வணக்கம்...
நண்பர்களை இரண்டாம் நாளில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நேற்று எனக்கு பின்னூட்டமளித்து வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல. நாளைய பதிவில் இருந்து புது பதிவர்களை பார்க்கலாம், அதற்கு முன் நான் விரும்பும் வலைத் தளங்கள். என் நண்பர்களின் தளங்கள் பற்றி ஒரு பார்வை பார்த்து விடுவது சாலச் சிறந்தது என நினைக்கிறேன்.
நாம் எல்லாம் நமது எட்டு வயதில் என்ன செய்திருப்போம், எனக்கு தெரிஞ்சி நான்லாம் கோலி, கபடி, பாரி'ன்னு விளையாண்டுகிட்டு இருந்திருப்பேன். அப்போதான் அ'ன்னா ஆ'வண்ணா கத்துகிட்டு இருப்போம், இவுங்க அப்பவே கவிதை எழுதற அளவுக்கு பழுத்துட்டாங்க அவுங்களோட எட்டு வயதிலேயே! நீங்களே படித்து பாருங்கள், அவரது எட்டு வயது கவிதையை. காதல் கள்வன், முத்தம் க/கு 2011, அவன் மற்றும் வித்தை கற்றவளின் கனவு ஆகியவை மேலும் அவரின் படைப்பிற்கு .
இவர் வள்ளுவருக்கு பக்கத்துவீட்டுக் காரரு. ஏன்னா இவரது கவிதை நாலு வரிக்கு மேல இருக்காது, இந்த நாலு வரியிலேயே சொல்ல வந்ததை சிறப்பா சொல்லிடுவாரு, இவரது தளம் இதுதாங்க! கரைசேரா அலை. ஒடம்பு பூரா அறிவு. இவர் எழுதுன லேட்டஸ்ட் ஹிட் இதுதாங்க! அவள் வெளியூர் சென்ற தருணங்களில் மற்றும் நீ வெளியூர் சென்ற தருணங்களில். இவரது மற்ற எனக்கு பிடித்த பதிவுகள் செம்மண் தேவதை, சினை மீனோன்றை..
இவர் தான் வலையுலக பின்னூட்டப் புயல், கருத்துரை வழங்கும் சிங்கம் யார் பதிவு போட்டாலும் முதன் முதலில் வாசித்து கருத்து வழங்குபவர் இவராகத்தான் இருப்பார். பதிவர்களை ஊக்குவிப்பதற்காகவே இவர் பெரும் நேரத்தை செலவழிக்கிறார். இவரது எழுத்தும் அழகானது, இடையிடையே குட்டிப் குட்டி பாடல்கள், கதை என்று இவரது பதிவுகள் கட்டம் கட்டமாக தனி விதமாக ஒளி வீசும்.. இவரது பதிவு. எனக்கு வலைப்பூ பற்றிய தொந்தரவுகள் வரும்போதெல்லாம் நான் இவரைத்தான் நாடுவேன், உடனே தீர்வு வந்துவிடும். காதல் காவியமானது, மனிதனின் மிகப்பெரிய எதிரி யார்? இவை சில உதாரணங்கள்.
கடந்த சில மாதங்களாக இவர் எங்கோ காணாமல் போய் விட்டார். இவரது தளம்- எத்தனம். இவர் எழுதிய ரைம்ஸ் வரலாற்றை படியுங்கள், சிரிப்பு வரும். இவர் சினிமா விமர்சனம் எழுதுவதில் ஆர்வம் உடையவர், அழகாகவும் கதை சொல்லுவார், சில இணைப்புகள். நீதானே என் பொன் வசந்தம், முகமூடி, பில்லா-2. உலகை ஆண்ட தமிழர்கள் இனம் பற்றி இவர் மிக அழகாக கூறுவார். படித்துப் பாருங்களேன், நம் தமிழ் இனம் பற்றி அறிந்துகொள்வோம் மேலும்.
இவரது இயற்ப்பெயர் இலக்குமணன். இவரது தளம் பெயர் சிகரம் பாரதி. இவரது புனைப்பெயரும் இதுவே. கவிதை எழுதுவதில் வல்லவர். மேலும் இவர் இணைய நாவல் எழுதுவதிலும் வல்லவர். இவர் எழுதிய கல்யாண வைபோகத்தை படியுங்களேன். ஆனால் நேரமின்மை காரணத்தால் இவரால் தொடர்ந்து எழுத இயலவில்லை என நினைக்கிறேன். விரைவில் இந்த கதையை முடிப்பார் என நினைக்கிறேன்.
அடுத்ததாக நண்பர் பெயர் அருண் பிரசாத். இவர் வரிக்குதிரை என்ற தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர் இலங்கையில் வாழும் மலையக மக்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். அது புத்தகமாக மாறி சேமிக்கப்பட வேண்டிய ஒன்று. இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள், தமிழ் பற்றிய கட்டுரைகளையும் படியுங்கள். நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
அடுத்ததாக எங்கள் அரியலூர் மண்ணின் மைந்தர் திரு.கருணாக்கரசு அவர்களை பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகா வேண்டும், ஏனெனில் இவர்தான் அரசன் மற்றும் சத்திரியன் போன்றோரை வலைப்பூ பக்கத்திற்கு இழுத்தவர். எனக்கும் இவருக்கும் அறிமுகம் கிடையாது ஆனால் நான் இவரது கவிதை ரசிகன். சொல்லவரும் கவிதையை நான்கே வரிகளில் சொல்லிவிடுபவர். இவரது காதல் தின்றவன் கவிதைத் தொகுப்பை படித்துப் பாருங்கள். மனம் கொள்ளை கொள்ளும்.
தோழி எழில். இவர் வலைப்பூ பெயர் நிகழ்காலம். இவர் எப்போதுமே வாழ்க்கை அனுபவம் சார்ந்த பதிவுகள் எழுதுவதில் வல்லவர். இவரது பதிவுகள் அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் மற்றவர்களுக்கு உபயோகப் படும்படியாகவே இருக்கும் என்பதில் எனக்கு சிறு ஐயமும் இல்லை. சில பதிவுகள் காட்சிக்கு: அனில் பிள்ளை, பொறியியல் கலந்தாய்வு செல்வோர்களுக்கு, சில கவிதைகள், இவர் மாதம் ஒரு புத்தகத்தை அறிமுகப் படுத்துவார், அழகாக அப்புத்தகம் பற்றி தெளிவாக விமர்சனம் செயார்.
இளைய நிலாவில் எழுதிக்கொண்டிருக்கும் இளமதிதான் அடுத்தவர். இவரின் கவிதை வாசிப்பதற்கே தினமும் இவரது தளம் செல்வேன். அழகான கவிதையை எளிய நடையில் எழுதுவார். இவர் ஐம்பூதம் பற்றி எழுதிய கவிதையை படியுங்களேன். சிறப்பாக இருக்கும். தமிழே உயிரே, நம் வாழும் காலம் போன்ற பதிவுகள் அனைவரும் படிக்க வேண்டியவை. அடுத்து ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். இவர் க்விலிங் செய்வதில் வல்லவர்.
அடுத்து நம்ம சிட்டுக்குருவியைப் பற்றி பார்த்தேயாக வேண்டும். மன்னிக்கவும் இப்போ இவரோட பேர வாஸ்து படி ஆத்மா'ன்னு மாத்திகிட்டாராம். இவர் படம் போட்டு விளக்குரதுல ரொம்ப கெட்டிக்காறரு. சில உதாரங்களை பார்ப்போம். நிச்சயதார்த்தம் பண்ணப் போறீங்களா?, ஜாலியா ஜல்சா பண்ணி...., கருமை மேகமும், காதல் தோல்வியும், அடுத்து பாருங்க மாத்தியோசிப்பவர்களுக்கு சவால்'னு இவரு நம்ம மாத்தியோசி மணி மன்னிக்கவும் மாட்ஜியோஜ்ஜி மனி மனி (இதான் இப்போ ஸ்டைலாம்)யவே வம்புக்கு இழுக்குறாரு!
நண்பர் சீனி! கவிதைய சீனி(சர்க்கரை)யா எழுதுவாரு. பெண்ணினம், தேடலுடன் தேனீ, நினைவெல்லாம் ரத்தம், சுவாசமெல்லாம் மாற்றம் போன்ற தொடர் கவிதைத் தொகுப்புகள் அனைவரம் படிக்க வேண்டியது.
அடுத்து நம்ம மாத்தியோசீ மணி மன்னிக்கவும் மாட்ஜியோஜ்ஜி மனி மனி (இதான் ஸ்டைலாம்), காமெடி பதிவுகள் எழுதுவதில் வல்லவர். இப்போ கடந்த இரண்டு முறையா சீரியஸ் பதிவா போட்டு கலக்குறாரு... வானூர்தி பற்றி மிக அழகான பதிவை போட்டுக்கிட்டு இருக்காரு... அவனா நீ, ஏறுதுங்க..., எறங்குதுங்க..... பாயுதுங்க.... பறக்குதுங்க....!!
நம்ம சத்திரியன் இவர் மனவிழி என்ற தன வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது ஆலிங்கனாவை படியுங்கள், பலவற்றை இவர் சொல்லியிருப்பார். இவரது கவிதைத் தொகுப்பையும் வாசித்து விடுங்களேன்... காதல் தேன் சொட்டும்.
தளிர் சுரேஷ். இவர் புகைப்பட ஹைக்கூ எழுதுவதில் வல்லவர்.
அடுத்ததா நம்ம திடங்ங்கொண்டு போராடு சீனு. இவருக்கு திடீர்னு ஞானோதயம் வந்து பரிசுப்போட்டிலாம் அறிவிச்சிருக்காரு, அதனால இவருக்கு வாழ்த்துகளை சொல்லிடுவோம். இவருபோட்ட கடைசி ரெண்டு மொக்கைய அனைவரும் கண்டிப்பா படிக்கனும், மொக்கை 1, மொக்கை 2 (ஹி ஹி.. ஹா)
ஒரு திரு நங்கையா இவர் அழகா எழுதிகிட்டு இருக்கார். ஆயிஷா பரூக் இதுதான் இவரு தளம். புணர்ச்சி மகிழ்தல், பெண்மையை போற்றுவோம், உழவை காப்போம், போன்ற பதிவுகள் கண்டிப்பாக படிக்க வேண்டியது. ஆனால் இவரை கடந்த இரு மாதங்களாக காணவில்லை. யாராவது எந்த காவல் நிலையத்திலாவது புகார் அளியுங்களேன்!!!
யாரையும் விட்டுவிடவில்லை என்று நம்புகிறேன்... நாளை முதல் புது பதிவர்கள் பற்றி பேசலாம். இன்று ஜூட் விடறேன். அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்...
அன்புடன் வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
சில தளங்கள் எனக்குப் புதியவை. சிலர் நானும் படிக்கும் வலைத்தளங்களை வைத்திருப்பவர்கள்......
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....
தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி... இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் நான் தொடரும் பல்சுவை தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துகள் !!!
ReplyDeleteஇன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹா ஹா... இன்றைய பதிவில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவரையும் ரசித்துப் படித்தேன்.... தொடருங்கள்....
ReplyDeleteசீனு நான் திட்டினேன்னு கோபத்துல இருககறதால ‘சினங்கொண்டு போராடு’ சீனுன்னு மாத்திட்டீங்களா? ஐயோ பாவம்...! அவர் ‘திடங்கொண்டு போராடு’ தளத்துல எழுதறவருங்க. அதே மாதிரி சீனி எழுதற கவிதைகளை சீனுன்னு போட்ருக்கீங்க...! நண்பர் கருணாகரசு பேரை கருணாவுக்கரசுன்னு மாத்திட்டீங்க. ஆர்வமா எல்லாரையும் படிச்சு பாராட்டற நீங்க பேரையும் சரியாக் குறிப்பிட்டிருந்தா இன்னும் மகிழ்வா இருந்திருக்கும் நண்பா.
ReplyDeleteசினங்கொண்டு போராடு என்னும் அந்தப் புதிய பதிவருக்கு வாழ்த்துக்கள் நண்பா, மேலும் அந்த புதிய பதிவர் வெறும் மொக்கையாய் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பதை படிக்கும் போது எனக்கும் கூட சற்றே அயர்ச்சியாய் உள்ளது :-)
ReplyDeleteபெரும்பாலான பதிவர்களை நான் அறிவேன், தொடர்ந்து படித்துக் கொண்டுள்ளேன், இன்னும் பலரை மற்றும் பல புதியவர்களை அறிமுகம் செய்ய வாழ்த்துக்கள்
ReplyDeleteசத்திரியன் என்னைக் கவர்ந்த பதிவர். அவரது கவிதைகள் அத்தனையும் சர்க்கரை.
ReplyDelete//மாட்ஜியோஜ்ஜி மனி மனி (இதான் ஸ்டைலாம்)// இரண்டு இடத்தில்...நிறைய தகவல்களை கொடுத்திருக்கீங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஉங்கள் நட்பு வட்டத்தில் என்னையும் இணைத்தது மகிழ்ச்சி..மற்ற அனைத்து நட்புகளுக்கும் என் வாழ்த்துக்கள் ..இதுவரை அறிமுகம் இல்லாதவர்களை இனி பின் தொடர்கிறேன்....நன்றி..
ReplyDeleteநான் வாசிப்பவர்கள் என்ற தலைப்பில் இன்று உங்கள் பதிவர்கள் அறுமுகம் அத்தனையும் சிறப்பு. சிலர் தளங்களுக்கே சென்றுள்ளேன். ஏனையவர்களிடமும் சென்று கருத்திட்டு தொடர்வேன்...
ReplyDeleteஎன்னையும் உங்கள் வாசிப்பவர் லிஸ்ட்டில் வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது சகோதரரே!...
மனம்நிறைந்த இனிய நன்றிகளுடன் அன்பு வாழ்த்துக்களும் உங்களுக்கு!
என்னுடன் இன்று இங்கு அறிமுகமாகும் பதிவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
இச்செய்தியை எனக்கு என்வலைத்தளத்தில் வந்து அறிவித்த அன்பு தனபாலன் சார், வைகோ ஐயா, பாலகணேஷ் சகோதரர் யாவர்க்கும் என் உளமார்ந்த அன்பு நன்றிகள்!
இங்கும் வாழ்த்துக்கூறும் அன்பு நெஞ்சங்கள் யாவருக்கும் என் கனிவான நன்றிகள்!
அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதெரிந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் வெற்றிவேல் - அருமையான அறிமுகங்கள் - சென்று பார்க்கிறேன் - படித்து மகிழ்கிறேன் - அனைத்து அறிமுகங்களுக்கும் அங்கேயே மறுமொழிகள் இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதம்பி நிறைய எழுத்துபிழை இருக்கிறது ... பின் வரும் பதிவுகளில் தவிர்க்கவும்
ReplyDeleteஅனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .வலைச்சரப் பணி சிறப்பாகத்
ReplyDeleteதொடரவும் நன்மதிப்பைப் பெறவும் அன்புச் சகோதரரே உங்களுக்கும்
என் இனிய நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteஎன்னுடைய தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே! பல நல்ல நண்பர்களின் தளங்களை(சிலரது தளங்கள் அறிவேன்) அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்! தங்கள் பணி சிறக்கட்டும்! என்னுடைய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் அளித்த அன்பு நண்பர் DD அவர்களுக்கும் எனது நன்றிகள்!
ReplyDeleteமறவாது என்னை குறிப்பிட்ட நட்புக்கு நன்றி நண்பா... நண்பர் திண்டுக்கல் தனபாலன் மூலமாகவே நீங்கள் வலைச்சரம் ஆசிரியரானது அறிந்தேன்... வாழ்த்துக்கள் நண்பா... நேரம் இன்மையால் தொடர்ச்சியாக எழுத முடியவில்லை... ஆனால் முடிந்த வரை அவ்வப்போது எழுதுகிறேன்.
ReplyDeleteஅன்புடன் அருண்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடர்ந்து பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்து வைத்த அன்பு நண்பர் வெற்றிவேலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
ReplyDeleteஇன்று அறிமுகமாகியிருக்கும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!
இந்த வாரம் முழுவதும் நண்பர் வெற்றிவேலு கலக்கு கலக்க வாழ்த்துக்கள்!
//மாட்ஜியோஜ்ஜி மனி மனி (இதான் ஸ்டைலாம்)// இரண்டு இடத்தில்...நிறைய தகவல்களை கொடுத்திருக்கீங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ///
ReplyDeleteமிக்க நன்றி நண்பா! உங்கள் வாழ்த்தினை இங்கே பெற்றுக்கொண்டமை மகிழ்ச்சி தருது - வலைச்சரத்துக்கும் என்னோட நன்றிகள்!!!
என்னை அறிமுகம் செய்து வைத்த அன்பு நண்பர் வெற்றி வேலுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்! தொடர்ந்து கலக்குங்க நண்பா!!!
ReplyDeleteஆரம்பத்திலேயே இத்தனை சிறப்பான அறிமுகங்களா.தேடித்தேடி எடுத்தவர்களின் நடுவில் நானும்.நன்றி வெற்றி.அநேகமாக எல்லோருமே மிகவும் எனக்கு அறிமுகமான சிறந்த எழுத்துவல்லமை மிக்கவர்கள்.வாழ்த்துகள் எல்லோருக்குமே !
ReplyDeleteஇனிய நாளாக அருமையான தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஅதிக வேலைகளால் இந்தப் பக்கம் வரக் கிடைக்கவில்லை... அழகான அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவணக்கம் நண்பா. வலைச்சரம் ஆசிரியராக நீங்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சி. எனது தளத்தையும் நண்பனின் வரிக்குதிரை தளத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. "கல்யாண வைபோகம்" இனை விரைவில் தொடர்வேன்!
ReplyDeleteவணக்கம் சொந்தமே!இன்று அறிமுகமானஅனைத்து பதிவர்களுக்கும் நம்ம சொந்தம் சிட்டுக்குருவி.சிகரம்பாரதி வரிக்குதிரை மற்றும் அனைத்து சொந்தங்களுக்கும் வாழ'த்துக்கள்இ
ReplyDelete