பதிவதாக உள்ளது.

    //மனதுக்குள் புழுங்கும் மக்களும் வலிமை படைத்த அரசாங்கமும் ஏதும் செய்யாத நிலையில் இயற்கையை நேசிக்கும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களில் திரு. சந்தானமும் ஒருவர். இவர் தான் இந்த பூமித்தாய் தோட்டத்தின் உரிமையாளர்.//

    அவர் நீடூழி வாழ்க!

    >>>>>>>>

    ReplyDelete
  14. //திருச்சி நகரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் குழுமணி சாலையில் உள்ளது மருதண்டாக்குறிச்சி.

    இங்குதான் "பூமித்தாய் தோட்டம்' அமைந்திருக்கிறது. //

    ஆஹா, குழுமணி வரை ஒருசில சமயங்களில் சென்று வந்துள்ள நான் இதை எப்படித் தவற விட்டுள்ளேன்?

    தகவலுக்கு மிக்க நன்றிகள்.

    நினைத்தால் உடனே புறப்பட்டுச்செல்லும் தூரம் தான் என் வீட்டிலிருந்து. கட்டாயமாகச் செல்வேன். அங்கு போய் உங்களையும் நினைத்துகொள்வேன். நன்றி.


    >>>>>>>

    ReplyDelete
  15. //வருகைதரும் எல்லோருக்கும் பிரசாதம் உண்டு - அது சில மரங்கள், செடிகளின் விதைகளாக!//

    சூப்பர் பிரஸாதம் தான்.

    //எனவே, இந்த மனித குலத்தை தொடர்ந்து உயிர்ப்போடு இருக்கச் செய்ய இயற்கைச் சூழல் அவசியம்.

    இயற்கையை நேசிக்கும், அதற்காகப் பாடுபடும் இவரை நாமும் கை குலுக்கலாம்!!//

    நிச்சயமாக நேரில் சந்தித்து கை குலுக்குவேன்.

    >>>>>>>>>>

    ReplyDelete
  16. வணக்கம் அம்மா.மிக நீண்ட நாள் இடைவெளிகளின் பின் என்னை மீண்டு் பதிவுலகிடம் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.அறிமுகமான அனைத்து சொந்தங்களுக்கும் உனது வாழ்த்துக்கள்.சந்திப்போம்.

    ReplyDelete
  17. //முத்துக்களைப் போலவே பவளத்திற்கும் ஆழ்கடல் தான் வீடு.

    வெது வெதுப்பான நீர்ப்பகுதியில் இது விளையும்.

    பவளப்பூச்சி என்ற கடல் வாழ் உயிரினம், கறையான் கூடு போன்று கட்டும் புற்றே பவளப் பாறைகள் ஆகும்.

    பவளப்பூச்சிகளின் எச்சமும் பவழப்பாறைக்ளாக மாறுகின்றன என்றும் சொல்லப்படுகின்றன.//

    பவளத்தைப்பற்றிய மிகவும் அருமையான விளக்கம்.

    படத்தில் காட்டியுள்ள பவழங்களைப் பார்த்ததும் எனக்கு உடனே நினைவுக்கு வந்தது. “குண்டு மிளகாய்” தான்.

    மிளகாய் வற்றலில் விரல் நீளம் உள்ள மிளகாய் வற்றலைத்தவிர, குண்டு மிளகாய் வற்றல் என்று ஒரு வகை உண்டு.

    கொடமிளகாய் என்று பஜ்ஜி போட உபயோகிப்போமே, அதே போன்ற வடிவில் ஆனால் சின்ன வெங்காயம் போல சின்ன சைஸாக இருக்கும்
    இந்த “குண்டு மிளகாய் வற்றல்” என்பது.

    ஏனோ அதே போல உள்ளது தாங்கள் படத்தில் காட்டியுள்ள பவளங்கள். ;)

    >>>>>>>>>

    ReplyDelete
  18. //இரத்தம் போல் ஜொலிக்கும் பவளம் தான் சிறந்தது.

    சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் பவளப் பாறைகள் அழியத் தொடங்கிய பிறகு, பவளத்தின் விலை மிகவும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

    தற்போது இத்தாலி மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது.

    பவழத்தில் எந்த அமிலம் பட்டாலும் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது//

    கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி.

    பவழத்தைப்பற்றி பவழமாகச் செய்திகள் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    அதற்கு என் அன்பான பாராட்டுக்கள்.

    >>>>>>>>

    ReplyDelete
  19. பவளங்களாய் ஜொலிக்கும் பதிவர்களை அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    இதில் நம்
    திரு. பால கணேஷ் அவர்கள், செல்வி யுவராணி,
    Ms. கோவை மு.சரளா,
    என் அருமை நண்பரும் எங்கள் ஊர்க்காரருமான திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா மற்றும்
    Ms. மேனகா

    போன்றவர்களின் வலைத்தளங்களை அவ்வப்போது எட்டிப்பார்த்தது உண்டு.

    மற்றவர்களை இனிமேல் தான் சென்று பார்க்க வேண்டும்.

    இன்று அடையாளம் காணப்பட்டு பவளமாய் ஜொலித்திடும் அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.

    வலைச்சரத்தை மிக அழகாகத் தொடுத்துச்செல்லும் தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள் + நன்றிகள்.

    நாளை சந்திப்போம்.

    பிரியமுள்ள சகோதரன்
    வை. கோபாலகிருஷ்ணன்

    ooooooo

    ReplyDelete
  20. பதிவர்கள் அறிமுகம் செய்யும் சேவை தொடரட்டும். என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.


    அறிமுகங்கள் அனைத்தையும் பார்வையிடுகிறேன். :-)))

    ReplyDelete
  21. திரு சந்தானம் அவர்களைப் பற்றிய நினைவூட்டலுக்கு நன்றி.பவளம் பற்றிய தகவல்களுடன் ஜொலிக்கும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஒவ்வொன்றாய் வாசிக்கவேண்டும்.

    ReplyDelete
  22. இன்று ஒரு தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா.உங்களோடு சேர்ந்து நாங்களும் கைகுலுக்குகிறோம்.
    நிச்சயம் பூமித்தாய் தோட்டத்திற்கு ஒரு முறை சென்று வரவேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.பவளம் பற்றிய விளக்கமும் இன்றைய பதிவர்களும் சூப்பர் அக்கா.நேரம் கிடைக்கும் பொழுது அனைவரையும் பார்வையிடுகிறேன்.

    ReplyDelete
  23. வணக்கம்
    மனோ,சாமிநாதன்
    இன்று அறிமுகமான அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. வ‌ருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி முரளீதரன்!

    ReplyDelete
  25. வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  26. வ‌ருகைக்கு அன்பு ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் வெங்க‌ட் நாக‌ராஜ்!

    ReplyDelete
  27. வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரவாணி!

    ReplyDelete
  28. வருகைக்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி ச‌கோதரர் ராமமூர்த்தி!

    ReplyDelete
  29. தினமும் வருகை தந்து வாழ்த்து சொல்லும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி பூந்தளிர்!

    ReplyDelete
  30. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி சகோதரர் பாலக‌ணேஷ்!

    ReplyDelete
  31. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி சகோதரர் பாலக‌ணேஷ்!

    ReplyDelete
  32. வருகைக்கு இனிய நன்றி சரளா!

    ReplyDelete
  33. தினமும் வருகை தந்து பலப்பல கருத்துரைகள் சொல்லும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி சகோதரி ரஞ்சனி!

    ReplyDelete
  34. அழகான கருத்துக்கள் சொன்ன் சகோதரி வேதாவுக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  35. இனிய கருத்துரை சொன்ன சமீராவிற்கு இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  36. வழக்கம்போல வருகை தந்தது ஒவ்வொரு வரிக்கும் அழகான கருத்துரை சொன்ன உங்களின் உயர்ந்த மனதிற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  37. வருகைக்கு அன்பு நன்றி அதிசயா!

    ReplyDelete
  38. வருகைக்கு அன்பு நன்றி ஜே!

    ReplyDelete
  39. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி விச்சு!

    ReplyDelete
  40. தொடர்ந்து வந்து பின்னூட்டம் தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி ரூபன்!

    ReplyDelete
  41. நானும் இந்த முறை ஊருக்குச் செல்லும்போது பூமித்தாய் தோட்டத்திற்குச் சென்று வர‌ நினைத்துள்ளேன் ஆசியா! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி உங்களுக்கு!

    ReplyDelete
  42. பவளமாலைச்சரத்தில் என்னையும் ஒரு மணியாக சேர்த்ததற்கு நன்றி. ஒவ்வொரு ரத்தினமாக ஒவ்வொரு நாளும் கோர்த்த மாலைகள் அனைத்தும் அருமை. நல்ல சிந்தனை.

    ReplyDelete
  43. பல அறிந்த, அறியாத பதிவர்களின் பதிவுகளின் அறிமுகங்கள் தொகுத்தளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  44. பவளங்களை பற்றி அறியாத தகவல்கள்.

    பூமித்தாய் தோட்டத்துக்கு அடுத்த முறை சென்று வர வேண்டும் என்று தோன்றுகிறது.

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  45. பவளங்களைப் பற்றி தெரியாத தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.

    அறியாத பதிவர்களின் தளத்திற்க்கு சென்று பார்க்கிறேன்.என்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றிம்மா!!

    அறிமுகபடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  46. பூமித்தாய் தோட்டத்தை பார்க்க ஆவல்,
    இயற்கையை நேசிக்கும், அதற்காகப் பாடுபடும் இவரை நாமும் கை குலுக்கலாம்!!//

    கண்டிப்பாய் அவரை பார்த்து பாராட்ட வேண்டும்.
    இன்று பவளமாய் ஜொலிக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    வெளியூர், பொங்கல் என்று அலைச்சல் காரணமாக வலைச்சரம் பக்கம் சரியாக வர முடியவில்லை. இன்றுதான் ஓய்வு கிடைத்தது. எனது பதிவு ஒன்றினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  48. அன்பு மனோ அக்கா

    தலைப்பே பவளமாய் ஜொலிக்கிறது,
    அனைத்து பவளங்களுக்கும் வாழ்த்துக்கள்

    http://www.chennaiplazaik.com/2013/01/flower-type-hijab-with-stone.html

    பேச்சுலர் ஈவண்ட் வெற்றியாளர்கள்
    http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html



    ஜலீலா

    ReplyDelete
  49. மனோ,

    பவள ஜொலிப்பு அபாரம்.

    உங்கள் கடுமையான உழைப்பு ஒவ்வொரு நவரத்தினக்கல்லிலும் கூடுதல் ஒளி ஏற்றி வச்சுருக்குப்பா.

    மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் மனோ.

    ReplyDelete
  50. // திருச்சி நகரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் குழுமணி சாலையில் உள்ளது மருதண்டாக்குறிச்சி. இங்குதான் "பூமித்தாய் தோட்டம்' அமைந்திருக்கிறது. //
    திருச்சியில் இருந்தும் "பூமித்தாய் தோட்டம்” பற்றி பல மைல்களுக்கு அப்பால், கடல் கடந்து அயல்நாட்டில் இருக்கும் தங்கள் பதிவின் (வலைச்சரம்) வழியாகத்தான் முதன் முறையாக தெரிந்து கொண்டேன். சென்று பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  51. வலைசரத்தில் பல புதிய செய்திகளை எழுதும் பதிவர்களின் படைப்புகளை அறிமுகபடுத்தி வருகிறீர்கள் .அந்த வரிசையில் என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்திய ஆசிரியர் மனோ சாமிநாதன் உங்களுக்கு என் நன்றி .தொடரட்டும் உங்கள் சேவை .

    ReplyDelete
  52. பவளங்களாய் ஜொலிக்கும் பதிவர்கள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  53. பூமித்தாய்தோட்டம் புதிய தகவல் அருமையான முயற்சி.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete