Friday, April 5, 2013

வயலும் வயல் சார்ந்தும்...

"சிறு வெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூமடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறுவெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி;
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ -
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?"

மருதத் திணையில் வெள்ளிவீதியார் அவர்கள் பாடிய இந்தப் பாடலுடன் வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!

இப்பாடலின் பொருள்: சிறிய வெள்ளை நாரையே! சிறிய வெள்ளை நாரையே! நீர்த்துறையில் துவைத்த துணி போன்ற வெண்ணிறச் சிறகினை உடைய நாரையே! எங்கள் ஊர் வந்து, இங்குள்ள நீர்த்துறையில் துழாவி கருவுற்ற கெளிற்று மீனை உண்கிறாய்! அந்த இடத்திலுள்ள இனிய புனல் இங்கு வந்து படரும், வயல்களையுடைய நல்ல ஊரின் தலைவனிடம் சென்று என்னுடைய அணிகலன்கள் கழறுகின்றத் துன்பத்தைக் கூறமாட்டாயா? அத்தகைய அன்பு உனக்கு இருக்கிறதா? மறந்து விடுவாயா? என்று தலைவி நாரையிடம் கேட்பதாக அமைந்த நற்றிணைப் பாடல்(எண்.70).

வயலும் வயல் சார்ந்த இடங்களையும் நம் முன்னோர் மருதம் என்று வழங்கினர்.

மருதத்திணைக்கு ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாகும். விவசாய நிலங்களில் வளரும் மருத மரத்தால் இப்பெயர் பெற்றது. தாமரை, அல்லி, குளம், உழவர், வயல், கோழி, நெல் மருதத்திணையோடுத் தொடர்புடைய சில சொற்களாகும்.

மருதத் திணையோடுப்  பொருந்துவதாக நான் எண்ணும் சில வலைத்தளங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

1. இனிய கவிதை - கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புகளும் என்ற கீர்த்தனாவின் தளத்தில் வாடுதலின் பின் கூடுதல் ஓரின்பம் என்று அழகாகச் சொல்லும் கவிதை தாமரை நெஞ்சம்.
துன்பத்தில் சிரிக்க முடியுமா? இதைப் பாருங்கள் ரோஜா!
உளமாரக் கசிந்துருகி தவிக்கவைக்கும் காதலைப் பாடுகிறது. தோழி இல்லாமல் எப்படிங்க? அன்புத்தோழியைப் பாருங்கள்! இன்பத்தமிழ் இன்பத்திற்கு ஈடு எது?
  
2. நெல் - ஆரம்பம் முதல் அறுவடை வரை  என்றப் பதிவில் அரிசி சோறு எப்படி விளையுதுனு தெரியுமா? சொல்றேன், கேளுங்க என்கிறார் திரு.சஞ்சய் காந்தி.
விலைகளைப் பற்றியும் விளக்குகிறார் விவசாய விளைபொருட்களின் விலை என்ற பதிவில்.

3. பேசும் கவிதைகள் என்ற தளத்தில் கோவம் தணியக் கவிதை சொல்லவா என்கிறார் மணி மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற கவிதையில்! தாய் தமிழ் என்ற கவிதையில் தமிழனே தாய்மொழியை  விட்டுவிட்டு
வேற்று மொழி தேடாதே என்கிறார்.

4. கவியரங்கம் என்ற தளத்தில் கவி ரூபன் அவர்கள் பார்த்த அருமையான பாடம் இது, பாருங்கள் கோழி எடுத்த பாடம்

5. ரிஷ்வன் கவிதைத் துளிகள் என்ற தளத்தில் எழுதும் ரிஷ்வன் அவர்கள் மழைமிகும் மாநிலமாய் மாற என்ன சொல்கிறார் என்று பாருங்கள் தைத்திருநாள் என்ற கவிதையில். காதலின் கேள்விகள் அருமை.
வித்தியாசமாய் திருக்குறளை கவிதை வடிவில் தருகிறார்.
இனிய தமிழ் இனி என்று என்ன சொல்கிறார் பாருங்கள்.


 6. எத்தனை அருமையானக் கதைகள் இந்த தளத்தில், காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களின்  சிறுவர் உலகம்.
கொக்கு இல்லாத மருதநிலமா? ஒரு கொக்கு கதை படிப்போமா?
கொக்கும் மயிலும். 
குளத்தில் மீன் பிடித்து நம்பிக்கை துரோகம் செய்தவனைப் பாருங்கள் இக்கதையில்.
தைரியமாக இருப்போம் இன்னொரு அழகியக் கதை!

7. தமிழ்நேசன் அவர்களின் மருதத்திணை நீர்நிலைகள் பற்றிய அழகியப் பதிவு ஐங்குறுநூற்று மருதத்திணையில் நீர்நிலைகள்!
அவரின் மற்றுமொரு பதிவு மறைந்த பழந்தமிழ் நூல்கள் பல நூல்களைப் பட்டியலிடுகிறது.
மழையில் இத்தனை வகையா, உங்களுக்குத் தெரியுமா?

8. நில் கவனி கவிதை என்ற தளத்தில் Yellem LM உழவர் பெருமை பற்றி பதிவு செய்த கவிதைகள் உங்களுக்காக!

9.அணுவகழ் என்ற தளத்தில் V.நடராஜனின் கவிதைகள் உழவுக்கு நன்றி சொல்கின்றன!
உழவன் சிரிக்கும்

இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்!

நாளை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

21 comments:

  1. ஒவ்வொரு பதிவையும் சங்க பாடலோடு தொடங்கும் விதம் அருமை. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. அருமையான பாடலுடன் ஆரம்பம்... பாராட்டுக்கள்...

    பாடலின் பொருள் விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
  3. இன்றைய அறிமுகங்களில் ஐந்து தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மருதத் திணையோடுப் பொருத்திய தளங்களின் பதிவுகள் மிகச்சரியே... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. என்னுடைய தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கிரேஸ்.. அதனை கருத்துரை மூலம் எனக்கு அறிவித்த திண்டுக்கல் தனபாலனுக்கும் என் நன்றி... ரிஷ்வன்... http://www.rishvan.com

    ReplyDelete
  6. வலைப்பதிவருக்கு வணக்கம்! மருதத் திணைச்சிறப்பு பற்றிய உங்கள் பகிர்வு அருமையாக இருக்கிறது.

    உங்களுக்கும் இன்று அறிமுகமாகும் அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. சங்கப் பாடல்களின் அருமையும் இனிமையும் தான் அப்படிச் செய்யவைத்தது ஸ்ரீனி! நன்றி!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

    பதிவுகளைப் பார்த்து மருதத் திணைக்குச் சரியாக இருக்கிறது என்று சொன்னதற்கு மிக மிக நன்றி, மகிழ்ச்சி!

    ReplyDelete
  10. கீர்த்தனாவின் கவிதைகள் எல்லாமே
    சங்கீர்த்தனம். இறையின் நாம சங்கீர்த்தனம்.

    வளம் பெற்ற மனதின் ஒரு ஒளி விளக்கு.

    வளம் பெற நினைப்போருக்கும் அது ஒரு வழி காட்டி.

    அட டா !! அந்த ரோஜா பாட்டு இருக்கே !!
    அந்த ஒரு கணத்துலே அந்த ரோஜா
    மனசை கலக்கிடுத்தே !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  11. மருத திணைப்பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    தொடரும் படங்களும் பதிவுகளும் அருமை.

    ReplyDelete
  12. வாவ்.. இத்தனை வாசிப்புக்களை இழந்திருக்கிறேனே! அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. பாடல்கள் அருமை..பாராட்டுகள் கிரேஸ்.. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. எனது தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. எனது தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  17. எனது வலைத்தளத்துக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து இங்கே அறிமுகப்படுத்திய அன்பு ஆசிரியர் கிரேஸ் அவர்களுக்கும், இந்த வலைத்தளத்துக்கும் என் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்... இங்கே அறிமுகமானதை எனக்குத் தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் எனும் அன்புநெஞ்சத்துக்கு மிகவும் நன்றி.. ஒரு படைப்பாளி அங்கீகாரம் பெறும் போது, எவ்வளவு மனம் நெகிழுமோ அந்த நிலையில் இப்போது இருக்கின்றேன். குறுகிய காலமாகத் தான் ஒரு அன்பு நண்பரின் ஊக்குவிப்பினால் எழுத ஆரம்பித்தேன்..அவருக்கும், என்னை ஊக்குவிக்கும் அன்பு நண்பர்களுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்... மேலும் தங்கள் ஊக்குவிப்பில் வளர்வேன்...
    அன்புடன் கீர்த்தனா..

    ReplyDelete
  18. இங்கே வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்...
    அன்புடன் கீர்த்தனா..

    ReplyDelete
  19. கீர்த்தனாவின் கவிதைகள் எல்லாமே
    சங்கீர்த்தனம். இறையின் நாம சங்கீர்த்தனம்.

    வளம் பெற்ற மனதின் ஒரு ஒளி விளக்கு.

    வளம் பெற நினைப்போருக்கும் அது ஒரு வழி காட்டி.

    அட டா !! அந்த ரோஜா பாட்டு இருக்கே !!
    அந்த ஒரு கணத்துலே அந்த ரோஜா
    மனசை கலக்கிடுத்தே !!////மிகவும் மிகவும் நன்றி Sir.

    ReplyDelete
  20. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. !!
    உங்களின் தளத்தில் என்னுடைய கவிதைகளை அறிமுக படுத்தியதர்க்காய் என்னுடைய நன்றிகள் கோடி....!!!
    மீண்டும் மீண்டும் தங்களின் வருகையையும் வாசிப்பையும் என்னுடைய www .nilkavanikavithai .blogspot .com எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.....!!!
    வலை உலகில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்....!!!

    ReplyDelete