சி. ஜெயபாரதன்
கனடாவில் வசிக்கும் சி. ஜெயபாரதனுக்கு வயது இன்னும் சில ஆண்டுகளில் எண்பதைத் தொட இருக்கிறது. தொடர்ச்சியாக 'நெஞ்சின் அலைகள்' என்கிற தன்னுடைய வலைப்பதிவில் எழுதுகிறார். பெரும்பாலும் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் குறித்தான சமீப கால அறிவியல் கண்டுப்பிடிப்புகளைப் பற்றி தான் விரிவாக எழுதுகிறார். அறிவியல் பற்றிய தமிழ் கவிதையில் தொடங்கி ஆங்கில விஞ்ஞான மேற்கோள்களைக் குறிப்பிட்டு பல படங்களை எடுத்து காட்டி எளிய நடையில் நுட்பமான விஷயங்களை சுவாரஸ்யமாக அலசுகிறார். பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் என்று அவர் எழுதுகிற தொடர் முக்கியமானதாக இருக்கிறது.
- பெருவெடிப்பு தான் பிரபஞ்சத்தின் தொடக்கம் என்கிறார்கள். அந்தப் பெருவெடிப்பிற்கு முன்பு என்ன இருந்தது?
- பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது எந்தச் சக்தி?
- ஈர்ப்பு விசை என்பது மாயையாக இருக்கலாம்?
தினமணி நாளிதழில் முன்பு செய்தி ஆசிரியராக இருந்தவர். இப்போது அறிவியல்புரம் என்று வலைப்பதிவு தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் சுவாரஸ்யமான அறிவியல் செய்திகள் கொட்டி கிடக்கின்றன. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது தான் அதிகமான வெயில் என்று சொல்வார்கள். ஆனால் மதியம் இரண்டு மணி தொடங்கி இரண்டரை வரை தான் அந்த நாளின் அதிகமான வெயில் இருப்பதாக சொல்கிறார்.
- சந்திரன் தோன்றியது எப்படி?
- அக்னி நட்சத்தித்தின் போது அதிக வெயில் ஏன்?
- சூரியன் தனி நட்சத்திரம். ஆனால் பல நட்சத்திரங்கள் ஜோடி ஜோடியாக இருக்கின்றன.
தமிழில் அறிவியல் தகவல்களைச் சொல்வதற்காகவே வலைப்பதிவு நடத்தி வருகிறார் ராஜா சங்கர். 'குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்' என்று நீண்ட தொடரினை எழுதி கொண்டு இருக்கிறார். இந்த உலகில் உயிர் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான் பற்றி பேசிய டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிய தமிழில் தொடராக எழுதுகிறார்.
...இன்னும் பேசுவோம்...
இன்றைக்கு அறிமுக மூன்று தளங்களும் அறியாத அரிய தகவல்களை அள்ளித்தரும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மதிப்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா அவர்களின் வாசகன் நான். அவரது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!
ReplyDeleteஎனக்கு தெரிந்தவரை அறிவியல் பதிவுகள் அறிமுகப்படுத்தப்படுவது மிகக் குறைவே.தரமான அறிவியல் பக்கங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்களும் நன்றிகளும் ஸ்ரீராம்
ReplyDeleteஇங்கே அறிமுகப்படுத்தியவற்றை வாசித்து மறுமொழி எழுதிய நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், வை.கோபாலகிருஷ்ணன், ரூபன், மாற்றுப்பார்வை, மாதவன் இளங்கோ & டினேஷ் சுந்தர் ஆகியோருக்கு நன்றி!
ReplyDeleteநன்றி!
ReplyDeleteநன்றி வால்பையன்
ReplyDelete