Thursday, June 27, 2013

அவள் கடைக்கண் பார்வையில் விண்மீனுக்கும் வலை வீசுவோர்!!!

வணக்கம்...

இவர்கள் எழுத்துகளே இவர்களைப் பற்றி கூறும், ஆதலால் நான் எந்த அறிமுகமும் இவர்களைப் பற்றி கூற முற்ப்படவில்லை. அவர்களின் இணைப்பை கொடுத்துள்ளேன், படித்து கருத்துகளைக் கூறுங்கள். நாளை சந்திக்கலாம். வழக்கம் போல முதல் கவிதை என்னோடது...



மெழுகு தன்னை 
உருக்கி 
ஒளியூட்டுவது போல்

என்னை உருக்கி
உன்னைக் 
காதலிக்கும் 
என் மனம்...

-வெற்றிவேல்
சாளையக்குறிச்சி



அடிக்கடி உன் கை கடிகாரத்தில் 
நேரத்தைப் பார்க்காதே, 
நீ பார்க்கிறாய் என்கின்ற சந்தோஷத்தில் 
என்னைப் போன்று அதுவும் 
ஸ்தம்பித்து விடப் போகிறது!



என் காதலி 
உன்னிடம் வெதும்பியே வந்தேன்
சூரியனாய் 
என்னை சுட்டெரித்துச் செல்கிறாய்...



க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல்
அந்தி வான‌ம்
ஏங்கும் அலை
ஒழிந்த‌ சூரிய‌ன்
நீ நான் காத‌ல்!!!

பின் க‌விதைக‌ளாய்
என்ன‌ சொல்வ‌து
நீ நான் நாம் என்ற‌
காத‌லை த‌விற‌!!!



இதயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி



மனமே, அவனை மறப்போம்
நீயும் நானும் இன்றிரவே!
நீ அவன் வெம்மையை மற
நான் அவன் ஒளியை மறப்பேன்

நீ முடித்ததும் எனக்கு சொல்
எனவே என் எண்ணங்கள் மங்கும்
சீக்கிரம் ! நீ தாமதம் செய்தால்
அதுவரை மனதில் அவன் நினைவுகள் தங்கும்!




உன்னிடம் சொல்லலாமல்
உறைந்து போனது 
என் காதல் மட்டுமல்ல
என் உயிரும் தான்....




எனக்காக‌
கவிதை
எழுதிக்கொடு
என்று கேட்டதும்
அழகிய
கவிதைகளை
எழுதி விட்டு
சென்றன‌
உன் உதடுகள்



நான் சும்மா இருந்தாலும்
உன் காதல் திசையை நோக்கி
நடக்க செய்யும் என் கால்களின்
அனிச்சை செயலை
என்னவென்று சொல்வது?




உன் இதயத்தை கேட்டு பார் ஒவவொரு துடிப்புக்கும்
ஒரு அர்த்தம் சொல்லும் ஆனால்
என் இதயத்தை கேட்டு பார் துடிப்பின் அர்த்தமே
நீ தான் என்று சொல்லும்....



கோபத்தால்
என் இதயத்தை
துண்டு துண்டாக்குகிறாய் !

முத்தத்தால்
காந்தம் போல் 
சிதறிய இதயத்தை
சேர்க்கிறாய் !




பகலில் பெய்யும் மழையை
பிடிக்காததற்கு
பலருக்கு
பல காரணம் இருக்கலாம்
எனக்கு ஒரே காரணம் தான்
உன்னை பார்க்க முடியாமல் போகும்
ஆதலால்….


எனது விழிக்கு 'ஒளி'யை...
உனது புன்னகையில் இருந்தும்...

எனது வாழ்க்கைக்கு 'வழி'யை
உனது கண்களில் இருந்தும்
தேடிக் கொண்டேன்.



கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து 
தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப்பார்த்துதான் 
கவிதையெழுதுகிறேன் !



நீ
ஊருக்குச்சென்ற‌
நாளொன்றில்
உனக்கான முத்தங்கள் 
அனைத்தையும் வாங்கி
சிரித்துக்கொன்டிருக்கிறது !
வீட்டிலிருக்கும்
உன் புகைப்படம்!


இதய ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்த்தைக்காக
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்....


அன்புடன்...

வெற்றிவேல் 
சாளையக்குறிச்சி...

17 comments:

  1. கவிதைச் சரம் - வாசனையான பூக்களால் பூத்துக் குலுங்குகிறது.... அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பல தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    பல தளங்கள் மீண்டும் தொடர வேண்டும்... தங்களின் தேடலுக்கு வாழ்த்துக்கள்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. புதிய அறிமுகங்கள் அருமை... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. கவி வரிசை...
    அறிமுகம் செய்த விதம் அருமை...
    அறிமுகப்படுத்தப்பட்ட கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. என் தளத்தில் இருந்து கவிதையைக் குறிப்பிட்டதற்கு நன்றி....

    ReplyDelete
  6. வெற்றிவேல்,உங்கள் பகிர்வுகள் அனைத்தும் அருமை. வித்தியாசமான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அதற்குள் நான்கு நாட்கள் சென்று விட்டதா? வலைச்சரம் வந்தால் தான் நாட்கள் பறப்பது தெரிகிறது.

    ReplyDelete
  7. கவிமேகம் தனைக்தேடிய கடுந்தாகம் உமக்கென்று
    சுடுவெயிலும் ஓடிடுமே சோர்ந்து...

    வெற்றிவேல்!... உங்களின் இன்றைய தேடல்கள் அத்தனையும் வெகு சிறப்பு.

    தேடிய உங்களுக்கும் கவி மழையெனப் பொழியும் அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அற்புதமான காதல்ரசம் ததும்பும் வரிகள் ரசிக்க வைத்தன. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  9. அறிமுகங்கள் அருமை... வாழ்த்துக்கள்....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  10. அன்பின் வெற்றிவேல் - அருமையான அறிமுகங்கள் - பகிர்வினிற்கு ப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. கவிதைகள் காதல் மழை பொழிகின்றன.

    ReplyDelete
  12. கவிதைப்பூக்களை தூவி கவிஞர்களை அறிமுகப்படுத்தியவிதம் சிறப்பு! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  13. கவிதைகளை அறிமுகம் செய்த விதம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நீங்கள் அறியத்தந்தவர்களில் பலபேர் எனக்கும் பிடித்தவர்கள்.வாழ்த்துகள் வெற்றி !

    ReplyDelete
  15. எனது தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  16. கவிதை தொகுப்பு அருமை.
    கவிஞர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. கவிச்சரம் நன்று.சிலர் மட்டுமே தெரிந்தவர்கள்,அறிமுகத்துக்கு நன்றி!

    ReplyDelete