கதை எழுதறது சுலபமில்லைன்னு நேத்து
சொன்னேன்… கவிதை எழுதறது மட்டும் சுலபமா என்ன? கவிதையில் பலப் பல வகைகள் உண்டு. மரபுக்
கவிதைகள் உண்டு; புதுக் கவிதையிலேயே புதுப் புதுக் கவிதைகள் உண்டு; பாடல்கள் உண்டு…
கவிதைன்னா என்னன்னு பேச ஆரம்பிச்சா அதுவே பெரிய விவாதச் சரமாயிடும்!
கதை, கட்டுரை, இப்படி எது நல்லா
எழுதறவங்களைப் பார்த்தாலும் எனக்கு பொறாமையெல்லாம் வர்றதில்லை. ஆனா கவிதை நல்லா எழுதறவங்களைப்
பார்த்தா கொஞ்சூண்டு பொறாமை வந்துடும்! அது ஏன்னே தெரியலைங்க!
சரி… சுயபுராணத்தை நிறுத்திட்டு,
நான் ரசிச்ச கவிதைகளை, கவிஞர்களைப் பற்றி பார்ப்போம் :)
தமிழின் அழகு மரபுக் கவிதைகளில்
இருக்கு. இலக்கணப்படி ஒரு கவிதை அல்லது பாடலாவது எழுதிப் பாருங்க, எதுகையும் மோனையும்
சந்தமும் பொருளும் தானா வந்து அழகா உக்காந்துக்கும். இந்த மாதிரி பாடல்களை பாடணும்
கூட அவசியம் இல்லை. வாசிக்கவே சுகமா இருக்கும். எதனால இப்படியெல்லாம் இலக்கணம் வகுத்து
வெச்சிருக்காங்கன்னு அப்பதான் புரியும். வெண்பா எழுதறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா எதுவுமே
பயிற்சியில் வந்துடும். ஆசிரியப்பா மாதிரியான சுலபமான பா வகைகளையாவது கவிஞர்கள் தயவு
செய்து முயற்சி செய்து பார்க்கணும்.
இப்பவும் இப்படித் தமிழ் மரபைக்
காப்பாத்திக்கிட்டிருக்க பதிவர்களில் ஒருவர், தங்கமணி
அம்மா. சிவன் மீதான பக்திப் பாடல்கள் நிறைய எழுதியிருக்கார்.
ஒவ்வொன்றும் தனிச் சுவை. வாசிக்க தனிச் சுகம். ‘என் பணி அரன் துதி’ என்ற புத்தகத்தையும்
வெளியிட்டுள்ளார். (நன்றி: கீதாம்மா)
இலக்கணத்தோடு கவிதை எழுதுகிற
இன்னொருத்தரும் இருக்கார். தமிழுக்கே உரித்தான வெண்பாக்களை எழுதுகிற திகழ், தமிழை, கவிதைகளை, மிகவும் காதலிக்கும்
ஒருவர். இவரோட வெண்பா வனத்தில் தமிழோட பக்தியும் மிளிரும்.
பூச்சரம் என்கிற வலைப்பூவுக்குச்
சொந்தக் காரரான பூங்குழலி, ஒரு மருத்துவர். இவரோட மருத்துவ
அனுபவங்களையும், மெல்லிய உணர்வுகளை இதமான கவிதைகளாக்கியும் வலைப்பூவில் பகிர்ந்துக்கிறார்.
மழையும் இவரும் நல்ல தோழிகள் என்பது
இந்தக் கவிதையின் மூலம் விளங்கும்…
திரு.ரமணி அவர்களின் தெளிவான சிந்தனையும்,
மனிதாபமானம் மிக்க உணர்வுகளும், நேர்மையும், இவர் படைப்புகளில் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
பழநிமுருகனும் நானும் என்கிற கவிதையில் தெரிஞ்சிடும்,
இவரின் இருப்பு.
எளிமையான கவிதைகளாலும், கட்டுரைகளாலும்
வருடுகிறாற் போல் நம் மனதை உழுது விடும் உழவன், ஆனந்த விகடனிலும் தன் கவிதைகளை பிரசுரிச்சிருக்கார்.
‘அன்புடன்’ குழுமத்தில் சேர்ந்த
பிறகுதான் கவிதைகள் நிறைய எழுதினேன். அப்படி ஒரு அருமையான குழுமத்தை ஆரம்பிச்சு என்னைப்
போல பலரையும் ஊக்குவிச்ச ‘அன்புடன் புகாரி’
அவர்கள் மிகச் சிறந்த கவிஞர். பல சமயங்கள்ல அவர் ஒரு காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட்னு தோணும்.
நான் பொறாமைப் படுகிற கவிஞர்களில்
ஒருவர், சிவகுமாரன் . அவர் ஒரு காய்ச்சியெடுத்த கவி! வேற பொருளில் அவர் எழுதியிருந்தாலும்,
அவர் ஒரு பண்பட்ட கவி அப்படிங்கிற பொருளில்தான்
நான் சொன்னேன் :)
இவரோட ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு முத்து.
இந்தக் காலத் தலைமுறையினர் வேகமா
மறந்துகிட்டு வர்ற வழி வழியா வந்த நம்ம பொக்கிஷமான தாலாட்டுகளை அழகா பதிஞ்சு, பகிர்ந்துக்கறாங்க,
மீனா
முத்து அவர்கள்.
சரளமாகக் கவிதை எழுதற கவிஞர்களில்
ஒருத்தர், அம்பாளடியாள். சமீபத்தில் மறைந்த திரு.டி.எம்.எஸ். பற்றி இவங்க எழுதியிருக்கிற
கவிதையைப் படிச்சா உங்களுக்கே தெரியும்.
‘உனக்கோர்
செல்லப் பெயர்’ என்ற மென்மையான காதல் கவிதைக்குச் சொந்தக் காரர், இந்திரா. கவிதை மட்டுமில்லாமல் எல்லாமே
எழுதறார்.
நிறைய காதல் கவிதைகள் எழுதற இன்னொரு
கவிஞர், சிசு.
இவரோட புன்னைகைப் பொழுதைப் படிச்சா, நீங்களும் புன்னகைப்பீங்க!
விண்முகில் என்ற அழகான பெயரோடு எழுதற இவங்க
வலைப்பூவில் நிறைய (சோக) காதல் கவிதைகளே தென்படுது. படங்கள் எல்லாம்
எங்கேருந்து கிடைக்குதோ தெரியல. வெகு அழகு.
எதுகை, மோனை, சந்தம், இந்த மாதிரியான
சங்கதிகளோட கவிதை எழுதறவர், கவியாழி கண்ணதாசன். இவரோட பலாப்பழக் கவிதையைப் படிச்சா உங்களுக்கும் இனிக்கும் :)
உஷா
அன்பரசு, இவருடைய
நகைச்சுவை உணர்வு இவரோட கவிதைகளிலும், எழுத்துகளிலும் பிரதிபலிக்குது…காதல்ல இப்படித்தான்
உளறுவாங்க அப்படிங்கிற கவிதை ஒரு உதாரணம்.
ரேவாவின் கவிதைகளில் சொல்லாடலே வித்தியாசமான
சுவையோடு இருக்கு… சொல்லைப் பற்றி இவர் சொல்வதைப் படிச்சா
நீங்களும் சொல்வீங்க!
அழகான படங்களுடன், அதை விட அழகான கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்,
வார்த்தைகளின் வசந்த ஊஞ்சலுக்குச் சொந்தக் காரரான சே.குமார். கவிதை மட்டுமின்றி பலப்பல விஷயங்களும்
எழுதுகிறார். அதீதம் இணைய இதழில் இவரைப் பார்த்திருக்கிறேன்.
இவர் எழுத்தில் தென்றல் மாதிரி,
மனதிற்கு இதமாக எழுதுவார். பெயரிலேயே சாரலை வெச்சிருக்கார். வல்லமை ஆசிரியர்களில்
ஒருத்தர். இவரோட காகிதக்குறிப்புகள் என்கிற கவிதையே இவர் எழுத்தின்
ஆளுமை பற்றிச் சொல்லி விடும்.
Last but not least, பள்ளி மாணவ மாணவியரின் கவிதைகளை இங்கே பார்க்கலாம்... இந்த இளம் பிள்ளைகளின் சிந்தனைகள் வியக்க வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, 'சுமைகள்' என்ற கவிதையில்....'மனிதா, உழைக்காத வரை நீ இவ்வுலகிற்குச் சுமை!' என்கிறது ஒரு பிள்ளை. எத்தனை உண்மை! (நன்றி: திண்டுக்கல் தனபாலன்)
Last but not least, பள்ளி மாணவ மாணவியரின் கவிதைகளை இங்கே பார்க்கலாம்... இந்த இளம் பிள்ளைகளின் சிந்தனைகள் வியக்க வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, 'சுமைகள்' என்ற கவிதையில்....'மனிதா, உழைக்காத வரை நீ இவ்வுலகிற்குச் சுமை!' என்கிறது ஒரு பிள்ளை. எத்தனை உண்மை! (நன்றி: திண்டுக்கல் தனபாலன்)
மீண்டும் நாளை பார்க்கலாம்…
அன்புடன்
கவிநயா
விண்முகில் தமிழ்ச் செல்வி சமீபத்து அறிமுகம். சாரலில் நனையாதவர் இல்லை. கவியாழி கண்ணதாசன் பெயரையும், அம்பாளடியாள் பெயரையும் மட்டுமே தெரியும். மீனாமுத்துவைப் பத்திச் சொல்ல வேண்டியதே இல்லை. கவியரசு கண்ணதாசனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். கம்பன்வீட்டுக்கட்டுத் தறியும் கவி பாடும்.
ReplyDeleteஎனக்கு நல்லா அறிமுகம் ஆன தங்கமணி அம்மாவைப் பத்தியும் குறிப்பிட்டதுக்கு நன்றி. அவங்களோட கவிதை புனையும் ஆர்வம் இன்னமும் என்னைப் பிரமிக்க வைக்கிறது.
ஹிஹிஹி, மத்தவங்களை எனக்குத் தெரியாதே! :))))))))))))
™+1 இணைத்து விட்டேன்... அறிமுகங்களை தொடர்பு கொண்டு விட்டு வருகிறேன்...
ReplyDeleteகவிதைச்சரத்திற்கு வாழ்த்துகள்...!
ReplyDeleteகூட்டாஞ்சோறு தளம் மட்டும் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைத்து தளங்களும் ரசிக்க வைக்கும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புகளை ரசிக்க : Click-->எப்போதாவது வருவதே கவிதை ! (பகுதி 9)<-- நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி தோழி மிகவும் ரசித்து அனைவரும் ரசிக்கும் வண்ணம்
ReplyDeleteஅறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் !! இன்றைய வலைச்சர அறிமுகங்கள்
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
நீங்கள் அறிமுகம் செய்கிற விதமே அலாதி அழகு. கவிதை மொழி கைவரப் பெற்றவர்களின் ஆற்றலுக்கு என் வாழ்த்துகளும் :)
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களும் அருமை. நன்றி!
ReplyDeleteஎன் பதிவினையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிங்க.
ReplyDeleteமற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்.
அறிமுகத்திற்கு நன்றி கவிநயா. தெரியப்படுத்திய டிடிக்கும் நன்றி :-)
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
மிக்க நன்றி கவிநயா அறிமுகத்திற்கு .உங்கள் கவிதைகளின் ரசிகை நான் .அன்புடன் மூலம் நம்மை போன்ற பலருக்கு கவிதை எழுதவும் நட்பு பகிரவும்
ReplyDeleteதளம் அமைத்து கொடுத்த புகாரிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும் .அன்புடனுக்கு பிறகே நானும் பல வருடங்கள் கழித்து கவிதை எழுத துவங்கினேன் .
செய்தி சொல்லிய தனபாலனுக்கு நன்றி
அறிமுகங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கவிநயா!!!. உங்கள் சேவை மிகவும் போற்றத்தக்கது.
ReplyDeleteஅறிமுகத்திற்கு
ReplyDeleteஅகம் கனிந்த நன்றிகள்
அன்பின் கவிநயா - பதிவினை நேரடியாக வலைச்சரத்தினிலேயே எழுதுக - வேறு எங்கேனும் எழுதி நகலெடுத்து இங்கு ஒட்டினால் - வலைச்சர முகப்பினில வருவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபல தளங்கள் எனக்கு புதியவை.அறிமுகங்கள் நன்று
ReplyDeleteஅறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteதகவல் சொன்ன தனபாலனுக்கும் அன்பார்ந்த நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு கவிநயா,
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு
மகிழ்ச்சியுடன்,நன்றி.
நீங்கள் அறிமுகம் செய்துள்ள அன்பர்களின்
வலைப்பூக்களை பார்க்கிறேன்.அவர்களுக்கு என்
அன்பு பாராட்டுகள்.
வலைச்சர அறிமுகத் தகவலைச் சொன்ன நண்பர்திரு.தனபாலன்
அவர்களுக்கு என்நன்றி.திருமதி.கீதாசாம்பசிவம் அவர்களுக்கும் என்நன்றி.
கவிநயா உங்கள் கவிதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.
அன்புடன்,
தங்கமணி.
என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்
ReplyDeleteஅருமையான தளங்களின் அழகான அறிமுகம். அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கும் மற்ற அறிமுக உறவுகளுக்கு வாழ்த்துகளும் நன்றியும்
ReplyDelete//ஹிஹிஹி, மத்தவங்களை எனக்குத் தெரியாதே!//
ReplyDeleteநெசம்மாத்தானாம்மா? ஹை! ஜாலி! :)
வாசிச்சதுக்கு நன்றி கீதம்மா.
//™+1 இணைத்து விட்டேன்... அறிமுகங்களை தொடர்பு கொண்டு விட்டு வருகிறேன்...//
ReplyDeleteசளைக்காமல் இந்தப் பணியைச் செய்யும் உங்களுக்குப் பல கோடி நன்றிகள் தனபாலன்!
நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா!
ReplyDeleteபள்ளிக் கூட மாணவ மாணவியரின் படைப்புகள் பற்றிய சுட்டிக்கு நன்றி தனபாலன். இடுகையிலும் சேர்த்து விட்டேன். மிக்க நன்றி!
ReplyDelete//மிக்க நன்றி தோழி மிகவும் ரசித்து அனைவரும் ரசிக்கும் வண்ணம்
ReplyDeleteஅறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் !!//
மிக்க நன்றி அம்பாளடியாள்!
//நீங்கள் அறிமுகம் செய்கிற விதமே அலாதி அழகு. கவிதை மொழி கைவரப் பெற்றவர்களின் ஆற்றலுக்கு என் வாழ்த்துகளும் :) //
ReplyDeleteரசித்தமைக்கு மிக்க நன்றி ரிஷபன்!
நன்றி உஷா அன்பரசு!
ReplyDeleteநன்றி இந்திரா!
நன்றி அமைதிச்சாரல்!
//மிக்க நன்றி கவிநயா அறிமுகத்திற்கு .உங்கள் கவிதைகளின் ரசிகை நான் .அன்புடன் மூலம் நம்மை போன்ற பலருக்கு கவிதை எழுதவும் நட்பு பகிரவும்
ReplyDeleteதளம் அமைத்து கொடுத்த புகாரிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும் .அன்புடனுக்கு பிறகே நானும் பல வருடங்கள் கழித்து கவிதை எழுத துவங்கினேன்//
உண்மைதான் பூங்குழலி. தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி! .
மிக்க நன்றி திகழ்!
ReplyDelete//அன்பின் கவிநயா - பதிவினை நேரடியாக வலைச்சரத்தினிலேயே எழுதுக - வேறு எங்கேனும் எழுதி நகலெடுத்து இங்கு ஒட்டினால் - வலைச்சர முகப்பினில வருவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.//
ReplyDeleteநன்றி சீனா ஐயா. இப்போ சரியா இட பழகிட்டேன்னு நினைக்கிறேன் :)
நன்றி டினேஷ் சுந்தர்!
ReplyDeleteநன்றி சிவகுமாரன்!
நன்றி ரூபன்!
அன்பினிய தங்கமணி அம்மா,
ReplyDeleteஎன் கவிதைகளை நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் கவிதைகள் நிறைய படித்திருக்கிறேன். உங்களுடைய மற்ற தளங்களையும் வாசித்திருக்கிறேன். உங்கள் புத்தகம் வெளியான தகவலும் கீதாம்மா சொன்னார்கள். அவருக்கும், உங்களுக்கும் நன்றி.
நன்றி கவியாழி கண்ணதாசன்!
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி!
நன்றி ரேவா!
சிலரை மட்டுமே தெரியும். அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteகவிதை எழுதுவது கஸ்டம் தானுங்க. படிக்கிறது அதைவிட :)
அருமையான தளங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteரொம்ப நன்றிங்க :-)
ReplyDeleteஅட... இப்பகிர்வு கவிஞர்களுக்கு!.....
ReplyDeleteபுதிய பதிவுகள் சிலவ்ற்றை படிக்க முடிந்தது...... மிக்க நன்றி கவிநயா....
//கவிதை எழுதுவது கஸ்டம் தானுங்க. படிக்கிறது அதைவிட :) //
ReplyDeleteஇதைப் படிச்சோன்ன சொல்ல வந்ததைச் சொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சேன்... சொல்லலை! :)
பதிவை வாசிச்சதுக்கு நன்றி அப்பாதுரை!
நன்றி மாதேவி!
ReplyDeleteநன்றி உழவன்!
நன்றி வெங்கட் நாகராஜ்!
பல புதுமுகங்களைக் கண்டேன், சென்று பார்த்து ரசித் தேன் மிக நன்றி. உங்களுக்குத் தெரியுமோ நானும் கவிதை எழுதுகிறேன்.
ReplyDeleteபாக்களின் மாலையென்று பெயரிட்டு- பாமாலிகை -
வித விதமாகப் பிரித்துப் பதிவிட்டுள்ளேன் விரும்பினால் பாருங்கள்.லிங்க் இது தான்.
http://kovaikkavi.wordpress.com/
இனிய வாழ்த்து. தங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில பார்த்தேன் நன்று.
வேதா. இலங்காததிலகம்.
வருகைக்கு நன்றி வேதா! உங்கள் கவிதைகளை நானும் பார்க்கிறேன் :)
ReplyDeleteகவிநயா! இங்கு என் தளம் பற்றிய உன் அறிமுகம் பார்த்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா! :) உள்ளம் நிறைந்த நன்றி உனக்கும்,இது குறித்த தகவல் தந்த தனபாலன் அவர்களுக்கும்!
ReplyDeleteஇன்று(june 4ல்)கிடைத்த செய்தி போன்று உவகை கொள்ளச் செய்த செய்தி இதே தாலாட்டு தளத்திற்கு 2010 june 4 ல் விகடனில் இருந்து கிடைத்தது அதிசயமான ஒற்றுமை!
வாங்க மீனாம்மா. இப்போதுதான் உங்க பின்னூட்டம் பார்க்கிறேன்...follow up போடாததால் வலைச்சர வாரம் முடிந்த பின் வந்த பின்னூட்டங்கள் தெரியவில்லை. ஆம், அதிசயமான ஒற்றுமைதான் :) நன்றி அம்மா. நன்றி தனபாலன்!
ReplyDelete