Sunday, March 10, 2013

சே. அரசன் - வே.நடனசபாபதியிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் வே.நடனசபாபதி தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் சரிவர நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர்  சிரித்து வாழ வேண்டும், அனைவருக்கும் கல்வி, உடல் நலமே உண்மையான சொத்து, ஆளுக்கொரு வீடு, நெசவுத்தொழிலுக்கு வந்தனை செய்வோம், சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், மலரும் நினைவுகள் என்ற ஏழு தலைப்புக்ளைக் கொண்டு - தலைப்பு தொடர்பான பதிவுகளைத் தேடிப்பிடித்து - படித்து இரசித்து - இங்கு அறிமுகப் படுத்திய விதம் நன்று. 

தலைப்பினைப் பற்றிய ஒரு அறிமுகம் கொடுத்த பின்னரே - தலைப்பு தொடர்பான மற்ற பதிவுகளை அறிமுகம் செய்து வைத்த விதமும் நன்று. 

இவர் எழுதிய பதிவுகள்                              : 7
இவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 60
இவர் அறிமுகப் படுத்திய பதிவுகள்    : 84 ( சுய அறிமுகப்பதிவுகள் உட்பட ) 

இவரை துவக்க காலத்தில்  ஊக்குவித்த நண்பர்களையும், இவரை வலைச்சரத்தில் முன்னரே அறிமுகப்படுத்திய அனைத்து நண்பர்களையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்த நற்ப்ண்பு பாராட்டத் தக்கது.  

வே.நடனசபாதியினை வாழ்த்தி விடை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் சே.அரசன். 

மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் இவரது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு இவரது சிற்றூர். இவரது பெயர் சே.அரசன்

2010 லிருந்து பதிவுலகத்தில் இருந்து வருகிறார். இவருக்கு பதிவுலகத்தை அறிமுகம் செய்து வைத்தவர் , ஒரே ஊர்க்காரரும், நெருங்கிய சொந்தக்காராருமாகிய திரு. கருணாகரசு அவர்கள் தான். 

தற்பொழுது சென்னையில் உள்ள மருத்துவமனையில் பணி செய்து வருகிறார். 

இவர் ”கரை சேரா அலை” என்னும் பதிவில் எண்ணங்களைப் பகிர்கிறார். -  

கழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றித் திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை  மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது. 

விரைவினில் கூண்டிலிருந்து வெளி வர இறையருள் துணை புரிய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள். 

சே.அரசனை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் வே.நடனசபாபதி 

நல்வாழ்த்துகள் சே.அரசன் 

நட்புடன் சீனா 






13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துகளுக்கு நன்றி திரு சீனா அவர்களே! இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்கின்ற நண்பர் திரு சே.அரசனுக்கு எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. சென்ற ஏழு நாட்களாக, வலைச்சரம் ஆசிரியர் பணியினை நிறைவாகவும், சிறப்பாகவும் செய்த வங்கி உயர் அதிகாரி (ஓய்வு) திரு.வே.நடன சபாபதி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
    வலைச்சரம் ஆசிரியர் பணியினத் தொடரும் சகோதரர் ”கரை சேரா அலை” சே.அரசன் ( http://karaiseraaalai.blogspot.in ) அவர்களுக்கு வாழ்த்துக்கள்!


    ReplyDelete
  4. அட நம்ம அரசன்.. வாழ்த்துக்கள் தலைவரே

    ReplyDelete
  5. வணக்கம்

    பல தடைகளை தாண்டி பலவகைப்பட்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்து தனது பணியை சிறப்பாக முடித்த வே,நடனசபாபதி(ஐயா) அவர்களுக்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன் அத்தோடு புதிதாக வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் திரு,சே,அரசன் (அண்ணா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் வருகிற வாரம் சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. தடைகளைத் தண்டி வந்த அரசன் சரித்திரம் படைக்க உள்ளார்.வாருங்கள் அரசன் வாழ்த்துகிறேன்.
    இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள் ஆம் நீங்களும் தைரியமாய் உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்

    ReplyDelete
  7. அழகுற
    பலவித மணமிக்க
    பூக்களால்
    வலைச்சரம் தொடுத்த
    ஐயா...நடனசாபாபதி... அவர்களுக்கு
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

    இனிதாய்
    இயல்புக் கவிபுனையும்
    தேன்சுவை பாவலன்
    சகோதரர் அரசன் ....
    வாசமிகு மலர்களால்
    வண்ணமாலை கட்டிடுங்கள்.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாழ்த்திய நண்பர்கள் திரு தி.தமிழ் இளங்கோ, திரு ரூபன், திரு மகேந்திரன், ஆகியோருக்கு நன்றி!,

    ReplyDelete
  9. அரசனுக்கு வாழ்த்துக்கள் கலக்குங்க

    ReplyDelete
  10. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த திரு.வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    அட... இனிய நண்பர்... இளமை அரசனை வரவேற்கிறேன்... அசத்துங்க...

    ReplyDelete
  11. பாராட்டுக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    ReplyDelete
  12. வாழ்த்துகள் சே. அரசன்.

    ReplyDelete