Sunday, March 24, 2013

கதம்ப மலர் மாலை!!



அளிப்பவர் அருணா செல்வம்
 
வணக்கம்



நட்புறவுகளுக்கு வணக்கம்!

    இன்று “கதம்ப மலர் மாலைஎன்ற தலைப்பில் பல இயல்களைச் சார்ந்த பலரின் பதிவுகளின் தளங்களைச் சுட்டிக்காட்டப் போகிறேன். இதில் என்ன ஒரு கடினம் என்றால்... ஒவ்வொரு பதிவரும் பற்பல விசயங்களில் கைத் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். யாரையும் இவர் இதில் மட்டும் சிறந்தவர் என்று பிரித்துப் பார்த்து எழுத முடியவில்லை.

உதாரணத்திற்கு....



கண்ணே!

அருவிகள் ஆற்றில் கலக்கின்றன.

ஆறுகள் கடலில் கலக்கின்றன.

நான் மட்டும் ஏன்

உன்னோடு கலக்கக் கூடாது?

அதோ பார்!

உயர்ந்த மலைகள் வானைத் தழுவி முத்தமிடுகின்றன.

அலைகள் ஒன்றையொன்று தழுவி முத்தமிடுகின்றன.

நான் உன்னைத் தழுவி

முத்தமிடாவிட்டால்

இயற்கைக்குப் பொருந்துமா?



     இது “ஷெல்லி“ யின் தழுவல்! இதில் அன்பு, காதல், காமம், கவிதை என்பதை எந்த எந்த வரிகளில் சுட்டிக்காட்ட முடியும்?

    இது போலத்தான் இன்றுள்ளவர்களின் பதிவுகளில் எதையும் தனித்தனியாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை.

    தவறி கிணற்றில் விழுந்தவன் விழுந்ததே விழுந்தோம். நல்லா குளிச்சிட்டே வெளியேறலாம் என்று சற்றும் பயமில்லாமல் சிந்திப்பது போல் நானும் புதிய பதிவர்களைத் தேடுவதே தேடுகிறோம்... அவர்களிடம் உள்ள பயனுள்ளதை நானும் நன்றாக கற்றுக்கொள்வோமே... என்று நானும் படித்து மகிழ்ந்தேன்.

   “கற்றுக் கொடுக்கும் பொழுது தான் நாம் மேலும் கற்றுக் கொள்ள முடிகிறது“ என்ற உண்மை எனக்கு இப்பொழுது தான் புரிகிறது.

    அதிலே நான் தேடிப்பிடித்துப் படித்தத் தளங்களில் எனக்குப் பிடித்ததை உங்களுக்கும் பகிர்ந்து மகிழ்கிறேன்.






. “மானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து 2006 லிருந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்“ என்று தன் அறிமுகத்தைத் தாழ்மையுடன் தொடங்கும் இவர் நம்மின் மிகவும் உயர்ந்தவர். இவரின் பதிவுகள் ஒருசில உங்களின் பார்வைக்கப் படைக்கிறேன்.








2  முதல் துளி நிரேஷ் குமார் (சிறுகதைகள்)


   தமிழின் மீது நான் கொண்ட பற்றும், சமூகத்தின் மீது நான் கொண்ட கோபமும் என் விரல்களை எழுதத் துாண்டியது! பத்திரிகை நண்பர்களின் ஆதரவும் கிடைத்த பரிசுகளும் என் எழுத்தைத் தொடர வைத்தன!! எவ்வளவு காலம்தான் பத்திரிகைகளுக்காகவும்  பரிசில்களுக்காவே  எழுதுவது?  இப்போது நான் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் எழுதுகின்றேன். என் எழுத்தைப் பரவலாக்கும் முயற்சியின் முதல் தடமே தமிழ் வலையில் என் கால் தடம்.......!  என்று தன் அறிமுகத்தைத் தொடர்ந்து இவர் எழுதிய அனைத்துப் பதிவுகளுமே அருமையானவைகள்.   








3. காலக் கூத்து (சிறுகதைகள்)

“ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன“ - கலீல் ஜிப்ரான்

   வரிகளை அறிமுகமாகக் கொண்ட இவரின் படைப்புகள் நாங்கள் மனிதர்கள் என்பதை உணர்த்தும்.









    “நாங்கள்ளாம்... தலையில இடியே விழுந்தாலும் !!.. வாய்க்குச் சேதாரம் இல்லாம இருந்துச்சின்னா சாப்புடச் சூடா என்னா இருக்கு? -ன்னு கேக்குறவிங்க..!!!என்ற நகைச்சுவை உணர்வுடன் கூடிய அவரின் படைப்புகளில் சில...











5. இசையின் ஈர இயக்கங்கள் (நித்தியவாணி மாணிக்கம்)

     இவரின் பதிவுகள் அனைத்தும் இசையைக் குறித்தே உள்ளது. இசை விரும்பிகளுக்கு பிடித்தமான தளமாக இருக்கும் இவரின் தளம்.







     கவி வானில் சுற்றித் திரியும் சுதந்திர பறவை. என் மனம் சிந்திக்கிற விசயங்களை இந்த வலைப்பூவின் வழியே எண்ணச்சிதறல்களாக எழுதி வைக்கிறேன்தங்களைப் போன்ற நல்ளுள்ளங்களின் ஆதரவும், விமர்சனமும் என் வளர்ச்சிக்கு உதவட்டும்“ என்று நம்மை அழைக்கும் இவரின் படைப்புகள் சமுக சிந்தனையுள்ள படைப்புகள். படித்துப்பாருங்கள்.







    விருப்பு வெறுப்புக்கு அப்பால் விதி தந்த பாதையிலே நகர்ந்திடும் பல கோடிப் பேரில் நானும் ஒருவன்.என்று சொல்லி நமக்கு அறிமுகம் கொடுத்துவிட்டு இவர் படைத்தப் படைப்புகள் நமக்கு விருந்தாக உள்ளது.









ஹைகூகள்

    கல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம் தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட இரண்டாம் வசந்த காலம் இது.! இந்தக் காலம் என்னைப் போல சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கெல்லாம் பொற்காலமாக அமையட்டும்.  எனது வாழ்த்துக்கள் அனைத்து மகளிருக்கும்.! “ என்று தன்னை அறிமுகம் படுத்தும் இவர் எழுதிய நிறைய குறுங்கவிதைகளை இன்றைக்கெல்லாம் படித்துக்கொண்டே இருக்கலாம்.
எது நீ?
 
பயணம் 
 
தாய் வாசம்
 
9. பூவிழி மலர்பாலன்

   தன்னைப்பற்றி எதுவுவே அறிமுகப் படுத்தாத இவர் எழுதிய பதிவுகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. படித்து ஊக்கமூட்டுங்கள்.
காதல் கிச்சி கிச்சி 
 
மூடிய கையில் என்ன இருக்கிறது?
 
அவலம் அவலம் அவலம்..?
 
10 ஜோக்களி

    தினசிரிஒரு ஜோக். இவரைப்பற்றி நான் சொல்லவே தேவையில்லை. எல்லோரும் இவரைப் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். இவர் தினமும் எழுதும் சின்னச் சின்ன நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் நம்மை சிரிக்க வைப்பன. (நேற்று இரவு வலைச்சரத்திற்காக எழுத இவரின் வலைப்பதிவுக்குள் போய்.... படித்துச் சிரித்துச்... சிரித்து... வயிற்று வலியே வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் படுத்தப்பிறகும் இவரின் ஜோக்குகளை நினைத்துச் சிரிக்க... “எனக்கு ஏதோ பிடித்துக்கொண்டது“ என்பது போல் என் கணவர் என்னைப் பார்த்தார்...!)
கோவிலுக்கு போனால்...
 
காலி பிளவர்
 
கஞ்ச பிசினாறி!
 

    இது வரையில் கதம்ப மாலையில் உள்ள பூக்களைச் சுட்டிக் காட்டினேன். ஆனால் பறிக்க முடியாத உயரத்தில் இருக்கும் பூவலைகளையும் இங்கே சுட்டிக்காட்டக் கடமை பட்டுள்ளேன்.

திறக்காத வலைப்பூக்கள்!!








திருமதி பக்கங்கள். (கோமதி அரசு)





     இவர்களின் தலைப்புகளைத் தமிழ் மணத்தில் பார்த்து விட்டு வாசலுக்கு நுழைந்தால் கதவைத் திறந்து உடனே மூடிவிடுவார்கள். நான் தட்டத் தட்டத் திறக்காத வலைகள் இவைகள். (இப்பவாவது அவர்கள் இதைச் சரி செய்வார்களா... படிக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்)



     நண்பர்களே இன்றைய வலைச்சரத்தின் கதம்ப மலர்கள் அனைத்தும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நாளை வலைச்சர கடைசி பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன்.



நட்புடன்

அருணா செல்வம்.





36 comments:

  1. ஒரிருவரசித் தவிர மற்றவர்களின் தளங்களுக்கு சென்றதில்லை இனி செல்கிறேன்.நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete

  2. வலைச்சர உறவுகளுக்கு வணக்கம்!

    மணக்கும் கதம்பமலா்! மங்கை அருணா
    கணக்கும் இனிக்கும் கனிபோல்! - இணைத்த
    வலைகள் அனைத்தும் வளா்தமிழ் காக்கும்!
    கலைகள் அனைத்தும் கமழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அருணா அருமையாக உங்கள் பணியை வழி நடத்திப் போகும் விதம் மனதை மகிழ வைக்கிறது .
    மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும் .

    ReplyDelete
  4. இதில் நான்கு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இன்றைய வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன் அனைத்த்ப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    தங்களுக்கு என் பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete
  6. ///திறக்காத வலைப்பூக்கள்...///

    திறக்கும்... ஆனால் துள்ளிக் கொண்டே இருக்கலாம்... அதாவது மறுபடியும் மறுபடியும் refresh ஆகி திறந்து கொண்டே இருக்கும்... இந்த தளங்களை படிக்கவே முடியாது... அதனால் பின்னூட்டம் இட முடியாது... இதற்கு காரணம் என்ன? என்ன செய்யலாம்...?

    எடுத்துக்காட்டு :

    http://kbjana.blogspot.fr/2013/03/blog-post_14.html-இதில் fr என்று உள்ளதை com என்று மாற்றி விட்டால்... மேலே சொன்ன முடியாது என்பதெல்லாம் முடியும்... இதோ இவ்வாறு :

    http://kbjana.blogspot.com/2013/03/blog-post_14.html

    இதே போல் செய்ய வேண்டுமா...? வேறு வழி இல்லையா...? ஒரு நிமிடம் வருகிறேன்...

    ReplyDelete
  7. திறக்காத வலைப்பூக்கள் - தலைப்பிற்கு கீழ் உள்ளவர்கள் செய்ய வேண்டியது...

    http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html-இதில் உள்ளது போல் தங்கள் தளத்தில் செய்து விட்டால், விரும்பிப் படிப்பவர்கள் சந்தோசப்படுவார்கள்... இல்லையென்றால் மேலே சொன்னபடிதான் செய்ய வேண்டும்... Link-லும் ஒரு குறிப்பு உள்ளது... அதன்படியும் செய்யலாம்...

    இவ்வாறு செய்யாவிட்டால் புதுமுகங்களை நம் தளத்தில் பார்ப்பது அரிது...

    நன்றி...

    மேலும் விளக்கங்களுக்கு :

    dindiguldhanabalan@yahoo.com
    +91 9944345233

    ReplyDelete
  8. // இதில் அன்பு, காதல், காமம், கவிதை என்பதை எந்த எந்த வரிகளில் சுட்டிக்காட்ட முடியும்?//

    அன்பு ஒரு அடித்தளம்
    அடித்தளத்தில் ஈர்ப்பு என்பதும் ஒரு தளம்
    ஈயை விரட்டுபவனும் ஒருவன்.
    ஈ ஏன் இருக்கிறது என தேடுபவன் இன்னொருவன்.
    ஒரு ஈ காதலாகிறது. இன்னொரு ஈ காமம் ஆகிறது.
    இன்னும் ஒருவனுக்கோ அந்த
    ஈர்ப்பு ஈசனில் சங்கமிக்கிறது.

    இதெல்லாம் இருக்கட்டும்.


