சற்றென்று என்னை
கடந்து சென்று விடுகிறாய்
அங்கேயே சுற்றித்திரிகிறது மனசு
உன்னை ரசித்தபடியே
முன்னறிவிப்பில்லாமல்
வந்த மழையில்
ரசித்துக்கொண்டே நனையும்
விவசாயி போல!!
கடந்து சென்று விடுகிறாய்
அங்கேயே சுற்றித்திரிகிறது மனசு
உன்னை ரசித்தபடியே
முன்னறிவிப்பில்லாமல்
வந்த மழையில்
ரசித்துக்கொண்டே நனையும்
விவசாயி போல!!
இது நான் கிறுக்கினது! இது போன்ற அபாயங்கள் இன்னும் ஒரு வாரகாலத்திற்கு உங்களை எதிர்பாராமல் தாக்கலாம் எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு இன்றைய வலைச்சரத்தினை ஆரம்பிக்கிறேன். இன்று நான் படித்து ரசித்த/பிடித்த சில பதிவுகளை இங்கே அறிமுகம் செய்ய இருக்கிறேன். இவற்றை ஏற்கனவே நீங்கள் படித்திருக்கலாம். எல்லோரும் பிரபலமானவர்கள்தான்.
வானம் வெளித்த பின்னும் என்ற தளத்தில் கவிதைகளால் கதை பேசுபவர் ஹேமா அக்கா. யாழ்ப்பாணத்தில் பிறந்து யுத்தம் எனும் ராட்சசனால் துறத்தப்பட்டு தற்பொழுது சுவிசில் வசித்து வருகிறார். அவருடைய கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுக்குவியல்கள். அவரின் இன்னுமொரு தளமான உப்புமட் சந்தியில் 1970 களில் இலங்கையில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் போதான மக்களின் நிலைமைகளை அழகாக விபரித்திருந்தார் பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும். கனத்த மனதுடனேயே படிக்க வேண்டியிருந்தது.
மாணவன் என்ற வலைப்பதிவை நீங்கள் பலர் அறிந்திருக்கலாம. அதில் மாணவன் என்ற பெயரில் எழுதி வரும் நண்பர் வரலாற்றில் சாதனைப்படைத்த பல வரலாற்று நாயகர்களை பற்றியும் சிறப்பாக பதிந்து வருகிறார். படிக்கும் மாணவர்களுக்கும் வரலாற்றை தெரிந்துகொள்ள முற்படுபவர்களுக்கும் இது பயனுள்ள நிறைய தகவல்களை சொல்லும் தளமாகும். இது இது தான் சிறந்தது என குறிப்பிட்டு சொல்ல முடியாது எல்லாம் சேமித்து வைக்க வேண்டிய முத்துக்கள்தான்.
சிறந்த எழுத்து என்பது படிக்கும் போதே மனதில் பதிந்து உண்ர்வுகளில் நுழைந்து விட வேண்டும்.Warrior என்ற பக்கத்தில் தன் சிறப்பான எழுத்தாற்றலால் அற்புதமான பல பதிவுகளை எழுதிவரும் தேவா அவர்களை சிறந்த எழுத்தாளர் என்ச்சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை! அவர் எழுதியதில் எல்லாமே பிடித்தது என்றாலும் மிகப்பிடித்ததில் சில.
விடுமுறை நாளொன்றில்.
வாய்மை
வானமகள் நாணுகிறாள்
விடுமுறை நாளொன்றில்.
வாய்மை
வானமகள் நாணுகிறாள்
இன்று உலகில் ஒவ்வொருநாளும் பல தற்கொலைகள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அவற்றுக்கான காரணங்கள் வெவ்வேறு விதமானவை! இவற்றில் பெரிய அழுத்தங்களால் அவமானங்களால் தற்கொலை செய்வோரை விட்டுவிடுவோம்! சின்ன சின்ன காரணங்களுக்காக அப்பா அம்மாவுடன் கோபித்துக்கொண்டெல்லாம் தற்கொலை செய்வோரின் மனநிலையைத்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை.அப்படி தன் உயிரை மாய்த்துக்கொண்டுதான் அவர்கள் பக்க நியாயங்களை புரிய வைக்க வேண்டுமா? அதன் பின் சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இவர்கள் விட்டுச்செல்வது அழிக்க முடியாத வேதனை அல்லவா? என்னைச்சுற்றியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. என் மாமா ஒருவர் (அம்மாவின் தம்பி) தந்தை அடித்துவிட்டார் என்ற ஓரே காரணத்துக்காக தன்னுடைய 16 வயதில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாராம்!, ஊரில் என்னுடன் கூடபடித்த மாணவியொருத்தி சிறிய காதல் பிரச்சினைக்காக தற்கொலை செய்துகொண்டால் அதுவும் 16 வயதில்! என் நண்பனொருவனும். தன் மனைவியும், அம்மாவும் எப்போதும் சண்டைபிடித்துக்கொள்கிறார்களே என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான் 6 மாத குழந்தை இருக்கையில்! ஏன் இப்படி? இதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சினைகளா? இதெற்கெல்லாம் தற்கொலைதான் தீர்வா? என்று பல முறை நான் சிந்தித்ததுண்டு. இதே மனநிலையில் மயிலிறகு என்ற பக்கத்தில் எழுதும் மயிலன் அவர்களும் ஒரு பதிவெழுதியிருக்கிறார்.கவனத்திற்குரிய இரங்கற்செய்தி. அவர் ஒரு டாக்டர் என்பதால் அவர்களின் மனநிலையையும் அவற்றுக்கான காரணங்களையும் அருமையாக விபரிக்கிறார்.
