Monday, June 10, 2013

சிவகாசிக்காரன் சமுத்ராவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சமுத்ரா தான் ஏற்ற பொறுப்பினை சரி வர நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் தன் பணியினை வித்தியாசமான முறையில் பதிவுகள் இட்டு, நிறைவேற்றி வாசகர்களை கவர்ந்திருக்கிறார். பணிச்சுமை காரணமாக ஐந்து பதிவுகள் மட்டுமே இட்டு எழுபத்தைந்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.  பல தலைப்புகளீல் பதிவுகள் இட்டு பல்வேறு பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

நண்பர் சமுத்ராவினை வாழ்த்த்கி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பெற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் சிவகாசிக்காரன்.  

இவரது இயற்பெயர் ராம்குமார், வலையுலகில் சிவகாசிக்காரன் என்று அறியப்படுகிறார்... இவரது  ஊரின் மீது கொண்ட பாசத்தால் இவரது ஊர் பெயரை இவருக்கு  அடையாளமாக்கிக் கொண்டார்... சிவகாசியில் இளநிலை இயற்பியலும், மதுரை தியாகராசர் நிர்வாகவியல் கல்லூரியில் தொழில் நிர்வாகமும் படித்துவிட்டு இப்போது ஒரு சிமெண்ட் கம்பெனியில் புதுக்கோட்டை மாவட்ட சேல்ஸ் ஆஃபிசராக இருக்கிறார்.  கல்லூரிக்காலத்தில் ஓராண்டு ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளனாக இருந்திருக்கிறார். படிப்போ டிகிரியோ இல்லையென்றாலும் தாத்தாவின் வாசிப்பு பழக்கம் ஜீன் மூலமாக அப்பா அம்மாவை தொடர்ந்து , இவருக்கும் வந்துவிட்டது.. சிறு வயதில் இருந்தே சுஜாதா தான் இவரது ஆதர்சம்.. சுஜாதாவைப் படித்து தான் எழுதும் ஆசையே வந்திருக்கிறது. எங்கு எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாத போது, நண்பர்கள் மூலம் ப்ளாக் அறிமுகமானது.. கட்டுரைகள், சினிமா, சிறுகதைகள் என கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். 

 சிறுகதைகளில் ஆர்வம் அதிகம்.. பெரும்பாலும்  மண் சார்ந்த, இவரது வாழ்வில் நடந்த  சில நிகழ்வுகளையே சிறுகதைகளாக எழுதியிருக்கிறார்.. இவரது  கதைகளில் எங்காவது ஒரு மூலையில் இவர இருப்பார்.  எங்குமே சிவகாசி இருக்கும்.. 

ராம்குமாரினை வருக வருக என வரவேற்று ஆசிரியப்பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் சமுத்ரா

நல்வாழ்த்துகள் சிவகாசிக்காரன்

நட்புடன் சீனா







12 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சிவகாசிக்காரருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ராம்குமார்....

    ReplyDelete
  4. அப்பன் சொத்தை, பாட்டன் சொத்தை தூக்கிப் போடுடா... சொந்தக் காலில் நீயும் கொஞ்சம் வாழ்ந்து பாருடா

    உன்னப் பத்தி, என்னப் பத்தி என்ன பேச்சுடா...? ஒத்த மூச்சு நின்னுபுட்டா எல்லாம் போச்சுடா...!

    ஆயுள்ரேகை தேயும் வரை உழைப்போமடா... உழைச்சு நாம ஆயுளத்தான் வளர்ப்போமடா...

    வாழும்வரை மத்தவன மதிப்போமடா... மதிச்சுப்புட்டா வாழ்ந்தபின்னும் இருப்போமடா...

    இன்னிக்கென்ன கெழம... நாளைக்கென்ன கெழம...
    நாள் பார்த்து நாள் பார்த்து தூங்காதடா...

    போனா திரும்பாதுடா... வாழ்க்கை பெரும்பாடுடா...

    என்று பாட்டு பாடிக் கொண்டே வரும்... சிவகாசிகாரரே... வருக... அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ராம்குமார்....

    ReplyDelete
  6. // ஓராண்டு ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளனாக இருந்திருக்கிறார்.// தல சூப்பர் தல சொல்லவே இல்ல :-)

    அருமையான வலைச்சர பணிக்கு அன்பான வாழ்த்துக்கள் ராம். நிச்சயம் இந்த வாராம் ஒரு வித்தியாசமான வாரமாய் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை

    ReplyDelete
  7. வணக்கம் ராம்குமார்.
    வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அருமையாய் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம்
    சிவகாசிக்காரன்(அண்ணா)

    இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பாசிரியராக வருவதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது இந்த வாரம் சிப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. பாராட்டுகள் சமுத்ரா....
    வாழ்த்துகள் ராம்குமார்....

    ReplyDelete