அன்பு நட்புகளே..!
இறுதி கணக்கு
உயிர்போகும் தருவாயில்
உயிர்பெற்ற கணக்கிது..!
என் வாழ்வின்
இன்பங்களை கூட்டி
துன்பங்களால் கழித்து
வந்த விடையை என்
வாழ்நாட்களால் பெருக்கி
வாழ்ந்த நாட்களால்
வகுத்துப் பார்க்கையில்
எல்லோருக்கும் போலவே
சமவிகிதமாய் என் வாழ்வின்
சதவிகிதம்-எதிர்மறை குறியில்!
இந்த வலைச்சர தேடலில் பலப்பல எண்ணங்களின் கவித்துவ வடிவத்தைக் கண்டேன்..
இத்தனை இத்தனை திறமைசாலிகள் இருக்கும் தமிழ் வலைப்பூக்கள் கண்டு மனம்
நெகிழ்கிறேன்.
இன்று வலைப்பூ பதிவில்லாத நல்ல பதிவர் சுகந்தப்ரீதன். இவரது எழுத்துக்கள்
மிக எதார்த்தமான, அதே சமயம், மனதில் ஆழமான அதிர்வை ஏற்படுத்தக் கூடுபவை.
தவிப்பு
தடாகத்தில்
தாவிக்குதிக்கும்
தவளையாய் தவிக்கிறேன்
தன்னிலை மறந்து
தாமரைநீ நீராடுகையில்..!!
தவளையாய் தவிக்கிறேன்
தன்னிலை மறந்து
தாமரைநீ நீராடுகையில்..!!
%%%%%%%%%%%%
இறுதி கணக்கு
உயிர்போகும் தருவாயில்
உயிர்பெற்ற கணக்கிது..!
என் வாழ்வின்
இன்பங்களை கூட்டி
துன்பங்களால் கழித்து
வந்த விடையை என்
வாழ்நாட்களால் பெருக்கி
வாழ்ந்த நாட்களால்
வகுத்துப் பார்க்கையில்
எல்லோருக்கும் போலவே
சமவிகிதமாய் என் வாழ்வின்
சதவிகிதம்-எதிர்மறை குறியில்!
--சுகந்தப்ரீதன்
சரி அன்பர்களே.. இன்றைய அறிமுக வலைப்பூக்களின் தொகுப்புக்கு செல்வோமா??!!
மழை பற்றிய இவரின் பின் கவிதையில், மழை உணர்த்திய சோகத்தை வடித்திருக்கிறார்.
இப்படியான சோகமான பேருந்து பயணத்தை நாமும் பல தடவைகள் கடந்திருப்போம் எனில் இக்கவிதை
நம் மனதுக்கு நெருக்கமாகும். இலைமொழி என்ற கவிதை, இலை சொல்லும்
கவிதையாக விழுகிறது நம்மில்.. அனுபவப்பகிர்வில், பயணம் பற்றிய இவரின் பதிவுகள் அசர
வைக்கின்றன. பயணம் 4: நாங்கள் சென்றோம் என்ற பதிவு பெண்களுக்கு புது நம்மிக்கையையும்
மகிழ்வையும் தருவதாக இருக்கிறது.
கவிழாத காகித ஓடம் என்ற துணைத் தலைப்புடன் இருக்கும்
இவ்வலைப்பூவில் வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர் என்ற கவிதை, ஒரு வீட்டின் வலி சொல்லி நிற்கிறது.
மிக நேர்த்தியான கவிதை மனத்தைக் கவர்கிறது. அசையுமாசை என்ற கவிதையில் அழுத்தமான கருத்தொன்றை விட்டுச் செல்கிறார்.
இருள் என்பது குறைந்த வெளிச்சம் என்று வெளிச்சமிக்க
கருத்தோடு ஆரம்பிக்கும் வலைப்பூ, உலக சினிமாக்களின் விமர்சனங்களையும் பல
செய்திகளையும் கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக, மூன்று பேருந்து பயணங்கள் என்ற பதிவில் இவர் சொல்லும் இறுதிப் பயணம் மனதை
வெகு நேரம் கட்டிப் போடுகிறது. எதிர்பார்ப்புகள் அற்று கொடுப்பதை மட்டுமே நினைத்திருக்கும்
அற்புதமான தாவரம் உங்களுக்கு தெரியுமா? அது பற்றி இவர் படைத்த கவிதை செடிக்குள் கிடக்கும் பனம்பழம் கவிதையின் மனம் நாசி வழி நெஞ்சம் நிறைக்கிறது.
இவர் மிக அசத்தலான வலைப்பூ வடிவமைப்பைக் கொண்டிருக்கிறார்.
புகைப்படங்களைச் சொடிக்கினால் கவிதை முளைக்கிறது. உப்பூ என்றொரு கவிதை, அது தரும் வலி.. கண்கள் பணிக்கச் செய்கிறது.
உப்பு மூட்டை சுமப்பவர் மட்டுமல்ல.. மனக்கண்ணில் பொதி மூட்டையாக அரிசி, கோதுமை என சுமக்கும்
தொழிலாளிகளும் நினைவில் வந்து போகிறார்கள்.. நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் கவிதையோ நிராகரிக்கப்படும் வயோதிக மனிதரின் துயர்
சொல்லி நிற்கிறது.
5. தக்ஸின் சிறுகதைகள்
ஒரு கத்துக்குட்டியின் சிறு முயற்சி என்று தலைப்பில் ஆரம்பிக்கும் இவர் வலைப்பூ. சிறுகதைகள் வெகு சிலவற்றையே கொண்டிருக்கின்றன. இவர் தன்னைப் பற்றி சொல்கையில், ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, அசாதாரண வாழ்க்கையைக் கனவில் வாழ்பவன் என்று சொல்கிறார். குறிப்பிடும்படியான பதிவுகள் எனில், வழித்துணை என்ற சிறுகதை, இறப்பின் பின் வாழும் மனிதர்கள் பற்றி சொல்கிறது. மனிதாபிமானம் என்ற சிறுகதையோ, மனம் வலிக்க வைக்கிறது. தடாலடியான முடிவுகள் இவரின் கை வந்த கலை. ஏனோ வலைப்பூவில் நிறைய பதியவில்லை. பதிவுலகம் தாண்டி, இவரின் படைப்புகள் பல படித்தவரையில் நல்ல எழுத்தாளரை இவருள் வைத்திருக்கிறார் என்று திட்டவட்டமாகச் சொல்வேன்.
இன்றைய அறிமுகங்கள் உங்களின் மனம் கவர்ந்திருக்குமென நம்புகிறேன். மிண்டும் நாளை சிந்திப்போம்.
அன்புடன்,
பூமகள்.
ஒரு கத்துக்குட்டியின் சிறு முயற்சி என்று தலைப்பில் ஆரம்பிக்கும் இவர் வலைப்பூ. சிறுகதைகள் வெகு சிலவற்றையே கொண்டிருக்கின்றன. இவர் தன்னைப் பற்றி சொல்கையில், ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, அசாதாரண வாழ்க்கையைக் கனவில் வாழ்பவன் என்று சொல்கிறார். குறிப்பிடும்படியான பதிவுகள் எனில், வழித்துணை என்ற சிறுகதை, இறப்பின் பின் வாழும் மனிதர்கள் பற்றி சொல்கிறது. மனிதாபிமானம் என்ற சிறுகதையோ, மனம் வலிக்க வைக்கிறது. தடாலடியான முடிவுகள் இவரின் கை வந்த கலை. ஏனோ வலைப்பூவில் நிறைய பதியவில்லை. பதிவுலகம் தாண்டி, இவரின் படைப்புகள் பல படித்தவரையில் நல்ல எழுத்தாளரை இவருள் வைத்திருக்கிறார் என்று திட்டவட்டமாகச் சொல்வேன்.
இன்றைய அறிமுகங்கள் உங்களின் மனம் கவர்ந்திருக்குமென நம்புகிறேன். மிண்டும் நாளை சிந்திப்போம்.
அன்புடன்,
பூமகள்.
வணக்கம் பூமகள்!
ReplyDeleteதினம் தினம் புதுப்புது அறிமுகங்கள். அதுவும் ஒரு கவிதையுடன் உங்கள் அறிமுகங்கள் எல்லாம் அறியாத முகங்களாகவே இருக்கின்றன.
மிகவும் கனமான எழுத்துக்களின் சொந்தக்காரர்கள்.
சுகந்தப்ரியன் அவர்களின் இறுதிக் கணக்கு 'ஆஹா' சொல்ல வைக்கிறது. பலமுறை படித்து ரசித்தேன்.
