Wednesday, April 10, 2013

மரத்தில் ஏறி ஊரைச்சுற்றப்போறன்!!!!!!!

பயணம் போவது கல்லான இதய மரங்களையும் கலங்க வைக்கும் அன்பில் சிலருக்கு .!

எங்கே பயணம் போவது இந்த அவசர உலகில் !அடுத்த நேரம் என்னாகும் என்ற பதட்டமான யுத்த பூமியில் பிறந்த பாவத்தின் பெற்ற நன்மை பல ஊர்களை காசில்லாமல் கால் கடுக்க இரவு பகல் என்று ஓடிக்கடந்தவர்கள் ஈழத்து இறையாண்மை உள்ள மக்கள் என்பது உலகறிந்தது !

அதனால் தான் இப்போது உலகநாடுகளில் எல்லாம் ஒவ்வொரு உறவு இருக்கு இவர்களை பார்க்க செல்வதே எங்களின் பயணம் போதலுடன் முடிகின்ற நிலையில் பார்க்க பல இடங்கள் இன்னும் இருக்கு .


பவுசுகாட்டுகின்றான் என்று சிலர் புலம்பினாலும் கூடப்பிறந்தவர்களையும் ,நாடிவந்தவர்களையும் ,நல்ல நட்புக்களையும் ,அன்பில் நனைப்பது இந்த பயணம். பெரியவர்களையும் குழந்தையாக்கும் குழந்தையும்  படிக்கும் பெரியவர்கள் போல இது கூட தெரியாதா  டாடி என்று என்றாலும் இந்த பூமித்தாயின் இயற்கையில் தனிமனித  மரங்களின் பங்கு மறக்க முடியாது !

மழையைத் தருவது தொடக்கம் மண்காப்பது வரை வாருங்கள். தனிமரம் முதலில் டூயட்பாட நினைக்கும் ஊரைப்பார்ப்போம்:)))))


அந்தமானின் அழகும் அதன் விரிவான போக்கு வரத்துக்கள் பற்றிய இயற்கை எழிலைப்படம் பிடிக்கும் பிரபாகரனின் தளத்துக்கு சென்றால்!http://www.philosophyprabhakaran.com/2013/02/blog-post_20.html

 பல தகவல் பெறலாம்   மூத்தவர் எப்படி எல்லாம் மந்தராவிடம் ஜொல்லுவிட்டார்கள் என்று இன்று இலியான் ரசிகர்கள் பார்க்கலாம் .

இன்னும் பல  விடயங்கள் பேசும் இவர் தளம் .


இது கடந்து வந்தால் குட்டன் கூப்பிடும் ஊருக்கு போய்வருவோம் குசும்பு செய்த பயணம் இது.

 அவரை மிஞ்சுகின்ற!


 இந்த கோவை2 தில்லியின் இந்த பயணம் இன்னும் பிடிக்கும் பலருக்கு இப்படியே!http://kovai2delhi.blogspot.fr/2013/03/9.html


இன்னொரு தளம் போனால் இவர் புதியவர் மாவலர்ஸ் எல்லாம் மணி மணியாக படம் போட்டு மயக்கும் இந்த நண்பரும் ,!



இன்னும் பலரிடம் சேர்ந்தால்!திரட்டிகளில் கொஞ்சம் இடம் பிடிக்கலாம் தனித்து நிற்க்காதீங்க சகோ பலரோடு கைகோருங்கள் பட்டணம் கடந்து வாங்க பழகலாம் வலையுறவுகளோடு என்று சொல்லத்தான் முடியும் !http://visiththiran.blogspot.fr/2013/04/1.html


என்றாலும் இந்த ஆத்மா சொல்லும் மகியாங்கனவில் இன்னொரு மைந்தர்களின் வாழ்க்கையை போய் பாருங்கள் .http://citukuruvi.blogspot.com/2011/09/blog-post_7480.html


நல்ல ஊர் அருகில் கொஞ்சம் தாண்டி பதுளை துங்கித்தைச்சாரல் சுண்டி இழுக்கும் அதுபோல இழுக்கும் இவர் தளம் .


இன்று பலர் பதிவுலகில் முகம் காட்ட முதலில் இயக்கிய இயக்குனர் இவர் என்றால் பதிவுலக போட்டி ,திரட்டியின் தகுதி,கடந்து திறந்த மனதுடன் சொல்வார்கள் முதலில் இவர்தான் அறிமுகம் செய்தார் பலரை என்று!


என் வலையுலகிற்கு வழிகாட்டிய குருநாதர் ,எல்லாத் தொழில்நுட்பமும் புரிந்த இளையவேந்தன் ,இவர் தளத்தில் எத்தனையோ இரவுகள் தூக்கம் கெட்டு இருந்து  ஊர் வம்பு ,உள்நாட்டு விவாதம் ஊர் அரசியல்,ஆங்கில் /தமிழ்குறும்பட சினிமா,மட்டுமா!ஊர்ச்சண்டை எல்லாம்  ஒருகாலத்தில் இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டோம்  பலர் பார்க்க. யார் மதவாதிகள் கண் பட்டதோ இப்போது மீண்டும் சேரமுடியாத வேலைப்பளுவில் நாம் பலர் !எப்போதாவது பதிவு போடுகின்றார் .

இந்த தனிமரத்திற்கு வலையில்  வளர இவர் இட்ட நீர் நாற்று காலத்தாலும் அழிக்கமுடியாது அப்படியே இந்த ! பயணத்தை நீங்களும் காணுங்கள்!http://www.thamilnattu.com/2012_02_01_archive.html


அங்கிருந்து குற்றாலம் கூட்டிச்செல்லும் இந்த புயளைக்கண்டால் பதிவுலகம் நடுங்கும் விமானத்தில்  வந்தால்  சென்னை வந்தால் பந்து! ரயிலில் வந்தால் கடையடைப்பு !கன்னியயாகுமாரி போனால் சட்டச்சீர்குலைவு .நாங்க ஊரில் கூட மாங்காய்த் தாதா என்று மும்பாய் போனால் தாதா என்று முக்கிய புள்ளிகள் எல்லாம் அலரடிக்கும் இந்த அருவாளைப்பார்த்தால்!

 ஆனால் உண்மையில் அரபுலகத்தில் இருந்து உழைக்கும் எங்கள் அண்ணா நாஞ்சில் மனோவின் இந்தக்குளியல் பலருக்கு பகிடிக்கதம்பம்:)))http://nanjilmano.blogspot.fr/2011/05/blog-post_12.html

பல பதிவு இட்டு பலர் ஹிட்சு தேற்ற குழந்தைபோல சிரிக்கும் இவர் உள்ளம் எனக்கும் பிடிக்கும் இவர் வாள்:)))!


மீண்டும் வரும் தனிமரம்

12 comments:

  1. மிக்க நன்றிலேய் தம்பி...

    அறிமுகமாகிய பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. ஒருத்தரையொருத்தர் மிஞ்சற மாதிரி அசத்தலான அறிமுகங்கள்! எளிமையான வார்த்தைகள்ல நீங்க அறிமுகப்படுத்தற விதம் நல்லா இருக்கு தம்பி! ‌உங்களுக்கும், அறிமுகம் பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. காலை வணக்கம்,நேசன்!நலமா?////நன்று!அறிமுகப் படலமாகவே தொடருமோ?

    ReplyDelete
  4. நல்லா சுத்துங்க
    ஆங்.....அல்லாரும் அறிமுகமா ....தொடருங்கள்

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  6. நேசன் நீங்கள் அறிமுகம் செய்யும் விதமும் சிறப்பு.
    அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் தெரியவைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. வணக்கம்
    (அண்ணா)

    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .

    ReplyDelete
  12. எனது துணைவியின் பக்கத்தையும் [கோவை2தில்லி] இன்று அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.....

    ReplyDelete