Tuesday, January 29, 2013

என்னைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்கள் - பகுதி 2


சேட்டைக்காரன் 


திவர் சந்திப்பின் பொழுது சேட்டைக்காரன் அரங்கினுள் நுழைந்ததும் எல்லாருமே ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள். நான் தவற விட்ட தருணம் அது. சேட்டைக்காரனின் சேட்டைகளைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஒல்லியான தேகம். சிரித்த முகம். எல்லாரும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர், இல்லை கொண்டாடிக் கொண்டிருந்தனர் என்று கூட சொல்லலாம். பதிவர் சந்திப்புக்குப் பின்னும்  பலரும் தங்கள் பதிவுகளில் சேட்டைக்காரனை சந்தித்தது பற்றி எழுதிக் கொண்டிருந்தனர். ரஞ்சனி அம்மா தன் பதிவில் சக பதிவர் சமீரா சேட்டைக்காரனை பார்க்க ஆவலாய் இருந்ததாய் எழுதி இருந்தார்.  

பின்பு தான் அவர் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். இவருடைய பதிவுகளைப் படிக்கும் பொழுது என்னை அறியாமலேயே சத்தமாக சிரித்துள்ளேன், திடிரென்று நான் சிரிப்பதைப் பார்த்து என் அம்மா கூட முறைப்பது உண்டு. 

திரைவிமர்சனம் எழுதுவது எப்படி பதிவில் எவ்வளவுக்கு எவ்வளவு சினிமா விமர்சகர்களை கலாய்க்க முடியுமோ அவ்வளவு கலாய்த்து எழுதியுள்ளார்..  

கோ.கோ.சாமி: சரி, குறிச்சுக்க! எந்தத் தமிழ்ப்படத்தைப் பத்தி விமர்சனம் பண்ணுனாலும் முதல்லே ஆரம்பிக்கும்போது எடுத்த எடுப்புலேயே அந்தப் படத்தைப் பத்தி எளுதாதே!


சே.கா: சரிண்ணே!


கோ.கோ.சாமி: கும்பிள்டன் கூட்டர்சனின் "வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன்?" படத்தை நம்மால் எளிதில் மறந்திருக்க முடியாதுன்னு ஒரு ’பிட்’டோட ஆரம்பிக்கணும்.  


“சிஸ்டர், கேட்குறேனேன்னு தப்பா நினைக்காதீங்க! எதுக்கு என் உடம்புலே இத்தனை கேபிளை சொருகறீங்க? என்னையும் போதிதர்மனாக்கப் போறீங்களா?




சிவகாசிக்காரன் 



விலைமகளின் மகள். அன்னை இறந்த பின் அவள் செய்த தொழிலை மகள் செய்யும் நிலைமைக்குத் தள்ளபடுகிறாள், படித்துவிட்டு ஆச்சரியப்பட்டேன் இவ்வளவு கனமான கதையைக் கூட இயல்பாய் இவரால் எழுத முடிகிறதே என்று.  

"இருள் சூழ்ந்திருக்கும் அழுக்கான இரவில் லேசான அழுகையுடன் பொங்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மெதுவாக அடிக்கடி முத்துச்செல்வி அம்மாவிடம் கேட்பது உண்டு, “ஏம்மா இப்படி?”

எங்கோ பார்த்துக்கொண்டு அம்மா சொல்லுவாள்,”நாளைக்கு காலேல பசிக்குமே? பள்ளிக்கூடத்துக்கு காசு கெட்டணுமே?”

ரெண்டு நிமிடம் பழகிய ஒருவரின் மேல் பொறாமை வருமா? இவரின் எழுத்துக்களைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கும் வரலாம். சிவகாசிக்காரன் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் தோழர் ராம்குமார்(சிவந்தமண் காரர், சிவப்புச் சட்டைக்காரர் இல்லை.) பற்றித் தான் நான் குறிபிடுகிறேன். திருப்பூரில் வைத்து அறிமுகமானவர். 

வலை உலகில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார், இன்னும் நூறு பதிவுகளைக் கூட தாண்டவில்லை.காரணம் அளவாகத் தான் எழுதுகிறார். ஆனால் திடங்கொண்டு எழுத ஆரம்பித்தால் நாலு பதிவை சேர்த்து ஒரே பதிவாக எழுதி விடுகிறார்.          

கட்டுரைகளை விட சிறுகதைகளை சிறப்பாக எழுதுகிறார், சொல்லபோனால் சிறுகதைகளை விட கட்டுரைகளை சிறப்பாக எழுதுகிறார். இன்னும் சொல்லபோனால் இரண்டையுமே சிறப்பாக எழுதுகிறார். கூல்.

