Friday, January 25, 2013

எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?

இன்று முதலில் ஒரு குட்டிக்கதை படித்துவிட்டு பின்பு அறிமுகங்களுக்கு செல்வோமா..

அப்பா, எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?



ஒரு மனிதர் வேலை செய்துவிட்டு மிகுந்த களைப்புடன் தாமதமாக வீட்டிற்கு வந்தார். அவரை எதிர்பார்த்து அவரது மகன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.

மகன்: அப்பா, எனக்கு உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க முடியுமா?

தந்தை: ஓ, நிச்சயமாக. என்ன கேள்வி அது?

மகன்: அப்பா, நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு உழைக்கின்றீர்கள்?

தந்தை: அது உனக்குத் தேவையில்லாத விடயம். நீ ஏன் இது போன்ற விடயங்களை கேட்கின்றாய்?

மகன்: எனக்கு அதனை அறிந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. தயவு செய்து நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள் என்று கூறுங்கள்.

தந்தை: நீ அறிந்துகொள்ள வேண்டுமானால், நான் ஒரு மணித்தியாலத்திற்கு நூறு ரூபாய் சம்பாதிக்கின்றேன்.

மகன்: ஓ (தலையை சாய்த்தவாறு)

மகன்: அப்பா, எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?

தந்தை கோபமடைந்தார்.

தந்தை: நீ பணம் கேட்பதற்கான காரணம் அதன் மூலம் அற்பமான விளையாட்டுப் பொருட்களை அல்லது வேறு ஏதேனும் வாங்குவதற்கே ஆகும். நீ நேராக உன்  அறைக்கு சென்று. படுக் கையிலிருந்து நீ ஏன் இவ்வாறு சுயநலவாதியாக இருக்கின்றாய் என்று சிந்தித்து பாரு. நான் ஒவ்வொரு நாளும் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்பது உங்க ளுடைய இந்த சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்காகவா?

அந்த சிறுவன் மெதுவாக அவனுடைய அறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டான். அந்த மனிதர் உட்கார்ந்து சற்று முன்னர் அந்த சிறுவன் கேட்ட கேள்விகளுக்கு தான் கோபப்பட்டது பற்றி சிந்திக்கலானார். அவன் என்ன வாங்குவதற்கு பணத்தைப் பெறுவதற்காக இத்தகைய கேள்விகளைக் கேட்கத் துணிந்தான்?

ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அந்த மனிதர் அமைதியடைந்து சிந்திக்க லானார்.

சிலவேளை அவனுக்கு ஏதாவது சில முக்கியமான பொருட்கள் (ஐம்பது ரூபாய்க்கு) வாங்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அவன் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பவன் அல்ல. அந்த மனிதர் சிறுவனின் அறைக்குச் சென்று கதவைத் திறந்தார்.

தந்தை: மகன், நீ தூங்குகின்றாயா?

மகன்: அப்பா, நான் தூங்கவில்லை. விழித்தே இருக்கின்றேன்.

தந்தை: நான் சற்று முன்னர் உன்னோடு கடுமையாக நடந்துகொண்டேனோ என்று சிந்திக்கின்றேன். இந்த நீண்ட நாளில் எனது சிக்கல்களை உன் மீது பிரயோகித்துவிட்டேன். இதோ நீ கேட்ட ஐம்பது ரூபாய்.

அந்த சிறுவன் எழுந்து நேராக உட்கார்ந்து புன்னகைத்தான்.

மகன்: நன்றி அப்பா

பிறகு அவன் அவனுடைய தலையணைக்குக் கீழால் கையைவிட்டு சுருங்கியி ருந்த சில பணத் தாள்களை எடுத்தான். தந்தை சிறுவனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்டார். மீண்டும் அவருக்கு கோபம் ஏற்பட ஆரம்பித்தது. அந்தச் சிறுவன் மெதுவாக அவனுடைய பணத்தை எண்ண ஆரம்பித்தான். பின்னர் அவனுடைய தந்தையைப் பார்த்தான்.

தந்தை: உன்னிடம் பணம் இருக்கும்போது இன்னும் எதற்குப் பணம்?

மகன்: ஏனென்றால் எனக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. இப்போது போதும்.

அப்பா, இப்போது என்னிடம் நூறு ரூபாய்கள் இருக்கின்றன. இப்போது எனக்கு உங்களுடைய நேரத்திலிருந்து ஒரு மணித்தியாலத்தை வாங்க முடியுமா? தயவு செய்து நாளைக்கு நேரத்துடன் வீட்டுக்கு வாருங்கள். நான் உங்களுடன் இரவுணவை சாப்பிடுவதற்கு விரும்புகின்றேன்...!!

படித்ததில் பிடித்தது சில மாற்றங்களுடன்..


இனி இன்றைய வலைச்சர அறிமுக பதிவுகள்.



Cheers with Jana என்ற தளத்தில் தன் சகலகலா தேடல்களை ரசனைகளை அழகாக எழுதி வருகிறார் ஜனா அண்ணா. பதிவெழுத தொடங்கிய காலத்திலிருந்து இவரின் நிறைய பதிவுகளை தேடித்தேடி படித்திருக்கிறேன். அவ்வளவு ஈர்க்கும் வசன நடை. அன்மைக்காலமாக வேலைப்பளுவால் பதிவெழுதுவதை குறைத்துக்கொண்டுள்ளார். The color of paradise, Children of haven, The father என்ற மஜித் மஜிதியின் அற்புதமான மூன்று ஈரானிய படங்களைப்பற்றி ஓரே பதிவில் சொல்லிருந்தார்.. அப்பதிவை படித்தது முதல் ஈரானிய திரைப்படங்கள் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு பல படங்களை தேடி பார்த்திருக்கிறேன்அந்தப்பதிவு. 

நிஜாம் பக்கம் நகைச்சுவை,அனுபவம்,கதைகள்,பத்திரிகை செய்திகள் என இது ஒரு பல்சுவைத்தளம். பத்திரிகைகளில் இடம்பெறும் கேள்வி பதிள் பக்கங்களில் இவருடைய ஆக்கங்களும் நிறைய வந்திருக்கிறது அவற்றையும் நிறைய பதிவாக இட்டிருக்கிறார்.சுஜாதாவிடம் சில கேள்விகள் படித்து ரசித்த நகைச்சுவைகளும் பகிர்ந்திருக்கிறார்.

நீரோடை தளத்தில். அன்புடன் மலிக்கா, இறைவனை நேசி இன்பம் பெறுவாய், எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும் அது நம் ஆன்மாவை அழ்காக்கட்டும் என்ற அழகிய வார்த்தைகளோடு அழகழகான கவிதைகள் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

இவர், சைக்கிள்காரன் என்ற தளத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் எந்த திரட்டியிலும் இணைக்காமல் கவிதை கட்டுரை சினிமா இசை என தன் ரசனைகளை அழகாக பதிந்து வருகிறார். இவரின் பதிவுகளில் எல்லாமே என்னைக்கவர்ந்ததுதான் அதிலும் ஆதாமிண்டே மகன் அபுl என்ற மலயாள படத்துக்கான இவரின் பார்வை மிகச்சிறப்பு. இரவு வேலை செய்பவர்களின் மன உணர்வை இந்த குட்டிக்கவிதையில் நச் என சொல்கிறார்.

தனிமரம் தளத்தில் சிவநேசன் அண்ணன் உருகும் பிரெஞ்சுக்காதலியோடு தொடர் கதை பேசி இப்போதுதான் முடித்திருக்கிறார். தொடர் கதைகள், அனுபவம் என சிறப்பாக எழுதக்கூடியவர். இவரின் மலையகத்தில் முகம் தொலைத்தவன் தொடரும் நிறைய பேரால் பாராட்டப்பட்டது.

சிறுவர் உலகம் என்ற தளத்தில் காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அருமையான சிறுவர் கதைகள் நீதிக்கதைகள் எழுதி வருகிறார். எல்லாமுமே குழந்தைகள் படிக்கவேண்டிய கதைகள்தான். 

 

15 comments:

  1. sako..!

    kathai azhaku...!

    arimukangalukkum nantri!

    ReplyDelete
  2. குட்டிக் கதையும் அருமையான பதிவர்களின்
    பகிர்வுடன் கூடிய பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பதிவர்களின் சிறப்பான பதிவுகளை, அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள். அருமை.

    ReplyDelete
  4. இன்று என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  5. பதிவின் ஆரம்பத்தில் சொன்ன கதை அருமை. பல வீடுகளில் இதே கதை தான்.....

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/kids-tomato-soup.html

    ஜலீலாகமால்

    ReplyDelete
  7. ஒவ்வொரு தந்தையும் தன் குடும்பத்தின் சந்தோஸத்துக்கு இழக்கும் பெறுமதி அதிகம் சகோ அருமையான கதை!

    ReplyDelete
  8. ஜனாவின் ஒவ்வொரு பதிவும் அவரின் அனுபவமும் இன்றும் வித்தியாசம் சியேஸ் சொல்லும் பாதை தனித்துவம்!

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் என்னுடைய "சிறுவர் உலகம்" பற்றி எழுதியமைக்கு நன்றி

    ReplyDelete
  10. பல மூத்தவர்களின் அறிமுகத்துடன் என்னையும் வலைச்சரத்தில் வலம் வர விட்டதிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ரியாஸ்!

    ReplyDelete
  11. படித்ததில் பிடித்தது சில மாற்றங்களுடன் அருமையான படிப்பினை ..


    இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. வேலையின் பொருட்டு தங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்க முடியவில்லை... இன்று அனைத்தும் பார்த்தேன்... அருமையா செய்திருக்கிறீர்கள்... என்னை அறிமுகம் செய்த பதிவில் நன்றி சொல்லாமல் அடுத்த பதிவில் நன்றி சொல்லியிருக்கிறேன்.... இன்றுதான் பார்த்தேன்...

    என்னை அறிமுகம் செய்தமைக்கும் மற்ற அறிமுகங்களுக்காக அதிக சிரத்தை எடுத்துக் கொண்டமைக்கும் வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  13. அன்பின் சகோ ரியாஸ் அவர்களுக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் அறிமுகங்கள் அருமை அதனோடு நான் பெருமை.

    வலைச்சரத்திற்க்கும் தாங்களுக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

    மேலும் அறிமுகமான அனைவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete