இந்தப் பதிவில் வலை உலகுக்கு மிகப் புதியவர்களையும், அற்புதமான புதிய தளங்களையும் அறிமுகப் படுத்தியுள்ளேன். பதிவுலகில் சிறப்பாக செயல்பட அவர்களை ஊக்கப்படுத்துங்கள்
என்னுடன் பணிபுரிபவன். இளைஞன். சமீபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு நானும் அவனும் சென்றிருந்தோம். வட்டியும் முதலும் ராஜு முருகன் "யாவரும் எழுதலாம்" என்ற தலைப்பில் பேசப்போவதாக அறிவித்திருந்தார்கள். அவருடைய பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறியிருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பினான், வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். வந்து பாருங்கள் என்று. முதல் ஆச்சரியம் அவன் வலைபூ ஆரம்பித்தது. இரண்டாவது ஆச்சரியம் ராஜு முருகன் அவர்களின் பேச்சின் தாக்கத்தில் ஆரம்பித்துள்ளேன் என்று குறிபிட்டுள்ளது.
ஒரு சிறுகதையும் எழுதியுள்ளான். ஊக்கபடுத்துங்கள்.
வலையுலகில் சிறந்த பதிவராக வலம் வர வாழ்த்துக்கள்
திருப்பூர் தொழிற்களம் திருவிழாவில் வைத்து இவர் பழக்கம் ஏற்பட்டது. தனியாக நின்று கொண்டிருந்தார். பதிவர்களைப் படிக்கும் வாசகன். இன்னும் எழுதத் தொடங்கவில்லை. விரைவில் எழுதத் தொடங்க வேண்டும் என்று கூறினார். அவர் தொடர்ந்து படித்து வரும் பதிவர்கள் குறித்தும் பதிவுகள் குறித்தும் பகிர்ந்தார். திருப்பூர் சந்திப்பும் அங்கு இவர் சந்தித்த பதிவர்களும் உற்சாகம் கொடுக்க, எழுதத் தொடங்கிவிட்டார்.
இவரது வார்த்தை கையாடல்கள் அருமையாக உள்ளது. இவரது பதிவைப் படித்துப் பாருங்கள்.
ஊக்கபடுத்துங்கள். வலையுலகில் சிறந்த பதிவராக வலம் வர வாழ்த்துக்கள்.
இவரும் வாசகராக இருந்து பதிவர் ஆனவர் தான். மிகக் குறைவாகவே பதிவெழுதுகிறார், ஆனால் பதிவுலகில் உற்சாகமாக வலம் வருகிறார். பயணக்கட்டுரைகள் எழுதுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம் என்று நினைக்கிறன். ஸ்கூல் பையன் சார் (பெயர் தெரியாததால் இப்படி எல்லாம் குழம்ப வேண்டி இருக்கிறது) இன்னும் நிறைய பதிவுகள் எழுதுங்கள்.
ஊக்கபடுத்துங்கள். வலையுலகில் சிறந்த பதிவராக வலம் வர வாழ்த்துக்கள்.
குசும்பு குட்டன் என்றால் இவர் இன்னும் மகிழ்ச்சி அடைவார். இவரது பதிவுகளுக்கு இவர் வைக்கும் தலைப்புகளே கொஞ்சம் வித்தியாசமாய்த் தான் இருக்கும். நாம் படித்த ஏதேனும் ஒரு ஈசாப் நீதிக் கதையையோ அல்லது முல்லா கதையையோ அவர் பாணியில் பகிர்வார். முகம் காட்டாமல் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பதிவர்.
விஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்!
ஊக்கபடுத்துங்கள். வலையுலகில் சிறந்த பதிவராக வலம் வர வாழ்த்துக்கள்.
புதிதாக தொடங்கபட்டிருக்கும் தளம். பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்தும் கற்போம் பிரபுவும் இணைந்து தொடங்கியுள்ள தளம்.
கணிபொறி, மொபைல், மென்பொருள் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளை இங்கு பதியலாம், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். தமிழ் வலையுலகில் சிறந்த கலை செல்வமாக பதில் தளம் மாற வாழ்த்துக்கள்.
பதில் தளம் பற்றி எனது பதிவு
வீடு சுரேஷ், தேவியர் இல்லம் ஜோதிஜி, இரவு வானம் சுரேஷ் இன்னும் சில பதிவர்கள் இணைந்து நடத்தும் வலைதளம் தமிழ்செடி. தமிழின் பெருமை தமிழனைத் தவிர அனைவருக்கும் புரிகிறது அதைத் தமிழனுக்கும் புரிய வைப்போம் என்னும் உயர்ந்த எண்ணத்தில் தொடங்கப்பட்ட தளம். தமிழின் தொன்மை அடங்கிய ஓலைச் சுவடிகளை ஆய்ந்து தொகுக்க இருகிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்செடி தளம் சார்பில் விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.
சென்னை பதிவர் சந்திப்பு 2012
உலகெங்கும் உள்ள தமிழ் வலைப்பதிவர்கள் பங்கு கொண்டு சிறபித்த பதிவர் சந்திப்பு கடந்த வருடம் சென்னையில் நடைபெற்றது. மதுமதி அவர்களின் உழைப்பு இந்தப் பதிவர் சந்திப்பில் மிக முக்கியமானது. பதிவர் சந்திப்பு முடிந்து அனைவரும் கலைந்து அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் மதிமதி பதிவர் சந்திப்பு குறித்த அணைத்து பதிவுகள் மற்றும் கானொளிகளைத் தொகுத்து அதையே ஒரு வலைபூவாக மாற்றியுள்ளார். மிக்க நன்றி மதுமதி.
காலம் அளிக்க முடியா பொக்கிஷம் நிறைந்த வலைபூ.
புதிய பதிவர்களுக்கு வாழ்த்துகள். பதில் தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். :-)
ReplyDeleteவண்ணத்துபூச்சியில் இணைந்து கனவு மெய்பட தொடர்கிறேன்.. மற்றவர்கள் அறிந்தவர்களே..
ReplyDeleteஇன்று இந்தப்பதிவினில் அறிமுகம் ஆகியுள்ள பதிவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteகுட்டன் எனக்குப் பழக்கம். மற்ற அனைவரும் புதியவர்களே. அவசியம் படித்துப் பார்க்கிறேன் சீனு. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசென்னை பதிவர் சந்திப்பு 2012 தளம் இன்று தான் தெரியும்... நன்றி...
என்னடா காலையிலயே இவ்வளவு கமெண்ட் வருதேன்னு பார்த்தேன்...(நம்ம போன் மெயில் வந்தா சொல்லிடும்) இப்பத்தான் தெரியுது... என்னையும் ஒரு பதிவரா மதிச்சு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சீனுவுக்கு நன்றிகள் பல....
ReplyDeleteஎன்னடா காலையிலயே இவ்வளவு கமெண்ட் வருதேன்னு பார்த்தேன்...(நம்ம போன் மெயில் வந்தா சொல்லிடும்) இப்பத்தான் தெரியுது... என்னையும் ஒரு பதிவரா மதிச்சு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சீனுவுக்கு நன்றிகள் பல....
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை !
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்...
அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.எனக்கு தெரியாத நிறய்ய வலைதளங்கள் இது வழி எனக்கு தெரிய ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அறிமுகப்படுத்தியதற்க்கு மீண்டும் நன்றி. அவசியம் எல்லா தளங்களுக்கும் ஒரு விசிட்.
ReplyDeleteஅசத்தல் அறிமுகங்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteபுதிய பதிவர்கள் ...அவசியமான பதிவு..ஓட்டுக்களிலும் சூடாவதிலும் தப்பி வருவது சுலபமான் வேலை இல்லை...தன்னுடைய முதல் முயற்ச்சிகளில் சோர்வடைந்து நிறைய பேர் தொடராமலேயே போயிருப்பார்....இனி என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் அன்றைய தினம் என் கண் முன்னே தெரியும் ஒரு புதிய பதிவரை எனது தளத்தில் சொல்ல நினைத்துள்ளேன்.....மிக அவசியமான பதிவு..ஆனால் பாதிக்கு மேல உள்ள பதிவை பழைய பதிவர்கள் புதிய தளங்கள் என்ற என்ற தலைப்பில் தனியாக அறிமுகம் செய்திருக்கலாம் என்று கருதுகிறேன்.அந்த இடத்தில் இன்னும் இரு புதியவர்கள் அறிமுகம் ஆகியிருக்கலாம் என்பது அவா.புதிய தளங்களைத்தான் அறிமுகம் செய்கிறாய் என்பதை அறிவேன்...இது அதையும் தாண்டிய விண்ணப்பம்....மற்றபடி வழக்கம்போல கலக்குறே சீனு...
ReplyDeleteஅருமையான நினைவுகளை சுமக்கும் தளங்களை அறிமுகம் செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகமானவர்களில் சில தளங்களை மட்டும் தான் தெரியும். புதியவர்களை அறிமுகப்படுத்தியதற்கும், பதில் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி நண்பா!