சுஜாதா சாயலில் இவர் முயன்ற கதை.. சற்றே நீளமான கதை, ஆனால் அற்புதமான நடை. இந்தக் கதை தன இவரை எனக்கு முதலில் அறிமுகம் செய்ததுஎச்சரிக்கை நீஈஈஈன்ன்ன்ன்ட்ட்டட்ட சிறுகதை(!).         

கலர்காதல் இதுவும் மிகவும் கனமான பாத்திரப்படைப்பு கருப்பாய் இருக்கும் மனைவியின் நிறத்தை  புணர்தலின் பொழுது வசதியாய் மறக்கும் கணவன்... இந்தக் கதையை படித்ததும் அவரை நோக்கி நான் கூற நினைத்தது  என்ன ஆளு யா நீ...

 உடல் சூட்டை தணிக்கும் போது மட்டும் கருப்பு வெளுப்பெல்லாம் தெரியாதே? வெறும் மிருகத்தனமான இயந்திரத்தனமான கூடல். தன் சூடு தணிந்தவுடன் பேசாமல் எழுந்து போய்விடும் அக்கறையான கணவன். எனக்கு அவன் என்னுள் சாக்கடையை பாய்ச்சியது போல் இருக்கும். ”நான் கருப்புன்னு மொதையே தெரியும்ல? அப்புறம் ஏன் என்ன கல்யாணம் செஞ்சீங்க?” என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன். மறுமுறை அப்படி கேட்கவே அஞ்சும் அளவுக்கு அடி விழுந்தது.   


மழையைப் பற்றி இவர் எழுதிய கட்டுரை. படித்தால் ரசிப்பீர்கள் மழையை 



தீராத விளையாட்டுப் பிள்ளை 


ஆர் வி எஸ்... இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மெட்ராஸ் பவன் சிவா தான். இவரின் எழுத்துக்களுக்கு மெட்ராஸ் தீவிர ரசிகர் தற்போது நானும். இவரது சிறந்த பதிவுகளாக சிவா எனக்கு சில பதிவுகளை அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் அனைத்துப் பதிவுகளுமே மிகச் சிறப்பாய் எழுதி இருக்கிறார். இவர் எழுதும் மன்னார்குடி டேஸ் எனக்கு தென்காசி மண்வாசனையைத் தூண்டுகிறது. தற்போது ராமாயணம் குறித்த தேடலில் அல்லது ஆய்வில் இறங்கியுள்ளார். 


ரிஷபன் 


இவரது கவிதைகள் ஆயிரம் அர்த்தங்கள் பேசும். நாமெல்லாம் பல பத்தி பத்தியாக தட்டுவதை பத்து வரிகளுக்குள் முடித்து விடுவார். இப்போதெல்லாம் என்னவென்று தெரியவில்லை இவரது பல கவிதைகள் பேஸ்புக்குடன் முடிந்து விடுகிறது..



திருச்சி செல்லும் பொழுது ரிஷபன் மற்றும் வை கோபாலக்ருஷ்ணன் சாரை சந்திக்கலாம் என்று வாத்தியார் சொன்னார். என்னிக்கு கூட்டிட்டுப் போகப் போறாரோ....  

ரஞ்சனி நாராயணன் 


பதிவர் சந்திப்பில் வைத்துப் பார்த்துள்ளேன், பேசியதாய் நியாபகம் இல்லை,  ஆனால் தொழிற்களம் தளத்தில் இளைஞர்களோடு இளைஞராய் எழுதும் பொழுத தான் இவர் எழுத்துக்கள் எனக்கு அறிமுக ஆயின. இயல்பாய் நம்மிடம் கதை சொல்வது போலவே இருக்கும் இவரது நடை. ஒன்றை கவனித்துப் பாருங்கள் இவரது தளத்தில் எழுத்துக்களின் அளவு சற்றே பெரியதாய் இருக்கும் எல்லாராலும் எளிதாய் படிக்க வேண்டும் என்பதற்காவே வைத்து போல் இருக்கும். வர்ட்ப்ரஸில் இயங்கிவருவதால் பின் தொடர்வது கஷ்டமாய் இருந்தது என்று பலரும் கூறியதால் சில மாதங்களுக்கு முன்பு ப்ளாக்ஸ்பாட்க்கு மாறினார். ஆனாலும் இங்கே வோர்ட்ப்ரஸில் எழுதும் பதிவுக்கான சுட்டிகளை மட்டுமே பதிகிறார்.




உற்சாகமளித்து வரும் அணைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நாளை சந்திப்போம்...  

 இதற்கு முந்தைய பகுதி 

என்னைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்கள் - பகுதி 1



24 comments:

  1. ஒரே நாளில் இரண்டாவது பதிவா சூப்பர்.

    சேட்டைக்காரன் மட்டும் இப்போது படிக்கிறேன். மற்றவர்களை இனி ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
  2. அறிமுகங்கள் அனைத்தும் அருமை...
    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    தீராத விளையாட்டுப் பிள்ளை , ரிஷபன் அறிமுகமான பதிவர்கள்... மற்றவர்கள் பார்க்கிறேன்...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  3. என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  4. நீங்கள் குறிபிட்ட அனைவருமே உண்மையில் அருமையான பதிவர்கள் தான்

    ReplyDelete
  5. ஆத்தி....சீனு ரொம்ப பொறாமையோ...ஹி ஹி ஹி - 4 வலை எனக்கு புதுசு - வாசிக்கணும்

    நன்றி சீனு

    ReplyDelete
  6. மீண்டும் மிகச்சிறப்பானவர்களையே அடையாளம் காட்டியுள்ளீர்கள்.

    இதில் ஒரேஒருவரைத்தவிர மீதி எல்லோரும் எனக்கு மிகவும் நெருக்கமான பழக்கம் உள்ளவர்களே.

    அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.


    >>>>>

    ReplyDelete
  7. உங்கள் எழுத்து என்றாலே சேட்டை கலந்திருக்குமே எதரிபார்ப்புடன் காத்திருக்கிறோம் அறிமுகங்கள் சிறப்பு.
    தொடருங்கள்.

    ReplyDelete
  8. //திருச்சி செல்லும் பொழுது ரிஷபன் மற்றும் வை கோபாலகிருஷ்ணன் சாரை சந்திக்கலாம் என்று வாத்தியார் சொன்னார். என்னிக்கு கூட்டிட்டுப் போகப் போறாரோ....//

    வாருங்கள் நண்பரே !

    கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

    உங்கள் வாத்தியார் 2012 டிஸம்பர் மாத இறுதியில் அலைபேசியில் என்னுடன் முதன்முதலாகப் பேசி, ஒரு மிகச்சிறிய உதவி கேட்டிருந்தார்.

    என்னால் அவருக்கு அதை நிறைவேற்றித்தர முடியாமல் போய் விட்டது.

    அதை எப்படி NEGATIVE ஆக அவரிடம் தெரிவிப்பது என்ற தர்ம சங்கடத்தால் நான் அவரை மீண்டும் அலைபேசியில் அழைத்து, என் இயலாமைத் தகவலை சொல்ல நான் விரும்பவில்லை.

    இதைப்படித்தால் அவரே நிச்சயமாகப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் இங்கு எழுதியுள்ளேன்.

    மேலும் ஒரு காரணம், "நாம் இது போல வை.கோபாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு ஒரு மிகச்சிறிய உதவி கேட்டிருந்தோம்.

    ஆனால் அவரிடமிருந்து POSITIVE OR NEGATIVE எதுவாக இருப்பினும் எந்த ஒரு பதிலும் இதுவரை ஒரு மாதம் ஆகியும் வரவில்லையே, என உங்கள் வாத்தியார் நினைத்து உங்களை, திருச்சி பக்கமே அழைத்து வராமல் இருந்து விடப் போகிறாரே என்ற கவலையிலும் இதை எழுதியிருக்கிறேன்.

    அன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு,

    வணக்கம். அது POSITIVE ஆக மட்டும் இருந்திருந்தால் உடனே உங்களுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து, சந்தோஷத்துடன் அன்றைய தினமே தகவல் தெரிவித்திருப்பேன்.

    என் மீது ஏதும் வருத்தம் கொள்ள வேண்டாம், ப்ளீஸ்.....

    அன்புடன்
    வை. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  9. இந்தப் பகிர்வில் ஒரு பதிவரைத் தவிர, மற்ற அனைவரும் மிகவும் பரிச்சயமானவர்கள்... அந்த ஒரு பதிவர் நாம் திருப்பூரில் சந்தித்த சிவகாசிக்காரன் அவர்களின் தளம் (நீஈஈஈன்ன்ன்ன்ட்ட்டட்ட சிறுகதை(!)-படித்து விட்டேன்...) நன்றி...

    அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. என்ன சீனு!
    இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்!
    எதிர்பார்க்கவேயில்லை!
    நன்றி நன்றி!

    பெரிய எழுத்துக்கள் - வயசுக் கோளாறு!

    இன்னொன்று எழுத்துக்களை எப்படி சின்னதாக மாற்றுவது என்று தெரியவில்லை (ரகசியம்! ஓகே?)