ஹுசஸனம்மா அவருடைய தளத்தில் மிக சிறந்த கருத்துக்கள் கொண்ட அருமையான பதிவுகள் எழுதி வருகிறார். அவரின் டிரங்குப்பொட்டி பல உலக நடப்புகளையும் சொல்லக்கூடியது. சுவாரஷ்யமான சிறுகதைகளும் எழுதுகிறார். இன்னும் பலன் தரக்கூடிய பதிவுகள் பலவும் அங்கே கானக்கிடைக்கும். சின்ன சின்ன வலிகளுக்கெல்லாம் வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்துவதால் ஏற்பாடும் தீங்குகளை பற்றியும் சொல்கிறார். வலியெனும் வரம்.
கோமாளி என்னும் தளத்தில் எழுதிவரும் நண்பர் செல்வாவின் நகைச்சுவை கதைகள் எனக்கு மிகப்பிடித்தமானது. இப்போது அதிகமாக எழுதக்கானோம்! அவர் எழுதிய மீண்டும் ஒரு எலி என்ற சிறுகதை நான் இதுவரை படித்த நகைச்சுவை சிறுகதைகளில் மிகச்சிறந்தது என்பேன். நகைச்சுவை மற்றும் சிறுகதை விரும்பிகள் சென்றுவாருங்கள். இன்னும் ஒரு எலி.
என அன்பு வாழ்த்துகள் ரியாஸ்.உப்புமடச்சந்தியை நானே மறந்துவிட்ட நேரத்தில் ஞாபகப்படுத்தினமாதிரி இருக்கு.நேரமின்மைதான் காரணம்.தொடரட்டும் உங்கள் ஆசிரியப்பணி.இந்த வாரம் உங்களால் சிறக்கட்டும் !
ReplyDeletesilar thodarpavarkal!
ReplyDeletesilar ariyavaiththuvitteerkal..!
mikka nantri sako..!
வலைச்சர ஆசிரிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
தாயின் முதுகின் மேல் பயணிக்கும் வாத்து படம் அருமை.
இவற்றை ஏற்கனவே நீங்கள் படித்திருக்கலாம். எல்லோரும் பிரபலமானவர்கள்தான்.//
சில பதிவுகளை படித்து இருக்கிறேன்.
ஹுஸைனம்மா பதிவுகளில் நீங்கள் குறிப்பிடவைகள் படித்து இருக்கிறேன்.
இன்றைய பதிவர்கள் எல்லோருக்கும்
வாழ்த்துக்கள்.
இன்று பிரபல பதிவர்கள் அறிமுகம் எனினும் ஒரு சிலர் நான் பின் தொடராதவர்களுமுண்டு.
ReplyDeleteசென்று பார்க்கிறேன்.
அருமையான அறிமுகங்கள் சில புதியவை எனக்கு ..........வாழ்த்துக்கள் பணியை சிறப்பாக செய்ய
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் கவிதை வரிகள் அழகு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்
மிக நன்றி ரியாஸ்.
ReplyDeleteஇந்தப் பதிவின் தலைப்பும், அந்த வாத்துப் படமும் அருமையாக இருக்கின்றன.
ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துகள் ரியாஸ்.
அருமையான அறிமுகங்கள்...ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துகள் ரியாஸ்.
ReplyDeleteகவிதை வரிகள் super
அருமையான பதிவர்கள்! அறிமுகம் செய்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஉங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
ReplyDeleteநல்ல பல பதிவுகளையும் எனக்கு மிகவும் பிடித்த பல பதிவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதையும், வாத்து படமும் அருமை!
ReplyDeleteசிலர் தெரிந்தவர்கள்,,, சிலர் தெரியாதவர்கள். படிக்கிறேன்..
த.ம. 6
சிறப்பான அறிமுகம் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .இந்த வாரம் ஆசிரியராக பணி புரியும் சகோ உங்களுக்கும் என் மனமார்ந்த
ReplyDeleteவாழ்த்துக்கள் மேலும் பணி சிறப்பாகத் தொடரட்டும் .மிக்க நன்றி
பகிர்வுகளுக்கு .
கவிதாயினி ஹேமா மற்றும் விமலன்,அதிசா என நான் பின் தொடரும் உறவுகளுடன் இன்னும் புதிய சிலரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ரியாஸ் !தொடரட்டும் பணி!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!சிறக்க தங்கள் பணி!
ReplyDeleteஆசிரிய வாரத்திற்கு இனிய வாழ்த்து.
ReplyDeleteஅத்தனை அறிமுகவர்களிற்கும் இனிய வாழ்த்து.
மீண்டும் சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.