    //நான் உன்னைத் தழுவி
    முத்தமிடாவிட்டால்//

    அந்த ' நான் ' யார் அல்லது எது என்பதில் தான்
    காதலோ காமமோ ஒளிந்திருக்கிறது.

    நீங்கள் விரட்டுமுன் நான் ஓடி விடுகிறேன்.

    சுப்பு தாத்தா.


    ReplyDelete
  9. மிக்க நன்றி அருணா.. எதிர்பார்க்கவில்லை என் டைரிக்கிறுக்கல்களில் இருந்து அழகான கவிதைகளைச் சுட்டியுள்ளீர்கள்.

    நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் சீனா சார் அவர்களுக்கும்.

    ReplyDelete
  10. தகவலுக்கு நன்றி அருணா....
    மேலும் தடங்களுக்கு வருந்துகிறேன்...

    தற்பேர்து சரிசெய்துயிருக்கிறேன் தற்போது திறக்கிறதா என்று பார்த்து சொன்னால் நன்றாக இருக்கும்...

    மிக்க நன்றி...

    அறிமுக பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. தோழி என்னை அறிமுக பகிர்வில் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி நீங்கள் முதல் நாளில் சொன்னதுபோல் தலைப்புகள் மாற்றி திரும்பவும் கொடுக்கலாமா என்று யோசனையில் இருந்தேன் ஆனால் அந்த பதிவுகளை நீங்கள் இங்கு கொடுத்திருப்பதற்கு நன்றி பல
    மேலும் அறியாத அறிமுகங்களை அறிந்து கொண்டேன் நன்றி அறிமுகத்தின் ஆரம்பத்தில் ஷெல்லியின் கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. அருணாசெல்வம் அவர்களுக்கு முன்பு எல்லாம் சரியாகத்தான் இருந்தது என் தளத்தைப் எப்போதும் படிக்கும் எல்லோரும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் மட்டுமே வரவில்லை என்றார்கள் நீங்களும் அப்படியே கூறுகிறீர்கள்.
    சகோதரி ஹுஸைனம்மா அவர்கள் கீழ் இருப்பது போல் com/ncr போட்டு வந்தேன் என்றார்கள் நிரந்தர தீர்வுக்கு நண்பர் தனபாலனிடம் கேட்டு செய்கிறேன்.
    அவர்தான் என் வலைத்தளம் வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதை சொன்னார்கள்.
    உங்களுக்கு நன்றி.
    கீழ் இருப்பது போல் போட்டு வந்து பாருங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
    இன்று நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    http://mathysblog.blogspot.com/ncr

    ReplyDelete
  13. 'கதம்ப மலர் மாலை 'யில் என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி !
    ,'அறிமுகம் செய்தவர் அருணா செல்வம் 'என மகிழ்ச்சியுடன் பாடலாம் போலிருக்கிறது !
    சிரித்து சிரித்து உங்கள்வயிறு புண் ஆனதாலோ என்னவோ ,ஜோக்காளியை ஜோக்;களி 'ஆக்கி விட்டீர்கள் போல் இருக்கிறது !நீங்கள் தந்த களியை களிப்புடனே சுவைத்து மகிழ்கிறேன் !
    வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக அறிமுகப் படுத்தஉதவிய திரு .சீனா ,திரு ,தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி
    வாழ்த்திய அய்யா கி ,பாரதிதாசன் ,திரு அம்பாளடியாள் ,திரு திண்டுக்கல் தனபாலன் ,திரு வை ,கோபால கிருஷ்ணன் ,கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கும் என் நன்றி !

    ReplyDelete
  14. இனிய வணக்கம் சகோதரி அருணா செல்வம்!

    நல்ல அழகிய மணமுள்ள வாசனைமிகு கதம்ப மலர் மாலை இன்று தந்துள்ளீர்கள். சிறப்பு. வாழ்த்துக்கள்!

    அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான நல்வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  15. வணக்கம் மூங்கில் காற்று!

    தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

  16. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவிஞர்.

    ReplyDelete

  17. தங்களின்வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள் தோழி.

    ReplyDelete
  18. வணக்கம் தனபாலன் ஐயா.

