அனைவருக்கும் வணக்கம் பதிவுலகில் நான் ரசித்த சில பதிவர்கள் பற்றி பல வித தலைப்புக்களில் அலசுவோம் அந்த வகையில் முதலில் பதிவுலகை கலக்கும் நான் ரசித்த யூத் பதிவர்கள் பற்றி பார்போம். அது என்ன யூத் பதிவர்கள் வயசில் சின்னவர்கள் கிட்ட தட்ட என் வயதை ஒத்த பதிவர்கள்
பதிவுக்கு போவதற்கு முன் பதிவர்கள் சார்பாக ஒரு பதிவருக்கு ஒரு கெளரவத்தை வழங்கலாம் என்று இருக்கின்றேன் இதை எனது தளத்தில் வழங்குவதைவிட இங்கே வழங்குவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
மொய்க்கு மொய் என்ற ஒரு விடயம் பதிவுலகில் மிகவும் பிரபலம் அதாவது நீ என் தளத்திற்கு கருத்து கூறினால் ஒட்டு போட்டால் பதிலுக்கு நானும் உன் தளத்துக்கு கருத்தும் ஒட்டும் போடுவேன் என்பதுதான் மொய்க்கு மொய்.தற்போது இந்த மொய்க்கு மொய் கலாச்சாரம் குறைந்துவிட்டது பதிவுலகிற்கு ஆரோக்கியமான ஒன்று.
நல்ல விடயங்கள் எங்கே பார்த்தாலும் யார் எழுதியிருந்தாலும் அவர்களுக்கு நாம் அவர்கள் பதிவு பற்றி சொல்லுகின்ற கருத்துரை அவர்களை மேலும் மேலும் எழுதத்தூண்டும்.பல பதிவர்களை தனது கருத்துரையினால் ஊக்கப்படுத்தும் ஒரு நண்பர் பதிவுலகில் இருக்கின்றார்.என் தளத்திற்கு முதல் ஆளாக வந்து கருத்து கூறி ஊக்கப்படுத்துவார்.இத்தனைக்கும் இவர் தளத்தில் நான் பல பதிவுகளை படித்தாலும் கருத்து கூறியது குறைவு.
பல பதிவர்களின் தளத்துக்கு சென்றால் இவர்தான் முதலில் கருத்துரை கூறியிருப்பார்.பலரை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் திரு திண்டுக்கல் தனபாலன் சார் தான் அது.அவருக்கு பதிவர்கள் சார்பாக ”நட்சத்திர கருத்துரையாளர்” என்ற கெளரவத்தை வலைச்சரத்தில் வைத்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைக்கின்றேன்.இவரது தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்-திண்டுக்கல் தனபாலன்
சரி பதிவுலகை கலக்கும் நான் ரசித்த யூத் பதிவர்கள் பற்றி பார்போம்.
கற்றது தமிழ் என்ற வலைப்பதிவில் பல விடயங்களை எழுதிவரும் துஷி எனக்கும் இவரது எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும் இப்போது அதிகமாக பதிவுகள் எழுதுவது இல்லை பதிவுலகைவிட்டு ஒதுங்கியிருக்கார் நீங்களும் படித்துப்பாருங்கள் மச்சாள்கள் பற்றி சொல்லி மச்சாள்கள் இல்லாத என்னைப்போல இளைஞர்களின் மனதை பற்றவைக்கிறார் இங்கே-அத்தை பெத்த அழகிய ராட்சஷிகள்
மைந்தன் மனதில் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் மைந்தன் சிவா இவரது ஒவ்வொறு பதிவுகளும் வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம் குறையாதவை போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்" என்கிறார் தோழியை சைட் அடிப்பது குத்தமா என்று கேட்கிறார் இங்கே -தோழியை சைட் அடிப்பது குத்தமா?
மைந்தன் மனதில் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் மைந்தன் சிவா இவரது ஒவ்வொறு பதிவுகளும் வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம் குறையாதவை போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்" என்கிறார் தோழியை சைட் அடிப்பது குத்தமா என்று கேட்கிறார் இங்கே -தோழியை சைட் அடிப்பது குத்தமா?
கோகுல் மனதில் என்று மனசில் தோன்றுபவற்றை சமூக அக்கறையோடு பலவிடயங்களை தனது பதிவுகளில் சொல்லும் கோகுல் இங்கே-நெட்வொர்க்கும் நொந்த குமாரனும்
பல பொது அறிவு விடையங்களை பற்றி பதிவாக தரும் லோகநாதனின் பதிவுகளை படிக்க இங்கே கிளிக்-மோனாலிசா ஒவிய திருட்டுக்காக கைது செய்யப்பட்ட பிக்காசோ
பல விடயங்களை ஆதாரபூர்வமாக அலசி எழுதும் கிருத்திகனின் வெங்காயம் தளத்தில் Ballpoint pens எப்படி இயங்குகின்றது?
விழியின் ஒவியம் என்ற தலைப்பில் சுடர்விழி அக்கா மற்றும் மகேஸ் ஆகிய இருவரும் இணைந்து பதிவுகளை எழுதி வருக்கின்றார்கள் பல தரப்பட்ட விடயங்களை சுவாரஸ்யமாக எழுதி வருகின்றார்கள் 18 வயசுல
எனக்கோரு "கேர்ள்ஃப்ரெண்ட் வேணுமடா" பாடாம 81 வயசுலையா பாட முடியும்...! என்ற நியாயமான கேள்வியுடன் மகேஸ் இங்கே-எனக்கொரு கேர்ள்ஃப்ரண்ட் வேணுமடா?
அடுத்த பகுதியில் இன்னும் அதிகமான அறிமுகங்களுடன் சந்திப்போம்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
உண்மையிலேயே யூத்ஃபுல் பதிவுகள். நட்சத்திர கருத்துரையாளர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி...
ReplyDeleteநட்சத்திர கருத்துரையாளர் திண்டுக்கல் தனபாலன் சார் அவருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்பரம் ராஜ் அண்ணா எதோ உங்கல போலவே நாணும்
எனக்கு வருவதை எழுதுகிறேன் அவ்வல்வுதான்.
ஆனாலும் பதிவுலகில் கலக்கும் யூத் பதிவர்கள் லிஸ்ட்ல நம்மலை சேர்த்தது ரொம்ப மகிழ்ச்சி எதிர்பார்க்கல..
மிக்க நன்றி அண்ணா..
திண்டுக்கல் தனபாலன அவர்களைப் பற்றி அவரை பிடிக்காதவர்கள் இதற்கு முன்பு குறிபிட்டது... படிக்காமல் கருதிடுகிறார் என்றும், தன் தளத்திற்கு வரவேண்டும் என்ற மனநிலையில் கருத்து இடுகிறார் என்றும் பதிவுலகம் போற்றும் பலரும் கூறி வந்தனர்.
ReplyDeleteமுதலாவது விஷயம் அதிக பதிவுகளை படிக்க வேண்டும் உற்சாகப் படுத்த வேண்டும் என்ற சிந்தனையிலேயே அவர் சுருக்கமான கமன்ட்டுகளை அளித்து வந்தார், தற்போது சற்றே விரிவான பின்னூட்டங்கள் அளித்து அவச்சொல் பேசியவர்கள் வாயை மூடி விட்டார்.
இரண்டாவது அவர் அவரது தளத்தில் பதிவுகள் எழுதுவதே குறைவு. ஹிட்ஸ் வாங்கும் எண்ணத்தோடு அவர் பதிவு எழுதினால் நாளொரு பதிவுகள் எழுதி இருக்கலாம், மேலும் அவர் சினிமா மற்றும் பொழுதுபோக்கு பதிவுகள் எழுதுவதில்லை திருக்குறள் மற்றும் மன உளவியல் சார்ந்த பதிவுகளையே அதிகம் எழுதுகிறார்.
இங்கு ராஜ் அளித்து இருக்கும் விருது குறித்து யாருக்காவது மனதில் "இவருக்கு ஏன் இவ்விருது என்று சந்தேகம் வருமாயின்" அவர்களுக்கான விளக்கமாக இருக்கட்டுமே என்று தான் இங்கு பதிவு செய்கிறேன்.
அறிமுகம் செய்த பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து உற்சாகமாக இயங்க வாழ்த்துக்கள்
good introductions
ReplyDeleteதனபாலன் அண்ணே னுக்கு பொருத்தமான பட்டம்
ReplyDeleteGood Award to the Right Person! D.D. is worthful for any honour! Hearty Congrats DD! Your intro of youth bloggers is well. keep it up Rajh!
ReplyDeleteஅருமையான பதிவர்கள் அறிமுகம்
ReplyDeleteதிண்டுக்கல் தன்பாலன் எல்லோருக்கும்
ஆச்சரியமளிக்கும் கருத்துரையாளர் என்பதில்
சிறிதும் சந்தேகமில்லை
அவருக்கு தாங்கள் அளித்த பட்டம்
முற்றிலும் ஏற்புடையதே
தங்கள் ஆசிரியர் பணி வெகுசிறப்பு
தொடர வாழ்த்துக்கள்
யூத் பதிவர்கள் அறிமுகம் அருமை. பலரும் நான் அறியாதவர்களே... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கான நட்சத்திரக் கருத்துரையாளர் பட்டம் மிகவும் பொருத்தம். வலையுலகில் அவருடைய சேவை அளப்பரியது. பதிவுகளாலும் கருத்துக்களாலும் மட்டுமன்று, பிறருக்கு உதவும் நற்குணத்திலும் வலைச்சர அறிமுகப்பதிவுகளை அவரவர் வலைக்கே சென்று அறிவிக்கும் செயல்களினாலும் அவர் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள். அவரை இங்கு குறிப்பிட்டுப் பாராட்டிய தங்களுக்கு நன்றி.
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தளங்களைச் சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு 'நட்சத்திர கருத்துரையாளர்' பட்டம் மிக மிகப் பொருத்தமானது. அவரது கருத்துகள் பலரை ஊக்கப்படுத்தியிருக்கிறது உண்மை, அதில் நானும் ஒருத்தி. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் கூறி கொள்கிறேன்.
தனபாலன் ஒரு பின்னூட்ட rockstar. பாராட்டுக்கள்.
ReplyDeleteஆமா.. இந்தப் பதிவுப் பின்னூட்டங்கள்ள அவரை முதல் வரிசைல காணோமே?
ReplyDeleteவலையுலகின் DDக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசில சக யூத்களின் அறிமுகத்திற்கு நன்றி.
அறிமுகம் செய்யப்பட்ட அனைவரும் அருமையான பதிவர்கள்.. அனைவரிற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகே.எஸ்.எஸ்.ராஜ் அவர்களுக்கு முதலில் நன்றி...
ReplyDeleteதங்களின் கெளரவத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்...
சீனு அவர்களின் புரிதலுக்கு மிக்க நன்றி... வாழ்த்திய மூத்தவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி... நாளின் முடிவில் மீண்டும் வருவேன்...
அப்பாதுரை சார்... அதிகாலை 3 to 5 வீட்டில் நல்ல தண்ணீர் பிடிக்கும் வேலை... ஹிஹி... பிறகு மின் வெட்டு... 9.30க்கு தகவல் தந்த எனது அண்ணனுக்கும் நன்றி...
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
வணக்கம்
ReplyDeleteராஜ்
இன்று அறிமுகமான அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அத்தோடு திண்டுக்கல் தனபாலன் (அண்ணாவுக்கு நட்சத்திர கருத்துரையாளர்” என்ற கெளரவத்தை வலைச்சரத்தில் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பகல் வணக்கம்,ராஜ்!நலமா?///யூத் பதிவர்கள்..............................ம்...ம்....ம்.....அதிலும் அந்த மைந்தர் எண்டவர் இருக்கிறாரே,ஏதோ சுஜாதா ரேஞ்சுக்கு எழுதுறாம்ப்பா!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDelete”நட்சத்திர கருத்துரையாளர்” என்ற கெளரவத்தை வலைச்சரத்தில் இன்று பெற்றுள்ள திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
சகோ. திண்டுக்கல் தனபாலன் சாருக்கு தகுந்த விருதினை தகுந்த நேரத்தில் வழங்கிக் கௌரவப் படுத்தியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteராஜ்... உங்கள் எண்ணமும் செயலும் அருமை. உங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!!
நட்சத்திர கருத்துரையாளர் திண்டுக்கல் தனபாலன் சார் அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.!!!
யூத் பதிவர்கள் அறிமுகம் அருமை. இன்று அறிமுகமான அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
நட்சத்திர கருத்துரையாளர் விருது பெற்ற திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !
ReplyDeleteசரியாக தேர்வு செய்த ராஜ் அவர்களுக்கு என் நன்றி மற்றும் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
திண்டுக்கல் தனபாலன் ஊக்க படுத்தும் பல பதிவர்களில் நானும் ஒருவன் என்று இங்கு கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன் :)
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கான நட்சத்திரக் கருத்துரையாளர் பட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடி பாராட்டுபவர். அன்றாட பணிகளிடையே வாசித்தலுக்கும், கருத்திடலுக்கும் அற்புதமாக நேரம் ஒதுக்கி சுறு சுறுப்பாய் இருக்கும் இவரை நினைத்து நிறைய ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரை கௌரவப்படுத்தியமைக்கு என் சார்பாகவும் நன்றி! தனபாலன் சாருக்கு எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகம் தந்த நண்பர் ராஜ்க்கு நன்றிகள் :)
ReplyDeleteநட்சத்திர கருத்துரையாளராக கௌரவம் பெற்றிருக்கும் திண்டுக்க்ல் தனபாலன் சாருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்! வலையுலகில் எழுதும் அனைவரையும் தங்கள் கருத்துரையால் ஊக்கப்படுத்தும் தங்களுக்கு, இந்த கௌரவத்தை வழங்கிய தம்பி ராஜ், உனது சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன்! யூத் பதிவர்கள் லிஸ்ட்ல எங்கள் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ராஜ்!
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் ஐயாவுக்கு பட்டம் கொடுத்ததற்கே உங்களுக்கு பெரிய பட்டம் கொடுக்கலாம் பாஸ்
ReplyDeleteதனபாலன் சாருக்கு பொருத்தமான பட்டம் வாழ்த்துக்கள் வழங்கியமைக்கு.அறிமுகமான யூத் பதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக மிகத் திறமையானவர்களை அறியத்தந்திருக்கிறீர்கள் ராஜ்.மைந்தன்,துஷி அசத்தல் பதிவாளர்கள்.திண்டுக்கல் அவர்களுக்கு அருமையான விருது.பொருத்தமானதும்கூட.வாழ்த்து அவருக்கும் உங்களுக்கும்.தொடருங்கள் !
ReplyDeleteராஜ் ..முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள் .
ReplyDeleteயாருக்கும் தோன்றாத ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கீங்க ..
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு பொருத்தமான விருது தந்திருக்கீங்க .
அனைவர் தளத்துக்கும் சென்று அவர்களை உற்சாகப்படுத்தி பின்னூடம் இடுவதென்பது
அதுவும் கரண்ட் அடிக்கடி கட்டாகும் நம்மூரில் இருந்து செய்வது பாராட்டுக்கு உரிய விஷயம்
..வாழ்த்துக்கள் தனபாலன் சகோதரர் மற்றும் அறிமுகமாகியுள்ள பிற நண்பர்கள் அனைவருக்கும் .
அனைவருக்கும் நன்றி நண்பர்களே
ReplyDeleteசரியான விருதுதான் நண்பரே....
ReplyDeleteபாராட்டுகள் தனபாலன்.
அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...
ReplyDeleteமைந்தன் அண்ணாவை தவிர ஏனையோர் எனக்கு புதியவர்கள்.கோகுல் மனதில்,லோகநாதனின் பதிவுகள் ஆகிய தளங்கள் என்னைக் கவர்ந்தன .
ReplyDeleteவணக்கம் ராஜ்.
ReplyDeleteஇது எதிர் பாராத சந்தோஷம் ராஜ்... பதிவுகள் எழுதாமல் படிக்காமல் விட்டு ரெம்ப காலம் ஆச்சு... ஆனாலும் இன்னும் என்னை மறக்காமல் இருக்கிறாய் நண்பா.
தேங்க்ஸ்டா :)
வலைச்சரம் தந்த கொளரவத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா.. நம்ம பையன் ஒருத்தன் இப்படி கலக்குவது ரெம்ப ஹப்பியா இருக்கு..... இன்னும் இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள் ராஜ்.
அப்புறம் ராஜ்.....
ச்சும்மா இருந்தவனை உசுப்பேற்றி விட்டுட்டாய்.... மறுபடியும் ப்ளாக் வரணும் போலவே இருக்குப்பா...... :( முடிந்தால் விரைவில் ப்ளாக்கில் சந்திப்போம். :p
மறுபடியும் தேங்க்ஸ் ராஜ்.
அப்புறம்
மை ஹேமா அக்காச்சிக்கு
//மைந்தன்,துஷி அசத்தல் பதிவர்கள்//
மைந்தனை சொன்னது ஓக்கே.. ஆனா துஷிய சொன்னது....???
நிஜமாத்தான் சொல்லுறீங்களா...??? (கற்றது தமிழ் அஞ்சலி ஸ்டையிலில் படிக்கவும்... :p)
வணக்கம் ராஜ்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
விருது பெற்ற தனபாலன் ஐயாவிற்கு ஷ்பெஷல் வாழ்த்துக்கள்.
எந்த வலைப்பக்கம் போனாலும் முதலில் தெரிவது திண்டுக்கல் தனபால்தான் அவருக்கே உரிய அந்த விருதுக்கு எனது மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நாஞ்சில்மனோ வலைத்தளம் பெருமை கொள்கிறது.
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி நண்பர்களே
ReplyDeleteவாழ்த்துகள் DD.. சீனு கலக்கல்..
ReplyDeleteசரியான நபருக்கு மிகச்சரியாக
ReplyDeleteகொடுக்கப்பட்ட விருது..
நண்பர் திண்டுக்கல் தனபாலன்
இந்த விருதுக்கு முழுத் தகுதி பற்றவர்.
இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்களும்..
உங்களின் வலைச்சரப்பணி சிறக்க என்
மனம்நிறைந்த வாழ்த்துக்களும்.
யுத் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர்ந்து யுத் ஆக இருக்க வாழ்த்துக்கள்.
தனபாலன் அவர்கள் ஒரு சொல் பின்னூட்டம் போட்டாலும் தன்னலம் கருதாமல், நீ ஒன்று போட்டால்தான் நானும் ஒன்று போடுவேன் எனும் கணக்குப் பார்க்காமல் தன்னால் முடியும்போதெல்லாம், முடிந்தவரை எல்லா இடத்திலும் அவர் பின்னூட்டம் போடுவதை எப்பவோ கவனித்திருக்கிறேன்ன்... வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் இந்த நல்ல மனப்பான்மை.
தம்பி மகேஷையும் அறிமுகப்படுத்தியமை மிக்க மகிச்சி அளிக்கிறது.
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்.
யூத் பதிவர்கள் லிஸ்ட்டில் என்னை விட்டு விட்டதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன்.
ReplyDeleteபுதிய வரவான எனக்கும் உற்சாகம் தந்து, என்னுடைய பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் தருபவர் அன்பர் திண்டுக்கல் தனபாலன். அவர்களுக்குத் தாங்கள் வழங்கிய சிறப்புப் பட்டம் மிகப் பொருத்தமானதே!
ReplyDelete-எஸ்.ஹமீத்.