நகரத்தின் பல வீதிகளில் காதலர்களைப் பார்ப்பதுண்டு. எங்கோ ஓடி
கொண்டிருக்கும் கூட்டத்தினை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. தங்கள் காதல்
உலகில் அவர்கள் மெய்மறந்து நின்றிருப்பார்கள். பெரும்பாலானோர்
சண்டையிட்டபடி தான் இருக்கிறார்கள். காதலனிடம் சத்தமாய் எதோ சொல்லிவிட்டு
பெருங்குரலெடுத்து அழுதபடி சுற்றி வேடிக்கை பார்ப்போரை உதாசீனப்படுத்தியபடி
செல்கிறாள் ஒருத்தி. காதலியை பெருங்கோபத்தோடு திட்டி கொண்டிருக்கிறான்
பைக்கை ஓட்டியபடி ஒருவன். பேருந்தில் ஏறுவதற்கு தயாராக இருக்கும் பெண்ணிடம்
கெஞ்சலுடன் பேசி கொண்டிருக்கிறான் ஓர் இளைஞன். இப்போது யோசித்து
பார்க்கும் போது காதல் என்பது வெறுமனே இன்பம் மட்டுமல்ல துன்பங்களும்
கலந்தது தான் என புரிகிறது. ஊடலும் கூடலும் என்பது இது தான் போலிருக்கிறது.
நம் சங்கப் பாடல்களை விட காதலினை நுணுக்கமாய் சொல்லுபவை எவை?
வலைப்பதிவுலகில் சங்கப்பாடல்கள் மீது காதல் கொண்டிருப்பவர்கள் பலர்.
காயத்ரி சித்தார்த்
பாலைத்திணை
என்கிற பெயரில் வலைப்பதிவிடுகிற காயத்ரி சித்தார்த் இலக்கியத்தின் மீது
விருப்பம் கொண்டவர். கவிதைகள், திரை விமர்சனம், வாசித்தவை, பயண அனுபவம் என
நிறைய எழுதினாலும் பழம்பெரும் இலக்கியங்களை ஆங்காங்கே விவரிப்பதில்
தயங்குவதில்லை. வெயிலில் காய்ந்து
கொண்டிருக்கும் பாறை ஒன்றின்மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெயை கைகள்
இல்லாத, வாய் பேசவியலாத ஒருவன் காக்க முயல்வதைப் போல நான் தவித்துக்
கொண்டிருக்கிறேன் என்பது போன்ற உவமைகள் எத்தனை நுட்பமானவை. குறுந்தொகையில் காதலர்களிடையே பிரிவு பற்றி இப்படி எத்தனை அழகான உவமைகள் உள்ளது என்று குறுந்தொகை பற்றிய அறிமுகத்தில் எழுதுகிறார்.
சித்தார்த்
அங்கிங்கெனாதபடி
என்கிற பெயரில் வலைப்பதிவிடுகிற சித்தார்த், காயத்ரியின் கணவர். பழந்தமிழ்
இலக்கியம் மற்றும் நவீன & பின் நவீன இலக்கியங்களைப் பற்றி தொடர்ந்து
எழுதி வருகிறார். குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என்கிறார்.
சுவாரஸ்யமாய் நடந்து கிளைமாக்ஸை நெருங்கும் நாடகத்தில் ஒரு காட்சி
புகைப்படமாய் உறைந்து போதல் போல குறுந்தொகையில் ஒவ்வொரு பாடலும் இருப்பதாக
சொல்கிறார். அந்த ஒரு கணத்தின் உக்கிர உணர்வுகள் சொற்களாய் வழிந்தோடுவதாய்
குறிப்பிடுகிறார். அழகு!
அணிலாடு முன்றில்
இலக்கியத்தில்
விருப்பத்தோடு இருக்கும் மேற்குறிப்பிட்ட கணவன் மனைவி இருவரும் இணைந்து உருவாக்கிய தளம்
அணிலாடு முன்றில். இங்கே குவிந்திருப்பவை அனைத்தும் பழப்பெரும் இலக்கிய விருந்து மட்டுமே.
கண்ணபிரான் ரவிசங்கர்
பேரைப்
பார்த்து பயப்பட வேண்டாம். மிக எளிமையாக காமெடியாக சுவாரஸ்யமாக சங்க
பாடல்களையும் மற்ற இலக்கியங்களையும் சொல்லி இருக்கிறார். காதலா காமமா எப்படி அறிவது என்பதிலும் காமெடியாக சங்க இலக்கியமும் குறளும்
எடுத்தாளப்படுகிறது.
கைக்கிளை என்பது காதல் தோல்வியைக் குறிக்கும் என சொல்லப்படுவது உண்மையல்ல,
கைக்கிளை என்பது வேறு சில பொருளும் கொண்டது என சொல்கிறார்.
- ஒரு துணை இயக்குனருக்குத் தெரிஞ்ச விஷயம், கம்பனுக்குத் தெரியாதா?
- சிலுக்கு குற்றியலுகரமா?
- கம்பன் போட்ட maths
இவர் காமெடியாய்
எழுதியதை யார் தவறாக எடுத்து கொண்டு இவர் மனதைப் புண்படுத்தினார்களோ
தெரியவில்லை, இனி எழுத மாட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து
விட்டார். எனினும் இவரது பழைய பதிவுகள் படிப்பதற்குச் சுவாரஸ்யமானவை.
இவர் திரும்பவும் எழுத வர வேண்டும்!
இரண்டாவது தளம் புதியது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
புதிய தளங்களை அறிமுகம் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் சிறப்பான பணி
ReplyDeleteஎங்களது தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சாய்ராம்.
ReplyDelete- சித்தார்த்.
இன்றைய அறிமுகங்களும் இனிமையானவையாக இருக்கின்றன.
ReplyDeleteதிரு கண்ணபிரான் ரவிசங்கர் எழுதியதை நிறுத்தியிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்களுடன் சேர்ந்து நானும் இவரை பறுபடி எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இன்றைக்கு இலக்கிய விருந்து படைத்துவிட்டீர்கள்.நிதானமாக சுவைத்து இன்புற வேண்டிய தளங்கள்.
அறிமுகம் ஆனவர்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
அனைவருக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஅணிலாடு முன்றில், பாலைத்திணை இரண்டுமே எனக்கு புதியவைகளே. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
திரு.கண்ணபிரான் ரவிசங்கர் எழுதியதைத் தொடர... தொடர்ந்தும் எழுத வேண்டுகிறேன்.
ReplyDeleteஎழுதுகோல் பிடித்தவருக்கு ஒய்வு இருக்கக்கூடாது.
திண்டுக்கல் தனபாலன், கோவை சரளா, சித்தார்த் வெங்கடேசன், ரஞ்சினி நாராயணன், வை. கோபாலகிருஷ்ணன், சத்ரியன், மாதேவி மற்றும் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஆகியோருக்கு நன்றி!
ReplyDelete