    நீங்கள் திறக்காத வலைகளைத் திறக்க வழி சொன்னதற்கு அனைவரின் சார்பாகவும் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

    ( “திண்டுக்கல்“ பூட்டிற்கு மட்டும் தான் புகழ் பெற்றது என்று நினைத்திருந்தேன். அதனுடனே சாவியும் இருக்கும் என்பதை மறந்து விட்டேன்.)

    தங்களின் வருகைக்கும் உதவிக்கும் என்றும் நான் கடமை பட்டவளாகவே இருக்கிறேன்.
    மிக்க நன்றி தனபாலன் ஐயா.

    ReplyDelete
  19. கதம்ப மலர்களின் அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. வலைச்சரம் மீது நான் கொண்ட பற்று என்றும்...........

    ReplyDelete
  21. அச்சச்சோ திறக்காதவங்க லிஸ்ட்லே நானும் இருக்கேனா? இது எனக்குத் தெரியாம இருக்கே!!! திண்டுக்கல் தன்பாலன் அவங்க தான் இங்கே அறிமுகம் பற்றி எழுதினாங்க!!நன்றியோ நன்றி....சரி பண்ண முயற்சிக்கிறேன்!!!

    ReplyDelete
  22. தனபாலன் அவர்கள் சொன்ன மாதிரி செய்தாயிற்று....ஒழுங்கா திறக்கிறதான்னு யாராவது சொல்லுங்கப்பா!!!

    ReplyDelete
  23. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. வணக்கம் சுப்புத் தாத்தா!
    தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    //நான் உன்னைத் தழுவி
    முத்தமிடாவிட்டால்//

    அந்த ' நான் ' யார் அல்லது எது என்பதில் தான்
    காதலோ காமமோ ஒளிந்திருக்கிறது.

    நீங்கள் விரட்டுமுன் நான் ஓடி விடுகிறேன்.

    சுப்பு தாத்தா.



    இந்தக் கவிதையில் நான் என்பது எது? யார்? என்பது தெரியாமல் கலந்துள்ளதால் தான் இந்தக் கவிதையைச் சுட்டிக் காட்டினேன்.
    பாலுக்குள் வெண்ணெய் எங்கே? தயிர் எங்கே? என்று தேட முடியாது. அதே போல் இப்படி சில கவிதைகள் அமைவதே மேலும் சிறப்பு.

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி சுப்பு தாத்தா.


    ReplyDelete
  25. Thenammai Lakshmanan said...

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  26. கவிதை வீதி... // சௌந்தர் // said...

    நான் நிச்சயம் போய் பார்க்கிறேன்.

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்.

    ReplyDelete

  27. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பூவிழி மலர்பாலன்.

    ReplyDelete

  28. தங்களின் வருகைக்கும் புதிய முகவரியைக் குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி கோமதி அரசு.

    ReplyDelete
  29. மன்னிக்கனும் “ஜோக்காளி“ ஐயா. ஏதோ தெரியாமல் செய்த எழுத்துப்பிழை இது.
    இருந்தாலும் என் செய்தியைப் படித்துக் “களி“த்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

  30. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இளமதி தோழி.

    ReplyDelete

  31. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி மாதேவி.

    ReplyDelete

  32. தங்களின் வருகைக்கும் வலைச்சர பற்றுக்கும் மிக்க நன்றி பால சுப்பிர மணியன் ஐயா.

    ReplyDelete
  33. அன்புடன் அருணா.... நான் .ந்த வேலை முடிந்ததும் உங்கள் வலைக்குள் வந்து திறந்தால் பின்னொட்டத்தின் மூலம் நிச்சயம் சொல்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete

  34. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

    ReplyDelete
  35. ''..இவர்களின் தலைப்புகளைத் தமிழ் மணத்தில் பார்த்து விட்டு வாசலுக்கு நுழைந்தால் கதவைத் திறந்து உடனே மூடிவிடுவார்கள். நான் தட்டத் தட்டத் திறக்காத வலைகள் இவைகள். (இப்பவாவது அவர்கள் இதைச் சரி செய்வார்களா... படிக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்)..''இந்தப் பிரச்சனை எனக்கு மட்டும் என்று எண்ணினேன் உங்களுக்குமா? வேறும் சிலரிடம் எனக்கும் போக முடியாமல் உள்ளது. அனைவருக்கும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  36. அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...

    ReplyDelete