    என்னையும் என் பதிவுகளை படித்து ரசித்து இங்கு என்னைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதியதற்கும் மனமார்ந்த நன்றிகள் சீனு!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. தங்களைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்களை ரசித்தேன் .அனைவருக்கும் இனிய வாழ்த்து. தங்களிற்கும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. அறிமுகங்களை முன்னுரையுடன் தந்தது இரசிக்க வைத்தது. தொடருங்கள்.

    ReplyDelete
  13. சேட்டைகாரரின் 'கொடுப்'பேனா' தவிப்'பேனா' பலமுறை படித்து சிரித்திருக்கிறேன். இவரது ஓவியத் திறமையும் அபாரம்!

    சிவகாசிக் காரரின் மழை கவிதை படித்திருக்கிறேன். ஏற்கனவே ஒரு முறை இங்கு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறது இந்தக் கவிதை என்று நினைவு. சிறு கதைகள் படிக்க வேண்டும்.

    ரிஷபன் அவர்ளின் 'ஜ்வல்யா' கவிதைகள் நம்மை முதலில் திகைக்க வைத்து பின் புன்னகைக்க வைக்கும். மிகச்சிறந்த எழுத்துக்களின் சொந்தக்காரர் இவர்.

    ஆர்.வி.எஸ் அவர்களின் பதிவுகளையும் படித்து வருகிறேன்.

    நமக்குத் தெரிந்தவர்கள் என்றால் ஒரு தனி மகிழ்ச்சி தான்!

    ReplyDelete
  14. அடடே அதற்குள் இரண்டு பதிவுகளா?! :) நல்ல பல அறிமுகங்கள் (எனக்கு!) நன்றி!!!

    சிவகாசிக்காரரின் பதிவுகள் சிலவற்றை சமீபத்தில்தான் படித்தேன்!!!

    ReplyDelete
  15. நன்றி ஸார்..

    சேட்டைக்காரணை நேசிக்காத பதிவர்கள் உண்டா. சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக அவரைப் பார்க்கத் துடிக்கும் உள்ளங்கள் அதிகம்.. அத்தனை புகழ்..

    அறிமுகம் செய்த பதிவர்கள் எல்லோருமே என் பொறாமைக்கும் உரியவர்கள் தான்..

    பேஸ்புக்கில் என் கவனம் போய்விட்டது என்று நீங்கள் சொன்னது என் கவனத்தில்.. இப்போது !

    ReplyDelete
  16. சிவகாசிக்காரரை மட்டும் இதுவரை வாசிச்சதில்லை. மற்ற நட்புகளையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை.

    ReplyDelete
  17. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. செட்டியின் சேட்டைகள் பிரமாதமாக இருக்கும்.

    ReplyDelete
  19. ஸ்ரீநிவாசன் நண்பா, உங்கள் வாழ்த்துக்களுக்கும், பலரின் ஆசிர்வாதங்களுக்கும் முதல் நன்றி.. இதில் பலரும் “ஒருவரை மட்டும் தெரியாது” என்று கூறி என்னை இப்போது தெரிந்தவன் ஆக்கிக்கொண்டீர்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. நண்பர் சீனு என் மேல் நம்பிக்கைகள் பல வைத்துள்ளார்.. மீண்டும் நன்றி நண்பா :-)

    ReplyDelete
  20. ராம்குமார் என்கிற சிவகாசிக்காரன் ஸார்...! இதுநாள் வரை நானும் உங்களை அறிந்து கொள்ளவில்லை. நண்பன் சீனுவால் கிடைத்தது நல்லறிமுகம். (மற்ற அனைவரும் என் விருப்பத்துக்குரியவர்கள் சீனு. சேட்டைக்காரர்தான் என்னை வலையில் எழுத வைத்தவர்) வலைச்சரத்தின் நோக்கமே அனைவரும் ஒருவரை ஒருவர் அறிவது என்ற வகையில் மிக்க சந்தோஷம் எனக்கு! மிக்க நன்றி சீனு!

    ReplyDelete
  21. பொறாமைப்படவைக்கும்
    பதிவர்கள் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  22. வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி திரு. சீனு.

    ReplyDelete
  23. சிவகாசிக்காரன் தளம் எனக்குப் புதியது சீனு. படிக்கிறேன்.

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  24. வலையுலகின் சிறந்த பதிவர்களை இரண்டு பதிவுகளில் அடையாளம் காட்டி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி! ஒவ்வொருவரை பற்றி கூறிய தகவல்கள் சுவாரஸ்யம்! தொடருங்கள்!

    ReplyDelete