Saturday, May 18, 2013

குழந்தைகளும் பெற்றோர்களும்

வள்ளுவர் தொடங்கி மழலை மொழிக்கு மயங்காதார் யார்? எந்தவொரு வீட்டிற்குப் போனாலும் அங்கே மழலைகள் இருந்தால் அந்தப் பெற்றோர்கள் தங்களது மழலையின் சாகசங்களை வாய்வலிக்க விருந்தினர்களிடம் நிறுத்தாமல் சொல்லி கொண்டிருப்பதைக் கேட்க முடியும். வலைப்பதிவில் தங்களது சுட்டிகளைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் பெற்றோர் நிறைய உண்டு.

சந்தனமுல்லை
சித்திரக்கூடம் என்கிற வலைப்பதிவினை நடத்தும் சந்தனமுல்லை ஒரு பிரபல வலைப்பதிவர். பப்பு டைம்ஸ் என்று மழலை உலகோடு தனக்கான அனுபவத்தைப் பதிவிடுகிறார். பப்பு ஒவ்வொரு முறையும் தாயை outsmart செய்யும் போதும் 'ஓர் ஆம்மாவின் சின்னஞ்சிறு உலகமும் ஒரு குழந்தையின் விரியும் உலகமும்' என்கிற அவரது வலைப்பதிவு தலைமை வரி நியாயம் பெறுகிறது.

தியானா
பூந்தளிர் என்கிற வலைப்பதிவினை நடத்தும் தியானா, 'The mother's heart is the child's schoolroom,' என்று தனது வலைப்பதிவிற்குத் தலைமை வரி வைத்திருக்கிறார். எத்தனை உண்மை! குழந்தை வளர்ப்பினை பற்றி தன் அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ளுவதோடு குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள் செய்வது எப்படி, ஓவியம் தீட்ட சொல்லி தருவது எப்படி என்பது போன்ற விளக்கங்கள் விரிவாக இருக்கின்றன. முக்கியமாக விளையாட்டாய் அறிவியலைப் போதிப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன. உதாரணத்திற்கு மழை எப்படி பெய்யும் என்பதை விளக்குவதற்கு நாமே மழையை பெய்ய வைத்து காட்ட முடியும். (?!)

பேரன்ட்ஸ் கிளப் வலைப்பதிவு
குழந்தை வளர்ப்பிற்காக இயங்குகிறது பேரன்ட்ஸ் கிளப் வலைப்பதிவு. பத்து வலைப்பதிவர்கள் இங்கே எழுதியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான கல்வி, அவர்களை அணுக வேண்டிய விதம், குழந்தைகளின் உளவியல், பதின்ம வயது என்று பல தலைப்புகளில் பதிவுகள் உள்ளன.

டாக்டர் ராஜ் மோகன்
குழந்தைநல மருத்துவரான ராஜ்மோகன் குழந்தைகளுக்கான மருத்துவத்தை மருத்துவ ஆலோசனைகளை சிறு சிறு பதிவுகளாக சுவாரஸ்யமாக எழுதுகிறார் பேபி கிளினிக் என்கிற தன் வலைப்பதிவில்.

இணையத்தில் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான வலைத்தளங்கள், விளையாட்டுடன் ஆரோக்கியமான விஷயங்களைச் சொல்லி தரும் இணையத்தளங்கள் முகவரியினைத் தொகுத்து ஒரு பதிவாக எழுதியிருக்கிறார் ரஞ்சித். கட்டாயம் பெற்றோர்களுக்குப் பயன்படும்.

...மேலும் பேசுவோம்...

5 comments:

  1. ரசனையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. சிறப்பான பதிவுகளை அறிமுகம் செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அவர்களுக்கும்

    ReplyDelete
  3. வித்தியாசமாய் அறிமுகம் செய்து வைக்கிறீர்கள்...

    ReplyDelete
  4. முடிவில் உள்ள தளம் புதியது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இராஜராஜேஷ்வரி, கோவை மு சரளா, உஷா அன்பரசு & தனபாலன் ஆகியோருக்கு நன்றி

    ReplyDelete