ReplyDeleteஅன்புள்ள சீனு,
ReplyDeleteஇன்று அறிமுகம் ஆகியிருக்கும் பதிவர்கள் எல்லோரையும் படித்து வாழ்த்தி விட்டு வந்தேன். இதைச் செய்து முடித்தபின் தான் பின்னூட்டம் கொடுக்க வேண்டுமென்று இருந்தேன்.
ஹப்பா! எத்தனை விதம்விதமான எண்ணங்கள், அதை வெளிப்படுத்தும் நேர்த்தி, எல்லாவற்றையும் படித்து மகிழ வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி!
குட்டன் ஸ்கூல் பையன் இவர்களைத் தெரியும் மற்ற அறிமுகங்களை நேரம் இருக்கும் போது சென்று பார்த்து வருகிறேன். உண்மையில் இப்படி தெரியாதவர்களை தேடிக் கண்டு பிடித்து அறிமுகம் செய்வதே சிறப்பான ஆசிரியர் பணி வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteவாழ்த்துகள் அனைவருக்கும்
ReplyDeleteபதில் தளம் என்னால் செல்ல ஏதோ தடை மற்ற தளங்கள் சென்று வந்துவிட்டேன் நன்றி சகோ.
ReplyDeleteகாலம் அளிக்க முடியா பொக்கிஷம் நிறைந்த வலைபூக்களின் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteசிறிது சோர்வடைந்திருந்த நேரத்தில் டானிக் போல் உங்கள் அறிமுகம்!நன்றி சீனு,முகம் காட்டக் காலம் இன்னும் கனியவில்லை;இப்போது போட்டிருக்கும் முகமே என் முகத்தை விட மேல்!!
ReplyDeleteபுதிய பதிவர்களை அறிந்துகொண்டேன்.
ReplyDeleteவலைச்சரத்திலர் இடம்பெற்றமைக்கா பதிவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய தளங்களின் சிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்!
வணக்கம்
ReplyDeleteசீனு(அண்ணா)
இன்று அறிமுகமான வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு அழகாக தொகுத்த வழங்கிய உங்களுக்கும் எனது நன்றிகள்
எல்லாப்பதிவுகளையும் தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகுட்டன்,ஸ்கூல் பையன் தெரிந்தவர்கள் ஏனையவர்கள் பார்க்கின்றேன்.
நிறைய புதியவர்கள்! அறிந்து கொண்டேன்! இணைய உள்ளேன்! நன்றி!
ReplyDeleteஉங்களை சமீப காலமாக கவனித்து வருவதில் நான் புரிந்து கொண்டு உண்மைகள்.
ReplyDelete1. பலதரப்பட்டவர்களின் பின்னூட்டங்கள்.
2. உனக்கு நான் எனக்கு நீ என்ற பின்னூட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் இல்லை.
3. ஒவ்வொரு விமர்சனமும் ஏதோவொன்றை சுட்டி பேசுகின்றது.
4. கட்டாயம் ஓட்டளித்து பலரின் பார்வைக்கும் கொண்டு செலுத்தி விடுகின்றார்கள்.
5. சிறிய விசயங்களில் கூட அக்கறையுடன் ஏதோவொரு புதுமையை கொண்டு வந்துடுறீங்க.
6. விடாது முயற்சியின் பலனாக முடிந்தவரைக்கும் எல்லா துறை சார்ந்தவர்களையும் உங்கள் வசீகர எழுத்தில் வாசிக்க வைக்கும் திறமை.
மீதி அடுத்த பதிவில்.
உங்களை சமீப காலமாக கவனித்து வருவதில் நான் புரிந்து கொண்டு உண்மைகள்.
ReplyDelete1. பலதரப்பட்டவர்களின் பின்னூட்டங்கள்.
2. உனக்கு நான் எனக்கு நீ என்ற பின்னூட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் இல்லை.
3. ஒவ்வொரு விமர்சனமும் ஏதோவொன்றை சுட்டி பேசுகின்றது.
4. கட்டாயம் ஓட்டளித்து பலரின் பார்வைக்கும் கொண்டு செலுத்தி விடுகின்றார்கள்.
5. சிறிய விசயங்களில் கூட அக்கறையுடன் ஏதோவொரு புதுமையை கொண்டு வந்துடுறீங்க.
6. விடாது முயற்சியின் பலனாக முடிந்தவரைக்கும் எல்லா துறை சார்ந்தவர்களையும் உங்கள் வசீகர எழுத்தில் வாசிக்க வைக்கும் திறமை.
மீதி அடுத்த பதிவில்.
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள். பதிவர் சந்திப்பு குறித்து வலைப்பூவா? இப்போவே சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDelete