Sunday, April 28, 2013

உங்கள் அன்புக்கு நன்றி நண்பர்களே

ஒரு வாரம் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும்.நன்றி நண்பர்களே வலையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலாவந்தாலும் கடந்த ஒரு ஆண்டாக பெரிதாக எழுதுவது இல்லை.நேரம் இன்மை, ஆர்வம் குறைந்தமை பேஸ்புக்கில் கும்மி போன்ற பல காரணங்கள் சொல்லாம்.

தமிழ் வாசி பிரகாஸ் அண்ணன் தொடர்பு கொண்டு வலைச்சரத்தில் எழுதும் படி கேட்டுக்கொண்டதும் உடனே ஏற்றுக்கொண்டேன்

வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.பதிவுலகில் தீவிரமாக இயங்கியபோது ஆர்வமாக எழுதிக்கொண்டு இருந்தபோது எனது பதிவுகளை வலைச்சரத்தில் ஆசிரியராக இருப்பவர்கள் அறிமுகம் செய்யும் போது யோசிப்பதுண்டு நானும் இதில் ஆசிரியராக இருந்தால் எப்படியிருக்கும் என்று.

ஆனால் அப்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.பதிவுலகில் ஆர்வம் குறைந்த எப்பவாவது எழுதிக்கொண்டு இருக்கும் தற்போது இந்த வாய்ப்பு வந்தாலும் எப்போதோ எதிர்ப்பார்த்த வாய்ப்பு கிடைக்கும் போது அதை ஏற்றுக்கொண்டேன்.

இதுவரை நான் நேரில் சந்தித்த ஒரே ஒரு பதிவர் தமிழ்வாசி பிரகாஸ் அண்ணன் தான்.  நான் இலங்கையை சேர்ந்தவனாக இருந்தாலும் இதுவரை இலங்கையில் உள்ள ஒரு பதிவரை கூட நேரில் சந்தித்தது இல்லை.

கடந்தவருடம் இந்தியா சென்று இருந்த போது பல இந்திய பதிவர்களை சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன் ஆனால் ஒரே ஒருவரைத்தான் சந்திக்கமுடிந்தது.தனது பிசியான நேரத்துக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி அவரே வந்து சந்தித்த அந்த அன்பு அவர் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.அந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எனக்கு வலைச்சரத்தில் ஒருவாரம் ஆசிரியராக செயல்பட சந்தர்ப்பம் வழங்கிய தமிழ்வாசி பிரகாஸ் அண்ணன் அவர்களுக்கும்,வலைச்சரம் தளத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.

பதிவுலக பயணத்தில் நிறைய பேரின் அன்பை பெற்றுள்ளேன் என்கிறபோது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.

வலைச்சரத்தில் எனக்கு ஆதரவு வழங்கிய அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


நாளை முதல் சந்திப்போம் எனது நண்பர்கள் தளத்தில் வாருங்கள் நண்பர்களே-நண்பர்கள்

எனக்கு வருவதை நான் எழுதுக்கின்றேன் அதற்கான அங்கீகாரம் உங்கள் கைகளில்

அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

13 comments:

  1. நன்றி நண்பரே.... தாங்கள் மீண்டும் தங்கள் தளத்தில் சுறுசுறுப்புடன் எழுத வேண்டுகிறேன்..

    ReplyDelete
  2. போன முறை மின்னல் மாதிரி இந்தியாவுக்கு வந்துட்டு பறந்துட்டிங்க ராஜ்! ‌நிறையப் பேரை இங்க நீங்க சந்திக்க வேண்டியது இருககுது இன்னும். மீண்டுமொரு முறை வருவீங்கதானே! வலைச்சரப் பணியை மன மகிழ்வுடன் ஏற்று சிறப்பாச் செயல்பட்ட உங்களுக்கு மனம் நிறைய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் சிறப்பாக உங்களது பணியை முடித்து
    வாய்ப்பளித்தோருக்கு நன்றி நவின்று முடித்தல் நன்று.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நீங்க இன்னும் அதிகமாக எழுத வேண்டும் ராஜா வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  5. வெற்றிகரமாக முடித்ததற்கு மிக்க மகிழ்ச்சி..

    மற்றும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வணக்கம்
    ராஜ்

    ஒருவார காலமும் சிறப்பாக பல வகைப்பட்ட வலையுலக நண்பர்களின் பக்கங்களை அறிமுகம் செய்து பலபேரிடம் பலவகைப்பட்ட கருத்து மாலைகளைப் பெற்று மிகவும் சந்தோசம் அடைகின்றீகள் என்று சொன்னீர்கள் அது எனக்கும் மிகவும் சந்தோசமாக உள்ளது மேலும் பல படைப்புக்களை படைக்க எனது வாழ்த்துக்கள் ராஜ்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் ஆசியப்பணியை மிகச்சிறப்பாக செய்துமுடித்து விடைபெறுகிறீர்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோ ராஜ்!

    புதிய அறிமுகங்கள் இங்கு உங்கள் மூலம் கிடைத்தது மகிழ்வே.
    நீங்களும் உங்கள் வலைப்பூவில் தொடர்ந்து பதிவுகளைஎழுதிட வேண்டுகிறேன்.
    அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. சிறப்பாக இந்தவாரம் வலைச்சரத்தை அலங்கரித்த ராஜ்க்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் சோர்ந்துபோகாமல் உன் தளத்தில் பதிவுகள் பவனி வரட்டும்.
    நட்புடன் தனிமரம்!

    ReplyDelete
  10. அனைவருக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  11. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ராஜ்.....

    ReplyDelete
  13. மனமார்ந்த வாழ்த்துகள் ராஜ். தொடர்ந்து வலையுலகில் அசத்த வாழ்த்துகள்.

    ReplyDelete