ஒவ்வொரு தளமாகப் படித்துக் கொண்டு செல்கிறேன்.
வாழ்த்துகள்!
எந்தத் தளமும் இதுவரை அறியப்படாத தளங்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக அமைந்துள்ளது !
ReplyDeleteமிக்க நன்றிகள்.. தமிழ் மன்றம் www.tamilmantram.com என்ற தளத்தில் நான் குறிப்பிடும் பதிவர்கள் எழுதி வருகிறார்கள். வலைப்பூவில் எழுதாத அவர்களை அறிமுகம் செய்யவே எனது முயற்சி. நன்றிகள் பலப்பல. :)
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். ஒவ்வொன்றாய் படிக்கிறேன்...
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் எனக்கு புதியவர்களே. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteசுகந்தப்ரீதன் அவர்களின் வரிகள் அருமை...
ReplyDeleteஐந்தாவது தளம் புதிது... அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இன்றைய அறிமுகங்களும் எனக்கு புதியவர்களே. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteVetha.Elangathilakam
முதலில் நண்பர் திண்டுக்கல் தனபாலன் -அவர்களுக்கு பின் பூமகள் மற்றும் வலைச்சரத்திற்கு. தொடர்ந்து தொடுக்கப்படும் இந்த பூமாலையில் அவ்வப்போது எனது பூக்களும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.
ReplyDeleteகவிதை எழுதி நாளாயிற்று. அதுவும் அதற்கு விளக்கம் கொடுத்து நெடு நாள் ஆகிவிட்டது. எனது 'தடாக உளி'க்கு என்னால் முடிந்த வரை விளக்கம் கொடுக்க முயல்கிறேன்.
//இந்த குளத்தில் எறிகிறேன் // ஆக நான் குளத்திற்கு முன்னால் நிற்கிறேன்/உட்கார்ந்து இருக்கிறேன் என்று வைத்து கொள்வோம். எதனை எறிகிறேன் என்றால் , ரயிலடி, அங்காடித்தெரு,பேருந்து நிறுத்தம், கடற்கரை மாலை மற்றும்பனி இரவுகள். அதுவும் எப்படி ஒழுங்கற்றவைகளாக(அப்படியே பிடிக்க என்னால் முடியவில்லை) குளத்தில் கல்லை எறிந்தால் என்னவாகும் பூமகள்? வட்டமும் சலனமும்ஏற்படும் தானே?
இங்கே கூடவே எண்கோணம், கனசெவ்வகம். சிலவேளைகளில் வாழ்வு கண்ணுக்கு தெரியாத சூத்திரங்களால்
ஆனது என்பதாய்படும். நெடும் பயணங்கள், ஆழ வாசிப்புகளில் இது புரியும். அப்படியான ஒரு ஆழத்தில் இருந்த/இருக்கிற உளி ஒன்று(பனியால் செய்யப்படும் போது அது வலிமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது) நான் எறிந்த எல்லாவறையும் சிறு கற்களாக மாற்றி விடுகின்றன(இந்த .
இடத்தில் அப்பாத்துரை க்கு நன்றி சொல்லி ஆகவேண்டும்- மிகச்சரியாக எனது
எண்ணத்தை கவிதையை உள் வாங்கி உள்ளார்) மாறிய அந்த கற்கள்(நினைவுகள்) மிதக்கின்றன. நான் அப்படியே என் நினைவுகளால் இலகுவாகி மிதக்கிறேன்.
இதற்கு பிறகும் புரியவில்லை என்றால், விடுங்கள் 'கழுதை(?)' கிடக்கட்டும். நன்றி
ReplyDeleteஇதற்கு பிறகும் புரியவில்லை என்றால், விடுங்கள் 'கழுதை(?)' கிடக்கட்டும். நன்றி
ReplyDeleteஅன்பின் பூமகள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் - அடர்கருப்பு காமராஜின் அறிமுகம் அருமை - சென்று படித்து மகிழ்ந்து இரசித்தேன். மற்றவற்றையும் சென்று பார்க்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இன்றைய அறிமுகங்கள் நான் அறியாதவை. அறிமுகப் படுத்தியதற்கு நட்ன்ரி. இனி இவர்கள் தளங்களுக்கும் செல்வேன்.
ReplyDeleteஅருமையான பதிவர்கள் பலரை அறிமுகம் செய்து வரும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDelete