Tuesday, April 2, 2013

உய்வு வேண்டும் அதனால்...

மணம் கமழும் வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்! 

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
ஒருவர் செய்யும் தினையளவு சிறிய நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகப் பெரிதாகக் கருதுவர்.

அந்த வகையில் பலர் கூறிய சிறிய பாராட்டாய் கருத்துரையாய் இருந்தாலும் அது என்னைப் பல மடங்கு ஊக்குவித்தது. இந்த இடுகைக்கு அது மட்டும் காரணமா, இல்லை பின்வரும் குறளும் காரணமா?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு வாழ்வில்லை.
திருவள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறாரே..எனக்கு கண்டிப்பாக உய்வு வேண்டும் வலைச்சர நட்புகளே! அந்த சுயநலமும் சேர்ந்துதானோ இன்றைய இடுகை! நான் நன்றி உரைத்து உய்வு பெறச் சிலரை இங்கு நினைக்கிறேன். சிலர் உங்களுக்கு அறிமுகமானவராய் இருக்கலாம், சிலர் புதியவராய் இருக்கலாம், ஆனால் அனைவரும் அசத்தலானவர்கள்.

சரி, ஊக்கமூட்டிய உள்ளங்கள் யார் யார் என்று பார்ப்போமா?

1. தன் பாராட்டுகளாலும் கருத்துக்களாலும் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் என்னுயிர்த் தோழி தியானாவின் வலைப்பதிவு பூந்தளிர். இதில் குழந்தைகளுடன் பயனுள்ள முறையில் நேரம் செலவழிக்க பல ஆர்வமிக்க செயல்பாடுகளையும் விளையாட்டுகளையும் அழகாக விளக்குகிறார். பூந்தளிரில் இருந்து சில வாசம் வீசும் பதிவுகள் உங்களுக்காக:
வசந்தம் நம் வீட்டில் எப்பொழுதும், பூக்கள் இதோ.
சமையல் செய்ய விடாமல் தொந்திரவு செய்கிறது குழந்தை என்று கவலைப்பட வேண்டாம், இதைப் பாருங்கள்!
சர்க்கரைப் பாகில் இனிப்பு செய்யத்தெரியும் எனக்கு, இவருக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது பாருங்கள். இந்த ஓவியத்தைப் பாருங்கள்!
வீட்டிலேயே அறிவியல் பற்றி சில புரிதல் கொடுக்க உதாரணங்கள்:
காற்றுக்கென்ன வேலி 
செடிகளின் நீர் கடத்தல் 
கணித விளையாட்டுகளையும் பார்த்து விடுங்கள்.

2. என்னைப் பாராட்டி ஊக்குவிக்கும் மற்றுமொரு நண்பர் கோவைவீரன் ஸ்ரீனி. இவருடைய வீரச் சுடர்கள் சில உங்களுக்காக:
மழலை மொழியை உயிர் எழுத்துக்கள் கொண்டு அழகாகப் புனைந்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளிகளைப் பற்றி வருந்தி வெகுண்டு புனைந்த கவிதை இது.
தமிழர் பெருமை பற்றி எழுதியிருப்பது விழித்து ஏழு தமிழா.
இராஜராஜ சோழனை மறந்து விட்டோமா என்று வரலாற்றுச் செய்திகளுடன் கேள்வி கேட்கிறார். நியாயமாகவே தோன்றுகிறது.
இவருடைய முதல் கவிதைக்கு இளங்கோவடிகளையும் புகழேந்திப்புலவரையும் துணை சேர்க்கிறார் பாருங்கள், அருமை! கவிதையும் அருமை.
இல்லறம் பற்றிய கவிதை  நல்ல சிந்தனை.

3. சங்க இலக்கியம் படிக்க எனக்கிருந்த ஆர்வத்தை ஊக்குவித்து சில புத்தகங்களையும் பரிந்துரைத்து என் கவிதைகளைப் பாராட்டி தமிழ் படைப்புகளைத் தனியாகப் பதிவு செய்ய ஊக்கம் கொடுத்த திருமதி.வைதேகி  ஹெர்பெர்ட் அவர்களையும் இங்கு நினைக்கிறேன். தமிழில் கலந்திருக்கும் வடமொழிச் சொற்களைப் பற்றியும் சொல்லித் தூய தமிழில் எழுத ஊக்கப்படுத்தும் அவரின் சங்க இலக்கியம் பற்றிய வலைத்தளம் இதோ உங்களுக்காக. தமிழ் என்று நினைத்துப் பயன்படுத்தும் பல சொற்கள் வடமொழி என்று நான் அறிய உதவிய தமிழில் உள்ள வடமொழிச்சொற்கள் இணைப்பு எனக்கு உபயோகமாய் இருக்கிறது. ஐந்து திணைகளையும் பற்றியும் படிக்க குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இணைப்புகளைப் பாருங்கள். குழந்தைகளுக்குத் தூய தமிழில் பெயர் வைக்க இந்த இணைப்பு  உதவுகிறது.

4. என் வலைப்பூ முகையாய் இருந்த நேரத்தில் இருந்து என்னை வாழ்த்தி ஊக்குவித்த திரு.ரமணி அவர்களையும் நினைவு கூறுகிறேன். இவரின் என்னை நானே அறிய விடு பிள்ளைகளுக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டாமல் அவர்களாகக் கற்று வளர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அவரின் இந்த இடுகை குப்பை முதல் காவியம் வரை எப்படி உருவாகிறது என்று சொல்கிறது. அவரின் மேலும் சில இடுகைகள் கவியாகும் காதலன் , காதல் என்றால் இதுதானா?

5. திடீரென்று ஒரு நாள் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருப்பதாக திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்கள் செய்தி சொன்னார்கள். எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன், அன்று தான் வலைச்சரம் பற்றி அறிந்தேன். முதன் முதலில் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கும் வலைச்சரத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் சூர்யப்ரகாஷ் அவர்களுக்கு நன்றி!
இவருடைய சுற்றுப்புறம் பாதுகாப்பது பற்றிய பதிவுகள் உங்களுக்காக:
மண்ணைக் காக்க மரம் நடுங்கள் 
பசுமை விடியல் 
மருந்து வாங்கும்போது கவனமாக இருக்க இதைப் படியுங்கள்.

6. என் முதல் வலைச்சர அறிமுகத்தை அறிவித்ததிலிருந்து என் வலைப்பூவிற்கு தவறாமல் வருகை தந்து என்னை வாழ்த்தி ஊக்குவிக்கும் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களையும் இங்கு நன்றியுடன் நினைக்கிறேன். திருக்குறளை இவர் விளக்கும் விதமே தனி அருமை, அப்படிச் சொல்லுங்க ஒரு உதாரணம்.
மற்றுமொரு அருமையான பதிவு எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது? 
ISO பற்றி அனைவருக்கும் கற்றுக்கொடுக்க ISO என்ற தலைப்பில் இவரின் பதிவுகளில் ஒன்று அட...அவ்வளவுதானா? ISO PART 1 . மேலும் கற்றுக்கொள்ள அவரின் ISO பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.
அவரின் மனிதனின் பிரச்னைக்கு காரணமான குணம் என்ன? பதிவில் ஆர்வமிக்க நல்ல கருத்துகளை வள்ளுவர் மற்றும் புத்தர் அவர்களின் துணையுடன் அழகாகப் பகிர்ந்துள்ளார். கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு.

7. இவரின் கருத்துரைகள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது, தமிழ் முனைவர் அவர்கள் பாராட்டுவது பெரிதல்லவா? என்னை வலைச்சரத்தில் அறிமுகமும் செய்தார். அவர் வேறு யாரும் இல்லை, நீங்கள் பலரும் அறிந்த வேர்களைத்தேடி முனைவர் இரா.குணசீலன். நம் தமிழ் மற்றும் தமிழரைப் பற்றிய பல செய்திகள் இவரின் பதிவுகளில் படிக்கலாம். ஒரு உதாரணம் ஏற்றுமதியான நாகரிகம்.
காற்றின் வேகத்திற்கேற்ப காற்றை வகைப்படுத்திய நம் முன்னோரின் அறிவை அறிந்துகொள்ள காற்றுக்கு இத்தனை பெயர்களா?
மண்ணைக் காக்க அறிவுறுத்தும் அழகான கவிதை மக்கு மனுசன்.
அட, இத சொல்லணுமே..தங்கம் பற்றிய சில தகவல்களுக்கு வாசியுங்கள் தங்கம் நேற்று, இன்று,நாளை?

8. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அரசன்.சே அவர்களுக்கு என் நன்றி. அவர் என் கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் என்று பல பதிவுகளில் பாடல் வரிகளுடன் படங்களை இணைத்து வழங்கியுள்ளார். வானம் பார்த்த பூமியின் இன்றைய நிலையை சொல்லும் கவிதை வெதை சோளத்தையாவது. பல நவீன விளையாட்டுப் பொருட்களும் நடைவண்டிகளும் வந்தாலும் பழைய மூன்று சக்கர நடை வண்டி தான் காலுக்கு நல்லது என்று ஒரு பத்திரிகையில் படித்தேன். அந்த நடை வண்டி பற்றிய ஒரு கவிதை நடைவண்டி.

9. சமீபத்தில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய திருமதி.அருணா செல்வம் அவர்களுக்கும் நன்றி! அவர் படைக்கும் கோழி வறுவல் உங்களுக்காக! காதலுக்கு கண் இல்லை என்பார்கள், நாள் இல்லை என்கிறார் இவர் அழியாக் காதல் என்ற கவிதையில். இதயம் ஏந்தி வணங்குகிறேன் என்று இவர் வணங்குவது யாரை என்று பாருங்கள், நீங்களும் வழிமொழிவீர்கள்!

10. நான் எழுதிய ஒரு கவிதைக்கு அழகான படம் இணைத்துத் தன் தளத்தில் வெளியிட்ட பிரேம் அவர்களுக்கு என் நன்றி! உள்ளூர நேசிக்கிறேன் உன்னை என்று இவர் சொல்வது யாரை? நானும் என்ற இவரின் பதிவு அழகிய படத்துடன் நல்ல கவிதை. கவிதை உலாவில் பிற பதிவர்களின் கவிதைகள் சிலவற்றை தள இணைப்புடன் வெளியிட்டும் ஒரு படத்திற்கு கவிதை எழுதவும் ஊக்குவிக்கிறார்.

இவர்களைத் தவிர என் வலைப்பதிவுகளைப் படித்து கருத்து கூறி என்னை வாழ்த்தி ஊக்கமூட்டிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி பல. இவர்களில் சிலர் பலருக்குத் தெரிந்திருந்தாலும் புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

29 comments:

  1. சீராக தொடுக்கப்பட்ட அருமையான பதிவு. மிக்க நன்றி என் தளத்தை அறிமுகம் செய்ததற்கு. மகிழ்ச்சியாக உள்ளது கிரேஸ் :).

    ReplyDelete
  2. நல்ல தளங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. எனது தளத்தை பரிந்துரத்தமைக்கு நன்றி அன்பரே

    ReplyDelete
  4. அன்பின் கிரேஸ் - அருமையான அறிமுகங்கள் - நன்றி மறப்பது நன்றன்று - நினைவில் வைத்து அத்தனை நண்பர்களையும் நினைத்து நன்றியுடன் குறிப்பிட்டது தங்களீன் பெருந்தன்மையினைக் காட்டுகிறது. சென்று படிக்க முயல்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வணக்கம்

    இன்று சிறப்பான அறிமுகம் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. எனது தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி... இரு தளங்கள் புதியவை... நன்றி...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம் இணைத்து விட்டேன் +1...

    ReplyDelete
  8. சீனா ஐயாவின் கருத்து போல, நண்பர்களின் அனைத்து தளங்களையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு பாராட்டுக்கள்... இன்று குறிப்பிட்ட தளங்களில் அறிமுகத்தை தெரிவித்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  9. அட !!

    நன்றி சகோ :)

    ReplyDelete
  10. அறிமுகங்கள் பற்றி அருமையான தொகுப்பு.
    உங்களுக்கும் அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அறிமுகங்கள் அருமை

    ??????????????????????

    தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு ?

    தொடர்ந்து மின்வாரியத்தில் ஏற்ப்படும் இழப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்!

    26.2.2013 அன்று தமிழ் நாடு மிசரவாரியம் தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்தி கேட்டு மனு செய்துள்ளது.

    ReplyDelete
  12. அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    எனது தளத்தை பரிந்துரத்தமைக்கு நன்றி கிரேஸ்

    ReplyDelete
  14. நன்றி திரு.வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  15. நன்றி பூந்தளிர் அவர்களே!

    ReplyDelete

  16. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! தமிழ்மணத்தில் இணைத்தமைக்கும் அறிமுகங்களுக்கு அறிவித்ததற்கும் நன்றி நன்றி!

    ReplyDelete
  17. நன்றி திரு.சூர்யப்ரகாஷ்!

    ReplyDelete
  18. நன்றி திரு.பாலசுப்ரமணியன்!

    மின் கட்டண உயர்வு தகவலுக்கு நன்றி..மின்சாரம் கொடுத்து கட்டணம் உயர்த்தினால் பரவாயில்லை.. :)

    ReplyDelete
  19. நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    ReplyDelete
  20. என்னையும் சிறந்த பதிவர்களோடு சேர்த்து
    அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நல்ல அறிமுகங்கள்.. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கிரேஸ்..

    ReplyDelete
  22. அடடா.... நான் கூடவா..!!!
    நன்றி நன்றி நன்றி தோழி கிரேஸ்.

    என்னுடன் அறிமுகமாவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete