Sunday, February 10, 2013

ராமன் S வெல்லூர், விஜயன் துரையிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்

ராமன்.S.வெல்லூர் ஆசிரியப் பொறுப்பினை விஜயன் துரையிடம் ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ராமன்.S.வெல்லூர் தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள் : 11
பெற்ற மறுமொழிகள்     : 60

நண்பர் ராமனை நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்க இருக்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ள பதிவர் விஜயன் துரையினை வருக ! வருக ! என வரவேற்று   வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


இவரது இயற்பெயர் துரைராஜ்.  விஜயன் என்கிற புனைப்பெயரில் இவரது  கவிதைகளை,  ”வானம்பாடி “ என்னும் தளத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.  இவர் ”கடற்கரை” என்னும் தளத்திலும் எழுதி வருகிறார். 

இவர் பிறந்தது நாலா பக்கமும் கடல் சூழ்ந்து நிற்கும் இராமேசுவரம் மண்ணில்…. பள்ளிப் படிப்பு  பிறந்த மண்ணில்பட்டப்படிப்பு திருச்சியில்

இவர் மனம் சிந்திக்கிற செய்திகளை இந்த வலைப்பூவின் வழியே எண்ணச்சிதறல்களாக எழுதி வைக்கிறார்.  இவரது  வலைப்பூக்களின் முகவரிகள்:


நல்வாழ்த்துகள் ராமன்.S.வெல்லூர் 

நல்வாழ்த்துகள் விஜயன் துரை

நட்புடன் சீனா 

4 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வருக கவிஞரே வருக !நல்வாழ்த்துகள் விஜயன் துரை

    ReplyDelete
  3. விஜயன் என்றால் வெற்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. விஜயனை நான் நன்கு அறிவேன்.வித்தியாசமான சிந்தனை உடைய இளைஞர்.நல்ல திறமைசாலி.
    வரவேற்கிறேன்.

    ReplyDelete