இந்தப்
பதிவில் வருத்தம், கோபம், பெருமிதம், சோகம்,
என்று பல உணர்வுகளை அளிக்க முயற்சிக்கிறேன். நான் சிற்பம் என செதுக்க
நினைப்பது அம்மிக் கல்லாய் அமைந்தால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.
டோண்டு ராகவன்
அவர்களின் மறைவுச் செய்தியைப் படிக்கும் போது இன்னும் இரு பதிவர்களின் இழப்பு
நெஞ்சில் அலை மோதியது.
சந்திப்பு
என்ற பெயரில் தோழர் செல்வ பெருமாள் எழுதி வந்த வலைப்பக்கம் இடதுசாரிகளின் வலிமையான
ஆயுதமாக இருந்தது. பல தலைப்புக்களின் மிக அருமையாக எழுதி வந்த அவர் இளம் வயதிலேயே
மரணத்தை தழுவியது பதிவுலகிற்கும் இடதுசாரி கருத்தோட்டம் கொண்டவர்களுக்கும் மிகப்
பெரிய இழப்பு. ஆனாலும் அவரது எழுத்துக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
என்பதை இதைப் படிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.
இன்னொரு பெரிய
இழப்பு அசோகன் முத்துசாமி . பல நூல்களையும் பல தமிழாக்கங்களும் அளித்தவர். “ஒரு
பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”
படித்திருப்பீர்கள். பல அதிர்ச்சிகரமான உண்மைகளை அம்பலப்படுத்திய ஜான்
பெர்கின்ஸ் வாக்குமூலத்தின் தொடர்ச்சியாக எழுதிய நூலை “ அமெரிக்கப் பேரரசின் ரகசியங்கள்
“ என்று எழுதியவர். அந்த நூலை பார்க்கும் போதெல்லாம் ஒரு கணம் உள்ளம் சோகமாகும்.
அவரது எழுத்தில் இருந்த வலிமை அவரது உடல் ஆரோக்கியத்தில் இல்லாமல் போனது ஒரு
துயரம்.
பெரும்
கோபக்காரராக அறியப்படும் ஆதவன் தீட்சண்யா, ஒரு பாலியல் கொடுமைக்கு எதிராக
தர்மபுரியில் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டம் பற்றி இவரது தந்துகி வலைப்பக்கத்தில் படியுங்கள். மக்கள்
மீது நம்பிக்கை பிறக்கும் தருணங்கள் இவையெல்லாம். எப்படியெல்லாம் காவல்துறை
செயல்படுகிறது என்ற கோபமும் தன்னாலே வரும். சொல்லவே முடியாத கதைகள் என்ற அவரது
சிறுகதைத் தொகுப்பை வாங்கிப் படியுங்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியும் துயரமும்
முழுமையாய் புரியும்.ஆனால் நக்கலும் நையாண்டியும் நகைச்சுவையுமான அவரது சளி மிட்டாய் கதை
ஒரு மாறுதலான படைப்பு.
ஒரு மாறுதலான படைப்பு.
இரண்டு
ஆசிரியர்கள் பற்றி இப்போது.
பள்ளி
ஆசிரியர்கள் அல்ல. பத்திரிக்கை ஆசிரியர்கள்.
தீக்கதிர்
நாளிதழின் பொறுப்பாசிரியராய் இருந்த தோழர் சு.பொ.அகத்தியலிங்கம்எங்களது சங்க
மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் மக்கள் ஒற்றுமை கலை விழாக்களில் மூன்று முறை
உரை வீச்சு நிகழ்த்தியவர். அதிலே ஒரு சம்பவம் இன்னும் என் நினைவில் பசுமையாக
உள்ளது. 1999 ம் வருடம் திருவண்ணாமலையில் எங்கள் சங்க மாநாடு ( எப்படி மறக்கும்?
நான் முதன் முதலாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாடு அல்லவா? )
அதையொட்டி கலை இரவு நடந்து கொண்டிருக்கிறது.
சு.பொ.
முழங்கிக் கொண்டிருக்கிறார். அது பொது வெளி, அண்ணாமலையார் கோயில் அருகில்தான்.
இரவு 11 மணி. ஒரு நாத்தீகனாக பேசிக் கொண்டிருக்கிறார். சுவாமி உலா நாதஸ்வர இசையோடு
வருகிறது. தோழர் ஐந்து நிமிடங்கள் பேச்சை நிறுத்தி விட்டார். உடனே ஒரு
துண்டுச்சீட்டு மேடைக்கு வருகிறது.
உங்கள் பேச்சை
கடவுள் நிறுத்தி விட்டாரே, இப்போதாவது அவரது சக்தியை உணர்கிறீர்களா என்று
கேட்கப்பட்டிருந்தது. உடனே தோழர் சு.பொ பதிலளித்தார். “ இது மற்றவர்களின்
நம்பிக்கையை மதிக்கும் எங்கள் மனிதநேய, மதச் சார்பற்ற பண்பு” என்று. திருமண பந்தம்
பற்றிய அவரின் அருமையான ஒரு பதிவு இங்கே. இது கடைசி பகுதி மட்டுமே. முந்தைய
பகுதிகளை வலைப்பக்கத்திலேயே சென்று பாருங்கள்.
இன்றைய பொறுப்பாசிரியர் அ.குமரேசன் அவர்களை சில்லறை வர்த்தகம் தொடர்பான விஜய் டி.வி நீயா நானா
நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். மாணவர்களின் சுமைகள்பற்றிய அவரது
பதிவைக் கொஞ்சம் படியுங்கள்.
சமீபத்தில்
நாங்கள் பெருமிதமாய் உணர்ந்த இரு தருணங்கள். எங்கள் சங்கத்திற்கு அளிக்கப்பட்டவிருது ஒவ்வொருவரையும்மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. எங்கள் அகில இந்திய
பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு
எங்களுக்கும் பெருமிதம் அளித்தது.
ரொம்ப சீரியஸா
போயிடுச்சுல்ல?
ஒரு திரைப்பட விமர்சனம் படியுங்க, தமிழ் முன்ன பின்னதான் இருக்கும்.
என் சக ஊழியர், ஆந்திராவிலிருந்து வந்து இந்த அளவு தமிழ் எழுதறது
நல்ல விஷயமில்லையா
ஓ.கே வணக்கம்,
நாளை சந்திப்போம்.
இந்த படங்களை
ரசித்து விட்டு செல்லுங்கள்.
அனைவருமே நான் அறிந்திராத பதிவர்கள்! கட்டாயம் அவர்கள் பக்கம் செல்ல தூண்டுகிறது உங்கள் எழுத்து! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteநீங்கள் அறிமுகம் செய்த சிவப்புச் சிந்தனை பதிவர்கள் எழுதிய கட்டுரைகளை படித்து இருக்கிறேன். மீண்டும் நினைவலைகள் உண்டாக்கியமைக்கு நன்றி!
ReplyDeleteஎன்னளவில் இவர்கள் புதிய அறிமுகங்களே! நன்றி!
ReplyDeleteஇதயத்தில் அலைமோதும் பதிவர்களின் இழப்பு சோகம் தருகிறது..
ReplyDeleteஇதயத்தில் அலைமோதும் பதிவர்களின் இழப்பு சோகம் தருகிறது..
ReplyDelete